Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kavi arunasalam said:

சைமன் கட்சியைப் பார்த்தேன். பிரபாகரன் தெரிந்தார் குத்தினேன்.

இதில் பிரபாகரனை என் இழுக்கிறீர்கள். இரட்டை இலை MGR உடையது. ஆனால் மைக் சின்னம்?

எழுத்தில் வறட்சி  தெரிகிறது. படம்வரைவதோடு மட்டும் நிறுத்திகொண்டால் இருக்கிற மரியாதையையாவது காப்பாற்றி கொள்ளலாம்!!

  • Replies 64
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள்,  பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    முன்னரே சீமான் சொல்லும் போது  எனக்கான வாக்கு இப்ப பாடசாலைகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள். அது இப்போ தான் வெளிய வருது. பெற்றோர் சொல்லி பிள்ளைகள் திராவிடத்துக்கு வாக்கு போட்டார்கள்.

  • Eppothum Thamizhan
    Eppothum Thamizhan

    இதில் பிரபாகரனை என் இழுக்கிறீர்கள். இரட்டை இலை MGR உடையது. ஆனால் மைக் சின்னம்? எழுத்தில் வறட்சி  தெரிகிறது. படம்வரைவதோடு மட்டும் நிறுத்திகொண்டால் இருக்கிற மரியாதையையாவது காப்பாற்றி கொள்ளலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Eppothum Thamizhan said:

எழுத்தில் வறட்சி  தெரிகிறது. படம்வரைவதோடு மட்டும் நிறுத்திகொண்டால் இருக்கிற மரியாதையையாவது காப்பாற்றி கொள்ளலாம்!!

உங்கள் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். 

பிரபாகரனை மட்டுமல்ல ஈழத் தமிழர்களது  போராட்டங்களை  தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துப் போட்டு அரசியல் நடத்தும் தமிழக அரசியல் வேடதாரிகளுக்கு எதிராக எனது குரல்  எப்போதும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kadancha said:

பிரபாகரன் படத்தை பார்த்து இள வட்டம் வாக்கு (எந்த கட்சி என்றாலும்) போடும் என்பது - இளவட்டத்தின் இப்பொது  இருக்கும் தகவல், சிந்தனை  ஆழத்தையும் பரிகாசிப்பது.

நாம் தமிழர் கட்சிக்கு வழமையாக இருந்த சின்னத்தை இம் முறை கொடுக்வில்லை.பதிலுக்கு வேறு சின்னம்.   தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில் தோல்வியடை வைப்பதற்கான சதி இது என்று அந்த கட்சியினர் பிரசாரம் செய்தார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

உங்கள் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். 

பிரபாகரனை மட்டுமல்ல ஈழத் தமிழர்களது  போராட்டங்களை  தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துப் போட்டு அரசியல் நடத்தும் தமிழக அரசியல் வேடதாரிகளுக்கு எதிராக எனது குரல்  எப்போதும் இருக்கும்.

கேட்ட கேள்வி பிரபாகரனை இதற்குள் ஏன் இழுக்கிறீர்கள் என்பது. மற்றும்படி  நீங்கள் எதற்கு, எப்படி, எப்போ  குரல் கொடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நாம் தமிழர் கட்சிக்கு வழமையாக இருந்த சின்னத்தை இம் முறை கொடுக்வில்லை.பதிலுக்கு வேறு சின்னம்.   தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில் தோல்வியடை வைப்பதற்கான சதி இது என்று அந்த கட்சியினர் பிரசாரம் செய்தார்களே.

ஆம். இது பொதுவாக சரி, எந்த தேர்த்லிலும், ஏனெனில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுவது சிறு வாக்கு எல்லைகளுக்கு இடையே (margin).

எனவே, சடுதியாக, அதுவும் தேர்த்தலுக்கு மிக குறுகிய காலத்தில் வரும் மாற்றங்கள், வெற்றி, தோல்வி எல்லையை மாற்றிவிடக்கூடிய  மிக கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது.   

