Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது?

விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது.

இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள். 

Edited by ரஞ்சித்
விசுகு

  • Replies 128
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக

  • goshan_che
    goshan_che

    இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த

  • குமாரசாமி
    குமாரசாமி

    சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி  சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு  உதாரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது?

விடுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது.

இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள். 

தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது நல்லதே. அங்கே இவற்றிற்கான விடை கிடைக்கும். 

போன வருடம் என்று நினைக்கிறேன். பிரெஞ்சு ஜனாதிபதியின் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பிரெஞ்சு மக்களும் ஊடகங்களும் அதற்கு கொடுத்த பெயர். இது அவருக்கான பிரெஞ்சு மக்களின் அறை என்று.

எனவே பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதியையே அடிக்க முடியும். ஆனால் ஏன் எதற்கு நேரம் சந்தர்ப்பம் என்று இருக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2024 at 00:00, குமாரசாமி said:

இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டுமா?

அண்ணை, நாங்கள் கண்ணியத்தோட நடந்துகொண்டு சாதிச்ச சில விடயங்களைப் பாருங்கோ,

1. 76 வருட கால இரண்டாம் தர குடிமக்கள் என்கிற உன்னத நிலை
2. 76 வருட கால அடக்குமுறையும், அடிமைத்தனமும்.
3. தொடர்ச்சியாக அரசாங்கத்தாலும் அதன் கருவிகளாலும் உரிமை கேட்டதற்காக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பழிவாங்கற் படுகொலைகள்.
4. எமது தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பும், பெளத்த சிங்கள மயமாக்கலும்.
5. பயங்கரவாதிகள் என்கிற நாமம்.
6. 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட திட்டமிட்ட இனவழிப்பு

கண்ணியத்தோடு நடந்ததற்கே இந்தளவு சாதனைகள் என்றால், கண்ணியமில்லாமல் நடந்துகொண்டால் என்ன நடக்கும்? எமது அடையாளமும் இல்லாமற் போய்விடுமோ? 

ஆகவே, சத்தம் போடாமல் நடக்கிறதைப் பாத்துக்கொண்டு பேசாமல் இருங்கோ எண்டு சொல்லுறன், விளங்குதே?  

தலைவர் சொன்னதை விரிவாக சொல்கிறீர்கள்?

சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம். 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nochchi said:

திரியோடு தொடர்புடைய காணொளியென்பதால் இணைத்துள்ளேன்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்

நன்றி - யூரூப்

வணக்கம் நொச்சி,

இங்கு சேரமான் என்ற பெயரில் பேசுவதும், துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று பேசும் சேரமானும் ஒன்றா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காணொளியில் இவர் குறிப்பிடும் விநாயகம் என்கிற புலிகளின் முன்னாள் புலநாய்வுப் போராளி இராணுவப் புலநாய்வுத்துறையினால் வழிநடத்தப்படுவதாக இவர் கூறுகிறார். ஆனால், விநாயகம் என்பவர் இன்றும் தேசியத்தின் பால் நிற்பதாகவே வேறு செய்திகள் கூறுகின்றன. 

விநாயகம் மீது சேறடிக்கவே சேரமான் இப்பெண்ணையும் விநாயகத்துடன் இணைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது. அதாவது விநாயகமும் இராணுவ உளவாளி, இவளும் இராணுவ உளவாளி எனும் கருத்தினூடாக. 

இப்பெண் இராணுவத்துடன் பணிபுரிபவளாக இருக்கலாம், ஆனால் சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

வணக்கம் நொச்சி,

சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார். 

அதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம். 

சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி  சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு  உதாரணங்கள் தேவையில்லை.

அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான  ஊடகங்களில் இணையத்தளங்களில்  சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால்  தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து.

இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நன்றி அண்ணா 

வா என்றால் வரமறுத்து சரி ஒதுங்கி போ என்றால் போக மறுத்து  வேண்டாப்பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று செயல்களில் குற்றம் காணும் கூட்டத்தால் அழிந்து போனோம். 

