Jump to content

மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன்.

என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது.

நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.

வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று.

தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று.

தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.

 

நானும் ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதில் சிங்கம் தான்.

எங்கடை ஆக்களுக்கு போத்தில் தூள் இல்லையெண்டால் சமைக்கவே தெரியாது எண்ட முடிவுக்கு வரலாம்.
உங்களுக்கு உறைப்பு காரம் வேணும் எண்டால் உறைப்பு பச்சை மிளகாயை வெட்டி போடலாம் இல்லை செத்தல் மிளகாயை நொருக்கிப்போட்டு போடலாம்..

ஆனால் போத்திலில் வரும் மிளகாய் தூளை என்றுமே பாவிக்காதீர்கள். இது என் 25 வருடங்களுக்கு முன்னரான சொந்த அனுபவம். வயிற்று வலி உபாதைகளும் அதற்கான  பரிசோதனைகளும் என்னை ஒரு வழி பண்ணி விட்டது.

 

இது எனது சொந்த அனுபவம் மட்டுமே. மிளகாய்த்தூள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கெடுதல் என நான் சொல்ல வரவில்லை.

என் தனிப்பட்ட கருத்து இது யாழ்களத்திற்கு  பாதிப்பு ஏற்படுமாயின் இந்த என் கருத்தை நீக்கி விடுங்கள்.

@இணையவன் @நிழலி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும்.

என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும்.

இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும்.

உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும்.

திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல்.

@பெருமாள் # எரியுதடி மாலா

முதலில் மீரா என்ன எழுதினார் அதன் கருத்து என்ன என்பதை புரியாமல் உறைப்புக்கும் பூச்சி கொள்ளி  பாவனைக்கும் Pesticide வித்தியாசம் தெரியாமல் உறைப்பு கூடாதது என்பது போல் அடித்து விடுகிறியள் .

மீரா எழுதியது மிளகாய்க்கு பாவிக்கப்படும் மனிதருக்கு கேடு விளைவிக்கும் உரப்பாவனை கொண்ட அனைத்து மிளகாய் தூள் களும் uk யில் இனித்தடை  இலங்கையில் இருந்து வரும் மிளகாய் தூள் பேமஸான பிராண்ட்  என்றாலும் செத்தல் மிளகாய் கொள்வனவு இந்தியா ஆந்திரா வில்தான் அடுத்த மூலப்பொருள் கொத்த மல்லி அந்த கதையை பிறகு பார்ப்பம் . இலங்கையில் இருந்து வரும் பொருள்கள் இயற்கையானது என்று விடயம் தெரியாமல் Port Health அனுமதிக்குது .

இப்ப விடயம் என்னவென்றால் சிங்களவன் ஜெயவாவோ சொல்றான் அது அவன் உரிமை ஆனால் கொஞ்ச காலமாய்  யாழுக்குள்  கொஞ்சம் ஜெயவாவோ சவுண்டு கொடுக்கினம் சிலர் Port Health மெயிலை தட்டி விட்டால் காணும் 90வயது கிழவன் சொல்வது போல் ஜெயவாவோ சவுண்டு வரும் .கொஞ்சம் சிந்தியுங்க காலம் காலமாய் இரண்டு இனமும் அடிபட்டு பெரும்பான்மை ஒரு தீர்வை கொண்டு வந்தாலும் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து முட்டு கொடுத்து அதை இல்லாமல் பண்ணுவது எங்களில்  இருக்கும் முட்டுக்கொடுக்கும் கூட்டம் தான் .

இனியாவது இரண்டு இனமும் நிம்மதியாய் அந்த தீவில் வாழ விடுங்க முட்டுக்கொடுத்தது இன்றுவரை காணும் சிந்தியுங்க .

சிங்களவன் புத்திசாலி என்றால் இன்று இந்த தீவில் பாலரும் தேனாறும் ஓடும் தீவை சுத்தி வர கடன் அதற்கு பின்தான் கடல் முட்டுக்கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

முதலில் மீரா என்ன எழுதினார் அதன் கருத்து என்ன என்பதை புரியாமல் உறைப்புக்கும் பூச்சி கொள்ளி  பாவனைக்கும் Pesticide வித்தியாசம் தெரியாமல் உறைப்பு கூடாதது என்பது போல் அடித்து விடுகிறியள் .

மீரா எழுதியது மிளகாய்க்கு பாவிக்கப்படும் மனிதருக்கு கேடு விளைவிக்கும் உரப்பாவனை கொண்ட அனைத்து மிளகாய் தூள் களும் uk யில் இனித்தடை  இலங்கையில் இருந்து வரும் மிளகாய் தூள் பேமஸான பிராண்ட்  என்றாலும் செத்தல் மிளகாய் கொள்வனவு இந்தியா ஆந்திரா வில்தான் அடுத்த மூலப்பொருள் கொத்த மல்லி அந்த கதையை பிறகு பார்ப்பம் . இலங்கையில் இருந்து வரும் பொருள்கள் இயற்கையானது என்று விடயம் தெரியாமல் Port Health அனுமதிக்குது .

