Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

                                                                                 

                                                                                                     உ                                                                                                     

                                                                                            மயிலம்மா.

  நினைத்தால்  இனிக்கும்  மோகனம் .....!

மயிலிறகு ....... 01.

                                                                                                               

                                                  அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு  வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால்  உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு.

                                   உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால்  மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின்  குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை  மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர்.

மயில் ஆடும் .........🦚

                       

  • Like 13
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயில் ஆடட்டும்...ஆட்டத்தை ரசிக்க காத்திருக்கிறோம் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு.........02.

                                                   

                                                         இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள்.

                                                                   என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும்  தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான்.

 

                                              இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம்  உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........!

மயில் ஆடும்........!  🦚

  • Like 9
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘மயிலும் ‘ இருக்கிறது, பாம்பும் வந்து விட்டது. அடுத்து வர இருப்பது முருகனா?

Default-ink-lines-and-watercolor-wash-mi

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2024 at 00:08, suvy said:

இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான்

எனது தகப்பனாரும் ஏகாதசி அன்று தான் காலமானார்.

தொடருங்கள் சுவி.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு........ 03.

                                                                

                                             அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன்,  வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது  மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள்.

                                                                                                                     அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம்  ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து  யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........!

 

மயில் ஆடும்....... 🦚

  • Like 11
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

3ஆம் பகுதில் கொஞ்சம் இடை வெளிகள் தேவை என்று நினைக்கிறேன்..இது ஒரு குறை அல்ல.தவறாக நினைக்க வேணாம்.

Edited by யாயினி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, யாயினி said:

3ஆம் பகுதில் கொஞ்சம் இடை வெளிகள் தேவை என்று நினைக்கிறேன்..இது ஒரு குறை அல்ல.தவறாக நினைக்க வேணாம்.

விமர்சனங்கள் ஒரு போதும் குறை இல்லை......அவற்றை வரவேற்கிறேன்......இனி அவற்றை  சரி செய்யப் பார்க்கிறேன்......நன்றி சகோதரி........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு......... 04.

                                                   

                                                                          அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

                                                          சுந்து வாமனிடம்,   எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள்.

அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான்.

ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய்.

ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை.

ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன்.

போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான்.  பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான்.

                                                                                 இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்.....

என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள்.

                                                                      

அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்....

அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை.

உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை.

அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து.  நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன்.

அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு.

வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........!

 மயில் ஆடும்.........!  🦚

 

  • Like 11
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, suvy said:

மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர

மயில் என்றால் ஒயிலாகத்தான் நடக்கும்

 

23 hours ago, suvy said:

மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்

மேல் வழியாக கழட்டி இருக்களாம் ஆசிரியர் கொஞ்சம் குசும்பு பிடித்தவர் போலே

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு ....... 05.

                                                    

                                                                        எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில்  இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது  இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு.

ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை  என்று எல்லாம் செய்யலாம்டா......

சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு  எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல்  உசாராய் சத்தமாய் வருகிறது.

உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம்  என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான்.

 

                                                       மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல

ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள்.

அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம்.

நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம்.                                        

                                                                           அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால்  ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும்  அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப்  பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்....

                                   நீ  சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள்.

                                                               

                                                                               வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று  அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள்.

                                                          அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 

🦚 மயில் ஆடும் ........!

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு ......... 06.

                                                            

                                                      அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர்   எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான்.

                                                            பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள்.

                                                                   வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது....

                                                                    

                                                           ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும்  "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை.

                                                                                         வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து  கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து  என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு  ரெண்டு உடைஞ்சிட்டுது.

                                                                  அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........!

🦚 மயில் ஆடும் ......!

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/3/2024 at 01:21, suvy said:

முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது.

என்ன தான் பால் வைத்தாலும் பாம்பு ஒரு நாளைக்கு கொத்தியே தீரும் என்பார்கள்.

சிங்கள தலைவர்கள் இந்தா பிரச்சனையை தீர்க்கிறேன் அது இது என்று தமிழருக்கு உறுதியளித்து விட்டு கடைசியில் பிரட்டுவது போல

பாம்பும் படம் காட்டி காட்டியே கொத்திவிடும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/3/2024 at 00:49, suvy said:

என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள்.