 ஏற்கனவே எம்மவரின் வசை வாங்கி சூடு வாங்கி குட்டு வாங்கி உடம்பெல்லாம் ரணமாகி செத்து கிடந்த புலிகளை முள்ளிவாய்க்காலில் அழித்து விட்டோம் என்று சிங்களம் கொக்கரிக்கிறது. ஆனால் அந்தாள் போதும்டா சாமி உங்களின் ரண வேதனைகள் இதோ உங்கள் கண் முன்னாலையே ஒழிந்து போகிறேன் என்று நிக்கும் அளவுக்கு சோதனைகள் வேதனைகள். யாரிடம் சொல்லி அழ.....?😪

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

நன்றி சகோ

அந்த வீடியோவை முதலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு மரியாதையுடன் தங்கச்சி தலைவர் மற்றும் ஈழம் பற்றி பைசுவதை தவிருங்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவா என்னடா பெரிய கொம்பா என்ன எனக்கு அப்படி இப்படி என்று வம்பை ஆரம்பிக்கிறார். அப்பொழுதும் அந்த உங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவர் படத்தை எடுத்து விடு தங்கச்சி என்று தான் சொல்கிறார்கள். 

இங்கே மரியாதை கௌரவம் பண்புகள் பற்றி பேசுபவர்களுக்கு தெரியாது இவாவின் இந்த அடாவடித்தனத்தை இன்று கேட்காமல் விட்டால் ல சப்பலில் இனி எந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூருவதற்கு ஏன் மாவீரர் நாளுக்கே அக்காவின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டி வரும் என்பது. 

தட்டி கேட்கவேண்டும். 

ஒண்டில் ஆதாரம் இல்லாமல் “தட்டி”.

இல்லை என்றால் சட்ட ரீதியாக.

இப்போ கைக்கொண்ட இரெண்டுக்கும் இடைப்பட்ட வழி, நல்லதை வொட தீயதையே தரும்.

தருகிறது.

7 hours ago, ரஞ்சித் said:

இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள்.

👆🏼👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

இப்போ கைக்கொண்ட இரெண்டுக்கும் இடைப்பட்ட வழி, நல்லதை வொட தீயதையே தரும்.

தருகிறது.

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.
இது தமிழினத்தின் நடவடிக்கையுமல்ல. தமிழின அரசியல் நடவடிக்கையுமல்ல.

பல கேடு கெட்ட நடவடிக்கைகள் நடைபெறும் ஒரு இணைய தளம். அங்கு எது நடந்ததோ அதன் வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் மனிதாபிமானமாக..... பதில் நடவடிக்கை எடுத்தவர்கள் யாரென தெரியவில்லை. 
இருந்தாலும் தலைவர் படத்தை எடு என அந்த கணத்திலும் மன்றாடிய அந்த உறவை பாராட்டுகின்றேன். தமிழினத்தின் உச்சம் அவர். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.
இது தமிழினத்தின் நடவடிக்கையுமல்ல. தமிழின அரசியல் நடவடிக்கையுமல்ல.

நான் அப்படி சொல்லவுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/4/2024 at 22:17, MEERA said:

மிகவும் கீழ்த்தரமான செயல்.

இனி அந்த பெண்ணிற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க பலர் முன் வருவார்கள்.

மடியில் கனமுமில்லை பயமும் இல்லை. இவர்களைப் போல் ஈழ தமிழர்கள் சிங்கள மக்களையும் இனவாத அரசியல்வாதிகளை திட்டவுமில்லை. சாபமிடவுமில்லை.

ஈழத்தமிழர்கள் கேட்டது சிங்கள மக்களை போல் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே. வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

வா என்றால் வரமறுத்து சரி ஒதுங்கி போ என்றால் போக மறுத்து  வேண்டாப்பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று செயல்களில் குற்றம் காணும் கூட்டத்தால் அழிந்து போனோம். 

எங்குதான்  சிதறி ஓடினாலும்  நாம் ஒருங்கிணையும் கோடு இதுதான் ....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது நல்லதே. அங்கே இவற்றிற்கான விடை கிடைக்கும். 

போன வருடம் என்று நினைக்கிறேன். பிரெஞ்சு ஜனாதிபதியின் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பிரெஞ்சு மக்களும் ஊடகங்களும் அதற்கு கொடுத்த பெயர். இது அவருக்கான பிரெஞ்சு மக்களின் அறை என்று.

எனவே பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதியையே அடிக்க முடியும். ஆனால் ஏன் எதற்கு நேரம் சந்தர்ப்பம் என்று இருக்கிறது. 

🤣😂 அட! பிரெஞ்சு சட்டம் இவ்வளவு மென்மையாக இருக்குமென்று எனக்குத் தெரியாது.