இப்ப விடயம் என்னவென்றால் சிங்களவன் ஜெயவாவோ சொல்றான் அது அவன் உரிமை ஆனால் கொஞ்ச காலமாய்  யாழுக்குள்  கொஞ்சம் ஜெயவாவோ சவுண்டு கொடுக்கினம் சிலர் Port Health மெயிலை தட்டி விட்டால் காணும் 90வயது கிழவன் சொல்வது போல் ஜெயவாவோ சவுண்டு வரும் .கொஞ்சம் சிந்தியுங்க காலம் காலமாய் இரண்டு இனமும் அடிபட்டு பெரும்பான்மை ஒரு தீர்வை கொண்டு வந்தாலும் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து முட்டு கொடுத்து அதை இல்லாமல் பண்ணுவது எங்களில்  இருக்கும் முட்டுக்கொடுக்கும் கூட்டம் தான் .

இனியாவது இரண்டு இனமும் நிம்மதியாய் அந்த தீவில் வாழ விடுங்க முட்டுக்கொடுத்தது இன்றுவரை காணும் சிந்தியுங்க .

சிங்களவன் புத்திசாலி என்றால் இன்று இந்த தீவில் பாலரும் தேனாறும் ஓடும் தீவை சுத்தி வர கடன் அதற்கு பின்தான் கடல் முட்டுக்கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளணும் .

என்னையா வாசிக்கிறீங்க? 🤦‍♂️.

உண்மையிலேயே எழுதுவதை கிரகிக்கும் ஆற்றல் இல்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா?

அல்லது சிறிதரனுக்கு இன்னொரு திரியில் அடி விழ இங்கே காலை தூக்குகிறீர்களா?

எனக்கும் மீராவுக்கும் இடையே கான்சர் ஊக்கிகள் பற்றி ஒரு காத்திரமான உரையாடல் இந்த திரியில் நடைபெற்றது. 

உறைப்பை பற்றி எழுதியது இன்னொரு கிளைக் கருத்து, அதை பற்றி இன்னும் இரு உறவுகளுடன் இன்னொரு சம்பாசணை போனது.

இரெண்டையும் போட்டு குழப்பி அடித்து சாம்பாராக்கி….கடவுளே…

இதுக்க ஏதோ நாங்கள்தான் முட்டு கொடுத்து இலங்கையில் இனப்பிரச்சனையை தூண்டுவதாக வேறு ஒரு கற்பனை🤣🤣🤣.

”சாமி, எங்க இருந்து சாமி வாறீங்க”🤣.

ஆங்கிலத்தில் unhinged என்பார்கள். 

நீங்கள் எழுதுவது அப்படியாத்தான் உள்ளது.

முன்னமும் பல கருத்தாள்ர்களிடம் ஏறுக்குமாறாக எழுதுவது உங்கள் வழக்கம் எனிலும்,

நான் கடந்த ஒரு மாதமாக பார்க்கிறேன்….ஏதோ சுவரை பார்த்து கதைக்கும் மனிதர்கள் போல….சம்பந்தமில்லாத விடயங்களை போட்டு குழப்பி, மிகை கற்பனை, மனப்பிராந்தியில் ஏதேதோ தொடர்பே இல்லாமல் எழுதுகிறீர்கள்.

தயவு செய்து இதில் கொஞ்சம் கவனம் எடுங்கள் (சீரியசாகவே எழுதுகிறேன்).

ஏரியும் நெருப்பில் நானும் எண்ணை ஊற்ற விரும்பவில்லை. 

இனிமேல் முடிந்தளவு விலகி நடக்க் முயற்சிக்கிறேன்🙏.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு உறைப்பு காரம் வேணும் எண்டால் உறைப்பு பச்சை மிளகாயை வெட்டி போடலாம் இல்லை செத்தல் மிளகாயை நொருக்கிப்போட்டு போடலாம்..

 

எந்த உணவும்  வெப்பத்தில் எரிந்ததால் (நேரடியாக என்றால் மேலும் அதிகம்) , அதில் புற்றுநோய் ஊக்கிகள் உருவாகுவதன் வாய்ப்புகூட .

 

இதனால் தான், barbecue (குறிப்பாக), பொரியல் (கருகுவதால்) போன்றவை இயலுமானவரை தவிர்க்க அறிவுறுத்தப்படுபடுகிறது.

