Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

46 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இதுவரை ரேவண்ணா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலக அதிகாரி ஒருவர் இதை மறுத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் போலியானவை என்று கூறியிருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்னாடக மாநிலட் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் மாமாவுமான ஹெச்.டி.குமாரசாமி, இந்தச் சம்பவத்திற்காக ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட முடிவுசெய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை (ஏபர்ல் 29) தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கர்நாடக மாநில காவல்துறை ஐ.ஜி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரும் அக்குடும்பத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் சதி என்று கூறியுள்ளார்.

2000-க்கும் மேற்பட்ட போட்டோ வீடியோ காட்சிகள்

கர்நாடக முதல்வர் கே சித்தராமையா தெரிவித்தார், கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறினார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன.

"இந்தப் பென்-டிரைவ்கள் பேருந்து இருக்கைகளிலும், பேருந்து நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டன," என்று ஓர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார். "இந்தப் பென்-டிரைவ்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட ஃபைல்கள் இருந்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, இவை வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டன," என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

'வீடியோக்களைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது'

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

"சில வீடியோக்களைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "ஒரு பெண் 'தயவுசெய்து வேண்டாம், தயவுசெய்து வேண்டாம்' என்று கெஞ்சுகிறாள். அதைப் பார்த்தாலே பதறுகிறது," என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28), ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார்.

"நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெ.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

"அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மற்ற பெண்களில் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.

மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது தந்தை இந்தக் கூற்றை மறுத்து விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாங்கள் பயந்து ஓட மாட்டோம். நாங்கள் இங்கேயே இருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `இத்தகைய கொடூரமான செயலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்` எப்படி விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,HD DEVE GOWDA'S X ACCOUNT

படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா (வலது)

பா.ஜ.க மீது எழும் கேள்வி

"நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வேட்பாளரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்தே" பா.ஜ.க கூட்டணி ஏன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் நிறுத்தியது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதியை கேள்வி கேட்டு ஒரு கர்நாடக மாநில அமைச்சர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்த வீடியோக்கள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைமையிடம் தெரிவித்ததாக `தி இந்து` நாளிதழின் செய்தியைத் தொடர்ந்து இந்தலக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

பா.ஜ.க-வின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்.டி.டி.வி செய்தி சேனலிடம், "ஒரு கட்சியாக எங்களுக்கும் இந்த வீடியோக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விசாரணையைப் பற்றி எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை," என்று கூறினார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. ஹெச்.டி.ரேவண்ணாவின் சகோதரரும், முன்னாள் கர்னாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி, திங்கள்கிழமை, பிரஜ்வல் ரேவண்ணாவையும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவையும் `சமூகத்திற்கு அவமானம்` என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “[எங்கள்] குடும்பத்தைக் குறை கூறாதீர்கள். எச்.டி. ரேவண்ணாவும் அவரது குடும்பத்தினரும் தனியாக உள்ளனர். அவரது செயல்களை நான் கண்காணிப்பதில்லை," என்றார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவர் மீதும் கட்சித் தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.

இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இது பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க-வை சேர்த்தோ தனித்தனியாகவோ குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பாதிக்கலாம். இது `வெட்கக்கேடான விஷயம்` என்று பா.ஜ.க தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், தற்போதைய நிலவரத்தப் பார்த்தால், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இந்தப் புயலில் இருந்து வெளியேறும் என்று தெரிகிறது.

இருப்பினும், அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக கர்நாடகாவில் மீதமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியும்.

பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் இருந்து இந்த வீடியோக்களின்மீது தடை ஆணை பெற்றார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் பா.ஜ.க தலைவர் தேவராஜ் கவுடா, டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திராவுக்கு கடிதம் எழுதி, பிரஜ்வல் ரேவண்ணா அல்லது அவரது குடும்பத்தினர் யாரையும் கூட்டணியில் இருந்து வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கோரியிருந்தார்.

ஆனால், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டவுடன், யாரை வேட்பாளராக நிறுத்துவது, எ எனுஇநும் முடிவை கூட்டணி கட்சிக்கே விட்டுவிட வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்திருந்தது.

ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுமைப் பேராசிரியர் நாராயணா பிபிசி ஹிந்தியிடம், "இந்தச் சம்பவம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில், ஓட்டுப்பதிவு நடந்த போது, ஹசன் நகரில் மட்டுமே, வீடியோ அடங்கிய பென்-டிரைவ்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மீதமுள்ள 14 இடங்களில் பெண்களின் வாக்குகளை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தால், அது பாஜகவுக்கு தார்மீக சவால் அளிக்கும்,"

என்றார்.

அரசியல் விமர்சகர் உமாபதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவே கவுடா உயிருடன் இருக்கும் வரை, தனது கட்சியை உடைய விடமாட்டார், என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cer382232kyo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா?

கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த 14 தொகுதிகளுக்கு வரும் மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

 
 
 
மோடி
 
மோடி

பா.ஜ.க-வுக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அங்கு, கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி-க்கு எதிராக எழுந்திருக்கும் பாலியல் புகார், கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம், பா.ஜ.க கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கர்நாடகாவில் ஹாசன் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பதும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் சகோதரர் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, இந்த முறையும் அந்தத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாள், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோக்கள் வெளியாகின. ‘பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரங்கள்’ என்ற பெயரில் 300 பாலியல் வீடியோக்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரத்தால் பா.ஜ.க - ஜே.டி.எஸ் கூட்டணியினர் பேரதிர்ச்சியடைந்தனர்.

 

அடுத்த சில மணி நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,800-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், தனது கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் என்று தொடங்கி, அரசுப் பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் வரை பாலியல் ரீதியாக பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த பாலியல் காட்சிகளை அவரே வீடியோவும் எடுத்திருக்கிறார். 16 வயது சிறுமி முதல் 60 வயதுடைய பெண்கள் வரை பாலியல் அத்துமீறல்களில் பிரஜ்வல் ஈடுபட்டிருக்கிறார் என்பதை கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

பிரஜ்வல் ரேவண்ணா
 
பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். தற்போது, அவர் ஜெர்மனியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு கர்நாடகா மாநில அரசு அமைந்திருக்கிறது. மேலும், புகார்கள் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக்கோரி கர்நாடகா முழுவதும் பெண்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

 

தேவகவுடாவின் மகனும் பிரஜ்வலின் தந்தையுமான ரேவண்ணா, முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் மீதும் பாலியல் புகார் எழுந்திருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவைப் போலவே அவரது தந்தையும் தன்னை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது என்று கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர், ‘இந்து பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி பேசிவருகிறார். ஆனால், தனது கூட்டணிக் கட்சியினரின் பாலியல் வக்கிரங்களுக்கு மோடி என்ன சொல்லப்போகிறார்? அரசியல் ஆதாயத்துக்காக பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது. இது உலக அளவில் நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மிக மோசமான வன்கொடுமை நிகழ்வாக இருக்கிறது. எனவே, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பா.ஜ.க தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்பதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்ததுடன், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தையும் கர்நாடகாவில்தான் மோடி கிளப்பினார்.

 

“ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்கள். மதரீதியில் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம்” என்றெல்லாம் பேசியதோடு, காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார் மோடி. ஆனால், அவரது பிரசாரத்தை தவிடுபொடியாக்கிவிட்டது பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, ``நாட்டின் பெண்கள் சக்தியுடன் நிற்போம் என்ற பா.ஜ.க-வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது. கர்நாடகாவில் யாருடைய அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அரசு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களின் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்)-ம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறது. இன்று இது தொடர்பான அக்கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அதில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” என்றார்.

இந்நிலையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிரஜ்வல் ரேவண்ணவை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது, அக்கட்சி அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கை மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா? | Will JDS candidate videos affect nda alliance in karnataka - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி

AaraApr 30, 2024 08:58AM
karnataka-protest-1.jpg

கர்நாடகாவில்  முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை மையமாக வைத்து ஆபாச புயல் வீசி வருகிறது.  இதுபற்றி விசாரிக்க விசாரிக்க பல திடுக்கிடும் அதிர்ச்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஹசன் உள்ளிட்ட தொகுதிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்கு மூன்று நாள் முன்பிருந்தே… எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் ஹசன் பகுதியில் சமூக தளங்களில் வெளியாயின.

