Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
13 MAY, 2024 | 09:50 AM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Screenshot_20240513_085759_WhatsAppBusin

Screenshot_20240513_085752_WhatsAppBusin

Screenshot_20240513_085727_WhatsAppBusin

Screenshot_20240513_085716_WhatsAppBusin

Screenshot_20240513_085712_WhatsAppBusin

WhatsApp_Image_2024-05-13_at_07.50.09__1

https://www.virakesari.lk/article/183370

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கில் இதுதான் நிலமை, முன்னாள் போராளி மாவீரரின் மனைவி 

தமிழ்வின்னில் ஓளிப்படம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? - அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

Published By: DIGITAL DESK 7   13 MAY, 2024 | 01:10 PM

image
 

தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் காரணம் காட்டி உள்ளனர். 

இது கொரோனா காலத்தில் பயன்படுத்திய சொற் தொடராகும். அதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதும் இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். 

சம்பூர் பொலிஸார் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? எனவும் கேட்கின்றது.

பேரினவாத ஸ்ரீலங்கா அரசு சர்வதேச சக்திகள் பேராதரவோடு 2009 இல் இனப்படுகொலையை அரங்கேற்றி கொண்டிருக்கையில் ஆண்கள், பெண்கள் என பெரியோர் முதல் சிறுவர் வரை சதை பிண்டங்களாக இரத்த வெள்ளத்திலும் கொல்லப்பட்டும் காயங்களோடும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பக்கம் மக்கள் பட்டினியோடு வெறும் உப்பு கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்த பேரவலத்தை தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது.

இவ் வரலாற்று பேரவலத்தினை நினைவு கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும்  கடந்த 15 வருட காலமாக தமிழர் தாயகம் எங்கும் முடிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் கஞ்சி பகிர்வதோடு மே 18ஆம் திகதி நினைவேந்தல் நடத்தப்படுகின்றது. 

உப்பு கஞ்சி மக்களின் நீதிக்கான குரலின்  அடையாளமும், ஆயுதமும் ஆகும். இதற்கு எதிராக செயற்படுவதற்கு பொலிஸார் நீதியை மடக்கி தம் பக்கம் சாய்ப்பதும் தமிழர்களின் நீதியின் ஆயுதமான கஞ்சியை தட்டிப்பறித்து நீதி குரலை அடக்க நினைப்பது அராஜகமாகும். சம்பூர் பொலிஸார் பெற்றிருக்கும் நீதிமன்ற தடையுத்தரவை மீளப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் அவர்களையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறுகின்றோம். இத்தகைய கைதுகள்  நீதியை தடுத்து விட முடியாது என்பதையும் உறுதியாக கூறுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே. இவ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதி குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 வது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

https://www.virakesari.lk/article/183395

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துக்கதினத்தை அனுஸ்டிக்கும் உரிமை கூட இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை - திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதற்காக பெண்கள் தாக்கப்பட்டமை குறித்து மக்கள் பேரவைக்கான இயக்கம் கடும் கண்டனம்

Published By: RAJEEBAN   13 MAY, 2024 | 04:46 PM

image
 

திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து பொலிஸார் கைதுசெய்ததை மிக மோசமாக செயற்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் துக்கதினத்தை கூட அனுஸ்டிக்கும் உரிமை இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை என தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் மூன்று தசாப்தபோர் மிகவும் மோசமான முறையில் இலங்கை அரசாங்கத்தினால் முடித்துவைக்கப்பட்டது.

தமிழ்மக்கள் தங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற கரிசனையில்லாமல் குண்டு வீசி கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர்.

சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டனர்..

இவர்களை நினைகூரும்வகையில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உணவு இல்லாததால் உணவு கிடைக்காததால் தண்ணீர் கலந்த அரிசியை கஞ்சியை குடித்து உயிர்வாழ்ந்தனர்.

அதனை நினைகூரும் வகையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது.

அந்த மக்கள் 15 வருடங்கள் கடந்த பின்னரும் எந்த நீதியையும் பெறாமல் வாழ்கின்றனர். அரசாங்கம் அவர்களிற்கு எந்த ஒரு நீதியையும் வழங்கவில்லை எந்தவொரு முடிவையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மிகமோசமான சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.

