Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
download-5.jpg

கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது .

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத்தியான் என்ற இரசாயனத்தை தெளிக்க ஆரம்பித்ததில் இருந்து சிட்டுக்குருவியின் அழிவு தொடங்கியது, மேலும் 1990 களில் கொசுவர்த்தி சுருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்தன. இந்த கொசுவர்த்திச் சுருள்களில் உள்ள இரசாயனம் பறவைகளின் பெருக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இப்போது சிட்டுக்குருவி மிகவும் அருகிவரும் பறவையாக உள்ளதாகவும் சிட்டுக்குருவியின் அழிவு குறித்து முதலில் இலங்கையில் இருந்தும், பின்னர் இந்தியாவில் இருந்தும் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசாலி தயானந்தா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/296962

சுண்டிக்குளி மகளிர் பாடசாலையும், வேம்படி மகளீர் பாடசாலையும் இருக்கும் வரைக்கும் வடக்கில் சிட்டுக் குருவிகள் அழியாது என்று சுவாமி நிழலியானந்தா அவர்கள் அருளியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா இப்படி பறவைகளும் மிருகங்களும் பாதுகாப்பற்ற இரசாயன உரங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி பாவிப்தால் அழிந்து போகின்றன என்றால் அதே தாக்கம் அங்குள்ள  மனிதருக்கும் மட்டும் அன்றி புலம்பெயர் தமிழரையும் விட்டு வைக்கபோவதில்லை ஏனென்றால் கொழும்பு மரக்கறி எனும் போர்வையில் எமது கிச்சனுக்குள் வந்து எமன் போல் உட்கார்ந்து இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா, நான் நினைத்திருந்தேன் இந்தக் கொட்டைப்பாக்கு குருவிகள், அப்படித்தான் இவைகளை ஊரில் சொல்லுவோம், எங்களின் இன்னோரன்ன கொடுமைகளையும் தாங்கி எப்படியாவது  வாழ்ந்து கொண்டேயிருக்கும் என்று.

சில வருடங்களின் முன் எங்கோயோ வாசித்த ஒரு ஞாபகம். சென்னையில் ஒருவர் தனது மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியங்கள் போட ஆரம்பித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக சிட்டுக் குருவிகளும், வேறு சில சிறு பறவைகளும் அங்கு சேர ஆரம்பித்து, பின்னர் நிறைய குருவிகள் நிரந்தரமாக வந்து சேர்ந்தன என்று. இப்படி ஒரு திட்டத்தை இவர்களும் ஆரம்பித்துப் பார்க்கலாம்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரசோதரன் said:

பிலாக்கொட்டைக் குருவி, பிலினி, செம்பகம் எல்லாம் மதிய நேரத்தில் தண்ணீர் தாங்கி நிரம்பி வழியும் நீரில் குளிக்க வருவார்கள்.
இரட்டைவால் குருவியையும் கண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

பிலாக்கொட்டைக் குருவி, பிலினி, செம்பகம் எல்லாம் மதிய நேரத்தில் தண்ணீர் தாங்கி நிரம்பி வழியும் நீரில் குளிக்க வருவார்கள்.
இரட்டைவால் குருவியையும் கண்டிருக்கிறேன்.

👍...

இப்ப ஞாபகம் வருகிறது. பிலாக்கொட்டை குருவி என்றும் சிட்டுக் குருவிகளை சொல்லுவோம். நீங்கள் இன்று காணும் இந்தக் குருவிகள் அன்றும் எங்களூரில் இருந்தன.

பாரதியாரின் '....செண்பகத் தோட்டத்திலே...' என்ற வரிகளை என்று கேட்டாலும், உடனே நினைவுக்கு வருவது செண்பகப் பறவை தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

👍...

இப்ப ஞாபகம் வருகிறது. பிலாக்கொட்டை குருவி என்றும் சிட்டுக் குருவிகளை சொல்லுவோம். நீங்கள் இன்று காணும் இந்தக் குருவிகள் அன்றும் எங்களூரில் இருந்தன.