இதைக் கண்டு அதிர்ந்துபோன பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் ஏஜெண்ட், ‘எங்களது வேட்பாளரை மையப்படுத்தி  மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரவ விடப்பட்டுள்ளன’ என்று போலீசில் புகார் அளித்தார்.

ஆனால், இந்த வீடியோக்கள் பரவிய நிலையில், ஏற்கனவே பிரஜ்வல் வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண் கொடுத்த புகாரில் இப்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதே பெண் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த அடுத்த நாள் 27 ஆம் தேதி காலை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துவிட்டார்.

இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் பற்றி விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

eDDaeqU7?format=jpg&name=900x900

கர்நாடகா முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல பெண்கள் அமைப்பு சார்பிலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சர்ச்சையால் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள பாஜகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன.

வரும் மே 7 ஆம் தேதி கர்நாடகாவில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்ல நாடு முழுதும் பாஜகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக புறப்பட்டுள்ளது.

மோடி மௌனம் ஏன்? விளாசிய பிரியங்கா

இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.

modi-vs-priyanga-768x432.jpg

“இந்துப் பெண்களின் தாலி பற்றி பேசிய பிரதமர் மோடி அவர்களே… சில நாட்களுக்கு முன் நீங்கள் யாருக்காக வாக்கு சேகரித்தீர்களோ அவர்தான் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். இதுபற்றி ஏன் மௌனம் காக்கிறீர்கள்? இந்த பெண்களின் நிலை பற்றி பேச முடியாத உங்களுக்கு,   பெண்களின் தாலி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?”  என்று கிழித்தெடுத்திருக்கிறார் பிரியங்கா.

கர்நாடகாவின் உள் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது  மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணி அமைத்ததை விரும்பாத, பாஜகவினர் சிலர்தான் இந்த வீடியோக்களை வெளியே விட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு தேவ கவுடா குடும்பத்திலேயே சிலர் ஆதரவாக இருந்திருப்பதும்  தெரியவந்திருக்கிறது.

modi-with-revanna-768x432.jpg

யார் இந்த பிரஜ்வல்?

33 வயதே ஆன பிரஜ்வல்  இப்போதைய ஹசன் தொகுதி எம்பி.யாக இருக்கிறார்.   முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனும்  ஹோலேநரசிபூர் தொகுதி எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல்.

ராஜா வீட்டு காளைக் கன்றுக்குட்டியான பிரஜ்வால்  2014 இல் இருந்தே தனது தாத்தா தேவ கவுடாவுக்காக அரசியல் பணிகளில் இறங்கினார். பெங்களூருவில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயிலப் போன அவர் பாதியில் படிப்பை முடித்துவிட்டு அரசியலில் இறங்கினார்.

தான் 1991, 1998, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற  ஹசன் மக்களவைத் தொகுதியை தனது பேரன் பிரஜ்வலுக்காக  2019இல் விட்டுக் கொடுத்தார் தேவ கவுடா.

வீடியோ விவகாரம் புதிதல்ல…

revanna-vedios-768x435.jpg

பிரஜ்வல் பற்றிய ஆபாச வீடியோக்கள் இன்று தேசம் முழுதும் பேசுபொருளானாலும், கர்நாடகாவில் இதுபற்றி விவாதம் முதன் முறையாக 2023 ஜூன் மாதத்திலேயே வெளி வந்திருக்கிறது.

அப்போது, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் எம்பி. பிரஜ்வல் சார்பில் ஊடகங்கள் மற்றும் மூன்று தனியார் நபர்களுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில்,  “மேற்குறிப்பிட்டவர்களால் பிரஜ்வலுக்கு எதிராக  போலிச் செய்திகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஒளிபரப்புதல், வெளியிடுதல் மற்றும் பரப்புதல் போன்ற அச்சுறுத்தல் உள்ளது” என்று அதற்குத் தடை கேட்டது பிரஜ்வல் தரப்பு.  ஜூன் 2,  2023  பிரஜ்வல் பற்றிய அவதூறுகளை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்.

இந்த வழக்கில் பிரஜ்வல் ஊடகங்களைத் தவிர மூன்று தனி நபர்களையும் குறிப்பிட்டிருந்தார். அந்த 3 பேரில் ஒருவர் பிரஜ்வல் வீட்டில் கடந்த  15 வருடங்களுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி, 2023 மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டவரான கார்த்திக்.

