Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்றும் நீ எனக்கே......

Featured Replies

என்றும் நீ எனக்கே......

வீசும் காற்று ஓயும் நேரம்

கங்கை நதிகள் காயும் நேரம்

நம் காதலை நானும் மறந்து போவேன்

பேசும் பேதை ஊமை ஆனால்

வீசும் பார்வை ஓய்ந்து போனால்

உயிரே நானும் என்ன செய்வேன்

கன்னி நீயும் என்னை வெறுந்தால்

காரணம் அதை சொல்ல மறுத்தால்

பெண்னே நானும் என்ன செய்வேன்

விழிகள் தீண்டி காதல் கொண்டேன்

வழிகள் மாறி எங்கோ சென்றேன்

விதிகள் இது என விட மாட்டேன்

கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால்

காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால்

வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன்

வாடும் மலர்கள் பூத்தவை தான்

சொட்டும் மழைதுளி மண்ணிற்கே தான்

என்னவளே நீ என்றும் எனக்கே தான்

வானத்தில் பல நட்சத்திரம் உலா

இருதும் ஒரே ஒரு வெண்ணிலா

ஏங்கினாலும் தாங்கி வழும் இந்த நட்சத்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு. மும்மூன்று வரிகளாய் நன்றாக இருக்கன்றது .

கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால்

காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால்

வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன்

மனதைக் கவர்ந்தது

என்றும் நீ எனக்கே......

வானத்தில் பல நட்சத்திரம் உலா

இருதும் ஒரே ஒரு வெண்ணிலா

ஏங்கினாலும் தாங்கி வழும் இந்த நட்சத்திரம்

நன்றாக இருந்தது கவிதை கவரிமான் அதிலும் இந்த வரிகள் சூப்பர்!! வெண்ணிலா வரும் நாட்கள் சென்றாலும் உங்கள் இருப்பிடம் தேடி வர வாழ்த்துகள்........ :icon_mrgreen: !!

ஜம்மு பேபி பஞ் கவிதை-(எங்கையோ வாசித்தது)

மண்ணுக்கு ஆதரவு மழை..!!

கண்ணுக்கு ஆதரவு இமை..!!

சொல்லுக்கு ஆதரவு நாக்கு..!!

என் மகிழ்ச்சிக்கு ஆதரவு நீயே தான்......

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உங்கள் கவிதை அழகு. மும்மூன்று வரிகளாய் நன்றாக இருக்கன்றது .

கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால்

காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால்

வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன்

மனதைக் கவர்ந்தது

நன்றி கறுப்பி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கவரிமானின் கன்னி கவிதைக்கு வாழ்த்துக்கள்.

வாடும் மலர்கள் பூத்தவை தான்

சொட்டும் மழைதுளி மண்ணிற்கே தான்

என்னவளே நீ என்றும் எனக்கே தான்

உங்கள் நம்பிக்கை வீண்போகாது.

  • தொடங்கியவர்

நன்றாக இருந்தது கவிதை கவரிமான் அதிலும் இந்த வரிகள் சூப்பர்!! வெண்ணிலா வரும் நாட்கள் சென்றாலும் உங்கள் இருப்பிடம் தேடி வர வாழ்த்துகள்........ :wub: !!

ஜம்மு பேபி பஞ் கவிதை-(எங்கையோ வாசித்தது)

மண்ணுக்கு ஆதரவு மழை..!!

கண்ணுக்கு ஆதரவு இமை..!!

சொல்லுக்கு ஆதரவு நாக்கு..!!

என் மகிழ்ச்சிக்கு ஆதரவு நீயே தான்......

அப்ப நான் வரட்டா!!

நன்றி ஜம்மு... உங்கள் கவிதை கூட அழகு

ஆனால்.... வெண்ணிலா என்னை தேடி வர வேண்டிய தேவை இல்லை..... :icon_mrgreen::(

வெண்ணிலா ஒரு வெண்ணிலாவை தேடி வருமா??? :wub::lol::(:wub:

கவிதை வேறும் கற்பனையே......