பாரதியாரின் '....செண்பகத் தோட்டத்திலே...' என்ற வரிகளை என்று கேட்டாலும், உடனே நினைவுக்கு வருவது செண்பகப் பறவை தான்.....

செம்பகம் முருங்கையில் இருக்கும் மசுக்குட்டியை தேடித் தேடி விழுங்கும். ஆனால் கூட்டமாக அடிமரத்தில் இருப்பவற்றை கண்டும் காணாதது போல செல்கிறது!

1 hour ago, ஏராளன் said:

பிலாக்கொட்டைக் குருவி, பிலினி, செம்பகம் எல்லாம் மதிய நேரத்தில் தண்ணீர் தாங்கி நிரம்பி வழியும் நீரில் குளிக்க வருவார்கள்.
இரட்டைவால் குருவியையும் கண்டிருக்கிறேன்.

புணில் என்ற குருவியையா பிலினி என்று அழைக்கின்றீர்கள்? புணில் தத்தித் தத்தி நடக்கும் குருவி...

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

புணில் என்ற குருவியையா பிலினி என்று அழைக்கின்றீர்கள்? புணில் தத்தித் தத்தி நடக்கும் குருவி...

நீங்கள் புலினி என்னும் பறவையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்......! 

கிராமங்களில் இவை நிறைய இருக்கும்........யாழ் நகரத்துக்குள் நான் காணவில்லை......!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

நீங்கள் புலினி என்னும் பறவையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்......! 

கிராமங்களில் இவை நிறைய இருக்கும்........யாழ் நகரத்துக்குள் நான் காணவில்லை......!

இவைகளை புனிஞ்சில் என்று என் ஊரில் சொன்னதாக ஞாபகம். Seven Sisters என்றும் சொல்லுவார்கள். அநேகமாக ஏழு குருவிகள் ஒன்றாக வரும்.

1 hour ago, suvy said:

நீங்கள் புலினி என்னும் பறவையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்......! 

ஓம். சின்ன வயதில் இதனை புனில் / புணில் என்றே அழைத்த ஞாபகம்.

இவை நடக்கும் போது, தத்தித் தத்தித் தான் நடக்கும். சிறு வயதில் இருக்கும் போது அம்மா இதற்கு ஒரு கதை சொல்லுவா. இராமர் பாலம் கட்டும் போது, இந்தக் குருவி தான் அதிகம் வேலை செய்ததாம். , அணில் ஒரு வேலையையும் செய்யாமல் சும்மா இருந்ததாம். இராமர் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க வரும் போது, அணில் தானே தான் எல்லா வேலையும் செய்தது என்றும், இந்தக் குருவி வேலை ஒன்றும் செய்யாமல் மண்ணுக்குள் புரண்டு விளையாடினது என்றும் பொய் சொல்லிச்சாம். எனவே, இராமர் அணிலின் முதுகில் "நீ நல்ல பிள்ளை" என்று சொல்லி, தன் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தாராம். அதனால் தான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாம். இந்தக் குருவியைப் பார்த்து, "நீ வேலை ஒன்றும் செய்யாததால் ஒழுங்காக நடக்க முடியாமல் தத்தித் தத்தி தான் நடப்பாய்" என்று சாபம் கொடுத்தாராம். அதனால் தான் தத்தி தத்தி நடக்குதாம். 😀

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:

😀...