திருகோணமலை சம்பூரில் பெண்கள் தாங்களாக முன்வந்து  முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது வடகிழக்கில் வழமையாக இடம்பெறும் விடயம்தான் அரசாங்கத்திற்கும் இது தெரியும்.

ஆனால் பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டுள்ளனர்.

இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் நினைவுகூரலின் போது உணவு வழங்குவது பானங்களை வழங்குவது அடிப்படை உரிமையாகும்.

வெசாக் தன்சலிற்கு இவ்வாறான தடை உத்தரவை பிறப்பிப்பார்களா?

அப்பாவி பொதுமக்களை பொலிஸார் மிக மோசமான முறையில் நடத்தியுள்ளனர்.

இரவுவேளை வீட்டிற்குள்  நுழைந்து அடித்து உதைத்து காடையர்கள் போல செயற்பட்டுள்ளனர், 

இவர்கள் பொலிஸாரா?

ஒரு துக்கதினத்தை கூட அனுஸ்டிக்க முடியாத நிலையில்  இந்த நாட்டில் தமிழன் நிலை காணப்படுகின்றது.

இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் வாரத்தில் நினைவுரல் நிகழ்வுகள் நாடு முழுவதிலும் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183421

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: அம்பிகா சற்குணநாதனின் அறிக்கை!

தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

http://www.samakalam.com/முள்ளிவாய்க்கால்-கஞ்சி-வ/
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா? - செல்வராசா கஜேந்திரன் !

By Shana
 
21-60d2b90bc6a4a.jpg

 

வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

எமது தமிழின தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன .ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான்,ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கான நீதியினைக்கோரும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரம் அனுஷ்டிப்பதும் அந்த இனப்படுகொலை,2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்சவும் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது.

இதனை நினைவு கூறும் விதமாக மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை .அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு உணவு,கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ''தன்சல் ''உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள் என்றார்.

 

https://www.battinews.com/2024/05/blog-post_160.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/5/2024 at 06:30, ஏராளன் said:

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

large.IMG_6480.jpeg.c9ab5c82ada72078bef8

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவுகூரல் உரிமை மறுதலிப்பு – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்!

adminMay 15, 2024

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து 3 பெண்கள் உட்பட 4 தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது

நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் மிகுந்த வேதனையை ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் ஏற்படுத்தி உள்ளது. சொல்லணாத்துயர் வலி சுமந்த இந்த நாட்களில் தங்கள் உறவுகளை நினைந்து பிரார்த்திப்பதற்கு அந்த நாட்களில் அவர்கள் பட்ட துயரத்தை கஞ்சி பருகி உயிரை பிடித்திருந்த அவலத்தை நீள நினைந்து தாமும் கஞ்சி காய்ச்சி குடிப்பதும் பரிமாறுவதும் குற்றமாக அரச இயந்திரத்தால் பார்க்கப்படுவது இலங்கையில் 15 ஆண்டுகளாகியும் பேரினவாத மனநிலையில் மாற்றம் வராத கொடூர முகத்தின் வெளிப்பாடாகும். இது தொடர்ந்தும் இனங்களிற்கு இடையேயான நல்லெண்ணத்தை ஆழமாக பாதிக்கும் செயற்பாடாகும்.

புனிதமான கோவிலில் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சிய பெண் பிள்ளைகள் உள்ளிட்டோரை அஜாரகமாக கைது செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது.

இந்த விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி அரசின் கோர முகத்தை துகிலுரித்து அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ் தேசியம் பரப்பில் வாழும் மூத்ததலைவர் திருகோணமலையை தற்போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.இரா. சம்பந்தன் அவர்களுடைய மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதும் பிணை கூட வழங்கப்படாமல் பெண்பிள்ளைகள் உள்ளிட்டோர் விளக்கமறியலில் இரு வாரம் வைக்கப்பட்டிருப்பதும் மனதை வருத்துகின்றது.