எவ்வளவு பெரிய விடயத்தை இப்படி சொல்லி போட்டியள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, suvy said:

மயில் ஆடும் ....

ஆட்டத்தைப் பார்க்க காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலாடட்டும்  நாங்கள் வாசிக்கிறோம் ( ரசிக்கிறோம்) சுவி ஐயாவின் கதைகளில் ஒரு  "சுவை " இருக்கும். தொடருங்கள் ..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு........07.

                                                           

                                                                                         மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில்  ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய்.

கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான்.

எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும்.

ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான்.

                                                                  அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள்.

ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை  போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம்.

வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே.

சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....!

                                             அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது.

                                                                                அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில்  இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள்  ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........!

🦚 மயில் ஆடும்..........! 07.

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு........ 08.

                                               

                                                           மயிலம்மாவை அவள் வைத்தியின் செத்தவீட்டில் பார்த்திருக்கிறாள்.ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லை. அன்று அவரின் மகன்களும் மகளும் வைத்தியின் செத்தவீட்டுக்கு வந்த இந்தப் பெண்ணை அவரது உடலைப் பார்க்க விடாமல் தடுத்து " நீ இங்கு வரக்கூடாது, அப்பாவைப் பார்க்க விடமாட்டோம் வெளியே போடி" என்று  முக்கியமாக அவர்களின் இரண்டாவது மகன் யோகிபாபு  விரட்டியபோது அவர்களின் தாயார்காரி அவர்களைத் தடுத்து தன் பிள்ளைகளைப் பேசி மல்லுக் கட்டிக்கொண்டிருக்க மயிலம்மாவும் அவள் அருகில் நின்று தம்பிகள் நீங்கள் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது.இது உங்கட வீட்டுக் காரியம்.அப்பாவை அமைதியாய் நிம்மதியாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் அம்மா சொல்வதைக் கேளுங்கோ. அவள் ஒரு ஓரமாய் நின்று பார்த்திட்டுப் போகட்டும். அங்க ஐயரும் காத்துக் கொண்டிருக்கிறார்.போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்கோ என்று விலக்குப் பிடித்து விட்டவள்.அதன் பின் மூத்தவன் ரவிராஜ்யும் தங்கை மீனாவும் சென்று காரியங்களைக் கவனிக்க அது நல்லபடியாய் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து சவம் வேலியைப் பிய்த்துக் கொண்டு வீதியால் போகும்வரை அந்தப் பெண் மயிலம்மா பக்கத்திலேயே நிக்கிறாள்.மயிலம்மாவும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நீ ஒன்றுக்கும் பயப்பிடாத நான் இருக்கிறன் என்று அவளுக்குத் தைரியம் தருகிறாள்.

                                            அதுதான் அந்தப் பெண் இந்த நினைவுகள் மனதில் நிழலாட அவளைக் கண்டதும் முன்வந்து வாங்கக்கா என்ன விசயம் என்று சொல்லி அன்று நீங்கள் மட்டும் அந்தப் பிள்ளைகளை சமாளித்திருக்காது விட்டால் பெரிய களேபரமாய் போயிருக்கும். அதிலும் அவன் சின்னவன்  யோகிபாபுவின் ஆவேசத்தை நினைக்க இப்பவும் ஈரக்குலை நடுங்குது. என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறாள்.அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்த வேலையாளிடம் "அண்ணை ரெண்டு இளநி சீவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து எங்க உன்னோடு கூட ஒரு பையன் வருவானே காணேல்ல .....உங்களுக்கு என்னெண்டு தெரியும் என்று வாமு கேட்கிறான்.அதுவா நான் இந்தத் திண்ணையில் இருந்து வெளி உலகத்தைப் பார்க்கிறேன்.அப்போதுதான் நீங்கள் இருவரும் அடிக்கடி இந்த வீதியால் போய் வருவதைக் கண்டிருக்கிறேன்.இப்ப சில நாட்களாய் நீ தனியாகப் போய் வருகிறாய். அன்று மாங்காய்க்கு கல் எறிந்ததும் அந்தப் பையன்தானே என்று சொல்லிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க, மயிலம்மா குறுக்கிட்டு இவன் பெயர் வாமன். அந்தப் பையன் என் மகன் சுந்தேரேசன்.அவன் மேற்படிப்புக்காக கண்டிக்குப் போயிருக்கிறான்.