அனைத்து ரகசியங்களும் அறிந்த டிரைவர்

பிரஜ்வல் ரேவண்ணாவின் குடும்பத்தில் ஒருவராக அறியப்பட்டவர் கார்த்திக். அவர்  பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தாயார் பவானி மீதும் கடுமையான புகார்களை கூறினார்.

Prajwal-Revanna-Kidnap-768x461.webp

‘நரசிபுரா பகுதியில் இருக்கும் எனக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை என்னையும் என் மனைவியையும் கடத்திச் சென்று அடைத்து வைத்து மிரட்டி தங்களுக்குச் சொந்தமாக பிரஜ்வலும் அவரது தாயாரும் மாற்றிக் கொண்டனர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்று போலீசிலும் புகார் கொடுத்தார் கார்த்திக்.

அந்த டிரைவர் கார்த்திக் தான் இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் வெளியீட்டுக்கு பின்னால் இருப்பார் என்று கருதுகிறது பிரஜ்வல் தரப்பு.

ஏனென்றால் பிரஜ்வல் கல்லூரி காலம் தொட்டே அவருக்கு நெருக்கமானவர் கார்த்திக்.  தாத்தா பிரதமராக இருந்தவர், சித்தப்பா கர்நாடக முதலமைச்சர், அப்பா எம்.எல்.ஏ. என்று அதிகாரம் குவிந்த குடும்பத்தில் பிறந்த பிரஜ்வல் அதற்கேற்ப எல்லா ஆட்டங்களையும் ஆடினார். அவரது எல்லா விஷயங்களையும் அறிந்தவர்தான் டிரைவர்  கார்த்திக்.

பல ரகசியங்கள் அறிந்த டிரைவர் கார்த்திக்  நில பிரச்சினையால் ரேவண்ணா குடும்பத்தின் மீது ஹசன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் தேவகவுடா குடும்ப செல்வாக்கு காரணமாக பாஜக ஆட்சியில் கூட போலீஸ் நடவடிக்கை ஏதும் இல்லை.  இந்த பின்னணியில்தான் 2023  ஜூன் மாதம் தன்னைப் பற்றிய ஆபாச படங்களை கார்த்திக் வெளியிடுவார் என்று தடை கேட்டு நீதிமன்றத்தை நாடினார் பிரஜ்வல் ரேவண்ணா.

டிரைவர் மூலம் பாஜகவுக்கு வந்த ஆபாச படங்கள்!

Devaraje-Gowda-and-Prajwal-Revanna-768x4

இந்த நிலையில்தான் கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் கடுமையாக கள அரசியல் செய்து வந்த லோக்கல் பாஜகவுக்கு  இந்த மேட்டர் பெரும் சாதகமாக இருந்தது.

கடந்த 2023  சட்டமன்றத் தேர்தலில் ஹோலே நரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்ற வழக்கறிஞரும் உள்ளூர் பாஜக தலைவருமான தேவராஜ கவுடா, ரேவண்ணா குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த டிரைவர் கார்த்திக்கை அணுகினார். பிரஜ்வல் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை பென் டிரைவில் பாஜக பிரமுகர் தேவராஜ கவுடா வாங்கியிருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தேவராஜ் கவுடா, ‘என்னை அழுக்கு மனிதன் என்று ரேவண்ணா சொல்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் எவ்வளவு அழுக்கு மனிதன் என்று அவர் வாங்கி வைத்திருக்கிற ஸ்டே ஆர்டரில் இருந்தே தெரிகிறது. ஒருநாள் அந்த அழுக்கெல்லாம் வெளியே வந்து  தேவ கவுடாவின் குடும்பமே நாற்றமெடுக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார் தேவராஜ கவுடா.

பாஜக -ஜேடியூ கூட்டணிக்குப் பிறகும் கூட அவர் ரேவண்ணா பற்றியும் பிரஜ்வல் பற்றியும் தொடர்ந்து விமரிசித்து வந்தார்.