உடனடியாக அனைத்து தமிழ்தேசிய சக்திகளும் இவர்களின் விடுதலைக்கு சகல எத்தனங்களை செய்ய வேண்டுவதுடன் அனைத்து முற்போக்கு மற்றும் உலகளாவிய சக்திகளதும் கவனத்தை ஈர்த்து அரசிற்கு அழுத்தத்தை பிரயோகித்து நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் வலிசுமந்த இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/202918/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப்போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவம் முன் உதாரணம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு

Published By: VISHNU   15 MAY, 2024 | 08:00 PM

image
 

தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப் போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவமே மிக அண்மைய நல்ல முன் உதாரணமாகும் என்று தெரிவித்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு சர்வதேசம் அதனை உணர்ந்து போர்க் குற்றங்களுக்கான நீதியையும் அரசியல் நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையின் பேரினவாத அரச படைகளினதும் பொலிஸாரினதும் புலனாய்வு துறையினரதும் பல்வேறு அடக்குமுறை நெருக்கதல்களுக்கு மத்தியில் போர் வலி சுமந்த மக்களாக போரில் கொல்லப்பட்ட, இறந்த எம் உறவுகளுக்காக கடந்த 14 வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வேதனையோடும் நீதி எதிர்ப்பார்ப்போடும் செய்கின்றோம்.

போர்க்காலத்தில் பட்டினிச்சாவை தவிர்ப்பதற்காக செல்லடினாலும், குண்டு தாக்குதலிலும், ஆங்காங்கே இரத்த வெள்ளத்தில் சதை சதைப்பிண்டங்களாக உறவுகள் வீழ்ந்து கிடைக்க கஞ்சிக்கு வரிசையில் நின்றதை மறக்க முடியாதவர்களாக ஒவ்வொரு வருடமும் உப்புக்கஞ்சி பகிர்ந்து நினைவுகளை மீட்கின்றோம்.

அவ்வாறே இவ்வருட நினைவேந்தலில் ஆரம்ப நாளில் கஞ்சி பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பூரில் மூன்று பெண்கள் உட்பட ஆண் ஒருவரையும் கைது செய்து ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழ் 14 நாட்கள் தடுப்பு காவலில் சம்பூர் பொலிஸார் வைத்துள்ளனர்.

இது போரின் வலி சுமந்து நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழர்களையும் மௌனிக்க செய்து தண்டிக்கும் இனவாத வன்முறையாகும்.

இதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றம் சாட்டப்பட்டவர்களை அனைத்து குற்றச்சாட்டுகளில் விடுவித்து உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடக்க இடம் கொடுக்கக் கூடாது எனவும் கூறுகின்றோம்.

கஞ்சி பகிர்தல் எந்த வகையில் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்? என்று கேட்பதோடு; ஒன்று கூடுதல் மற்றும் கஞ்சி பகிர்ந்தல் மூலம் தொற்றுநோய் பரவுமென யாரால்? அறிவித்தல் விடுக்கப்பட்டது எனவும் சம்பூர் பொலிஸாரிடம் கேட்கின்றோம்.

அங்கு பொலிஸார் பெற்றுக் கொண்ட தடை உத்தரவின் அடிப்படை நோக்கம் இனவாதமாகும். இதுவே இனமுறைகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். இத்தகைய குற்றத்தை செய்த சம்பூர் பொலிஸார் எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.

யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்ட நாட்டில் இனப்படுகொலை துன்பியல் நினைவுகளோடு இனஅழிப்பிற்கு தொடர்ந்தும் முகம் கொடுத்தவர்களாக நினைவேந்தலைச் செய்யும் நாம் நீதிக்கான ஆயுதமாகக் கஞ்சியையும், கஞ்சி சிரட்டையுமே தூக்கி நிற்கின்றோம். இதனை இனவாத நோக்கத்தில் சட்டத்தின் துணைகொண்டு தட்டிப்பறித்து புத்தரின் போதனை மிதித்து அவரின் பிச்சை பாத்திரத்தையே தட்டிப்பறிப்தற்கு சமமாகும் என இவ் வைகாசி மாதத்தில் வலியுறுத்தி கூற விரும்புகின்றோம்.

இவ்வருடம் எதிர்வரும் கிழமையில் பௌத்தர்களின் வெசாக் பண்டிகையை கொண்டாடவிருக்கின்றனர். அப்போது தெற்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் பௌத்தர்களும், சிங்கள பௌத்த இராணுவத்தினரும் வீதிகளில் தான சாலைகளை அமைத்து வீதியில் பயணிக்கும் மக்களை நிறுத்தி குளிர்பானங்களையும், உணவுகளையும் பகிர்வர்.