நீங்கள் சொல்லும் இந்தக் கதை இன்றைய கணினி தொழில்நுட்ப துறைக்கு சரியாக பொருந்தும். யாரோ இரவு பகலாக வேலை செய்வார்கள், யாரோ பெயர் எடுப்பார்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டு காலப் போர் மனிதர்களை மட்டுமல்ல சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளை அழித்ததில் பெரும்பங்கு வகுத்தது.குண்டு வெடிப்புகளையும் போர் விமானங்களின் இரைச்சலும் குண்டுகளின் இரசாயனத்தன்மையும் சிறிய உயரினங்களின் அழிவை அதிகரித்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிலாக்கொட்டை குருவிகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள தாவரத்தில் தாமாகவே வந்து கூடுகட்டி வாழும். சிலகாலம் வாழ்ந்து விட்டு இடம்பெயர்ந்து விடும். இடம் பெயர்ந்தால் சிலர் அதை கெட்ட சகுனமாக பார்ப்பர்.😒

இது நான் கண்முன்னே பார்த்த அனுபவங்களில் ஒன்று.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

புணில் என்ற குருவியையா பிலினி என்று அழைக்கின்றீர்கள்? புணில் தத்தித் தத்தி நடக்கும் குருவி...

ஓமண்ணை பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள்.

11 hours ago, suvy said:

நீங்கள் புலினி என்னும் பறவையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்......! 

கிராமங்களில் இவை நிறைய இருக்கும்........யாழ் நகரத்துக்குள் நான் காணவில்லை......!

முருக்கு, மாமரம் போன்றவை நிற்பதாலும் பறவைகள் வருகின்றன.
அவற்றை தொந்தரவு செய்ய எங்கள் வீட்டில் ஒருவரும் இல்லாததாலும் அவை சுதந்திரமாக வந்து செல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஓமண்ணை பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள்.

முருக்கு, மாமரம் போன்றவை நிற்பதாலும் பறவைகள் வருகின்றன.
அவற்றை தொந்தரவு செய்ய எங்கள் வீட்டில் ஒருவரும் இல்லாததாலும் அவை சுதந்திரமாக வந்து செல்கின்றன.

உங்கள் வீட்டில் பறவைகளை தொந்தரவு செய்ய ஒருவரும் இல்லை என்றவுடன், சுகுமாரனின் இந்தக் கவிதை ஞாபகத்திற்கு வந்தது. அப்படியான வீடுகளுக்கும், இடங்களிற்கும் கடவுளும் சேர்ந்து வந்து போகின்றார் என்ற ஒரு அர்த்தத்தில் இதை கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கின்றார் என்று நான் விளங்கிக்கொண்டேன்.

************

செவ்வாய்க்கு அடுத்த நாள், ஆனால் புதன்கிழமை அல்ல
---------------------------------------------------------

வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ
உதவி கோரியோ நன்கொடை திரட்டவோ
எப்போதாவது யாராவது வருவார்கள்
என்பதைத் தவிர்த்தால்
வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர
வருகையாளர் அதிகமில்லை வீட்டுக்கு

அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும்
அபூர்வமாக நுழைவதுண்டு

விடிந்ததும் காற்றின் வெளிச்சம்
வீட்டைப் பிரியாத பூனையின் காதலன்
காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி
முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று
விசாரனை செய்ய வரும் நீல வால் குருவி
தொட்டிப் பூவை பறித்தது ஏன் என்று
பிராது சொல்லும் தேன்சிட்டு
மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை
அறைக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக்
கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு
இவையெல்லாம் தற்செயல் வருகைகள்

இன்று
வெய்யிலின் இளநீர் வாசனையோடு
கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும்
நட்டநடுப் பகலில்
மூடிய கதவைக் கடந்து
யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன்
கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன்
யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை
எனினும் யாரோ வந்து
வீடு முழுவதும்
ஊன்றி நடந்து திரும்பிய அடையாளாமாய்
தாழிட்ட கதவுக்கு இப்பால்
வாசல் நிலையருகில் தரையில்
ஒரு ஜோடிக் காற்சுவடுகள்
ஆரஞ்சு ஒளியுடன்
விடுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன்

அப்போது முதல்தான்
இதயத் துடிப்பின் நிமிடக்கணக்கில்
ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன்
அன்று
செவ்வாய்க்கு மறு நாள், ஆனால்
புதன்கிழமை அல்ல.

- சுகுமாரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.