இந்த பின்னணியில்தான்… பிரஜ்வலின் ஆபாச ஆட்டங்கள் அடங்கிய வீடியோக்களை அவரது முன்னாள் டிரைவர் கார்த்திக் மூலம் பெற்று… சரியாக ஹசன் தொகுதி தேர்தலுக்கு முன்பாக சமூக தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து தேவராஜ கவுடாவிடம் கேட்டபோது,

“ரேவண்ணாவின் மகனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பற்றி அந்த டிரைவரிடம் இருந்து எனக்கு தெரியவந்தது. அவருக்கு எப்படி வீடியோக்கள் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை,” என்று  ஓப்பனாக கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்ல…  “பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரை மீடியாவின் முன் கொண்டுவர நினைத்தேன்.  ஆனால் அவர்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை சம்பந்தப்பட்டதால்  அதைத் தவிர்த்துவிட்டோம்.  பெண்கள் மீதான மரியாதைக்காக, நான் வீடியோக்களை வெளியிடவில்லை. அது அவர்களின் வீடுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு?

பாஜக -ஜேடியூ கூட்டணி அமைந்த பிறகு கூட  பிரஜ்வாலுக்கு ஹசன் லோக்சபா டிக்கெட் வழங்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர்  விஜயேந்திரருக்கு கடிதம் எழுதினேன்” என்று பேட்டியளித்துள்ளார் தேவராஜ் கவுடா.

gowda-768x384.jpg

குமாரசாமி- ரேவண்ணா மோதலும் ஒரு காரணம்!

தேவ கவுடாவின் குடும்பத்துக்குள் அதிகார மையங்கள் இருக்கின்றன. குறிப்பாக  மூத்த மகன் ரேவண்ணாவுக்கும், அவரது தம்பியான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. குமாரசாமியின் முயற்சியைத் தோற்கடித்துதான் 2019 இல் தேவ கவுடாவின் எம்பி தொகுதியான ஹசன் தொகுதியை தனது மகன் பிரஜ்வலுக்கு வாங்கினார் ரேவண்ணா.  இந்த நிலையில் ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்ற இதை குமாரசாமியே ஊக்குவித்திருக்கலாம் என்றும் கர்நாடக அரசியலில் பேசப்படுகிறது.

இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோ விவகாரம் பற்றி பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி,  “ உண்மை வெளிவரட்டும், யார் தவறு செய்தாலும், நாட்டின் சட்டப்படி அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்.  இதில் ஏன் குடும்பப் பெயரைக் கொண்டுவருகிறீர்கள்?  சம்பந்தப்பட்ட தனி நபரைப் பற்றிப் பேசுங்கள், இது  எங்கள் குடும்பப் பிரச்சினை அல்ல…  இது ரேவண்ணாவின்  குடும்ப பிரச்சினை. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் குமாரசாமி.

நீக்கப்படும் ரேவண்ணா,  பிரஜ்வல்?

இதற்கிடையே, “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைக் காப்பாற்ற பிரஜ்வல் மற்றும் எச்.டி.ரேவண்ணாவை 24 மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சமுருத்தி மஞ்சுநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கும், அகில இந்திய தலைவர் தேவ கவுடாவுக்கும் எழுதிய கடிதத்தில்,
“பிரஜ்வல் ரேவண்ணாவு தொடர்பாக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் கட்சி தொண்டர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவே கவுடா, மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் உரிய முடிவு எடுக்க வேண்டும்.

revanna-son-768x476.jpg

19 ஜேடி(எஸ்) எம்எல்ஏக்கள் முக்கியமா அல்லது ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா முக்கியமா என்பது குறித்து அப்பா-மகன் இருவரும் இப்போது முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஜேடியூ கட்சியில் இருந்து  ரேவண்ணா, பிரஜ்வல் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்த ஆபாச புயலால் கர்நாடக அரசியலும், தேவ கவுடா குடும்பத்திலும் திருப்பங்கள் அதிகரிக்கின்றன.

 

https://minnambalam.com/political-news/prajwal-revanna-sex-abuse-allegations-full-backround/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி

வீடியோக்களைப் பார்க்காமல் கருத்தெழுத முடியாது.

எங்கப்பா வீடியோக்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

வீடியோக்களைப் பார்க்காமல் கருத்தெழுத முடியாது.

எங்கப்பா வீடியோக்கள்?