தொற்றுநோய் பரவுமென அப்போதும் சம்பூர் பொலிஸார் இதனை செய்யவிடாது தடுப்பார்களா? யாராவது நீதிமன்ற தடை உத்தரவைப் பெறுவார்களா? இல்லையே. தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் தர்ம சாலைகளையும், பௌத்த பாராயணம் ஒலிபெருக்கி சத்தங்களையும் இனமுரண்பாட்டுக்கு உரிய ஒன்றாகவே நாம் பார்க்கின்ற போதும் அதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. இன, மத நல்லிணக்கமென நாமும் அமைதி கொள்ளும்போது எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.

தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப் போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவமே மிக அண்மைய நல்ல முன் உதாரணமாகும். இதனை சர்வதேசம் உணர்ந்து தமிழர்களுக்குக் கூறும் போர்க் குற்றங்களுக்கான நீதியையும் அரசியல் நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் முள்ளிவாய்க்கால் 15 ஆம் நினைவு ஆண்டில் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/183640

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சி தயாரித்த பெண்கள் மீதான அடக்கு முறையை பொலிஸ் தலமையகத்தின் முன்னால் தமிழ் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மக்கள் சிங்களவர்களோடு இணங்கி, அனுசரித்துப் போய், பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த ரணிலுடன் சமரசம் பேச எத்தனிக்கும்போது இப்படி முள்ளிவாய்க்கால்க் கஞ்சி என்று காய்ச்சி எங்களின் எண்ணத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது தகுமா? 

இந்த நவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது இணக்க அரசியலுக்குக் கடுமையான சேததைத்தை விளைவிக்கிறது. 

ரணில் மாத்தையாட்ட ஜயவேவா !!! ஒஹொம யங், ஒஹொம யங் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

தமிழ் மக்கள் சிங்களவர்களோடு இணங்கி, அனுசரித்துப் போய், பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த ரணிலுடன் சமரசம் பேச எத்தனிக்கும்போது இப்படி முள்ளிவாய்க்கால்க் கஞ்சி என்று காய்ச்சி எங்களின் எண்ணத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது தகுமா? 

இந்த நவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது இணக்க அரசியலுக்குக் கடுமையான சேததைத்தை விளைவிக்கிறது. 

ரணில் மாத்தையாட்ட ஜயவேவா !!! ஒஹொம யங், ஒஹொம யங் !!!

இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி.

ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன அழிப்பின் குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி

398296420.jpg

யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆ.குழு தெரிவிப்பு!

(ஆதவன்)

வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப்போரின் ஒரு முக்கியமான குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி என்று யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-

யுத்தம் முடிந்து, சரணடைவுகளின் பின் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்தது. இவர்கள் இராணுவக் கட்டுப்பட்டுக்குள் வரும் வரை தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வர உதவியது அந்த மக்கள் தம் உடைமைகளில் வைத்திருந்த அரிசி, தேங்காய் போன்றவற்றைப் பகிர்ந்து காய்ச்சிய கஞ்சிதான். இதனால்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி இவர்களது உயிர் காத்த கஞ்சியாகவும் வரலாற்றுச் சிறப்புப் பெறுகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் குறிப்பாக வடக்கு - கிழக்கில் வாழும் தமிழர்கள் எதிர்கொண்ட மிகவும் மோசமான துன்பங்களையும் இலட்சக்கணக்கான மக்கள் காவு கொள்ளப்பட்டமையையும் நினைவுகூருவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றம்.

உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப்பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்கள் இரவிரவாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும். சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை யில் இடம் பெற்றுவரும் சிறுபான்மையினருக்கெதிரான மனித உரிமை மீறல்களை தொடக்கத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருவது நாமறிந்ததே. இவ்வாறிருக்கையில் மன்னிப்புச்சபையின் செயலாளர் அக்னஸ் கலமார்ட் இலங்கைக்கு வந்து குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுப் பதை நாம் வரவேற்கின்றோம் - என்றுள்ளது. (
 

https://newuthayan.com/article/இன_அழிப்பின்_குறியீடே_முள்ளிவாய்க்கால்_கஞ்சி_-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம் - சட்டத்தரணி சுகாஷ் 

16 MAY, 2024 | 05:13 PM
image
 

(துரைநாயகம் சஞ்சீவன்)

கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் அகற்றியிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். 

மூதூர் நீதிமன்றில், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நால்வருக்கு எதிரான வழக்கானது, நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வழக்கு விசாரணைக்காக நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கில் எதிரிகளின் சார்பாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகியிருந்தார். 