மாக்ரோனைக் கன்னத்தில் அறைந்தவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது, அதில் 14 மாதங்களை ஒத்தி வைத்தார்களாம் (இன்னொரு குற்றம் செய்தால், அந்தப் 14 மாதமும் சேர்க்கப் படும், புதிய குற்றத்தின் தண்டனையோடு!).
எனவே, அடித்தவர்கள் ரெடியாக இருப்பார்கள் என நம்புகிறேன்😎

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மேற்கண்ட பெண் சம்மந்தமான காணொளி பார்வைக்கு கிடைத்தது. 

என்னத்தை சொல்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

🤣😂 அட! பிரெஞ்சு சட்டம் இவ்வளவு மென்மையாக இருக்குமென்று எனக்குத் தெரியாது.

மாக்ரோனைக் கன்னத்தில் அறைந்தவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது, அதில் 14 மாதங்களை ஒத்தி வைத்தார்களாம் (இன்னொரு குற்றம் செய்தால், அந்தப் 14 மாதமும் சேர்க்கப் படும், புதிய குற்றத்தின் தண்டனையோடு!).
எனவே, அடித்தவர்கள் ரெடியாக இருப்பார்கள் என நம்புகிறேன்😎

சட்டத்தை பற்றி நான் எங்கும் பேசவில்லை சகோ.

ஒருவரின் எதிர்ப்பை நாடே அங்கீகரித்தது. சட்டமோ மக்களோ எம்மை போல ஒன்றும் அவரை கொலைகாரனாக முட்டாளாக வன்முறையாளனாக பார்க்கவில்லை என்று தான் எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

மிகவும் பண்பாக விமர்சித்தவரை முன்பு  இதே பாரிசில் கொலையே செய்துள்ளோம்.  அநாரிகமாக வசைபாடிய இந்த பெண்ணுக்கு இதை கூட செய்யக்கூடாதா என்று கேட்பதில் நியாயம் உண்டு தானே!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தட்டி கேட்கவேண்டும். 

ஒண்டில் ஆதாரம் இல்லாமல் “தட்டி”.

👆🏼👍

என் வழி....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

என் வழி....

என் வழி 3ம் வழிதான். ஆனால் 2 க்கு 1 பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

சட்டத்தை பற்றி நான் எங்கும் பேசவில்லை சகோ.

ஒருவரின் எதிர்ப்பை நாடே அங்கீகரித்தது. சட்டமோ மக்களோ எம்மை போல ஒன்றும் அவரை கொலைகாரனாக முட்டாளாக வன்முறையாளனாக பார்க்கவில்லை என்று தான் எழுதினேன். 

லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎

ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது.

எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎

நான் இதை தமிழர் அல்லது புலிகள் சம்பந்தப்பட்டதாக பார்க்கவில்லை.

நீங்கள் ல சப்பலில் வந்து நின்று புங்குடுதீவு தீவானுக்கு புகையிலை வித்தனிங்களே என்று சொல்லி பாருங்கள். விசுகு வை சந்திக்கலாம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎

ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது.

எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.

நீங்கள் கூறிய Paris telegraph தளத்தில்,

Woman was attacked by a group of LTTE (terrorist) Mobs in Paris

என்ற தலைப்புடன் இந்த காணொளி  உள்ளது. இப்போது தெரிகிறதா யார் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது என்று.  சொந்த செலவில் சூனியம் வைப்பது என்று இதை தான் கூறுவர்.  இதை செய்த முட்டாள்களுக்கு பாராட்டுப்பத்திரம் வேறு.  அடிமுட்டாள்கள் மட்டுமே இந்த செயலையும் காணொளி எடுத்து பதிவிட்ட முட்டாள்களையும் ஆதரிக்க முடியும். 

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ விடுதலை போராட்டத்தையும், மரணித்த மாவீரர்களையும் யாரும் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்தக்கூடாது. அது ஈழ தமிழினம் சம்பந்தப்பட்டது. 
மற்றும் படி  உங்கள் தனிப்பட்ட டிங் டொங் விளையாட்டுக்களை உங்களுடனே வைத்துக்கொள்ளங்கள். இது கட்டளை அல்ல வேண்டுதல்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, island said:

நீங்கள் கூறிய Paris telegraph தளத்தில்,

Woman was attacked by a group of LTTE (terrorist) Mobs in Paris

என்ற தலைப்புடன் இந்த காணொளி  உள்ளது. இப்போது தெரிகிறதா யார் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது என்று.  சொந்த செலவில் சூனியம் வைப்பது என்று இதை தான் கூறுவர்.  இதை செய்த முட்டாள்களுக்கு பாராட்டுப்பத்திரம் வேறு.  அடிமுட்டாள்கள் மட்டுமே இந்த செயலையும் காணொளி எடுத்து பதிவிட்ட முட்டாள்களையும் ஆதரிக்க முடியும். 

