Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 46
2 ரசோதரன் 46
3 கோஷான் சே 46
     
நியாயமாக பார்த்தால் - கடைசி நேரத்தில், பல வேலைபளுவுக்கு மத்தியிலும் போட்டியில் கலந்து கொண்டவருக்குத்தான் முதல்வர் பதவியை கொடுத்திருக்க வேண்டும் என விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன🤣.

முன்னாள் முதல்வர் இது சம்பந்தமாக உச்ச நீதி மன்றை நாடலாமா என மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்🤣.

5 hours ago, ஈழப்பிரியன் said:

பங்காளதேஸ் 159 அடித்திருக்கு.

கொஞ்சம் கடினமான இலக்கு தான்.

22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து

வாதவூரான்

இன்று முதல்வர் @goshan_che பதவி இழக்கிறார்.

விட்டா பதவி இழப்பு விழாவே வப்பியள் போல கிடக்கு🤣

  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

4 hours ago, ரசோதரன் said:

பதவி ஆசை எல்லாம் கிடையாது, அண்ணை. ஒரு தர்மயுத்தம் தான் நடந்து கொண்டிருக்கின்றது......🤣.

(உபயம்: ஓபிஎஸ்)

உங்களுக்கு ஆசையில்லா விட்டாலும் நாங்க கதிரையில் இருந்தி பார்க்க விரும்புகிறோம்

இது நல்லா இல்ல.. உங்களை நம்பி வந்த முதல்வரை புதுசா கட்சியில சேர்ந்தவருக்காக பதவி இறக்கிறது சரியா?????

இதை எங்கட பாரம்பரிய கட்சியில் இருந்து கொப்பி பண்ணீட்டங்களா அண்ணை🤭🤭🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

குத்தியன் @குமாரசாமி யோடு சேர்ந்து எங்க இரண்டு பேரையும் கவுக்கப் பார்த்தீங்களோ?

இப்ப என்ன கப்பல் கவுண்டு போச்சோ?

யோவ் பெரிசு என்ன சேட்டையா?
நம்மள பத்தி ஏற்கனவே தெரியுமெல்லே....😎
வெரி டேஞ்சரஸ் பீப்பிள்.... கெயார் ஃபுல்

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

யாராவது அதிர்ஷ்டம் உச்சத்தில் நிற்கும் ஒரு ஆள், ஏதாவது ஒரு சின்ன அணியை, உதாரணம்: பபுவா நியூகினியா, தெரிவு செய்திருந்தால், மரத்திலிருந்து ஒரு தேங்காய் உச்சி மண்டையில் விழுந்தது போல அந்த அணி 38 ஓட்டங்களுடன் அவுட் ஆகக்கூடும்........

எனது தலையில் தான் தேங்காய் விழப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

இது நல்லா இல்ல.. உங்களை நம்பி வந்த முதல்வரை புதுசா கட்சியில சேர்ந்தவருக்காக பதவி இறக்கிறது சரியா?????

இதை எங்கட பாரம்பரிய கட்சியில் இருந்து கொப்பி பண்ணீட்டங்களா அண்ணை🤭🤭🤭

பழைய முதல்வர் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதால் தற்காலிகமாக பதவி இறக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

448336578_862967105868263_90877232405065

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 95 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான்அணி குறைவான ஓட்ட இலக்கை 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ஓட்டங்கள் எடுத்து அடைந்தது.

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இந்த  வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைகின்றது. அதேவேளை நியூஸிலாந்து அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது!

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய முதல்வர் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதால் தற்காலிகமாக பதவி இறக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறையை ஏவி விடும் அரசியல் பழிவாங்கல்🤣

  • கருத்துக்கள உறவுகள்

448247158_122195393738008174_61004342315

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அமலாக்கத்துறையை ஏவி விடும் அரசியல் பழிவாங்கல்🤣

அமுலாக்கத்துறைக்கு @கிருபன் தான் பொறுப்பு.

எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை.

11 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய முதல்வர் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதால் தற்காலிகமாக பதவி இறக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

447896147_936289148508829_67135797603014

448405692_936984331772644_25186918663369

448290435_937207811750296_82225540508447

448350930_936624545141956_19250573622431

  • கருத்துக்கள உறவுகள்

448097156_1538186956974543_5404960633826

நியூயார்க் மைதானம்  அழிக்கப்படுகிறது, இதுவே கடைசிப் போட்டி! 

மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்களுக்கு சில திரையரங்குகளில் இன்றோடு இப்படம் நிறைவடைகிறது என்று போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்திருப்போம்..  அதே போல இன்றோடு இம்மைதானம் அழிக்கப்படுகிறது என்பதை கேட்க சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

உலகக்கோப்பைக்காக மிகப்பிரம்மாண்டமாக மிக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட நியூயார்க் மைதானம் இன்றோடு விடைபெறுகிறது. இன்று இந்தியா - அமெரிக்கா ஆடும் ஆட்டமே இறுதி ஆட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமே 8 ஆட்டங்கள் தான். இந்த உலகக்கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய மைதானம் என்றால் இது தான். 

இம்மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 107 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 105 ரன்கள் மட்டுமே. 20 ஓவர் போட்டிகளுக்கு இது மிகவும் குறைவானது தான். 

இம்மைதானம் 8 ரன்களுக்கு 1 விக்கெட் வேண்டும் வேண்டும் என கேட்டு வாங்கிக் கொள்கிறதாம். ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை பலி வாங்கிவிட்டது. 

இம்மைதானத்தில் தப்பித்தவர்கள் என்றால் அது தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தான். இந்தியா மட்டும் இங்கே தோல்வி பெற்றிருந்தால் மிகப்பெரிய சர்ச்சையே வெடித்திருக்கும்.

வெறும் 8 போட்டிகளோடு தனது ஆயுளை நிறைவு செய்யும் இம்மைதானம் உருவாக்க ஆன செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 250 கோடி ரூபாய் மட்டுமே! 

MixtureMemes 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெறும் 8 போட்டிகளோடு தனது ஆயுளை நிறைவு செய்யும் இம்மைதானம் உருவாக்க ஆன செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 250 கோடி ரூபாய் மட்டுமே! 

இலங்கை பாகிஸ்தானை வீழ்த்த செய்த செலவு.

@ரசோதரன் என்ன சார் துணை முதல்வரானதும் ஆள் ரொம்ப பிசியோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன் என்ன சார் துணை முதல்வரானதும் ஆள் ரொம்ப பிசியோ?

🤣......

எவ்வளவு மீட்டிங்குகள் என்கிறீர்கள்....... துணை முதல்வரை சந்தித்தே ஆக வேண்டும் வரிசையில் அடம் பிடித்து நிற்கின்றார்கள்.....🤣

ஒரு நாள், ஒரேயொரு நாள், ஒரு 30 நிமிடங்கள் பிந்தி எழும்பினது  உலக அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது........🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெறும் 8 போட்டிகளோடு தனது ஆயுளை நிறைவு செய்யும் இம்மைதானம் உருவாக்க ஆன செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 250 கோடி ரூபாய் மட்டுமே! 

ஊரில் கல்யாண வீட்டிற்கு பந்தல் போடுவது போல.....

அந்த ஊர் மக்கள் 'எப்படா இதை கழட்டி எறிவீர்கள்.......... எங்களுக்கு எங்களின் இடம் வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

சந்தனம் மிஞ்சினால் வீட்டில நிற்கிற தென்னை மரத்திற்கும் பூசுவார்களா? மைக்கிரோசாப்ட் சிஇஓ, அடோபி சிஇஓ இப்படி பலர் முதலிட்டிருக்கின்றார்களாம்......... 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கை பாகிஸ்தானை வீழ்த்த செய்த செலவு.

@ரசோதரன் என்ன சார் துணை முதல்வரானதும் ஆள் ரொம்ப பிசியோ?