பல்கலைக்கழகத்துக்கா .......ஓம்.......சிறிது யோசித்தவள் ....ம்....என்று ஒரு பெருமூச்சு விட்டுட்டு அது நல்லது.இந்தக் கிராமத்தில் இருந்து மேற்படிப்புக்கு போகும் பிள்ளைகள் மிகக் குறைவு.அவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்.அப்போதுதான் மற்றப் பிள்ளைகளுக்கும் படிக்க ஊக்கம் வரும். பின் தனக்குள் நினைக்கிறாள் இவர் மட்டும் வலுக்கட்டாயமாய் தன்னை இங்கு கூட்டி வந்திருக்காது விட்டால் இந்நேரம் நானும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர் தன்ர பவிசுக்காக எல்லோரும் பார்த்திருக்க என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டார் .எனக்கு இங்கு வாழ்க்கை வசதி எல்லாம் இருக்கு ஆனால் எதுவுமே இல்லாத வெறுமை எனக்குத்தான் தெரியும். "நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன். ....ம் .....எல்லாம் என் விதி என்று தன்னை நொந்து கொள்கிறாள்.

                 சரி......சரி....நானே கதைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கோ என்ன விசயம் வந்தது என்று கேட்க மயிலம்மாவும் என் மக்களுக்கு ஒரு சம்பந்தம் கை கூடி வந்திருக்கு. நான் ஒரு ஆறுமாதமாவது பொறுத்து செய்யலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் அவசரப் படுத்தினம். அதனால அவசரமாய் கொஞ்சப் பணம் தேவைப்படுது. அதுதான் இப்ப என்னிடம் காணிப் பத்திரமும் கொஞ்ச நகைகளும் இருக்கு, அதுகூட பிள்ளையின் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த நகைகள்தான். இப்ப அவசரத்துக்கு அதையும் கொண்டு வந்திருக்கிறன்.இதை வைத்துக் கொண்டு நீங்கள்தான் பணம் தர வேண்டும் என்று கேட்கிறாள்.

கடவுளே: என்னங்க நீங்க இந்த வேலைகள் எல்லாம் அவர்தான் பார்த்தவர். நான் இதொன்றும் செய்யிறேல்ல. ஏன் உங்களுக்கு அவற்ர சம்சாரம் பழக்கம்தானே அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே.

அவ நல்ல பழக்கம்தான். அதுதான் அவாவிடம் கேட்க கூச்சமாய் இருக்குது.....அப்ப வாமு குறுக்கிட்டு அங்கு வட்டியும் அதிகம் என்று நினைக்கிறம்.

இதென்ன கூத்தா இருக்கு.இவர் வாங்கும் வட்டியை விட அவ குறைவாத்தான் எடுக்கிறவ. இவரிடம் வந்தவர்களில் பத்துக்கு இரண்டு பேர்தான் தப்பிப் போவார்கள்.மற்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவிலே நின்று தூற்றிவிட்டுப் போவதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன்.

                                  நல்ல காலம் இவர் இப்ப இல்லை.இருந்திருந்தால் நீங்கள் உடும்பிடம் தப்பி முதலை வாயில் விழுந்ததுபோல் ஆகியிருக்கும். ஏன் ஊருக்கே தெரியும் உங்களுக்கு சொன்னால் என்ன நானே எங்கப்பா வாங்கிய கடனுக்கு வட்டியாய் வந்தவள்தானே. அதுதான் எனக்கு அந்த வலி தெரியும்.

மயிலம்மாவும் சரி அப்படியென்றால் இனி வேறு இடம்தான் போகவேணும்போல இருக்கு. சரி பிள்ளை நாங்கள் போட்டு வாறம் என்று கிளம்ப அங்கு இளநியுடன் வேலையாள் வருகிறான்.நில்லுங்க அக்கா நல்ல வெய்யுலுக்க வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இளநி குடியுங்கள் இதமாய் இருக்கும். மயிலம்மா சிறிது தயங்குகிறாள். பரவாயில்லை அக்கா குடியுங்கள் என்கிறாள்.வாமுவும் நிலைமையை சுமுகமாக்க நினைத்து உங்கட பெயர் என்ன என்று கேட்க்கிறான். என் பெயர் அஞ்சலா.....ம்.....நல்ல பெயர் பின் மா மரத்தைப் பார்த்து என்ன அஞ்சலா  எல்லாம் பிஞ்சுகளாய் விழுந்து கிடக்கு.....ஓம் ....மழைக்கும் காத்துக்கும் கொட்டுண்டு கிடக்கு. அதற்கு மேலால் தொலைபேசி வயர் வீதியில் இருந்து வீட்டுக்கு போகின்றது.....நீங்களும் உங்களுக்குத் தேவையானதை பறித்துக் கொண்டு போகலாமே.....உங்கட வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கு போல மயிலம்மா இளநி குடித்துக் கொண்டே வினவ, ஓம் அக்கா எனக்குத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும்.அதனால்தான் இந்த வீடு வளவு தோட்டம் வயல் எல்லாம் நான் அடம்பிடிக்க எனக்கென்றே எழுதித் தந்து விட்டார்.வாருங்கள் தோட்டம் பார்க்கலாம் என்று கதைத்துக் கொண்டு  பின்னால் போகிறார்கள்.