க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ உல‌க‌ அள‌வில் த‌மிழ‌ர்க‌ளின் கோவ‌ம் எந்த‌ அள‌வில் இருக்கு என்று..................ஆயுத‌ம் 2009க‌ளில் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து...................அவ‌ள் கேவ‌ல‌ப் ப‌டுத்தின‌து ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் தாயை ம‌ற்றும் த‌லைவ‌ரை ......................

என்னை மாதிரி மொக்க‌ன்க‌ளுக்கு.......................பெத்த‌ தாயையும் நேசித்த‌ த‌லைவ‌ரையும் யார் த‌ரைகுறைவாய் க‌தைச்சாலும் அவைக்கு ச‌ங்கு தான்.......................

2002க‌ளில் இருந்து 2005க‌ள் வ‌ரை ஈழ‌த்தில் இப்ப‌டியான‌ ஆட்க‌ளை ந‌ம்ப‌ போராளிக‌ள் ச‌ரியான‌ திட்ட‌மிட‌லுட‌ன் திட்ட‌ம் போட்டு அவ‌ர்க‌ளின் க‌தையை முடித்த‌வ‌ர்க‌ள்........................

ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளை கொல்லுவ‌தில் என‌க்கு சிறு உட‌ன் பாடு கூட‌ இல்லை அவ‌ர்க‌ள் எங்க‌ட‌ உற‌வுக‌ள் என்று அருகில் வைத்து இருப்பேன்.................எம் இன‌த்துக்கு துரோக‌ம் செய்த‌வை செய்ய‌ நினைப்ப‌வ‌ர்க‌ளை எம் த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு  த‌ண்ட‌னை கொடுப்ப‌தில் த‌வ‌று என்று சொல்ல‌ மாட்டேன்

ஊமைக் குத்து அவ‌ள‌வும் தான்............................

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

ஈழ விடுதலை போராட்டத்தையும், மரணித்த மாவீரர்களையும் யாரும் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்தக்கூடாது. அது ஈழ தமிழினம் சம்பந்தப்பட்டது. 
மற்றும் படி  உங்கள் தனிப்பட்ட டிங் டொங் விளையாட்டுக்களை உங்களுடனே வைத்துக்கொள்ளங்கள். இது கட்டளை அல்ல வேண்டுதல்.

உங்க‌ட‌ க‌ருத்தை வ‌ர‌வேற்க்கிறேன்

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி

ஆனால் எம்ம‌வ‌ர் சில‌ர் குறை சொல்வ‌தை ப‌ல‌ர் ஏற்றுக் கொள்ள‌ மாட்டின‌ம்..................இது யாழ்க‌ள‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை முன் வைக்க‌ அவைக்கு முழு சுத‌ந்திர‌ம் உண்டு ஆனால் என‌க்கு சில‌ உற‌வுக‌ளின் க‌ருத்தை வாசிக்கும் போது வேத‌னையா இருக்கு................இதே க‌ல‌ப்புக்கு பிற‌ந்த‌வ‌ளுக்கு இந்த‌ அடி அடிச்ச‌துக்கு நீண்ட‌ ப‌திவு எழுதும் உற‌வுக‌ள் இசைப் பிரியாவும் ஒரு பெண் தானே அந்த‌ ச‌கோத‌ரிய‌ அந்த‌ கோல‌த்தில் பார்க்கும் போது த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ வேத‌னை எப்ப‌டி இருந்த‌து இருக்கும் 😡..........................அட‌க்க‌ முடியாத‌ கோவ‌த்தை எவ‌ள‌வு கால‌ம் ம‌ன‌தில் வைத்து இருப்ப‌து...................

ஈழ‌ ம‌ண்ணில் இன்னொரு போர் வேண்டாம் ஆனால் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று த‌னி நாடு வேனும்...................ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் சிங்க‌ள‌வ‌னோட‌ வாழ்வ‌தும் புற்றுநோய்யுட‌ன் வாழ்வ‌துக்கு ச‌ம‌ம்..........................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.