என்ன‌ கார‌னத்துக்காக‌ புதிதாக‌ க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌த்தை உடைக்க‌ போகின‌ம் இதை ப‌ற்றி ஏதும் தெரியுமா

ஜ‌பிஎல்ல‌ போல‌ அமெரிக்காவிலும் விளையாடுற‌வை தானே

இந்த‌ மைதான‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌போது யூடுப்பில் ஒரு தக‌வ‌ல் வ‌ந்த‌து இந்த‌ மைதான‌ம் உல‌க‌ கோப்பை முடிந்த‌தும்  அந்த‌ இட‌த்தில் இந்த‌ மைதான‌ம் இருக்காது என்று

அப்ப‌ நான் ந‌ம்ம‌ வில்லை 

இந்த‌ன‌ கோடி கொட்டி செய்த‌ அழ‌கான‌ கிரிக்கேட் மைதான‌த்துக்கு நியூயோக்கில் இட‌ம் இல்லை என்றால் புரிய‌ வில்லை☹️.........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு கைவிட‌ ப‌ட்டால் அமெரிக்கா சூப்ப‌ர்8க்கு போகும் 

பாக்கிஸ்தான் நாடு திரும்ப‌ ச‌ரி.......................................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ன‌ கோடி கொட்டி செய்த‌ அழ‌கான‌ கிரிக்கேட் மைதான‌த்துக்கு நியூயோக்கில் இட‌ம் இல்லை என்றால் புரிய‌ வில்லை☹️.........................

விக்கிபீடியாவில் கிடைக்கும் இந்த மைதானம் பற்றிய தகவல்களில் இருந்து:

நியூயோர்க்கில் வேறு ஒரு இடத்திலேயே ஒரு நிரந்தர மைதானம் அமைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு தொடர்ச்சியாக அந்த ஊர் மக்களும், சுற்றுச் சூழல் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இன்று மைதானம் இருக்கும் இடத்திற்கு கடைசி நேரத்தில், ஒரு தற்காலிக மைதானம் என்னும் ஒப்புதலுடனேயே, மாற்றினார்கள். இல்லாவிட்டால் இங்கும் எதிப்புகள் காட்டப்பட்டிருக்கும்.

இந்த மைதானத்தை Modular Architecture முறையில் உருவாக்கிய நிறுவனம் இதே போன்ற பல கட்டமைப்புகளை வே று விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளுக்காகவும் இங்கே செய்திருக்கின்றார்கள்.

MLC எனப்படும் Major League Cricket இங்கே அமெரிக்காவில் இருந்தாலும், போட்டிகள் பெரும்பாலும் கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சாஸ் போன்ற வருடம் முழுவதும் காலநிலை விளையாட்டிற்கு உகந்ததாக இருக்கும் இடங்களிலேயே நடத்தப்படுகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

நம்ம ஊர் மாதிரி…. தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன், அடாத்தாக நிரந்தர விகாரை கட்டுற மாதிரியான ரெக்னிக்கை இந்த விளையாட்டு மைதானத்தில், அமெரிக்கன் பின்பற்றி இருக்கலாம். சுளையாக 250 கோடி  மிஞ்சி இருக்கும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

447896147_936289148508829_67135797603014

இலங்கையில் 'சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்......' என்று சொல்வது மற்றய இடங்களில் 'குட் மார்னிங்...' என்று ஒவ்வொரு நாள் காலையிலும் சொல்வதற்கு ஈடானது. இந்த எம்பி,  Hesha Vithanage, அடிக்கடி இப்படி சொல்லிக் கொண்டே இருக்கின்றார். 

'ஈஸ்டர் குண்டு வெடிப்பையே நாங்கள் இந்த இழு இழுக்கிறோம், நீ போவியா.......' என்று எங்களின் நாடு அதே சாதாரணத்துடன் போய்க் கொண்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இரு அணிக‌ளுக்கும் 5ஓவ‌ர் கொடுத்து இருக்கு

இதில‌ எப்ப‌டி வெற்றி தோல்விய‌ க‌ணிப்ப‌து ஹா ஹா...........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

நம்ம ஊர் மாதிரி…. தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன், அடாத்தாக நிரந்தர விகாரை கட்டுற மாதிரியான ரெக்னிக்கை இந்த விளையாட்டு மைதானத்தில், அமெரிக்கன் பின்பற்றி இருக்கலாம். சுளையாக 250 கோடி  மிஞ்சி இருக்கும். 😂 🤣

🤣...

