Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். 

அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். 

எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். 

பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அமர்ந்தார்கள். மேசையில் மக்கள் மற்றும் மருமக்கள் எமக்கு பிடித்த பல உணவுகளை தாமே சமைத்து கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அத்துடன் பலவகையான குடிவகைகளும் வைக்கப் பட்டிருந்தன. பார்ட்டி ஆரம்பித்தது.  இங்கே யாரும் எதுவும் சொல்லக் கூடாது. போதும் என்று கையை காட்டுவது கண் சிமிட்டுவது என்று எதுவும் எவரும் சொல்ல வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் குடிக்கலாம். 

மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று.  சாப்பிட குடிக்க இந்த பார்ட்டி செய்யவில்லை என்று தெரியும் அப்பா. அப்படியானால் ஏதோ வேறு காரணம் இருக்கும் அது என்ன என்று மகன் கேட்டான். 

அப்பாக்கள் தமக்கு என்று எதுவும் கேட்கமாட்டார்கள். நாங்கள் இறந்த பின்னர் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எனக்கு அவற்றில் நம்பிக்கையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் விரும்பி உங்கள் கைகளால் சமைத்து பரிமாறி இருப்பதும் எமக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து  வாங்கி மேசையில் வைத்திருப்பதும் தான் எமக்கான படையல். இருக்கும் போது கொடுக்கப்படுவது மட்டுமே சாலச்சிறந்தது. அதுவே தேவையும் கூட. 

நன்றாக குடித்து வயிராற சாப்பிட்டு சந்தோசமாக விடைபெறும் போது சொன்னார்கள் மறக்க முடியாத அனுபவம் என்று. 

கலந்து கொண்டவர்கள் என் சம்பந்திமார் மூவர். 

பார்ட்டியின் பெயர் சம்பந்தி பார்ட்டி. 

🙏

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 5
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா.....சம்பந்திகளைக் கௌரவித்து இருக்கிறீர்கள்.......நல்ல விடயம்...... ஏன் மருமக்களின் தாய்மாரையும் அழைத்திருக்கலாம் ......இனி அவர்கள் வீடுகளுக்கு போனால் சம்பந்தி ஐயா தேநீர் போட்டுத்தருவார் வாங்கிக் குடியுங்கோ என்று சொல்லிப்போட்டு ஆட்கள் நழுவிப் போயிடுவினம்........!  😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். 

மாமனார்களை மட்டும் எப்படி அழைப்பது?

என்னை யாராவது எங்காவது தனியே வா என்றால் நான் போக மாட்டேன்.

3 hours ago, விசுகு said:

மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று

தொடக்கத்திலா முடிவிலா இதைக் கேட்டீர்கள்?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, suvy said:

ஏன் மருமக்களின் தாய்மாரையும் அழைத்திருக்கலாம் .

ஒரு பார்வை பார்த்தாலே போதும்.

தூக்கின கிளாசை வைத்துவிடுவார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நமக்கு இந்த நிலையை அடைய நிறைய காலம் இருப்பதனால்.. அடைந்தால்.. கருத்துச் சொல்லலாம். 

மற்றும்படி.. ஒரு ஓசிப் பார்ட்டிக்கு எப்படி எப்படி எல்லாம் ஐ டியா போடுறாய்ங்கப்பா. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

நமக்கு இந்த நிலையை அடைய நிறைய காலம் இருப்பதனால்.. அடைந்தால்.. கருத்துச் சொல்லலாம். 

தம்பியும் திருமணமாகி ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

இன்னமும் பூச்சி புழு ஒன்றையும் காணோம்.

இல்ல

கனபேர் திருமணமாகி குடும்ப கட்டுப்பாடாம் என்று 

கட்டுப்பாடை விட்டா ஒன்றையும் காணோமே என்று

மருந்து மாத்திரை என்றும்

கோவில் குளமென்றும் திரிவார்கள்.