                                                                அப்படிச் செல்லும்போது மயிலம்மாவும் தங்களுக்கு  எதிர்பாராமல் மகன் சுந்தரேசனுக்கு பல்கலைக்கழகம் வரும்படி கடிதம் வர என்னிடம் கையில் பணமில்லை அப்போது வாமன்தான் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை நண்பனுக்கு குடுத்து உதவி அனுப்பி வைத்தவன். அது ஒருவழியாக முடிஞ்சுது என்று இருக்க, முந்தாநாள் சம்பந்தி வீட்டார் வந்து வாறமாதம் அவைகளின்ர மகனுக்கும் என்ர மகள் பூவனத்துக்கும் கலியாணம் செய்து வைக்கவேணும் என்று பிடிவாதமாய் நிக்கினம். மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அவர்களிலும் பிழையில்லை.காரணம் பொடியனின் பேத்தியும் வருத்தமாய் இருக்கின்றா,தான் சாகமுதல் அவற்ர கலியாணத்தைப் பார்க்க விரும்புகிறா. அதுதான் எனக்கு திடீரென்று பணத்தட்டுப்பாடு வந்தது.இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் பொறுத்து நெல்வயல் அறுவடை செய்து இந்தப் பிரச்சினைகளை சமாளித்திருப்பேன் என்கிறாள்.இப்படிப் போகும்போது மயிலம்மா நகைகள் இருந்த சுருக்குப் பையை தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு காணி உறுதிப் பாத்திரங்கள் இருக்கும் பையை கையில் கொண்டு வருகிறாள். வெய்யிலில் முகம் கழுத்தெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இடைக்கிடை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். அஞ்சலையும் கூட நடக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.அப்போது அவர்களின் இக்கட்டான நிலைமை அவளுக்குப் புரிகின்றது. ஒருகனம் தனது பெற்றோரின் நிலைமை கண்முன் வந்து போகின்றது.........!

🦚 மயில் ஆடட்டும்........ 08.

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரைக்கும் ஆக்கமும் ஊக்கமும் தந்து வருபவர்களுக்கு நன்றி.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, suvy said:

நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன்

அப்பப்ப ஏதாவது சொல்லி விடுகிறீர்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலாடட்டும்  நாங்கள் வாசிக்கிறோம் ( ரசிக்கிறோம்) சுவி ஐயாவின் கதைகளில் ஒரு  "சுவை " இருக்கும். தொடருங்கள் .

இதனை நானும் வழிமொழிகின்றேன்   அய்யனே

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகு ....... 09.

                                                                       

                                                                                    அக்கா நீங்கள் இப்பொழுது எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்று அஞ்சலா கேட்க மயிலம்மாவும் எங்களுக்கு ஒரு ஒரு லட்சம் வரை தேவைப்படும்போல இருக்கு என்கிறாள்.

உங்களின் நகைகளை நான் பார்க்கலாமா ....

அதுக்கென்ன என்று சொல்லி அங்கிருந்த கிணற்றுக் கட்டில் அருகில் அமர்கிறார்கள்.பின் மயிலம்மாவும் நகைப் பையையும் பத்திரப் பையையும் அவளிடம் தருகிறாள்.