மறுவளமாக, வாக்கு வங்கி அதிகரித்து இருப்பது, சின்னத்தை  மாற்றியும், வாக்களிப்பபவர்கள் ஆக குறைந்தது அவதானித் வாக்களித்து உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

நிஜமாகவே சாதி அரசியல் தாண்டி வருமா தமிழ்நாடு? விசிகவிற்கு வாக்களிக்கும் இளைஞர்கள் என்றாவது நாதகவிற்கு வாக்களிப்பார்களா?

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுடன் வேலை மற்றும் விளையாட்டு என்று பல வருடங்களாக பழகியதில், இதுவரை நாதகவிற்கு வாக்குப் போடும் ஒருவரை கூட நான் கண்டதில்லை. வெகு சிலரைத் தவிர, மற்றயோர் எல்லாம், வயது வேறுபாடின்றி, 'அவர்களின் ஆள் பார்த்தே' வாக்களிக்கின்றனர். பெரிய கட்சிகளும் அதற்கேற்பவே வேட்பாளர்களை நிற்பாட்டுகின்றன. விதிவிலக்கு ஓரிரு நட்சத்திர வேட்பாளர்கள் மட்டுமே.

ஒரு இளைஞன் சிறிது வித்தியாசமாக இருக்கின்றான். இனத் தலைவர், குலத் தலைவர் என்று இரண்டு தலைவர்களை ஆராதிக்கின்றான். இனத் தலைவராக சீமானை வரிந்து உதவிகளும் செய்கின்றான். ஆனால் அவனுடைய மற்றும் அவனின் குடும்ப வாக்குகள் என்றும் குலத் தலைமைக்கே. எப்போதும் அவன் மாம்பழத்திற்கே வாக்குப் போடுவான். சீமானின் வீடியோக்களை அடிக்கடி அனுப்புவான். ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் சமயங்களில், 'இது வேற - அது வேற' என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றான். 

கமலுக்கும் இதே போன்ற ஒரு பிரபலம் தான் இளைஞர்களிடையே இருக்கின்றது.

இதன் பின்னர் சீமான் அவர்கள் இன்னும் பெரிதாக மேலே போவார் என்று எதிர்பார்க்க முடியாது. அரசியலில், தேர்தலில் வரும் மாற்றங்கள் படிப்படியானவை அல்ல, அவை குறுகிய காலத்தில், சில தேர்தல்களிலேயே நாலு கால் பாய்ச்சலில் நடக்கவேண்டும். 

த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் தொகை

த‌மிழீழ‌ ம‌க்க‌ள் தொகை போல‌வா

மிஞ்சி போனால் குறைத‌து 150த‌மிழ் நாட்டு உற‌வுக‌ளுட‌ன் ப‌ழ‌கி இருப்பிங்க‌ளா அண்ணா

இனி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம்

ஜாதி பேதி எல்லாம் மெது மெதுவாய் அழியும்

த‌னி ஒருவ‌னாய் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 14 ஆண்டுக‌ளில் 8ச‌த‌ வீத‌த்தை தாண்டுவ‌து லேசான‌ விடைய‌ம் இல்லை அண்ணா 

சீமானின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் 8 தான்டி இன்னும் கூடி இருக்கும் விவ‌சாயி சின்ன‌த்தில் ந‌ட‌ந்த‌ ச‌தியால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்க‌ வேண்டிய‌ அதிக‌ ஓட்டு கிடைக்காம‌ போன‌து

திருக்கா கூட்ட‌னி இல்லாம‌ ஓட்டுக்கு காசு கொடுக்காம‌ தேர்த‌ல தனிய‌ சந்திச்சா அவ‌ர்களின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் கம்மியாய் தான் தெரியும்

இந்த தேர்த‌லில் திமுக்கா 40/40 வென்றாலும் 7ச‌த‌ வீத‌த்தை இழ‌ந்து விட்டின‌ம் என்று ஆய்வு சொல்லுது

திமுக்கா ஒன்றும் வீழ்த்த‌ முடியாத‌ க‌ட்சி கிடையாது.........................

2026க‌ளில் விஜேய் சீமான் ஒரு ப‌க்காத்தால‌ வெல்ல‌ 

ஆதிமுக்கா இன்னொரு ப‌க்க‌த்தால‌ வெல்ல

திமுக்கா ? 