இதன்போது முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, இவ்வழக்கில் எதிரிகள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மூதூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கட்டளை பிறப்பித்திருக்கிறது.  

தென்னிலங்கையிலே பாற்சோறு கொடுப்பது சட்ட விரோதமாகாது என்றால் எவ்வாறு வடக்கு, கிழக்கிலே கஞ்சி கொடுப்பது சட்ட விரோதமாகும் என்பது போன்ற பல கேள்விகளை வாதங்களாக நீதிமன்றில் முன்வைத்ததாகவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். 

அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

பின்னர் இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நால்வரின் கைது தொடர்பில் சம்பூர் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/183714

  • Like 1
Posted
49 minutes ago, ஏராளன் said:

 

 

நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 

அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

இந்த வழக்கில் எதிரிகளின் சார்பாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகியிருந்தார். 

சட்டத்தரணி சுகாஷ் அண்மைய காலங்களில் கடினமாக வேலை செய்கிறார்.பாராட்டுக்கள்.

1 hour ago, ஏராளன் said:

அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மகிழ்ச்சி.

Edited by ஈழப்பிரியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

சட்டத்தரணி சுகாஷ் அண்மைய காலங்களில் கடினமாக வேலை செய்கிறார்.பாராட்டுக்கள்.

ஓம்.

கூடவே இந்த பேட்டியில் தடையை நீக்க முஸ்லிம் சட்டத்தரணிகள் பெரிதும் உதவியதாக கூறினார் சுகாஷ்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, ஈழப்பிரியன் said:

சட்டத்தரணி சுகாஷ் அண்மைய காலங்களில் கடினமாக வேலை செய்கிறார்.பாராட்டுக்கள்

அவர் இணைந்திருக்கும் கட்சிக்குள்ளும் நல்ல மதிப்பு உள்ளது என அறிய முடிந்தது. 

மாறாமல் இருப்பார் என நம்புவோமாக

Edited by P.S.பிரபா
வசனம் சேர்க்கப்பட்டது
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, P.S.பிரபா said:

அவர் இணைந்திருக்கும் கட்சிக்குள்ளும் நல்ல மதிப்பு உள்ளது என அறிய முடிந்தது. 

மாறாமல் இருப்பார் என நம்புவோமாக

யாழ்பாணத்தில் தலைவருக்கு இருக்கும் ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு ஆபத்து வராதவரை கட்சியில் பிரச்சனை வராது.

அதிகம் பிரபல்யம் ஆனால் மணிவண்ணன் நிலைதான் இவருக்கும்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் தலைவருக்கு இருக்கும் ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு ஆபத்து வராதவரை கட்சியில் பிரச்சனை வராது.

அதிகம் பிரபல்யம் ஆனால் மணிவண்ணன் நிலைதான் இவருக்கும்.

இது எல்லா கட்சிகளிலும் உள்ள ஒரு நிலைதான்.. யாரை விழுத்தி எப்படி உயர்வது எனத் தொடங்கி.. கட்சி மாறுவது வரை.. 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி

பட மூலாதாரம்,KUMANAN| X

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் மே 18ஆம் தேதி, இலங்கைப் போரில் இறந்த தமிழர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், சமீப ஆண்டுகளாகவே இந்த நிகழ்வுகளை நடத்துவதில் பல தரப்பினரிடம் இருந்து, பல்வேறு விதமான தடைகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த வாரம் வடகிழக்குப் பகுதி முழுவதிலும் பல இடங்களில், “முள்ளிவாய்க்கால் கஞ்சி” எனப்படும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், கடந்த இரு தினங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரு நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் தடை போட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளது.

மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னில (22), கமலேஸ்வரன் விஜிதா (40), செல்வ வினோத் சுஜானி (40), நவரத்ன ராசா ஹரிஹர குமார் (43) ஆகிய நால்வரும் மே 27ஆம் தேதி வரை மூதூர் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் மே 12ஆம் தேதி திரிகோணமலை சம்பூரில் உள்ள சேனையூர் பிள்ளையார் கோவில் முன்பு, உள்ளுர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த சம்பூர் காவல்துறையினர், வெள்ளமுள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடல், உணவு வழங்குதல் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடை ஆணையை நால்வரிடமும் வழங்க முற்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் அதை வாங்க மறுத்துள்ளனர்.