                                                     இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க வாமன் அந்தப் பெரிய கிணற்றையும் அருகிலே மோட்டர் பம்ப் அறையையும் பார்க்கிறான்.கிணற்றுக்குள் இரண்டு பெரிய குழாய்கள் இறங்கி இருக்கின்றன.மிகவும் ஆழமான கிணறு. இந்த வெய்யில் காலத்திலேயே ஒரு ஆள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கின்றது. அப்படியே நடந்து வர கிணற்றை ஒட்டி மரக்கறி வகைகள், வெற்றிலைக்கொடிகள் சற்று தள்ளி வாழைத்தோட்டம் கரும்பு எல்லாம் செழிப்பாக இருக்கின்றன. கீரைப் பாத்திகள்தான் நீரின்றி சோர்ந்துபோய் இருக்கு. அவற்றைக் கடந்தால் பெரிய நெல் வயல் பல ஏக்கருக்கு பரந்து கிடக்கு.ஆங்காங்கே கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கொட்டில்களில் மாடு, ஆடுகள்,பரணில் கோழிகள் மற்றும் தகரக் கொட்டகையில் இரண்டு டிராக்டர்கள் நிக்கின்றன . எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு வயல் பக்கம் வரும்போது ஒரு வயதான பெண்மணி வரப்போரம் தட்டுத் தடுமாறி நடந்து தள்ளாடி வரப்பில் சரிந்து விழுகிறாள்.வாமன் பதறிப்போய் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணையும் கூப்பிட்டுக்கொண்டு ஓடிப்போய் அந்த அம்மாவிடம் என்னம்மா செய்யுது என்று கேட்க அந்த அம்மா இடுப்பில் இருந்த பையைகாட்ட அதற்குள் ஒரு சீசாவில் சீனியும் சிறிய போத்தலில் பழச்சாறும் இருப்பதைக் கண்டு அவற்றை எடுத்து உங்களுக்கு சீனி வருத்தமா என்று கேட்டு சீனியை அவவின் வாயில் போட்டு பழசாற்றைக் குடிக்கக் கொடுக்கிறான்.அந்த அம்மாவை நிமிர்த்தி இருக்க வைக்கும்போது அந்தப் பெண்ணும் வந்துவிட்டாள்.அவள் சிறிது சிறிதாக நீரைப் பருக்கிக் கொண்டு மார்பை கைகளால் நீவி விடுகிறாள்.கொஞ்ச நேரத்தில் அந்த அம்மாள் சரியாகி விடுகிறாள்.பின் இருவரும் கைத்தாங்கலாக அவவைக் கொண்டுவந்து வீட்டுத் திண்ணையில் விடுகிறார்கள்.அந்தப் பெண்ணை அவாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு வாமு அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

                                                                             அஞ்சலா உறுதியை மேலோட்டமாய் பார்த்து விட்டு நகைகளைப் பார்க்கிறாள். எல்லாம் கனமான நல்ல நகைகள்.அதிகம் பாவிக்காது இருந்ததால் பொலிவிழந்து கிடக்கு. புன்னைக்காய் நீரில் ஊறவைத்து பிரசால் தேய்த்தால் புதிதாக மினுங்கும் என்று நினைத்துக் கொண்டு சரி அக்கா நான் முன்பே சொன்னபடி இந்தத் தொழில் இனிமேல் செய்வதில்லை என்னும் முடிவில் தான் இருந்தேன்.ஆனால் உங்களின் நிலமையைப் பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்குது. அதனால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்.என்னிடம் பணம் வாங்கியதாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பின் அந்தப் பணத்துக்கு உரிய வட்டிகள் பற்றி கதைத்து விட்டு அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். அங்கு அவர்களின் இரும்புப் பெட்டியைத் சாவி போட்டு  திறந்து பல இடங்களில் திருகித் திறந்து அவற்றை வைக்கும்போது பார்க்கிறாள் அதில் அவள் பெற்றோர்களின் காணி உறுதி மற்றும் அவர்களது நகைகள் இன்னும் யார்யாருடையதோ எல்லாம் இருக்கின்றன.அதை அப்பப்ப திறந்து பார்த்து நினைப்பதுண்டு இதற்காகத்தானே எங்கள் குடும்பமும் அழிந்து,எனது படிப்பும் பாழாக்கிவாழ்க்கைக் கனவுகளையும் இந்த மனிதன் அழித்து விட்டாரே.ஆனால் இப்ப இவையாவும் என் கையில்.என் பெற்றோரும் என்னுடன் வந்து இருக்கிறார்கள். இவர் போகும்போது மக்களின் வயித்தெரிச்சலைத் தவிர வேறு என்னத்தைக் கொண்டு போனவர். இந்தக் காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது. சிறிது நேரம் தன்னிரக்கத்தில் மூழ்கியவள் பின் தன் கையிலிருந்த பைகளை உள்ளே வைத்து விட்டு  தேவையான சில பணக்கட்டுகளை எடுத்துக் கொண்டு பெட்டியைப் பூட்டும்போது என்ன நினைத்தாளோ தெரியாது அந்த நகைகள் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு மயிலம்மாவிடம் வருகிறாள். அவளிடம் பணத்தைக் குடுத்து எண்ணிப்பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பையுடன் நகைகளை அவளிடம் தந்து அக்கா நான் அந்தக் காணிப் பத்திரத்தை மட்டும் எடுத்து வைத்துள்ளேன், நீங்கள் இந்த நகைகளைக் கொண்டுபோய் மகளின் திருமணத்தை நன்றாக நடத்துங்கள். கூடிய சீக்கிரம் பணத்தைத் தந்து பத்திரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல மயிலம்மாவும் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளை இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன், நீ நல்லா இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறாள்.