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ராசா கவரிமான்.. உலகத்தில உங்களுக்கு என்று சொந்தமானது உங்க உடலும் உங்க உயிரும் மட்டும் தான். அதுவும் சாவு வரும் வரை. மிகுதி எல்லாம் நீர்க் குமிழிகள் போல கண் முன்னால் தோன்றி மறைபவை. அதில் காதல் என்பது.. ஒரு சில வினாடிகள் நிலைக்கும் குமிழி. அதைக் கூட உடைச்செறிஞ்சிட்டுப் போயிடுங்கள் சுயநல விலங்குகள். எனவே.. கவரிமானான நீங்க.. கவிதை எழுதிறதோட கற்பனையை மட்டுப்படுத்திட்டு.. நிஜ வாழ்வில நிஜத்தினூடாக பயணிக்க விளையுங்க. இப்படித்தான் பலரும் கனக்க கற்பனை பண்ணி.. இறுதியில.. எல்லாம் கவுண்டு கொட்டினதுதான் மிச்சம். பொறுக்கி எடுக்க ஒரு தூசு கூட இல்லை. ஏனென்னா எல்லாமே கற்பனையாப் போச்சு. :icon_mrgreen::(

ஆனா உங்கள் கற்பனை நல்லா இருக்கு. நல்ல உவமைகளூடு காதலுக்கு உருகி...ம்ம்ம்....!

  • தொடங்கியவர்

கவரிமானின் கன்னி கவிதைக்கு வாழ்த்துக்கள்.

வாடும் மலர்கள் பூத்தவை தான்

சொட்டும் மழைதுளி மண்ணிற்கே தான்

என்னவளே நீ என்றும் எனக்கே தான்

உங்கள் நம்பிக்கை வீண்போகாது.

நன்றி nunavilan,

அச்சோ.... இது ஒரு கற்பனை.... :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அப்பு ராசா கவரிமான்.. உலகத்தில உங்களுக்கு என்று சொந்தமானது உங்க உடலும் உங்க உயிரும் மட்டும் தான். அதுவும் சாவு வரும் வரை. மிகுதி எல்லாம் நீர்க் குமிழிகள் போல கண் முன்னால் தோன்றி மறைபவை. அதில் காதல் என்பது.. ஒரு சில வினாடிகள் நிலைக்கும் குமிழி. அதைக் கூட உடைச்செறிஞ்சிட்டுப் போயிடுங்கள் சுயநல விலங்குகள். எனவே.. கவரிமானான நீங்க.. கவிதை எழுதிறதோட கற்பனையை மட்டுப்படுத்திட்டு.. நிஜ வாழ்வில நிஜத்தினூடாக பயணிக்க விளையுங்க. இப்படித்தான் பலரும் கனக்க கற்பனை பண்ணி.. இறுதியில.. எல்லாம் கவுண்டு கொட்டினதுதான் மிச்சம். பொறுக்கி எடுக்க ஒரு தூசு கூட இல்லை. ஏனென்னா எல்லாமே கற்பனையாப் போச்சு. :icon_mrgreen::(

ஆனா உங்கள் கற்பனை நல்லா இருக்கு. நல்ல உவமைகளூடு காதலுக்கு உருகி...ம்ம்ம்....!

அண்ணா நன்றி,

அப்பு ராசா இல்லை ரானி... :(:wub::wub:

வாழ்க்கையே சில நிமிடம் இருக்கும் குமிழி போல தானே.... உயிர் கூட நமக்கு சொந்தம் இல்லை.. எப்போவந்தது எப்போ போகும் எதுவும் எமக்கு தெரியது.... இருக்கும் வரை விரும்பியதை செய்து சந்தோஷமக இருப்போமே..... காதலிப்பவர்கள் காதலிக்கட்டுமே..... ^_^

ஆனால் நானும் உங்கள் கட்சி..... எனக்கும் காதல் பிடிக்கது :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் நிசத்தை கொண்டு வந்து கொட்டுவதால் கற்பனைகளை வித்தியாசப்படுத்த முடியவில்லை.கற்பனை அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நன்றி,

அப்பு ராசா இல்லை ரானி... :(:(:wub:

வாழ்க்கையே சில நிமிடம் இருக்கும் குமிழி போல தானே.... உயிர் கூட நமக்கு சொந்தம் இல்லை.. எப்போவந்தது எப்போ போகும் எதுவும் எமக்கு தெரியது.... இருக்கும் வரை விரும்பியதை செய்து சந்தோஷமக இருப்போமே..... காதலிப்பவர்கள் காதலிக்கட்டுமே..... ^_^

ஆனால் நானும் உங்கள் கட்சி..... எனக்கும் காதல் பிடிக்கது :wub::lol:

காதலிக்கிறவை காதலிக்கட்டும்.. அது அவைட சுதந்திரம். ஆனா பாவங்கள் கற்பனையில காதலை தேனாகக் கண்டிட்டு.. நிஜத்தில.. வேம்பாகக் கசக்கிற போது.. உள்ளம் தாங்க பக்குவப்படவும் வேண்டும் அல்லவா அதுதான்.