அந்தத் தடை உத்தரவில் வெள்ளமுள்ளிவாய்க்காலில் எந்தவிதமான பள்ளிகள், கோவில்கள் அருகில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தவும், வாகன அணிவகுப்புகளை நடத்தவும், பொது சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையிலான கூட்டத்தைக் கூட்டவும், உணவுப் பொருட்கள் வழங்கவும் தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை, மகாவீரர் சங்கத்தின் தலைவர் கந்தையா காண்டீபன், துணைத் தலைவர் சாந்தலிங்கம் கோபிராசா, பொருளாளர் நவரத்ன ராசா ஹரிஹர குமார், செயலாளர் செல்வ வினோத் சுஜானி, இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு 14 நாட்களுக்குப் பிறப்பித்துள்ளது.

 

விடுதலை புலிகளுக்கான கொண்டாட்டமா?

முள்ளிவாய்க்கால் கஞ்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மே 14ஆம் தேதி காவல்துறையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல காவல் வட்டாரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்வதே இக்குழுவின் நோக்கம் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திரிகோணமலை சம்பூர் காவல் பிரிவில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்டாடுவது சட்டவிரோதமான செயல் என்று, சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி மூதூர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.

 

'கஞ்சி விநியோகித்ததால் கைது செய்யப்படவில்லை'

முள்ளிவாய்க்கால் கஞ்சி
படக்குறிப்பு,சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்குத் தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரைக் கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் நால்வருக்கும் ஒரே மாதிரியான நீதிமன்ற உத்தரவை காவல்துறை பெற்றுள்ளது.

சம்பூர் காவல் நிலையத்தின் காவலர், கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று நீதிமன்ற தடை உத்தரவை அந்தக் குழுவிடம் வழங்கியதாகவும், ஆனால் அதை ஏற்க மாட்டோம் என்று கூறி அவர்கள் நிகழ்வை தொடர்ந்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் கைதாகியுள்ள நால்வரில் ஒருவர் இந்நிகழ்வில் ஈடுபடாதவர், அவரும் இதில் பங்கேற்று கைதாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால், காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் வேறு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறிய வழக்கில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக அவரது மகள் வீட்டுக்கு காவல்துறை சென்றபோது அவரின் மகள் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொள்வதாக காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனே காவலர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தி அந்தப் பெண்ணையும், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் காவலர்களை நோக்கி கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் பெண் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

 

குற்றச்சாட்டுகள் என்ன?

மேற்கண்ட சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி, நீதிமன்ற உத்தரவை மீறுதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், காரணத்துடன் அல்லது விருப்பத்துடன் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நால்வரும் 12.05.2019 அன்று சம்பூர் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மூதூர் கௌரவ நீதவான் நீதிமன்றில் 13.05.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 27ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், திரிகோணமலை துறைமுகம் மற்றும் உப்புவெளி காவல் பிரிவுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அந்த காவல் நிலையங்களின் காவலர்கள் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

'வெசாக் உணவு தானத்தை தடுக்குமா காவல்துறை?'

முள்ளிவாய்க்கால் கஞ்சி
படக்குறிப்பு,ஈழப்போர் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் உணவாகச் சமைத்து உண்ட கஞ்சியே அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் சமைக்கப்படுகிறது.

பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய மனித உரிமை சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான அம்பிகா சத்குணநாதன், “மே மாதத்தில் தமிழ் மக்கள் போரில் இறந்த, குறிப்பாக இறுதிக்கட்டத்தில் இறந்த அனைவரையும் நினைவு கூர்வார்கள்” என்று கூறினார்.

கஞ்சி விநியோகத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த மாதம் அவர்கள் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூர்கின்றனர். ஆனால், அரசாங்கம் அவர்களைத் தடுக்க முயல்கிறது" என்றார்.

“ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நவம்பர் மாதம் மகாவீரர் தினத்தில் நினைவுகூரப்படுவதாகவும், போரில் உயிரிழந்த அனைவரும் மே மாதத்தில் நினைவுகூரப்படுவதாகவும்” அவர் தெரிவித்தார்.

