Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எல்லோர் தெரிவுகளையும் ஆராய்ந்து பார்த்தேன்.

சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் சுப்பர்8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுந்ததாக உள்ளது. சில பதில்கள் போட்டிகளின்படி சரியாக இல்லாவிடினும் புள்ளிகளை வெல்ல சாதகமாக உள்ளது.

சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராது.

 

எனவே,

நடக்கவிருக்கும் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் பதில்கள் சரியாக இருந்தால், போட்டிகளை சரியாகக் கணிக்காவிட்டாலும், 2 புள்ளிகள் கொடுக்கலாம் என்று உள்ளேன்.

அதேவேளை போட்டிகளை சரியாகக் கணித்த்திருந்தும், வெல்லும் அணியைச் சரியாகக் கணிக்காவிட்டால் புள்ளிகள் கிடையாது.

நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராத பதில்களுக்கு இரண்டு புள்ளி கொடுக்கவா, ஒரு புள்ளி கொடுக்கவா என்று யோசிக்கின்றேன். எனினும் இன்னும் தீர்மானிக்கவில்லை!

 

உங்களுக்கு சிரமம் குறைந்த வழியை தேர்ந்தெடுங்கள், கிருபன். முடிவு எதுவானாலும் நல்லதே. மிக்க நன்றி கிருபன்.

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நடக்கவிருக்கும் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் பதில்கள் சரியாக இருந்தால், போட்டிகளை சரியாகக் கணிக்காவிட்டாலும், 2 புள்ளிகள் கொடுக்கலாம் என்று உள்ளேன்

    பதில்
 சரியாக இருக்குமானால் முதலில் நீங்கள் எழுதியபடியே 2புள்ளிகளை வழங்கலாம் என்பதே எனது கருத்து.

4 hours ago, கிருபன் said:

நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராத பதில்களுக்கு இரண்டு புள்ளி கொடுக்கவா, ஒரு புள்ளி கொடுக்கவா என்று யோசிக்கின்றேன். எனினும் இன்னும் தீர்மானிக்கவில்லை!

சரியான சோடி அணிகளை எல்லோருமே கணித்திருக்க வாய்ப்பில்லை
தரவு மாறியிருப்பதும் அதற்கான ஒரு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ந‌ட‌ந்து முடிந்த‌ இர‌ண்டு போட்டிக‌ளுக்கு இன்னும் புள்ளிய‌ போட‌ வில்லை பெரிய‌ப்பு

 

இர‌வு ந‌ட‌க்கும் போட்டியில் உற‌வுக‌ளின் தெரிவையும் இணையுங்கோ

 

நாச‌ம் அறுத்த‌ இல‌ங்கை இர‌வுக்கு ஆப்பு வைச்சு அந்த‌ குருப்பில் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்☹️..........................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எதையோ செய்து என்னை நிரந்தர முதல்வர் ஆக்கினால் - பொதுப்பணித்துறை ஒப்பந்தம் முழுவதும் நீங்கள் கைகாட்டும் ஆளுக்குத்தான்🤣.

கவனிக்கவும் தலைவரே !.....

நிரந்தர முதல்வர்  பதவிக்காக பேரம்  பேசுகிறார் 😄

  • கருத்துக்கள உறவுகள்

 

 

2 minutes ago, வீரப் பையன்26 said:

நாச‌ம் அறுத்த‌ இல‌ங்கை இர‌வுக்கு ஆப்பு வைச்சு அந்த‌ குருப்பில் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்☹️..........................

 

 

🤣......

அம்பானியும், அதானியும் இலங்கை அணியை வாங்கிய பின், 2026 இல் உலக கோப்பையை வாங்குது இலங்கை அணி....

  • கருத்துக்கள உறவுகள்

😛

Screenshot-20240616-232131-Collage-Maker

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

😛

Screenshot-20240616-232131-Collage-Maker

 

🤣...

முக்கிய வெஜிடபிளான முட்டைக்கோவா மிஸ்ஸிங்....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

🤣...

முக்கிய வெஜிடபிளான முட்டைக்கோவா மிஸ்ஸிங்....

முட்டை கோவா பெரிசு ஆன‌ ப‌டியால் இவ‌ர்க‌ள் விக்கும் ம‌ர‌க்க‌றிய‌ வேண்டி இவ‌ர்க‌ளுக்கு எறிய‌ முடியாது

 

அது தான் த‌ங்க‌ளுக்கு சுக‌மாய் எறிய‌ கூடிய‌ ம‌ர‌க்க‌றிக‌ளை வைத்து இருக்கின‌ம்

த‌க்காளியால் சிம்பிலா எறிய‌லாம் லொல்...................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

36வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து அதிக ஓட்டங்களைப் பெறமுடியவில்லை. இறுதியில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதியில் 18.5 ஓவர்களில்  7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவிற்கு புள்ளிகள் கிடையாது.