சத்திய சோதனை.....சத்திய சோதனை.....சத்திய சோதனை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை - தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு

05 MAY, 2024 | 10:42 AM
image
 

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜதவின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா (66) கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல், பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதைத்தொடர்ந்து 48 வயதான வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரது தந்தை ரேவண்ணா மீதும், வீட்டு பணிப்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்ததால் அவர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புகார் அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த 2,976 ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் இடம்பெற்று உள்ள பெண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு தங்களது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/182717

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை எழுதிய ச.ச. முத்து என்பவர், 1979ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இரண்டு கிழமைகள் மட்டுமே இணைந்திருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட போது சிங்களக் காவல்துறையிடம் சரணடைந்தார் என்று ஐயர் (கணேசன்) அவர்களின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்' என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறதாம். ஆனால், இவரோ தான் 1982ம் ஆண்டு லெப். சீலன் எ சுரேஸ் அவர்களின் படத்தைப் பெறச் சென்றேன் என்றும் "பொன்னம்மானின் பொற்காலம் என்று நான் கருதுவது பொன்னம்மான் அண்ணையுடன் தமிழகத்தில் நின்றிருந்த 81,82 ஆண்டுக்காலம்தான்." என்றெல்லாம் எழுதி வருகிறார்.  எனினும் புலிகளின் எந்தவொரு வரலாற்று ஆவணங்களிலும் இவ்வாறு ஒரு உருப்படி தம் இயக்கத்தில் இணைந்து தொடர்ந்து செயலாற்றினார் என்றோ இல்லை குறிப்பிடத்தக்கவராக இருந்தார் என்றோ குறிப்பிடவில்லை.  எனவே இவர் தன்னை வரலாற்று மாந்தனாக உட்புகுத்த முயல்கிறாரா என்ற ஐயம் வாசகர் நடுவணில் வலுவாக எழுகிறது. ஆகையால் இவர் தன்னைப் பற்றிய உண்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார். இந்தத் தகவலை கட்டுரை தொடர்பான வாசகரின் மெய்ப்பார்ப்பிற்கு இங்கே இட்டுச் செல்கிறேன்.  
    • "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"    
    • இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் உண்மையில் கூறியது என்ன? படக்குறிப்பு,சர்வதேச நீதிமன்றத்தின் அப்போதைய தலைவர் ஜோன் டோனோகு, இந்தத் தீர்ப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றார் கட்டுரை தகவல் எழுதியவர், டொமினிக் காசியானி பதவி, சட்ட விவகாரங்களுக்கான செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியும், ரஃபாவில் அதன் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும் தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் மீதான விசாரணையை ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கை "முற்றிலும் ஆதாரமற்றது" மற்றும் "தார்மீக ரீதியாக வெறுக்கத்தக்கது" என்று கூறிய இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இதன் மீது பதிலளித்துள்ளது. தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்ததில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அத்தகைய ஆய்வு தற்போது அதன் சமீபத்திய தீர்ப்பில் பயன்படுத்தியுள்ள "நம்பத்தகுந்த" என்ற வார்த்தையை மையமிட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் சர்வதேச நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் இருந்த ஒரு முக்கியமான பத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தது: “நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் விஷயங்களில் சிலவற்றையாவது முடிவு செய்யப் போதுமானது மற்றும் அது பாதுகாப்பைக் கேட்பதற்கான காரணங்கள் நம்பத்தகுந்ததாகும்.” இந்த வார்த்தைகள் சட்ட வர்ணனையாளர்கள் உள்ளிட்ட பலராலும், காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற கூற்று "நம்பகத்தகுந்தது" என்று நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக விளக்கப்பட்டது. இந்த விளக்கமானது வேகமாகப் பரவி, ஐநா ஊடக செய்தி, பிரசார குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பிபிசி உட்படப் பல்வேறு ஊடகங்களிலும் வெளியானது. இருப்பினும், ஏப்ரல் மாதம் பிபிசியிடம் பேட்டியளித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஜோன் டோனோக், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதுவல்ல