ஏதோ ஒரு வழியில் அடாத்தாக கட்டி விட்டு கவனிக்காமல் விட்டால், நியூயோர்க்கில் வீடுகளில் வாழாமல் தெருவில் வாழும் மக்கள் இந்த மைதானத்தில் குடியேறி விடுவார்கள். அவர்களை அங்கிருந்து எழுப்பு என்று ஒரு கட்சியும், எழுப்பாதே என்று மற்ற கட்சியும் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே குடியேறி விடுவார்கள்.............

இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ஓட்டங்களை எடுத்த விராட் கோலி இந்த மைதானத்தை உடைக்கும் செலவில் 50%ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சொல்கின்றனர்...........😜.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அமுலாக்கத்துறைக்கு @கிருபன் தான் பொறுப்பு.

எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை.

@goshan_che இனி உய்ய வாய்ப்பில்லை! 

மழையும், மெதுவான ஆடுகளமும் அமெரிக்க @பிரபா வுக்கே வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அவுஸ்திரேலியா சம்பியனாக வந்தால் அவரைப் நாலுகால் பாய்ச்சலில் கலைத்தாலும் பிடிக்கேலாது!

spacer.png

27 minutes ago, வீரப் பையன்26 said:

இரு அணிக‌ளுக்கும் 5ஓவ‌ர் கொடுத்து இருக்கு

இதில‌ எப்ப‌டி வெற்றி தோல்விய‌ க‌ணிப்ப‌து ஹா ஹா...........................

பிட்ச் இன்ஸ்பெக்ஸன் நடக்குது! அம்பயர்மார் மிதித்துப் பார்க்கினம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

பிட்ச் இன்ஸ்பெக்ஸன் நடக்குது! அம்பயர்மார் மிதித்துப் பார்க்கினம்!

Logistics, logistics என்று சொல்லி ஃபுளோரிடாவில் போட்டிகளை ஒழுங்கு செய்தவர்களையும் இந்த அம்பயர்களைக் கொண்டே மிதிக்க வேண்டும்.............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை பாகிஸ்தானை வீழ்த்த செய்த செலவு.

2 hours ago, ரசோதரன் said:

ஊரில் கல்யாண வீட்டிற்கு பந்தல் போடுவது போல.....

அந்த ஊர் மக்கள் 'எப்படா இதை கழட்டி எறிவீர்கள்.......... எங்களுக்கு எங்களின் இடம் வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

சந்தனம் மிஞ்சினால் வீட்டில நிற்கிற தென்னை மரத்திற்கும் பூசுவார்களா? மைக்கிரோசாப்ட் சிஇஓ, அடோபி சிஇஓ இப்படி பலர் முதலிட்டிருக்கின்றார்களாம்......... 

2 hours ago, வீரப் பையன்26 said:

என்ன‌ கார‌னத்துக்காக‌ புதிதாக‌ க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌த்தை உடைக்க‌ போகின‌ம் இதை ப‌ற்றி ஏதும் தெரியுமா

ஜ‌பிஎல்ல‌ போல‌ அமெரிக்காவிலும் விளையாடுற‌வை தானே

இந்த‌ மைதான‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌போது யூடுப்பில் ஒரு தக‌வ‌ல் வ‌ந்த‌து இந்த‌ மைதான‌ம் உல‌க‌ கோப்பை முடிந்த‌தும்  அந்த‌ இட‌த்தில் இந்த‌ மைதான‌ம் இருக்காது என்று

அப்ப‌ நான் ந‌ம்ம‌ வில்லை 

இந்த‌ன‌ கோடி கொட்டி செய்த‌ அழ‌கான‌ கிரிக்கேட் மைதான‌த்துக்கு நியூயோக்கில் இட‌ம் இல்லை என்றால் புரிய‌ வில்லை☹️.........................

1 hour ago, ரசோதரன் said:

விக்கிபீடியாவில் கிடைக்கும் இந்த மைதானம் பற்றிய தகவல்களில் இருந்து:

நியூயோர்க்கில் வேறு ஒரு இடத்திலேயே ஒரு நிரந்தர மைதானம் அமைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு தொடர்ச்சியாக அந்த ஊர் மக்களும், சுற்றுச் சூழல் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இன்று மைதானம் இருக்கும் இடத்திற்கு கடைசி நேரத்தில், ஒரு தற்காலிக மைதானம் என்னும் ஒப்புதலுடனேயே, மாற்றினார்கள். இல்லாவிட்டால் இங்கும் எதிப்புகள் காட்டப்பட்டிருக்கும்.