காதலைப் பிடிக்காது என்றாதீர்கள். அது உங்களைப் பிடித்து பீடித்து விடும். அப்புறம்.. அதுவரை பளிங்காக இருந்த உங்கள் மனசு அப்புறம்.. வெடிப்புகள் வீழ்ந்த கீறல்கள் மிகுந்த பாறையாகிடும். காதலையும் ஒரு வரையறைக்குள்ள.. வைச்சு ரசிச்சிட்டு.. விட்டிடனும். ஏனென்னா.. நாங்க எதிர்பார்க்கிறது போல.. காதலோடு மறுதரப்பு அமையாது எப்பவும். அப்படி அமைவது அதிஸ்டம். :wub::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இந்தக் கவிறுர்கள் ரொம்பவே குழப்புகிறார்கள்

இப்ப முடிவுதான் என்ன?

காதலிக்கலாமா? கூடாதா?

உங்க பதிலைப்பாத்து..... ஆதியும்:icon_mrgreen:

உங்கள் கவிதை நல்லா இருக்கு. சந்தம் எனக்கு பிடிச்சிருக்குங்கோ

ஆனால் எழுத்துப்பிழைகள் உள்ளன.

கன்னி நீயும் என்னை வெறுந்தால்

காரணம் அதை சொல்ல மறுத்தால்

பெண்னே நானும் என்ன செய்வேன்

கன்னி நீயும் என்னை வெறுத்தால்" என்று வரணும் என நினைக்கிறேன்

கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால்

காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால்

வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன்

கனவு , காதல் ரணங்கள் , இதுவென

இப்படி வரணும் என நினைகிறேன்

வானத்தில் பல நட்சத்திரம் உலா

இருதும் ஒரே ஒரு வெண்ணிலா

ஏங்கினாலும் தாங்கி வழும் இந்த நட்சத்திரம்

இருந்தும் , வாழும் ஒரே ஒரு வெண்ணிலா

என வரணும்

நல்லா இருக்கு இந்த வரிகள்.

வாழ்த்துக்கள் கவரிமான்

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்
காதலிக்கிறவை காதலிக்கட்டும்.. அது அவைட சுதந்திரம். ஆனா பாவங்கள் கற்பனையில காதலை தேனாகக் கண்டிட்டு.. நிஜத்தில.. வேம்பாகக் கசக்கிற போது.. உள்ளம் தாங்க பக்குவப்படவும் வேண்டும் அல்லவா அதுதான்.காதலைப் பிடிக்காது என்றாதீர்கள். அது உங்களைப் பிடித்து பீடித்து விடும். அப்புறம்.. அதுவரை பளிங்காக இருந்த உங்கள் மனசு அப்புறம்.. வெடிப்புகள் வீழ்ந்த கீறல்கள் மிகுந்த பாறையாகிடும். காதலையும் ஒரு வரையறைக்குள்ள.. வைச்சு ரசிச்சிட்டு.. விட்டிடனும். ஏனென்னா.. நாங்க எதிர்பார்க்கிறது போல.. காதலோடு மறுதரப்பு அமையாது எப்பவும். அப்படி அமைவது அதிஸ்டம். :(:(
அண்ணா என்ன விடயம் என்றாலும் நாங்கள் எதிர் பார்த்தது கிடைக்காவிட்டா... மனம் உடையும் அது காதலிலும் தான்... ஆனால் காதலித்தவரை கைபிடிப்பார்கள் என்றால் காதலிப்பதில் தப்பு இல்லைதானே.... :icon_mrgreen: காதல் என்னை ஒரு காலமும் பீடிக்காது... :wub::wub:
இந்தக் கவிறுர்கள் ரொம்பவே குழப்புகிறார்கள் இப்ப முடிவுதான் என்ன?காதலிக்கலாமா? கூடாதா?உங்க பதிலைப்பாத்து..... ஆதியும்:)
கரம் பிடிப்பீர்கள் என்றால்... காதலியுங்கோ..... இந்த சிறுமியின் ஆசீர்வாதங்கள் ^_^:lol::wub:
  • தொடங்கியவர்

நன்றி நிலா அக்கா

நான் சிறு வயதில் இங்கு வந்தேன், இங்கு தான் தமிழ் கற்று கொண்டேன்

பிழைகளை திருத்த முயச்சிக்கின்றேன்...

காதல் சொட்டும் உங்கள் கவிதை அருமை தொடருங்கள் ......

கவரிமான்...வீசிய...

கவிச்சாமரத்தில்...

இமைகள் மூடி...இதமாய்

சுமைகள் மறந்தேன் சில கணம்...

எழுது எழுது...இன்னும் இன்னும்..

ரசிகர்களில் நானும் ஒருவன்

விண்ணப்பம் உன் சபைக்கு

நன்றி..வாழ்த்துக்கள்..

(மயிர் துறந்தால் உயிர் துறக்கும் கவரிமான் என்பார்கள்..உண்மைதானா அது?..)