 

((தசை) கருகும் போது PAH  (polycyclic aromatic hydrocarbons), Heterocyclic amines (HCA) ,  இவை carcinogenic. அதே போல மாப்பொருள் உணவுகளும் கருகினால்).

 

மிளகாய் (காய்தலில், கருகல் பதத்தை அடைந்தே , எந்த வெப்பப்படுத்துதல் முறையானாலும்) தூள் தயாரிப்பது.

 

(ஆனால், பொதுவாக எந்த உணவு என்றாலும், எந்த முறையிலும் அதிகமாக, அல்லது கூடிய வெப்பநிலைக்கு (பொரியல், barbecue போன்றவை) உட்படுத்தி தயாரித்தாலும், இவைகளை உருவாக்கும் வாய்புக்கள் இருக்கிறது).  

 

எனவே, மிளகாய் தூளில்  புற்றுநோய் ஊக்கிகள் ஒப்பீட்டளவில் உருவாகுவதன் வாய்ப்புகள் கூட.

 

மிளகும் அப்படிதான், வறுத்தால், ஆனால், வறுத்தால் தான் மிளகும் தூக்கும். 

 

ஆகவே, பச்சை மிளகாயில் பொதுவாக இந்த பிரச்னை இல்லை.

 

ஆனால், நான் நம்புவது , (மிளகா தூளுக்கு) எமது  மரபணு ஏதோ ஓர் இயைபாக்கம் அடைந்து, மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்,. பொதுவாக அதை இழக்க கூடாது என்றும் (ஆயினும், அது ஒவ்வொருவரின் தெரிவும்). 

 

(ஏனெனில், உணவு, மரபணுவை காலப்போக்கில் மாற்றுவதாக இருக்கிறது, blue zone களில்  (youtube இல் தேடி பார்க்கவும்)  நடந்த ஆய்வு மூலம் விஞ்ஞான முடிவு. ஒருமித்தது அல்ல.)

 

 அனால் சுவை எமது சமையல் முறையில் உள்ள பிரச்சனை - சிறிதாக வெட்டி விட்டு தூள்  அல்லது வேறு எது வுடன் சமைத்தாலும், அந்த தன்மையை ஆக குறைந்தது பகுதியாக எடுக்கும். 

 

மற்றது, organic என்பது (விஞ்சான அடிப்படையிலும்) வகுக்கப்பட்ட  ஒரு தரம் (standard). குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் (regulations)  வேறுபடலாம் 

 

உ.ம். eu, uk organic standard, ஆசிய (அப்படி இருந்தால்), அமெரிக்கா organic standard இலும்  கூடுதலான கட்டுப்பாட்டை கொண்டு இருக்கும்.)

 

பொதுவாக, ஒரு ஒழுங்குமுறையில் உள்ள organic உணவுகள், பதார்த்தங்கள், இன்னொரு ஒழுங்கு முறையில் organic என்று certify படுத்தப்பட முடியாது.

 

இத் ஒரு காரணம், eu, uk, பொதுவாக உணவின் (organic அல்லாததும்) விலை சராசரியாக கூட இருப்பதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை மறந்து விட்டேன் 

மற்ற ஒரு கோணத்தில், மிளகு (காயவைத்தே அதன் கருமை நிறம், அதுவும் ஒரு விதத்தில் கருகல் தான்) உட்பட வேறு வாசனை திரவியங்கள் காய வைத்தே தூள் ஆக்க படுகிறது.

அனால், மிளகாய் மாத்திரம் ஏன் புற்றுநோய் ஊக்கி உருவாகுவதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பதை சொல்லும் விஞ்ஞான ஆய்வை இதுவரை காணவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

மற்ற ஒரு கோணத்தில், மிளகு (காயவைத்தே அதன் கருமை நிறம், அதுவும் ஒரு விதத்தில் கருகல் தான்) உட்பட வேறு வாசனை திரவியங்கள் காய வைத்தே தூள் ஆக்க படுகிறது.

பச்சை மிளகு என ஒன்றும் உள்ளது. இது கேரளா மற்றும் பிரேசில் நாடுகளில் மிக பிரபல்யம். அதை வைத்தே சமையலும் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

அனால், மிளகாய் மாத்திரம் ஏன் புற்றுநோய் ஊக்கி உருவாகுவதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பதை சொல்லும் விஞ்ஞான ஆய்வை இதுவரை காணவில்லை.

மிளகாய் உண்மையில் புற்றுநோய் உருவாக்கி என்றால் மெக்சிக்கோவிலும் இலங்கை இந்திய நாடுகளிலும் சனத்தொகை குறைவாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?
அதை விட  பல மூட்டுவலிகள் சதை பிடிப்பு நோய்களுக்கு  மிளகாய் கலந்த  கிறீம்களும், ஸ்பிறேகளும் பாவிக்கப்படுகின்றனவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பச்சை மிளகு என ஒன்றும் உள்ளது.