என்று கூறினார். மாறாக, இஸ்ரேலுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வருவதற்கு தென்னாப்பிரிக்காவுக்கு உரிமை உண்டு என்பதையும், பாலத்தீனியர்களுக்கு உண்மையில் சரிசெய்ய முடியாத அளவிற்கு ஆபத்தில் இருக்கும் உரிமையான, "இனப்படுகொலையில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கான நம்பத்தகுந்த உரிமைகள்" இருப்பதாகவும் நிறுவுவதே இந்தத் தீர்ப்பின் நோக்கம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஜோன் டோனோகு இனப்படுகொலை நடந்துள்ளதா என்பதை தற்போதைக்கு கூறத் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ள சில செயல்கள் நிரூபிக்கப்பட்டால், அவை ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் கீழ் வரலாம் என்று முடிவு செய்தனர். இப்போது இந்த வழக்கின் பின்னணி என்ன? அதன் சட்டபூர்வ முரண்கள் எப்படி வெளிப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். சர்வதேச சட்டங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைக் கையாள்வதற்காக சர்வதேச நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அதாவது, இனப்படுகொலை தீர்மானம் போன்ற நாடுகளுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டங்களின் மூலம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற வெகுமக்கள் படுகொலைகளைத் தடுக்க முயலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா இந்த சர்வதேச நீதிமன்றத்தில், காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்பதை நிரூபிக்கும் முயற்சியாக வழக்கு ஒன்றைத் தொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென்னாப்பிரிக்காவின் வழக்குப்படி, இஸ்ரேலுக்கு "காஸாவில் உள்ள பாலத்தீனியர்களை அழிக்கும்" நோக்கம் இருப்பதால், அது போரை நடத்துகிற விதம் "இயல்பிலேயே இனப்படுகொலை" பாணியிலானது என்று அது குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்தது. முழு வழக்கும் களத்தில் என்ன நடக்கிறது என்பதை தவறாகச் சித்தரிப்பதாக அது கூறியது. இஸ்ரேல் இனப்படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுவதற்கான தெளிவான மற்றும் சரியான ஆதாரங்களை தென்னாப்பிரிக்கா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இஸ்ரேலும் தன் பங்கிற்கு, எதிர்தரப்பு முன்வைக்கும் கூற்றுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, பல நாடுகளால் பயங்கரவாதக் குழு என்று அறிவிக்கப்பட்ட ஹமாஸுக்கு எதிரான, தீவிரமான ஒரு நகர்ப்புற போரில், அது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமான தற்காப்பு மட்டுமே என்று வாதிடுவதற்கு உரிமை உண்டு. அப்படி ஆய்வுகள் முடிந்து இந்த வழக்கின் முழு செயல்பாடுகள் முடியவே பல ஆண்டுகள் ஆகலாம். எனவே தென்னாப்பிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளை முதலில் "தற்காலிக நடவடிக்கைகளை" மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான், நீதிமன்றத்தின் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு மேலதிகமான பாதகங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தற்போதைய சூழலை அப்படியே நிறுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலின் ஊடுருவலை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. "பாலத்தீன மக்களின் உரிமைகளுக்கு மேலும், கடுமையான மற்றும் சரிசெய்யவே முடியாத பாதகங்கள் ஏற்படாமல் பாதுகாக்க" தேவையான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றதில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கும் மேலாக, காஸாவில் உள்ள பாலத்தீனியர்களின் உரிமைகள் நீதிமன்றத்தால் பாதுகாக்கபட வேண்டுமா என்பது குறித்து இரு நாட்டு வழக்கறிஞர்களாலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தின்மீது 17 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 26ஆம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் சில நீதிபதிகள் மாற்றுக் கருத்தையும் கொண்டிருந்தனர். "தற்போதைய சட்ட நடவடிக்கைகளின் இந்தக் கட்டத்தில், தென்னாப்பிரிக்கா பாதுகாக்க விரும்பும் உரிமைகள் உள்ளதா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க நீதிமன்றம் கூடவில்லை" என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. மாறாக, “தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் மற்றும் அது பாதுகாக்க வேண்டியதாகக் கருதும் உரிமைகள் நம்பத்தகுந்ததா என்பதை மட்டுமே அது தீர்மானிக்க வேண்டும்,” என்றது. "நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் சில