முந்தி சும்மா பூச்சாண்டி க‌தை விட்ட‌வை திராவிட‌த்தை பிடிக்காத‌வ‌ர்ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் 7  என்று

ம‌த‌த்தை வைச்சு அர‌சிய‌ல் செய்யும் பீஜேப்பி 10 ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்ட‌து

தமிழ் தேசிய‌ம் 8 ச‌த‌வீத‌த்தை தாண்டி விட்ட‌து ஆனால் த‌மிழ் தேசிய‌த்துக்கு இந்த‌ தேர்த‌லில் குறைந்த‌து 2ச‌த‌ வீத‌ம் கூடி இருக்கனும் ஆனால் ப‌ண‌ ப‌ல‌ம் ஊட‌க‌ ப‌லம் புது சின்ன‌ம் இப்ப‌டி ப‌ல‌ கார‌ன‌ங்க‌ளால் கிடைக்காம‌ போய் விட்ட‌து

திராவிட‌ம் அழிவு பாதையை நோக்கி செல்கிற‌து................................

பீஜேப்பி கூட்ட‌னி வைச்சு தான் இவள‌வு ச‌த‌ வீத‌த்தை பெற‌ முடிந்த‌து த‌னித்து நின்று இருந்தால் அவ‌ர்களின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் 7க்கு உள்ள‌ தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

உங்கள் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். 

பிரபாகரனை மட்டுமல்ல ஈழத் தமிழர்களது  போராட்டங்களை  தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துப் போட்டு அரசியல் நடத்தும் தமிழக அரசியல் வேடதாரிகளுக்கு எதிராக எனது குரல்  எப்போதும் இருக்கும்.

அதாகப்பட்டது, 

பிரபாகரனது பெயரைப் பாவித்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு மட்டும்தான் உரிமை உள்ளது.  அதில் யாரும் பங்கு கேட்கக்கூடாது. 

கேட்டால் கெட்ட கோபம் வரும் .....

🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, 

பிரபாகரனது பெயரைப் பாவித்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு மட்டும்தான் உரிமை உள்ளது.  அதில் யாரும் பங்கு கேட்கக்கூடாது. 

கேட்டால் கெட்ட கோபம் வரும் .....

🤣

நன்றி,....உங்களுக்கு தெரிந்தோ  தெரியாமலோ  உண்மையை சொல்லி விட்டீர்கள்,அது  பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம்  செய்கிறார்கள் என்பது  இல்லையென்றால் நடிகர் கமல் நிலமை தான்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உங்களுக்கு அரசியல் செய்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் வித்தியாசம் தெரியவில்லை போலிருக்கிறது. பிரபாகரன் பெயரை சொல்லி உண்டியலை குலுக்கி காசு சேர்ப்பதுதான் வியாபாரம். உங்கே நடப்பதுபோல்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நன்றி,....உங்களுக்கு தெரிந்தோ  தெரியாமலோ  உண்மையை சொல்லி விட்டீர்கள்,அது  பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம்  செய்கிறார்கள் என்பது  இல்லையென்றால் நடிகர் கமல் நிலமை தான்    

வாத்தியார் தனது மாணவனிடம் தான் படிப்பித்தது எல்லாம் புத்தியில் ஏறிவிட்டதோ  என்று கேட்டார். அதற்கு , கூரையின் முகட்டுக்குள்ளால்  ஏறிக்கொண்டிருந்த எலியை பார்த்துக்கொண்டிருந்த மாணவன், ஓம் சேர், எல்லாம் ஏறிட்டுது ஆனால்  வால் மட்டும் ஏறவில்லை என்றானாம். 

சாரி பாஸ், உங்கள் பதிலைப் பார்த்தவுடன் எனக்கு உந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு அரசியல் செய்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் வித்தியாசம் தெரியவில்லை போலிருக்கிறது. பிரபாகரன் பெயரை சொல்லி உண்டியலை குலுக்கி காசு சேர்ப்பதுதான் வியாபாரம். உங்கே நடப்பதுபோல்!!