  • தொடங்கியவர்

நன்றி பாலன் அண்ணா.....

  • தொடங்கியவர்

கவரிமான்...வீசிய...

கவிச்சாமரத்தில்...

இமைகள் மூடி...இதமாய்

சுமைகள் மறந்தேன் சில கணம்...

எழுது எழுது...இன்னும் இன்னும்..

ரசிகர்களில் நானும் ஒருவன்

விண்ணப்பம் உன் சபைக்கு

நன்றி..வாழ்த்துக்கள்..

நன்றி அண்ணா, ஆனால் நீங்கள் என்னை நக்கல் செய்றீங்கலோ என்று தான் ஒரு சந்தேகம்.... :unsure:

(மயிர் துறந்தால் உயிர் துறக்கும் கவரிமான் என்பார்கள்..உண்மைதானா அது?..)

தெரியவில்லை அண்ணா...

Yak ஐ தானே கவரிமான் என்பார்கள் இல்லையா? ஆனால் கவரிமான் வேறும் கற்பனை என்றும் எங்கோ வாசித்த ஞாபகம்... உண்மை எது என்று தெரியவில்லை.... :lol::lol:

நன்றி அண்ணா, ஆனால் நீங்கள் என்னை நக்கல் செய்றீங்கலோ என்று தான் ஒரு சந்தேகம்.... :unsure:

:lol:

  • தொடங்கியவர்

:unsure:

சரி சரி நீங்கள் நக்கல் செய்யல.... இதுக்கு எல்லாம் ஏன் கவலை.. சிரியுங்கோ :lol:

விழிகள் தீண்டி காதல் கொண்டேன்

வழிகள் மாறி எங்கோ சென்றேன்

விதிகள் இது என விட மாட்டேன்

கவரிமான் உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது..இந்த வரிகள் என்னை

மிகவும் கவர்ந்துள்ளன.புதிய முயர்ச்சிக்கு நன்றிகள்.இன்னும் தொடருங்கள். ந

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையின் வரிகள் கற்பனையின் வெளிப்பாடுகள் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

நெடுக்காலைபோவானின் கருத்தின்படி கற்பனை கற்பனையாகவே இருக்கனும்.

இப்படித்தான் இந்ததளத்தில் ஒரு கவிதைக்கு பதிலாக நான்கு வரிகள் எழுதினேன், அப்பாடா நான் தனிமடலில் சந்தித்த சோதனைகள் வார்தைகளால் சொல்ல முடியாது.

இந்த சம்பவத்திற்கு பின்பு ரொம்ப அடக்கி வாசிக்கின்றேன்.

உங்கள் கவிதைவரிகள், வசன அமைப்புக்கள் சிறப்பாக உள்ளது. இருந்தும் உங்கள் வசனநடைகள் இந்த தளத்தில் பழக்கப்பட்ட மாதிரி உள்ளது. ம் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்

கவரிமான் உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது..இந்த வரிகள் என்னை

மிகவும் கவர்ந்துள்ளன.புதிய முயர்ச்சிக்கு நன்றிகள்.இன்னும் தொடருங்கள். ந

நன்றி Subytha அக்கா

  • தொடங்கியவர்

உங்கள் கவிதையின் வரிகள் கற்பனையின் வெளிப்பாடுகள் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

நெடுக்காலைபோவானின் கருத்தின்படி கற்பனை கற்பனையாகவே இருக்கனும்.

இப்படித்தான் இந்ததளத்தில் ஒரு கவிதைக்கு பதிலாக நான்கு வரிகள் எழுதினேன், அப்பாடா நான் தனிமடலில் சந்தித்த சோதனைகள் வார்தைகளால் சொல்ல முடியாது.

இந்த சம்பவத்திற்கு பின்பு ரொம்ப அடக்கி வாசிக்கின்றேன்.

நானும் கற்பனையுடன் நிறுத்துவதாகவே எண்ணியுள்ளேன்..... :wub::lol: உங்கள் கருத்தை நிங்கள் கூறுவதில் ஏன் ஐயம்?? :lol:

உங்கள் கவிதைவரிகள், வசன அமைப்புக்கள் சிறப்பாக உள்ளது. இருந்தும் உங்கள் வசனநடைகள் இந்த தளத்தில் பழக்கப்பட்ட மாதிரி உள்ளது. ம் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி அண்ணா,

ஓ.... அதுதான் என் குரலை கேட்டது போல் உள்ளது என்று சொன்ன நீங்களோ.... :unsure:

இல்லை, நான் யாழ் களத்திற்கு புதிது.... இங்கு இணைந்ததன் காரணம் என்னுடைய தமிழ் அறிவை கூட்ட மட்டுமே......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.