இந்த மைதானத்தை Modular Architecture முறையில் உருவாக்கிய நிறுவனம் இதே போன்ற பல கட்டமைப்புகளை வே று விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளுக்காகவும் இங்கே செய்திருக்கின்றார்கள்.

MLC எனப்படும் Major League Cricket இங்கே அமெரிக்காவில் இருந்தாலும், போட்டிகள் பெரும்பாலும் கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சாஸ் போன்ற வருடம் முழுவதும் காலநிலை விளையாட்டிற்கு உகந்ததாக இருக்கும் இடங்களிலேயே நடத்தப்படுகின்றது.  

1 hour ago, ரசோதரன் said:

🤣...

ஏதோ ஒரு வழியில் அடாத்தாக கட்டி விட்டு கவனிக்காமல் விட்டால், நியூயோர்க்கில் வீடுகளில் வாழாமல் தெருவில் வாழும் மக்கள் இந்த மைதானத்தில் குடியேறி விடுவார்கள். அவர்களை அங்கிருந்து எழுப்பு என்று ஒரு கட்சியும், எழுப்பாதே என்று மற்ற கட்சியும் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே குடியேறி விடுவார்கள்.............

இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ஓட்டங்களை எடுத்த விராட் கோலி இந்த மைதானத்தை உடைக்கும் செலவில் 50%ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சொல்கின்றனர்...........😜.  

பலரும் இந்த மைதானத்தைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பதால்... 
👇 இணையத்தில் வந்த மேலதிக தகவல்களை கீழே தருகின்றேன். 👇

இது தான் சிறப்பான pitch bowling batting இரண்டுக்கும் பொருத்தமானதாக அமைந்திருந்தது. 200 ஓட்டங்களை பெறும் இந்திய pitch களை விட சிறப்பான போட்டி. அனைத்து அணிகளுக்கும் ஒரே தன்மை வாய்ந்ததாக காணப்பட்டது.
- Thiru Yogi -

இதை  இந்தியாவில் இடிப்பதாக இருந்தால் எத்தனை உபிஸ்கள் இடிக்க விடாம முட்டு கொடுப்பாங்க தெரியுமா?  மோடியையும் சேர்த்து திட்டியிருப்பாங்க.
- Laksmipathi Maha -

குவைத் தீவிபத்திற்கு மோடி தான் காரணம் என்று புலம்பும் வெறிபிடித்த உபிஸ்கள் இதை இடிப்பதற்கும் மோடி தான் காரணம் என்று சொல்வானுங்க.
- Laksmipathi Maha -

இது பந்துவீச்சாளர்களின் சொர்க்க பூமி இதை அளிக்கக்கூடாது. போற்றி பாதுகாக்க வேண்டும். மட்டையை ஒழுங்காக பிடிக்கத்... தெரியாவிட்டால் இந்த ஆடுகளத்தில் விளையாடவே முடியாது. நேர்த்தியாக மட்டை பிடிக்கத் தெரிந்தவன் மட்டுமே இங்கே விளையாட முடியும் இல்லையென்றால் டக் அவுட்டில் உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்க வேண்டும்.
- Nsmamr Phirapu -

எதுக்கும் ஒரு முறை ஆஸ்திரேலியாவையும் விளையாட வைத்தால்  அவர்களின் மகிமையும் என்னவென்று தெரிந்து விடும். அப்புறமா நானும் வருகிறேன் இடிக்க.
- Saravanan Sanmuganathan -