 

36வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 58
2 ரசோதரன் 58
3 கோஷான் சே 58
4 ஈழப்பிரியன் 56
5 நந்தன் 56
6 சுவி 54
7 தமிழ் சிறி 52
8 ஏராளன் 52
9 கிருபன் 52
10 கந்தப்பு 52
11 வாத்தியார் 52
12 எப்போதும் தமிழன் 52
13 நீர்வேலியான் 52
14 வீரப் பையன்26 50
15 நிலாமதி 50
16 குமாரசாமி 50
17 தியா 50
18 வாதவூரான் 50
19 அஹஸ்தியன் 50
20 கல்யாணி 50
21 புலவர் 48
22 P.S.பிரபா 48
23 நுணாவிலான் 46
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (17 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

37)    முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர் நேபாளம்    

BAN  எதிர்  NEP

22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நேபாளம்

கல்யாணி

 

இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது நேபாளம் முதலாவது வெற்றியை சுவைக்குமா?

spacer.png

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

38)    முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா  எதிர் நெதர்லாந்து    

SL  எதிர்  NED

அனைவரும் சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப்போட்டியில் சிறிலங்கா அணி இரண்டு புள்ளிகள் பெற்று அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா?

spacer.png

 

 

39)    முதல் சுற்று குழு C : திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர் பபுவா நியூகினி    

NZ  எதிர்  PNG

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெல்லுமா அல்லது அனைவருக்கும் முட்டையா?

spacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை 23 பேருக்கு முட்டைய‌ த‌ந்து விட்டு நாட்டுக்கு கில‌ம்புவின‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது நேர‌த்தில் நேபாள் வாங்கிளாதேஸ் விளையாட்டு தொட‌ங்க‌ போகுது.......................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எல்லோர் தெரிவுகளையும் ஆராய்ந்து பார்த்தேன்.

சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் சுப்பர்8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுந்ததாக உள்ளது. சில பதில்கள் போட்டிகளின்படி சரியாக இல்லாவிடினும் புள்ளிகளை வெல்ல சாதகமாக உள்ளது.

சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராது.

 

எனவே,

நடக்கவிருக்கும் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் பதில்கள் சரியாக இருந்தால், போட்டிகளை சரியாகக் கணிக்காவிட்டாலும், 2 புள்ளிகள் கொடுக்கலாம் என்று உள்ளேன்.

அதேவேளை போட்டிகளை சரியாகக் கணித்த்திருந்தும், வெல்லும் அணியைச் சரியாகக் கணிக்காவிட்டால் புள்ளிகள் கிடையாது.

நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராத பதில்களுக்கு இரண்டு புள்ளி கொடுக்கவா, ஒரு புள்ளி கொடுக்கவா என்று யோசிக்கின்றேன். எனினும் இன்னும் தீர்மானிக்கவில்லை!

 

மேற்கிந்தியா தீவு ஆப்கானிஸ்தான் போட்டியில் நான் மேற்கிந்தியா தீவுதான் வெற்றி பெரும் என்று பதில் எழுதியிருந்தேன். ஆனால் ஆப்கானிஸ்தான் வென்றால் , அவர்கள் விளையாடும் குழுவில் (C)மேற்கிந்திய தீவு இரண்டாம் இடத்தினை பிடிக்கும். நீங்கள் கேட்ட கேள்விகள் போல group C இல் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் போட்டிகள் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

இன்னும் சிறிது நேர‌த்தில் நேபாள் வாங்கிளாதேஸ் விளையாட்டு தொட‌ங்க‌ போகுது.......................

நெதர்லாந்த் வென்று, பங்களாதேஷ் தோற்று, மொத்த ஓட்ட எண்ணிக்கை வித்தியாசம் 53 அல்லது கூடவென்றால், பங்களாதேஷும் அவுட்.....😚

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

அய‌ர்லாந் வீர‌ர்க‌ளுக்கும் இந்த‌ உல‌க‌ கோப்பை ச‌ரியாக‌ அமைய‌ வில்லை.............................

