Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

putinvladimir_120621ap_lead.webp?resize=

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார்.

இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு மேலாகப்  போர் இடம்பெற்று வருகின்றது.

இப்போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதமும் பெருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இப்போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவந்த போதிலும் ரஷ்ய பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பைடன் தடைவிதித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தடையை தற்போது தளர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பைடனின் இந்த முடிவால் உக்ரேனின் ஆதரவு நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்கள் ஆயுதங்களை ரஷ்யாவிற்குள் உள்ள இராணுவ இலக்குகள் மீது பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்ளலாம் எனவும் ஜேர்மனியும் யோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் முடிவானது ரஷ்ய அதிகாரிகள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1385065

  • கருத்துக்கள உறவுகள்

சகுனங்கள் சரியாகப் படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தானா??

 

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன்இ உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 06:05, Kapithan said:

சகுனங்கள் சரியாகப் படவில்லை. 

மேற்கின் அடுத்த இலக்கு மொஸ்கோ என கூறப்படுகிறது, இந்த காணொளியில். தற்போதய இரஸ்சிய பொருளாதார வளர்ச்சி கூட தற்காலிகமானது என்பதாக இன்று ஏ பி சி தெரிவித்துள்ளது.

சமகாலத்தில் பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக இரஸ்சியாவினை தொடர் தேய்மானம் மூலம் நிகழ்த்த முடியும் என மேற்கு எதிர்பார்க்கின்றது, அவ்வாறு நிகழும்போது இரஸ்சிய கூட்டணி நாடுகள் மெதுவாக இரஸ்சியாவினை கழட்டி விட வாய்ப்புள்ளது, புட்டின் உக்கிரேனின் ஆக்கிரப்பு பகுதிகளை கைவிட்டு பின்வாங்குவதுடன் சமாதான உடன்படிக்கையினை மேற்கொள்வதுதான்  உலகிற்கும் இரஸ்சியாவிற்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவை தாக்குவதற்கு மேற்குலகம் ஆயுதங்களை வழங்கினால் மேற்குலக நாடுகளை தாக்குவதற்கு நாங்கள் ஆயுதங்களை வழங்குவோம் - புட்டின்

Published By: RAJEEBAN   06 JUN, 2024 | 11:39 AM

image

மேற்குலக   நாடுகளை  தாக்குவதற்காக ரஸ்யா நாடுகளிற்கு ஆயுதங்களை வழங்ககூடும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

உக்ரைனிற்கு ரஸ்யாவை தாக்ககூடிய நீண்ட தூர ஆயுதங்களை  மேற்குலகம் வழங்கியுள்ளதை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின் மேற்குலகை தாக்குவதற்கு தனது நாடு ஆயுதங்களை வழங்கும்  என எச்சரித்துள்ளார்.

ரஸ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்குவதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனிற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன.

இதன் காரணமாக பாரதூரமான பிரச்சினைகள் உருவாகலாம் என புட்டின் வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு  தெரிவித்துள்ளார்.

எங்கள் பகுதிமீது தாக்குதலை மேற்கொண்டு எங்களிற்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக ஆயுதங்களை விநியோகிக்கலாம் என எவராவது நினைத்தால் அந்த நாடுகளின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகளிற்கு ஆயுதங்களை வழங்கும் உரிமை  எங்களிற்கும் உள்ளது என புட்டின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ எந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்ககூடும் என்பது குறித்து புட்டின் எதனையும் தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/185429

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மேற்கின் அடுத்த இலக்கு மொஸ்கோ என கூறப்படுகிறது, இந்த காணொளியில். தற்போதய இரஸ்சிய பொருளாதார வளர்ச்சி கூட தற்காலிகமானது என்பதாக இன்று ஏ பி சி தெரிவித்துள்ளது.

சமகாலத்தில் பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக இரஸ்சியாவினை தொடர் தேய்மானம் மூலம் நிகழ்த்த முடியும் என மேற்கு எதிர்பார்க்கின்றது, அவ்வாறு நிகழும்போது இரஸ்சிய கூட்டணி நாடுகள் மெதுவாக இரஸ்சியாவினை கழட்டி விட வாய்ப்புள்ளது, புட்டின் உக்கிரேனின் ஆக்கிரப்பு பகுதிகளை கைவிட்டு பின்வாங்குவதுடன் சமாதான உடன்படிக்கையினை மேற்கொள்வதுதான்  உலகிற்கும் இரஸ்சியாவிற்கும் நல்லது.

அந்தக் காலம் மலையேறிவிட்டது. "அரகல" வைக் கொண்டு த்மாத்தூண்டு இலங்கையையே கையாளமுடியவில்லை. தற்போது ஜோர்ஜியாவும் மேற்கின் கரிசனையை உதறித்தள்ளிவிட்டது. 