ஆனா ஒன்று இங்கு பெரிய அணி சிறிய அணி என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கிய ஒரே மைதானம் எனக்கு தெரிந்து இதுதான் உள்ளூர் வெளியூர் பேட்டிங் பவுலிங் என்று எந்தவித பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் போட்டு தாக்கியது அளவுக்கு அதிகமான திறமை இருப்பவர்கள் மட்டுமே இதில் விளையாட முடியும் குறிப்பாக இந்தியாவில் லட்சுமணன் டிராவிட் மாதிரி ஆட்கள் தான் இந்த மைதானத்தில் விளையாட முடியும் இவர்களைத் தாண்டி சேவாக் மாதிரி பந்தை பார்த்து அதிரடியாக விளையாடுபவர்களும் நன்றாக விளையாடலாம் அதேபோல் இந்த மைதானத்தில் 20 ஓவர் போட்டி விளையாடுவதற்கு முன்னர் ஏதாவது ஒரு இடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டி விளையாடிவிட்டு வந்தால் தான் இந்த மைதானத்தில் 20 ஓவர் போட்டியில் பேட்டிங் நன்றாக பண்ண முடியும் இந்திய அணி வீரர்கள் சொதப்புவதற்கு காரணம் ஐபிஎல் விளையாடிவிட்டு வந்ததுதான் அங்கு தார் ரோடு வயதானத்தில் அதிரடியாக ஆடிவிட்டு இந்த மைதானத்தில் அதிரடியாக விளையாட முடியாது.
- Micheal Mcheal -

நல்ல பிட்ச். இரண்டு இன்னிங்ஸும் ஒரே மாதிரி இருக்கும் பிட்ச்கள் அதிசயமானவை.
- குமரகுரு ருகுரமகு -

மைதானத்தை ஏன் உடைக்க வேண்டும்? பிச்சை மாற்ற வேண்டியது தானே!!! 😄
- Mahindababu Ramanathan -

மைதானம் அமைப்பது மிகவும் கடினமான வேலை அதை செய்யும் தொழிலாளிகளையும் அவர்களின் சிந்தனையும் நாம் அவர்கள் மதிக்க வேண்டும்.பணம் மதிப்பை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்.அந்த நாட்டின் விளையாட்டு வளர்ச்சியையும் வீரர்களையும் உருவாக்க இந்த மைதானம் மிகவும் துணையாக இருக்கும்.உலகின் தலைசிறந்த வீரர்களை சோதனையும் அவர்களின் விளையாட்டுக்கு சுய பரி சோதனை செய்யதுகொள் என மறைமுகமா அவர்களுக்கு சவால் அளித்த மைதானம் இந்த மைதானத்தில் வீரர்கள் நன்றாக விளையாட்டு பயிற்சி செய்தால் உலகின் எந்த மைதானத்திலும் அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்பதே எனது கருத்து. ஏற்குமா அந்த நாடு.
- Rs Anbu -

இங்குள்ள கட்டுமானங்கள் அனைத்தும் பிரித்து வேறு இடங்களுக்கு போய்விடும். அதனால் பெரிய நிதி இழப்பு ஏற்படாது.
- Anand -

இது ஒரு makeshift மைதானம். வெறும் முதல் உலககோப்பை போட்டிக்காக சற்று 100 நாட்கள் முன்னர் 3 மைதானங்களில் ஒன்றாக இந்த மைதானம் இறுதி செய்யப்பட்டது. இதில் இருக்கும் பிட்ச்கள் ஆஸ்திரேலியா வில் ட்ராப் இன் பிட்ச்களாக செய்யபட்டு கப்பல் மூலம் அமெரிக்கா கொண்டு வந்து நிறுவப்பட்டது. இங்கு இருக்கும் இருக்கைகள் தற்காலிக இருக்கைகள். லாஸ் வேகாஸ் ஃபார்முலா 1 போட்டிகள் நடக்கும் track இல் இருந்து கொண்டு வரப்பட்டவை மீண்டும் அங்கேயே சென்று நிறுவப்படும்.
- Salim Mohammed -

இந்தியா vs பாகிஸ்தான் average ticket cost 96000,34k seats 34*96000=326கோடி போட்ட 250 கோடிக்கு ஒரு மேட்ச்லயே எடுத்துட்டாங்க மத்தது எல்லாமே profit தானே.       - Chinraj Sham - 

அமெரிக்காவில் என்பதால் 250 கோடி. இதுவே இந்தியாவில் என்றால் 2500 கோடி ஆகி இருக்கும். 😂 
- Aafiya Jaffer -

எல்லாம் அமித்ஷா பையன் பாத்துக்குவான். 🤣 - Baburaj Balan -

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.