  • Like 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் அம்மாமாரையும் அழைத்திருக்கடவேண்டும் அவர்கள்  இந்த வயதில் தனியாக இருப்பதிலும் பார்க்க நாலு பேரோஐட கதைத்தால் நல்லதுதானே. ஆனால் காணுமப்பா என்று 2வது ரவுண்டு தொடங்க முதலே சாப்பாட்டைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். அதுதான் வீசுகண்ணை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விசுகண்ணை பார்ட்டிக்கு நல்ல ஐடியா குடுத்திருக்கிறியள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன இருந்தாலும் பாட்டிமாரை அழைக்காதது பெரும் பிழை. அவர்களுக்கும் ஒரு அவுட்டிங் போல  இருக்கும் .சில பாட்டிமார் வைன் அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஏன் இந்த பாகுபாடு அடுத்த முறை பாட்டிமாருக்கும் அழைப்பு  வேண்டும். பார்ட்டியில் தாத்தாமார்  "ஏத்திக்" கொண்டு  வீட்டில் வந்து என்ன  அலடடலோ?(கூத்தோ ) அதை யாரு சகித்து கொள்வது .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2024 at 18:20, suvy said:

ஆஹா.....சம்பந்திகளைக் கௌரவித்து இருக்கிறீர்கள்.......நல்ல விடயம்...... ஏன் மருமக்களின் தாய்மாரையும் அழைத்திருக்கலாம் ......இனி அவர்கள் வீடுகளுக்கு போனால் சம்பந்தி ஐயா தேநீர் போட்டுத்தருவார் வாங்கிக் குடியுங்கோ என்று சொல்லிப்போட்டு ஆட்கள் நழுவிப் போயிடுவினம்........!  😂

ஓம் அண்ணா

ஆனால் இது வேறு ஒரு பார்வை

இன்றைய சூழலில் அதிக தகப்பன்மார் மனைவி மற்றும் பிள்ளைகளின் அதிக கட்டுப்பாடுகளின் வாழ்வதை அவதானித்ததின் பெறுபேறு இது. (நானோ என் சம்பந்திமாரோ அல்ல)

குடும்பத்தை நாட்டை ஊரை சுமந்து இத்தனை தூரம் வந்தவர்களை அதிக கட்டுப்பாடுகளுடன் (அது அவர்களது உடல் நலம் சார்ந்து இருந்தாலும்) அதிகம் குடிக்க கூடாது அதிகம் சாப்பிட கூடாது ஏன் அதிகம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லி அடக்குவதனை பார்த்து பொழுது ஒரு நாளைக்காவது நாம் திறந்து விடுவோம் நம் வீட்டில் என்று தான் செய்தேன் 

இந்த ஆண்டு யாழுக்கு எழுத எதுவும் இல்லை என்று நினைத்தேன். சரி இது ஒருவருக்காவது பிரயோசனப்பட்டால்....? அதற்காகவே இப்பதிவு

நன்றி அண்ணா.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2024 at 14:57, நிலாமதி said:

என்ன இருந்தாலும் பாட்டிமாரை அழைக்காதது பெரும் பிழை. அவர்களுக்கும் ஒரு அவுட்டிங் போல  இருக்கும் .சில பாட்டிமார் வைன் அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஏன் இந்த பாகுபாடு அடுத்த முறை பாட்டிமாருக்கும் அழைப்பு  வேண்டும். பார்ட்டியில் தாத்தாமார்  "ஏத்திக்" கொண்டு  வீட்டில் வந்து என்ன  அலடடலோ?(கூத்தோ ) அதை யாரு சகித்து கொள்வது .

அப்புறம் ஏனக்கா பார்ட்டி?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2024 at 18:54, ஈழப்பிரியன் said:

மாமனார்களை மட்டும் எப்படி அழைப்பது?

என்னை யாராவது எங்காவது தனியே வா என்றால் நான் போக மாட்டேன்.

தொடக்கத்திலா முடிவிலா இதைக் கேட்டீர்கள்?

வீடு வேலை

வேலை வீடு

இது தானே அண்ணா குடும்ப தலைவன் என்று இதுவரை....

இனியாவது போகமுதல் என்றாலும்...?

கேள்வி கொஞ்சம் ஆரம்பித்ததும். 🤣

On 6/3/2024 at 19:14, ஈழப்பிரியன் said:

ஒரு பார்வை பார்த்தாலே போதும்.

தூக்கின கிளாசை வைத்துவிடுவார்கள்.

அதே... 😅

  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.