ரஸ்யாவின் பொருளாதார வளர்ச்சி  உலகின் 4வது நிலைக்கு வளர்ந்துள்ளதாக உலக வங்கி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது . 

உண்மையில் இங்கே கனடாவில் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே போய்விட்டது. மோட்கேஜ் கட்ட கிரடிட் காட்டை சுரண்ட வேண்டிய நிலைமை. கிரடிட் காட்டும் இறைத்த கிணற்றின் குழித் தண்ணீர்  நிலையில். 

இந்த நிலைமையில் இருந்து மீண்டெள ஆகக் குறைந்தது இன்னும் 10 வருடங்கள் செல்லும். 

வீட்டு விலைகள் மீண்டெளவில்லையென்றால் கதை கந்தல்தான். 

உண்மை நிலவரம் இதுதான். 

😥

  • கருத்துக்கள உறவுகள்

வீம்பிற்குப் பிடிக்கும் இந்தச் சண்டையினை நிறுத்திவிட்டு அனைவரும் தத்தமது நாட்டின் நலன்களில் அக்கறை செலுத்துவதே செய்யவேண்டியது. ஒவ்வொரு குடிமகனும் உழைத்த பணத்தில் அரசுகள் எடுத்துக்கொள்ளும் வரிப்பணம் இச்சண்டையில் கரியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப்பணத்தை சொந்த நாட்டு மக்களின் நலன்களுக்காகப் பாவித்திருக்கலாம். 

ரஸ்ஸியாவின் எஸ் 300 ஏவுகணைச் செலுத்தியை உக்ரேன் பாவித்த அமெரிக்காவின் ஹிமார்ஸ் ஏவுகணை அழித்துவிட்டது என்று மார்தட்ட, அமெரிக்கா வழங்கிய ஏப்ரகாம் மற்றும் ஜேர்மனின் லெப்பேர்ட் தாங்கிகளைக் கைப்பற்றிய ரஸ்ஸியா மொஸ்கோவில் அவற்றைக் காட்சிப்படுத்திவருகிறது. இந்த எதிரியின் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதும், எதிரியின் உயர் ஆயுத மையங்களை அழிப்பதும் நாம் சரித்திரகாலம் கொண்டு பார்ப்பதுதான். 

மூடர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே கிரிமியா உள்ளிட்ட ரஷ்சிய இலக்குகளை குறிவைத்து மேற்குலக ஏவுகணைகளை உக்ரைன் ஏவி இருந்தது. ரஷ்சிய - உக்ரைன் எல்லையோர.. நகர்களை தாக்கியதன் விளைவே அண்மையில் ரஷ்சியா முன்னெடுத்த புதிய இராணுவ நகர்வு.

முன்னர் கிவ் வரை நகர்ந்திருந்த ரஷ்சிய படைகள்..... உக்ரைன் மற்றும் மேற்குலகால் வழங்கப்பட்ட ரகசிய உடன்பாட்டின் கீழ் தான் தம்மை பின்னகர்த்திக் கொண்டன. இப்போ மீண்டும்.. ரஷ்சியாவை சீண்டுவதன் மூலம்.. உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவே மேற்கு நாடுகள் முயல்கின்றன. இது உக்ரைனுக்கே பேரழிவாக அமையும். இது விளங்காத முட்டாளாக தன் சொந்த நாட்டையும் மக்களையும்.. மேற்குலகு வழங்கும் சுகபோகத்தை அனுபவிக்க உக்ரைனின் யூதக் கோமாளி சனாதிபதி பாவித்து வருகிறார். அவருக்கு வக்காளத்துக்கு அவர் பொண்டாட்டி வேற.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/6/2024 at 03:37, ரஞ்சித் said:

மூடர்கள். 

இதில் யார் மூடர்கள்?

சகலரும்  சகல உரிமையுடனும் பிரிந்து சென்று வாழட்டும் என உடைக்கப்பட்டதுதான் சோவியத் ஒன்றியம்.  அதன் பின் அந்தந்த நாடுகளில் மேற்குலக தொடர்புகள் அதிகரித்து வியாபார நிலைகளும் உருவாகின. இது ரஷ்யாவிற்கும் மிக மிக பொருந்தும். அந்த நிலையில் மேற்குலகிற்கு எதிராக இராணுவ நகர்வுகளை ரஷ்யா மேற்கொண்டதாக மேற்குலக செய்திகளிலும் இல்லை.
ஆனால் அதே நேரம் ரஷ்ய எல்லைகளில் தமது படை குவிப்புகளை  செய்த வண்ணமே இருந்தது மேற்குலக நாடுகள். உதாரணத்திற்கு   ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்க இராணுவ படைகளை போலந்து நாடுகளுக்கு நகர்த்தியது.

அது சரி.... உலக அமைதிக்காக போராடும்  மேற்கத்தியர்களுக்கு ஏன் இவ்வளவு இராணுவ மூர்க்கங்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.