                                             என்னக்கா நீங்கள்......அன்று எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தனீங்கள். சரி....சரி....இங்கு காத்தடிக்குது நீங்கள் அங்கு திண்ணையில் போய் இருந்து பணத்தை எண்ணி எடுங்கள் என்று சொல்ல ....அவளும் உன்னை நான் நம்புகிறேன் அஞ்சலா ......அப்படி சொல்லாதையுங்கோ, பணம் சம்பந்தப்பட்ட விசயம் நீங்கள் எண்ணி எடுப்பதுதான் சரி. அங்க அந்தத் திண்ணையில் இருந்து ஆறுதலாய் எண்ணுங்கள் என்று அனுப்பி வைக்கிறாள்.  பின் மோட்டாரையும் கிணத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாமுவிடம் வருகிறாள்.

                                                  மயிலம்மாவும் பணத்தை எண்ணுவதற்காக அந்தத் திண்ணைக்குப் போகிறாள். அங்கு மயங்கி விழுந்த அம்மா களைப்புடன் இருக்க பக்கத்தில் அந்தப் பெண் பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு இருக்கிறாள். மயிலம்மாவும் சென்று கொஞ்சம் தள்ளி அமர்கிறாள். அந்த அம்மாவும் அந்தப் பெண்ணிடம் பிள்ளை அந்தமருந்தை எடுத்துத் தானை என்று சொல்ல அதை புரிந்து கொண்டு அந்தப் பெண்ணும் அங்கிருந்த போத்தல் சாராயத்தை எடுத்து வந்து குவளையில் விட்டு நீர் கலந்து கொடுக்கிறாள். சரி பிள்ளை நீ போய் வேலையைப்பார் இவ இங்கு இருக்கிறாதானே என்று சொல்ல அவளும் அம்மா இவவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் அங்கு மயங்கி விழுந்துட்டா என்று சொல்லிவிட்டு போகிறாள். மயிலம்மாவும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அது பிள்ளை சீனி குறைஞ்சு போச்சு அதுதான் மயக்கமாயுட்டன். நல்ல காலம் ஒரு பொடியன் கண்டுட்டு ஓடிவந்து காப்பாற்றி இங்க கொண்டுவந்து விட்டவன்.

                                    மயிலம்மா பக்கத்தில் போத்திலைப் பார்க்க அது அப்பப்ப கொஞ்சம் மருந்து குடிக்கிறது. காலம் முழுக்க காணி, பூமியோட கிடந்து உழைஞ்சு  உடம்பு களைச்சுப் போச்சு. இரவில நித்திரையும் வருகுதில்லை.நீங்கள் எடுக்கிறனீங்களோ. சீ சீ எப்போதும்  இல்லை. நீங்கள் சொன்னமாதிரி வயல் வேலைகள் செய்துபோட்டு வந்தால் உடம்பு அலுப்பாய் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் எடுக்கிறதுதான். அப்ப அந்த  அம்மா தண்ணியையும் தண்ணிப் போத்தலையும் அவள் பக்கம் அரக்கி வைக்கிறாள். மயிலம்மாவும் தங்கள் வந்த வேலை சுலபமாய் முடிந்ததால் மனசுக்குள் ஒரு புளுகம் ஏற்பட அவற்றை எடுத்து சீராகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டு பணக்கட்டைப் பிரித்து எண்ணுகிறாள்.......!

🦚 மயில் ஆடும்.........!  09.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/3/2024 at 01:17, suvy said:

நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில்  இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள்  ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன.

வயது வந்தவர்களுக்கு மட்டும்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
    • சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின்  திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.