இன்று சூப்பர் 8 க்கு வங்காளதேசம் தெரிவு செய்யப்பட்டால் 2026 இல் நடைபெறவுள்ள T20 உலககிண்ணபோட்டிக்கு அயர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் 

போட்டி நடாத்தும் நாடுகள் ( இலங்கை, இந்தியா) ,இப்பொழுது நடைபெறும் போடியில் சூப்பர் 8 க்கு தெரிவான நாடுகள்( தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , அமெரிக்கா, மேற்கிந்தியாதீவுகள், வங்காளதேசம்ஆப்கானிஸ்தான்) ஐசிசி தரவரிசையில் உள்ள மிகுதி 3 நாடுகள் ( பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து) தேர்வு செய்யப்படும். ஆனால் இன்றைய போட்டியில் வங்காளதேசம் தோற்று , இலங்கையை நெதர்லாந்து வென்றால் சூப்பர் 8 க்கு நெதர்லாந்து தெரிவாகும். இதனால் 2026 போட்டியில் நெதர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும். வங்காளதேசம் ஐசிசி தரவரிசையில் அயர்லாந்தினை விட முன்னுக்கு நிற்பதினால் அயர்லாந்துக்கு பதிலாக வங்காளதேசம் 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்யபடும்

மற்றய நாடுகள் அமெரிக்கா , பசுபிக் , ஆசியா, ஆபிரிக்கா , ஐரோப்பா போட்டிகளின் படி தெரிவாகும். இதில் அமெரிக்கா போட்டிகளில் ஒரு நாடே தெரிவாகும். ஏற்கனவே அமெரிக்கா 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவானதினால் கனடாவுக்கு 2026 இல் தெரிவு செயப்பட வாய்ப்பு இருக்கிறது  அமெரிக்கா குழுவில் பெர்முடாவும் சிறந்த அணி. கனடாவா பெர்முடாவா என்பது இனி வரும் போட்டிகளில் தெரியும். 

ஆபிரிக்கா கண்டப்போட்டியில் 2 நாடுகள்உகண்டா ,  நபிபியா போன்ற நாடுகள் மறுபடியும் தெரிவு செய்யப்படுமா அல்லது சிம்பாவே , கென்யா போன்ற நாடுகளும் 2 நாடுகளுக்குள் வருமா?  எனக்கு சிம்பாவே வரவேண்டும் என்பது விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் கலக்குது.

2 hours ago, ரசோதரன் said:

 

 

🤣......

அம்பானியும், அதானியும் இலங்கை அணியை வாங்கிய பின், 2026 இல் உலக கோப்பையை வாங்குது இலங்கை அணி....

உண்மை தான்

ஏனென்றால் வீரர்கள் எல்லோரும் இந்தியர்களாக இருப்பார்கள்.

1 பிரபா USA 58

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நேபாளம் கலக்குது.

பங்களாதேஷ் கலங்குது.....

இலங்கையும் பங்களாதெஷூம் தான் இப்ப பரம எதிரிகளாம் கிரிக்கெட்டில்.

பரம எதிரியை கவிழ்க்க இலங்கைக்கு இது ஒரு சந்தர்ப்பம்....😉

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் கலங்குது.....

இலங்கையும் பங்களாதெஷூம் தான் இப்ப பரம எதிரிகளாம் கிரிக்கெட்டில்.

பரம எதிரியை கவிழ்க்க இலங்கைக்கு இது ஒரு சந்தர்ப்பம்....😉

இலங்கையும் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

இலங்கையும் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன

👍...

இலங்கை மிக இலகுவாக வென்றது. பையன் சார் போட்ட போட்டில், இலங்கை அணி ஒழுங்காக விளையாடியது...

பங்களாதேஷும் பெரிதாக கஷ்டப்படாமலேயே வென்றது....

  • கருத்துக்கள உறவுகள்

448350842_864807365684237_55921552526894

448453317_864836419014665_88611367538568

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

37வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 19.3 ஓவர்களில் 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நேபாளம் அணி விக்கெட்டுகளை இழந்தாலும் 85 ஓட்டங்கள் வரை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால் 85 ஓட்டங்கள் இருக்கையிலேயே 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து,  இறுதியில் 19.2 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

முடிவு:  பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது.

 

38வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி ஆரம்பத்திலிருந்தே வேகமாக அடித்தாடி இறுதியில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

முடிவு:  சிறிலங்கா அணி 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அனைவரும் சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்தமைதால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுட‌ன் ப‌ல‌ புள்ளிக‌ள் கிடைச்சு 

புள்ளி ப‌ட்டிய‌லில் மாற்ற‌ம் தெரியும்...........................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

448545870_939084974895913_79307944903411

 

448486914_2307009492963571_2318766753362

Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும்
Mendis~ சுப்பர் 8 உள்ளயா.?
Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂

Vijay Vj

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இன்றுட‌ன் ப‌ல‌ புள்ளிக‌ள் கிடைச்சு 

புள்ளி ப‌ட்டிய‌லில் மாற்ற‌ம் தெரியும்...........................

 

 

பிரித்தானிய நேரப்படி முதல்சுற்றில் நாளைதான் கடைசிப் போட்டி. 😀

நாளை முதல் சுற்றுக்கான மிகுதிப் புள்ளிகள் கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆர‌ம்ப‌ சுற்று க‌ட‌சி போட்டியில் கூட‌ ம‌ழை..........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.