மேலும், கஞ்சி வழங்கும் நிகழ்வுகளைத் தடை செய்ய காவல்துறை கூறும் காரணங்களில் சுகாதாரமும் ஒன்று. இதே வெசாக் தான நிகழ்வுகளை அவர்களால் நிறுத்த முடியுமா என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

“இந்த மாதத் தொடக்கத்தில் மே தினப் பேரணிகள் நடந்தன. அப்போதும் மக்கள் உணவைப் பகிர்ந்து கொண்டனர். அங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அடுத்த வாரம் வெசாக் பண்டிகை நடக்கவுள்ளது. அதிலும் உணவு தானம் நடைபெறும். அதைத் தடை செய்ய காவல்துறை நீதிமன்ற உத்தரவைப் பெறுமா?"

 

'எல்லாவற்றையும் மறப்பதா நல்லிணக்கம்?'

முள்ளிவாய்க்கால் கஞ்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போரில் இறந்தவர்களின் சிதிலமடைந்த கல்லறைகள்

போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை மீறப்படுவது நாட்டின் நல்லிணக்கத்திற்குத் தடையாக உள்ளதாக சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் வலியுறுத்துகிறார்.

நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள பார்வை என்ன என்பதை அவர் விளக்கினார்.

“நல்லிணக்கத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை அறிய உரிமை இல்லை. இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்த உரிமை இல்லை.

நமக்கு நடந்த அனைத்தையும் மறந்துவிடுவது, போர் குறித்தான அரசுத் தரப்பு வாதம் மற்றும் போரினால் உண்டான பின்விளைவுகளை எதிர்க்காமல் இருப்பது ஆகியவைதான் நல்லிணக்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”

மேலும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை அறியவும், நீதியைப் பெறவும், நினைவேந்தல் உரிமையும், இழப்புகளுக்கு நஷ்டஈடு பெறும் உரிமையும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

மனித உரிமை ஆணையத்தில் புகார்

முள்ளிவாய்க்கால் கஞ்சி
படக்குறிப்பு,போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கான உரிமையை மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள போதிலும் காவல்துறை நீதிமன்ற உதவியுடன் அதைத் தடுக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ள இளம் ஊடகவியலாளர் அமைப்பு, “மனித உரிமைகள் ஆணைக்குழு ‘நினைவேந்தல் உரிமையை’ 2016இல் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டு காவல்துறையினர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக” தெரிவித்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டப்பிரிவின் (ஐசிசிபிஆர்) கீழ் அவர்கள் குற்றம் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறி அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் நீதி, நல்லிணக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சம உரிமைகளை மட்டும் அரசாங்கம் மதிக்கவில்லை என்பதையே காவல்துறையினரின் இந்தத் தன்னார்வப் பணி காட்டுவதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் கஞ்சி
படக்குறிப்பு,இந்த ஆண்டு இதுவரை இரண்டு இடங்களில் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கல்முனை பாண்டிரிப்பு அரசடி அம்மன் கோவிலுக்கு அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

கல்முனை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நோக்கில் இவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்வது மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான செயல் என்பதாலேயே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அமுலுக்கு வரும் இந்த நீதிமன்றத் தடை உத்தரவு தமிழ் தேசிய ஜனதா பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தனின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

 

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் என்ன?

முள்ளிவாய்க்கால் கஞ்சி
படக்குறிப்பு,மக்களிடம் ஒவ்வொரு பொருளாக வசூலித்து சமைக்கப்படும் உணவே இந்தக் கஞ்சி. இது கடைசிகட்ட போரில் உயிரிழந்த மக்களின் நினைவாகக் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்த நிலையில் அந்தப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் பல வார காலமாக உணவு கிடைப்பதில் சிரமங்களை எதிகொண்டனர்.

அந்தச் சூழலில் தமிழர்கள் அவர்களுக்குக் கிடைத்த அரிசியைக் கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியைப் போக்கிக் கொண்டனர்.

எனவே அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் 18 வரை வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படும் அரிசியில் இருந்து கஞ்சி சமைத்து தானம் செய்வார்கள். மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் பேரணியுடன் இந்த நினைவேந்தல் வாரம் நிறைவடைகிறது.

https://www.bbc.com/tamil/articles/czrxjm718j2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அடிப்படையாக வைத்து இடம்பெற்ற கைதுகள் - அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழு கவலை

Published By: RAJEEBAN

19 MAY, 2024 | 06:53 AM
image
 

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.

கைதுகள் குறித்த அச்சமின்றி நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183921



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.