Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

03-747x375.jpg

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.

இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன.

மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது.

இஸ்ரேலிய அரசாங்கம் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க அனுமதிக்கும் வரை இந்த புதிய நடவடிக்கைகளை அரசு செயற்படுத்தும் என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ள இஸ்ரேல், தற்போது தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் உட்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1380939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது.

துருக்கியின் செயலைப் போல் ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்.
காசாவில் உலக யுத்தத்தில் ஜேர்மனி பாதிக்கப்பட்டதை விட மோசமான நிலை என கூறுகின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

துருக்கியின் செயலைப் போல் ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

Gustavo-Petro.webp

முடிவுக்கு வரும் இஸ்ரேலுடனான உறவு! கொலம்பியா அறிவிப்பு.

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) அறித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பொகோட்டாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொலம்பிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசுடனான உறவை தாம்  முறித்துக் கொள்வதாகவும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது எனவும்  அனைத்து நாடுகளும் இது தொடர்பில் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கொலம்பிய அரசு தொடர்சியாக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாட  ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையும் அரசியல் மற்றும் சுயநலம் சார்ந்த முடிவுகள் மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இவையும் அரசியல் மற்றும் சுயநலம் சார்ந்த முடிவுகள் மட்டுமே. 

என்ன சொல்ல வருகின்றீர்கள் விசுகர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்ன சொல்ல வருகின்றீர்கள் விசுகர்?

ஏன் இந்த முடிவுகள் முள்ளிவாய்க்காலின் போது எடுக்கப்படவில்லை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

ஏன் இந்த முடிவுகள் முள்ளிவாய்க்காலின் போது எடுக்கப்படவில்லை???

இதைக் கூட தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக திராவிட ஆட்சியாளர்களும் செய்யவில்லை.. நாம் தந்தை நாடு என்று சொல்லிக் கொண்டு இன்று வரை ஏதோ ஒரு வகையில் தாங்கி நிற்கும் ஹிந்தியாவும் செய்யவில்லையே..???! நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும்... அது இன்று வரை தொடர்கின்ற நிலையிலும்..!!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
53 minutes ago, nedukkalapoovan said:

இதைக் கூட தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக திராவிட ஆட்சியாளர்களும் செய்யவில்லை.. நாம் தந்தை நாடு என்று சொல்லிக் கொண்டு இன்று வரை ஏதோ ஒரு வகையில் தாங்கி நிற்கும் ஹிந்தியாவும் செய்யவில்லையே..???! நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும்... அது இன்று வரை தொடர்கின்ற நிலையிலும்..!!

அதேதான் 

எல்லாமே சுயநலம் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகள். இதில் பாவம் அழுகுரல் எல்லாம் இரண்டாம் பட்சம்.

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எல்லாமே சுயநலம் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகள். இதில் பாவம் அழுகுரல் எல்லாம் இரண்டாம் பட்சம்.

தமிழர்கள் வீதியில் இறங்கிப்போராடியதைத் தவிர்த்து, பலஸ்தீனர்களால் பல்கலைக்கழங்களுள் போராடுவதுபோல் ஏன் தமிழர்களால் முடியாதுபோனது. குறைந்தளவு மாணவர்களாயினும் எங்காவது முயற்சியாவது செய்யப்பட்டதா?
துருக்கி இஸ்ரவேலின் உறவை முறித்ததுபோல் ஏன் NATO  இல் இருந்து வெளியேறவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

ஏனெனில் கிறித்தவ இசுலாமிய பிரச்சினை என்பதன் ஆயுள் பலநூற்றாண்டு பழமையானது மட்டுமல்ல இவர்களது சொந்த பிரச்சினை. ஆனால் நாங்கள் யார்? நாங்கள் புலம்பெயர்ந்து எத்தனை வருடங்கள்,?? பல்கலைக்கழகங்களில் எம் மாணவர்கள் எத்தனை வீதம்?? அவர்களில் எத்தனை பேர் எது நடந்தாலும் தாங்கும் கல்வி மற்றும் பொருளாதார வலுவுடன் உள்ளனர்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

அதேதான் 

எல்லாமே சுயநலம் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகள். இதில் பாவம் அழுகுரல் எல்லாம் இரண்டாம் பட்சம்.

விசுகர்!

உக்ரேன் திரிகளில் மேற்குலகின் முகங்களை வைத்து நான் கருத்தெழுதிய போதெல்லாம் எப்படி கொதித்தீர்கள்?

ஆனால் இன்று??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

விசுகர்!

உக்ரேன் திரிகளில் மேற்குலகின் முகங்களை வைத்து நான் கருத்தெழுதிய போதெல்லாம் எப்படி கொதித்தீர்கள்?

ஆனால் இன்று??????

இல்லை அண்ணா 

நான் தெளிவாக பலமுறை இங்கே எழுதியுள்ளேன். எந்த ஆக்கிரமிப்புக்கும் நான் எதிரானவன். அதனால் தான் உக்ரைன் ஆதரவு. மற்றும்படி உலக நாடுகளில் எல்லா முடிவுகளும் அரசியல் மற்றும் பொருளாதார சுயநல லாபம் சம்பந்தப்பட்டவை தான். ஆனால் முதுகில் குத்திய பலஸ்தீனம் வெறுப்புக்குரியது எனக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

நான் தெளிவாக பலமுறை இங்கே எழுதியுள்ளேன். எந்த ஆக்கிரமிப்புக்கும் நான் எதிரானவன். அதனால் தான் உக்ரைன் ஆதரவு.

அப்படியானால் மேற்குலகினது ஏனைய நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 7/5/2024 at 00:37, குமாரசாமி said:

அப்படியானால் மேற்குலகினது ஏனைய நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஆக்கிரமிப்பு என்றால் எல்லாமே ஒன்று தானே. அதற்காக நீ நிறுத்து நான் நிறுத்துகிறேன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு போக முடியாது. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.