Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
18 MAY, 2024 | 07:28 AM
image
 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன .

அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183838

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

18 MAY, 2024 | 03:30 PM
image

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் (18) பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

IMG-20240518-WA0329.jpg

தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது. 

அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. 

அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர்.

அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  

IMG-20240518-WA0342.jpg

IMG-20240518-WA0341.jpg

IMG-20240518-WA0337.jpg

IMG-20240518-WA0340.jpg

IMG-20240518-WA0339.jpg

IMG-20240518-WA0292.jpg

IMG-20240518-WA0338.jpg

IMG-20240518-WA0336.jpg

IMG-20240518-WA0335.jpg

IMG-20240518-WA0333.jpg

IMG-20240518-WA0334.jpg

IMG-20240518-WA0180.jpg

IMG-20240518-WA0181.jpg

IMG-20240518-WA0127.jpg

IMG-20240518-WA0303.jpg

IMG_20240518_13245277.jpg

IMG_20240518_12003149.jpg

IMG-20240518-WA0328.jpg

https://www.virakesari.lk/article/183876

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதிப் போரில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் 

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் : முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

18 MAY, 2024 | 04:58 PM
image
 

மிழர்கள் ஒருதேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதோடு அவர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்த இயலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதீன முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்ட இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வுப் பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது. 

இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வுப் பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக காலணித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

தமிழினப்படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது. புவிசார் அரசியல் நலன்களின் பிராந்திய தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காக பேரரசுக் கட்டமைப்பை துணைக் குத்தகைக்கு விட்டுள்ளது.

அதனுடைய ஒரு வடிவமாகத்தான் இஸ்ரேலையும் இலங்கையையும் அவதானிக்க வேண்டும். தமிழினப்படுகொலை நடந்து 15ஆவது ஆண்டில் பலஸ்தீனப் படுகொலை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பலஸ்தீனப் படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப் படுகொலைக்கும்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம்.

ஆசியாவில் இலங்கைத் தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும் மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது.

பேரரசைக் கட்டமைப்பதற்கு அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக் காட்டுகின்றன.

பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளபாடங்களுக்கும் பேரரசின் பொருளாதார இருப்புக்கும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏக பேரரசை கட்ட முயலும் நாடுகள் தான் மனித உரிமையையும் பொறுப்புக்கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத்தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத் தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2002 பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாய் உள்ளது.

அதுவே இன்று காசாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகின்றது.

ஐ.நா. சபையும் அதன் ஏனைய அலகுகளும் சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனித பேரவலத்தை தடுக்கமுடியாமல் போனதோ அதேபோல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன. அது தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் மீது, பண்பாட்டின் மீது, கல்வியின் மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள் மீது, சைவத்தலங்கள் மீது, தொல்லியல் வரலாறு மீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாக இருக்கலாம்.

ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருத வேண்டியுள்ளது. 

உளவியல் போரின் நோக்கம், ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும். 

தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரக்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது.

தமிழ்த் தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின் வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.

தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்து போராடவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குள் தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த தமிழினத்துக்கானது. யாரும் இப்பாரிய பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால், பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துகொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம்.

அதன் அடிப்படையில்,

* நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே இலங்கை அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது.

* தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது. அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

* தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம்.

* கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இதுவும் இன அழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம்.

* தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.

எம் பாசமிகு உறவுகளே, தமிழ் தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று வாசித்து முடித்தார்.

https://www.virakesari.lk/article/183888

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசிய தலைவர் பிரபாகரனுக்கும், இறுதி போரில் இறந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.
இறுதி போரில் மரணமடைந்த அனைத்து பொதுமக்களுக்கும் நினைவு வணக்கங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது தேசத்தின் விடுதலையினை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம் என்று இந்தநாளில் உறுதியெடுத்துக் கொள்வோம்.

தமிழினக்கொலையில் இலங்கை, இந்திய சர்வதேசப் பேய்களால் பலியிடப்பட்ட என் மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன்.

முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.

Edited by ஈழப்பிரியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!