அதன் கொடிதன்மையான கண்டில் இருக்கும் போதே பச்சை நிறம், பச்சை மிளகாய் மாதிரி.


ஆய்ந்தவுடன் காயத் தொடங்கும்.

அனால் மிளகை (மிளகாய் போல ) காயவைப்பது, வாசனை, காரத்தை கூட்ட

 

8 minutes ago, குமாரசாமி said:

மிளகாய் உண்மையில் புற்றுநோய் உருவாக்கி என்றால் மெக்சிக்கோவிலும் இலங்கை இந்திய நாடுகளிலும் சனத்தொகை குறைவாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?
அதை விட  பல மூட்டுவலிகள் சதை பிடிப்பு நோய்களுக்கு  மிளகாய் கலந்த  கிறீம்களும், ஸ்பிறேகளும் பாவிக்கப்படுகின்றனவே.

மருந்து, கிரீம்களில் பவிக்கப்படுவது , மிளகாய் extract (இது மிளகாயை ஒன்றில் அரைத்து அல்லது புளிக்க வைத்து பெறுவது). இவற்றில் மிளகாய் கருகுதல்  தன்மை அடைவதில்லை.

மற்றது, முன்பே சொன்னது போல, ஏதோ ஓர் இயைபாக்கம் இருக்கவேண்டும் (இது எனது நம்பிக்கை மாத்திரமே).


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் ஒரு தடவை உங்கள் உணவு பற்றிய தேடலை மெச்சியுள்ளேன். இன்றைய பதிவுகளும் அதே ரகமே @Kadancha👍.

—————

நேற்று கோஷான் எழுதியதை, இன்று உடான்ஸ்சாமியார் ஒளவையார் ஸ்டைலில் அருளியுள்ளார்…..👇

உறைப்புயர உப்புயரும்…

உப்புயர அளுத்தமுயரும்….

அளுத்தமுயர உயிர் உயரும்…

உயிர் உயர்ந்தால் மனுசி அழுவாள்🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தயாராகும் 2 மசாலாப் பொடிகளில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா? அமெரிக்க உணவுத்துறை ஆய்வு

மசாலா பொடிகளுக்கு தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

22 ஏப்ரல் 2024
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரண்டு இந்திய மசாலா நிறுவனங்கள் தயாரித்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக,`அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்’ ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் எம்டிஹெச் (MDH) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று மசாலாப் பொடிகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் ஒரு மசாலாப் பொடியின் விற்பனையை ஹாங்காங் தடை செய்தது. இந்த மசாலாப் பொருட்களில் அதிக அளவு எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவைத் தவிர, எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. கடந்த காலங்களில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகையில், எவரெஸ்ட் நிறுவனம் தனது தயாரிப்புகள் உடல்நலனில் எந்த தீங்கையும் ஏற்படுத்தாதது, பாதுகாப்பானது என்று கூறியது. எம்டிஹெச் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) செய்தித் தொடர்பாளர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்த ஆய்வு அறிக்கைகள் பற்றி FDA-வுக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலா கலவையில் அதிக அளவு புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருக்கும் காரணத்தால் சிங்கப்பூர் அரசு நிர்வாகத்தால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில், மசாலா ஏற்றுமதிக்கான அரசு ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய மசாலா வாரியம் (the Spices Board of India), ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகக் கூறியது. அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தரம் குறித்த சிக்கல்கள் ஏற்பட மூல காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் இணையதளங்களும் சனிக்கிழமை இயக்கத்தில் இல்லை.

எத்திலீன் ஆக்சைடு என்பது தொழில் துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது மசாலாப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) இந்த ரசாயனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகிறது.

2018 ஆம் ஆண்டில், EPA "எத்திலின் ஆக்சைடு பெண்களுக்கு லிம்பாய்டு புற்றுநோயையும் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என சான்றுகள் கூறுகின்றன" என்று கூறியது.

தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களை பிபிசி தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து MDH தயாரிப்புகளை அமெரிக்கா தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

 
எவரெஸ்ட் மசாலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள்.

 
மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள்.

சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

 
மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன?

சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

"எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்.

எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது.

ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது.

 
மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது.

இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன.

அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள்

இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.

சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல.

சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உணவுகள்,ஆசிய உணவுகள் என்றாலே சுகாதாரமானதும் சுவையானதும் எனும் உலகளாவிய நம்பிக்கையை தகர்த்தெறிந்து விட்டார்கள்.

இனி பிரியாணி சாப்பிடுவியள்?🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.