உரிமைகள் நம்பத்தகுந்தவை என்று முடிவு செய்யப் போதுமானது." காஸாவில் உள்ள பாலத்தீனியர்களுக்கு இனப்படுகொலை தீர்மானத்தின் கீழ் நம்பத்தகுந்த உரிமைகள் இருப்பதாக முடிவு செய்த பின்னர், அவர்கள் உண்மையில் மீளவே முடியாத சேதத்தின் அபாயத்தில் உள்ளனர் என்றும், இந்த முக்கியமான பிரச்னைகள் கேள்விக்குரியதாக இருக்கும் நிலையில், இனப்படுகொலை நிகழாமல் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வரப்பட்டது. இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததா என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை - ஆனால் "அதன் வார்த்தைகளால் இனப்படுகொலை நடக்கும் அபாயம் இருப்பதாக நம்புகிறதா?" என்ற சர்ச்சை இங்குதான் எழுந்தது. ஏப்ரல் மாதம், நான்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட சுமார் 600 பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தும்படியும், "இனப்படுகொலைக்கான ஒரு நம்பத்தகுந்த அபாயத்தை" குறிப்பிட்டும் பிரிட்டன் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களிடம் இருந்து (UKLFI) எதிர்க் கடிதத்திற்கு வழிவகுத்தது. காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான நம்பத்தகுந்த உரிமை இருப்பதாக மட்டுமே சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று 1,300 பேர் கொண்ட அந்தக் குழு கூறியது. மேலும் இந்தக் கடிதங்கள் மற்றும் விளக்கங்களில் சர்ச்சை தொடர்ந்தது. முதல் குழுவில் உள்ள பலரும் இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களின் விளக்கத்தை "வெற்று வார்த்தை விளையாட்டு" என்று விவரித்தனர். நீதிமன்றத்தில், வெறும் தத்துவார்த்த கேள்வியில் மட்டும் தனியாக அக்கறை செலுத்திக் கொண்டிருக்க முடியாது, காரணம் அதன் பங்கு அதைவிட மிகவும் அதிகமானது என்று அவர்கள் வாதிட்டனர். மேலும், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி குறித்த கேள்வி, பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவின் முன் நடைபெற்ற சட்டப்பூர்வ விவாதத்தில் தெளிவாகவும், கவனமாகவும் முன்னிலைப்படுத்தப்பட்டது. முன்னாள் பிரிட்டன் உச்சநீதிமன்ற நீதிபதியான லார்ட் சம்ப்ஷன், "இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களின் கடிதத்தில் சர்வதேச நீதிமன்றம் செய்கிற அனைத்தையும், காஸா மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகாமல் இருக்க உரிமை உண்டு என ஒரு விரிவான சட்டமாக ஏற்றுக்கொண்டதாகப் பரிந்துரைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் அந்த முன்மொழிவை அரிதாகவே விவாதிக்கக் கூடியதாகக் கருதுகிறேன் என்று சொல்ல வேண்டும்,” என்று கமிட்டியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அது அப்படி இல்லை, என்று இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞரான நடாஷா ஹவுஸ்டோர்ஃப் பதிலளித்தார். "இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்ற நம்பத்தகுந்த அபாயத்தின் ஆதாரங்களைக் கூறுவது நீதிமன்றத்தின் தெளிவற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்கிறது என்பதை நான் மரியாதையுடன் வலியுறுத்துகிறேன்," என்று அவர் பதிலளித்தார். ஒருநாள் கழித்து, தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜோன் டோனோகு பிபிசியின் ஹார்ட் டாக் (HARDtalk) நிகழ்வில் பங்கேற்று, நீதிமன்றம் என்ன செய்தது என்பதை விளக்கி விவாதத்தை வெளிப்படையாக முடித்து வைக்க முயன்றார். "அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை - மேலும் ஊடகங்களில் அடிக்கடி கூறப்படும், இனப்படுகொலை நம்பத்தகுந்தது என்ற விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன்” என்று அவர் கூறினார். "நீதிமன்றம் தனது உத்தரவில், இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய பாலத்தீனர்களின் உரிமைக்கு மீண்டும் சரிசெய்யவே முடியாத அளவுக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையே வலியுறுத்தியது. ஆனால் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இனப்படுகொலைக்கான நம்பகத்தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்று கூறப்படும் கூற்று நீதிமன்றம் கூறியது அல்ல.” அப்படியான மோசமான பாதிப்புகள் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வெகு தொலைவு உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cj5l03dgzmyo
    • சிறிதரனை ஜூலி அண்மையில் சந்தித்தார். சிறிதரன் தட்டி கேட்ட கேளுவையில் மேசை உடைந்து விட்டதாம்🤣 
    • படிமப்புரவு (Image Credit): சாத்திரி அவர்களின் "அவலங்கள்" என்ற வலைப்பூவிலிருந்து.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.