 

இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  

 

இந்தம்மா....ஊருக்குபோக.. சிங்கள பொலிசு விடுமா..?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழினத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தின் அதியுச்ச இனவழிப்பினுள் அகப்பட்டு ஆகுதியாகிவிட்ட மக்களையும், மண்ணிலே சாயும் இறுதிக்கணம்வரை களமாடிச்சாய்ந்துவிட்ட மாவீரர்களுக்கும்  அகமேந்திய நினைவுவணக்கம்! 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2006/04 பிரி. தமிழ்ச்செல்வனுடனான சந்திப்பு      
    • 1994 யாழ் வந்த மொட்டையள் அடங்கிய சந்திரிக்கா அம்மையாரின் சிங்கள தூதுக் குழுவினர்     (படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)           'மொட்டையள் மாவீரர் துயிலுமில்லத்தினுள் சென்று கல்லறைகளைக் காண்கின்றன'
    • வவுணதீவு முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் | Vavunatheevu FDL | 2006 - july - 8 | கிட்டிப்பு(Credit) :AP archives       (படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)       'எமது காவல்வேலியில் உள்ள ஒரு ஏப்புழை'   'வவுணதீவில் இருந்த எம்மவரின் முன்னரங்க நிலையில் இருந்த பார்த்த போது தெரியும் சிங்கள வன்வளைப்பு மட்டக்களப்பு பகைப்புலம்'   'சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ள புலிவீரர்கள்'       'இப்புலிவீரன் அணிந்துள்ளது தமிழீழ படைத்துறைச் சீருடையே '   'உந்துகணை செலுத்தி வீரன்'             'பகைப்புலம் காணும் இயந்திரச் சுடுகலப் புலிவீரன்'  
    • அத்தியடி குத்தியனின் ஊழல் பட்டியல் மிக நீளமானது, அவற்றில் சில ( கொலை, ஆட்கடத்தல், காட்டிக்கொடுத்தல், கூட்டிக்கொடுத்தல் என்பன புறம்பாகும்) - யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக சம்பாதித்திருக்கின்றார். - ஸ்ரீதர் திரையரங்கு உட்பட தனியார் சொத்துக்களை அபகரித்து இருக்கின்றார். - அரச சொத்துக்களை முறை தவறி பயன்படுத்தியதன் மூலம் அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்திருக்கின்றார் - பிரதேச மற்றும் நகர சபைக்களுக்கு சொந்தமான அரச வாகனங்களை அபகரித்திருக்கின்றார் - அரச பொது நிர்வாகத்தில் அத்துமீறி தலையீடு செய்து அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார் - சிபாரிசுகள் மூலமான முறைகேடான அரச ஊழியர் நியமனங்கள் ஊடக திறைசேரிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் - பனை அபிவிருத்தி சபை, திக்கம் வடிசாலை, வட கடல் நிறுவனம் உட்பட நிறுவனங்களை சீரழிந்து இருக்கின்றார் - திருமதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் மட்டும் விடுவிக்கப்பட்ட 81 கோடி ரூபா பணத்தை ஒரே தடவையில் கையாடல் செய்து இருக்கின்றார் - பாராளமன்ற உறுப்பினருக்குரிய வரி சலுகை மூலம் இறக்குமதி செய்த Toyata Land Cruiser வாகனத்தை GAPC பெரேரா என்பவருக்கு விற்று காசு சம்பாதித்திருக்கின்றார் இழுவை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களிடம் கப்பமாக ரூபா 5,000 வசூலித்திருக்கின்றார் - யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான லட்சக்கணக்கான மின்சார நிலுவையை செலுத்த தவறி ஏமாற்றியிருக்கின்றார் - கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, ளிலும் தனக்கு சொந்தமாகவிருந்த வீடுகளுக்கான 1 கோடிக்கும் அதிகமான தண்ணீர் கட்டணத்தை செலுத்த தவறியிருக்கின்றார். - வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதன் திறைசேரிக்கு கோடிக்கணக்கான இழப்பை ஏற்படுத்திருக்கின்றார் - யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் பசில் ராஜபக்சே சகிதம் நடத்தபட்ட சொகுசு பஸ் சேவையில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் கோவில்கள் புனரமைப்பு என்கிற பெயரில் முறைகேடான காசோலை மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றார் - முறைகேடான கஸ்தூரியார் வீதி புது கட்டட ஒப்பந்தம், - DD தொலைக்காட்சி நிறுவனத்தையும் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்தியமை, - மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிக நியமனங்கள் என பல்வேறு தரப்பட்ட மோசடிகள் ஊடாக யாழ் மாநகர சபைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் - கடலட்டை பண்ணைகளை முறைகேடாக வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் - பளை உட்பட பல பகுதிகளில் ஈபிடிபி உறுப்பினர்கள் முறைகேடாக அரச காணிகளை அபகரிக்க துணை போயிருக்கின்றார் - டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவர் தம்பி தயானந்தா ஆகியோர் மதுபான அனுமதி பத்திரங்களை முறைகேடாக பெற்று இருக்கின்றார்கள். மூலம்: இனமொன்றின் குரல் முகநூல்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.