அப்படியே  ....அப்புறம் நீங்களும்  ஒத்துக் கொண்டு விட்டீர்கள்  பிரபாகரன் பெயரில்  அரசியல் செய்கிறார்கள் என்று  நன்றிகள் பல கோடி  யார் என்பதையும் சொல்லி விடுங்கள்”     ....கமல் நிலமை.  சரியா??   பிரபாகரன் கேட்டபடியால. உண்டியல் குலுகினார்கள்  அது போராட்டதின். ஒரு அங்கம்தான்   

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

வாத்தியார் தனது மாணவனிடம் தான் படிப்பித்தது எல்லாம் புத்தியில் ஏறிவிட்டதோ  என்று கேட்டார். அதற்கு , கூரையின் முகட்டுக்குள்ளால்  ஏறிக்கொண்டிருந்த எலியை பார்த்துக்கொண்டிருந்த மாணவன், ஓம் சேர், எல்லாம் ஏறிட்டுது ஆனால்  வால் மட்டும் ஏறவில்லை என்றானாம். 

சாரி பாஸ், உங்கள் பதிலைப் பார்த்தவுடன் எனக்கு உந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது. 

🤣

அந்த மாணவன் நீங்கதானா??  ஏனெனில் நீங்கள் ஒரு விடயத்தில் முழுமையாக கவனத்துடன் ஈடுபட்டதில்லை 🤣 எனக்கும் உந்த. கதை தெரியும் வாத்தியார் எலியைப் பற்றி தான் படிப்பித்து கொண்டிருந்தவராம் 🤪 எனவேதான் மாணவனின்  பதில் சரியானது   

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

அப்படியே  ....அப்புறம் நீங்களும்  ஒத்துக் கொண்டு விட்டீர்கள்  பிரபாகரன் பெயரில்  அரசியல் செய்கிறார்கள் என்று  நன்றிகள் பல கோடி  யார் என்பதையும் சொல்லி விடுங்கள்”     ....கமல் நிலமை.  சரியா??   பிரபாகரன் கேட்டபடியால. உண்டியல் குலுகினார்கள்  அது போராட்டதின். ஒரு அங்கம்தான்   

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும் உண்டியல் குலுக்கினார்களே! ஞாபகம் இல்லையா!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும் உண்டியல் குலுக்கினார்களே! ஞாபகம் இல்லையா!!

தெரியாது  என்னிடம் எவரும் வரவில்லை   

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

தெரியாது  என்னிடம் எவரும் வரவில்லை   

அப்போ சீமான் கட்சிக்காரர் வந்து பிரபாகரன் படத்தை காட்டி உங்களிடம் காசு கேட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அப்போ சீமான் கட்சிக்காரர் வந்து பிரபாகரன் படத்தை காட்டி உங்களிடம் காசு கேட்டார்களா?

என்னிடம் வர முடியுமா??  இல்லை சீமான்  பெயரை சொல்லி காசு கேட்கத்தான் முடியுமா?? சீமான் கூட்டம் என்னிடம் நெருக்குவது கிடையாது    இது ஒரு. தேவையற்ற கேள்வி என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

அப்படி எனறால்  ஏன் படம் வைக்க வேண்டும்  ?? அவரது  போராட்டம் பற்றி ஏன் கதைக்க வேண்டும்??  தவிர்த்து விடுவது தானே !!!  எனது கருத்துகள் பிழையாகவுமிருக்கலாம்  ஆனால் அது  நிறுவ வேண்டும்   ..செயல்முறையுடன் நிறுவ வேண்டும்    உங்களால் முடியுமா?? 

சீமானுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

நீங்கள் சொல்வதை கூட சீமான் எதிர்பார்ப்பாக கொண்டிருக்கலாம்.

அனால், இளவட்டம் கணை மூடி கொண்டு சீமான் குறித்த ஒருவரின் படத்தை வைப்பதால், அவதானிக்காமல் சிந்திக்காது வாக்களிக்கும் என்பது , இவ்வட்டத்தின் தகவல், சிந்தனை, பொதுவெளிப்பார்வை போன்றவற்றை மிகவும் குறைவாக மதிப்பிடுவது.

சிறு உதாரணம், உங்கள் (நானும் உள்ளடக்கம்) இளவட்ட வயதில், இப்பொது இருக்கும் தகவல், சிந்தனை, உலகத்தில் நடப்பதை கையில் இருக்கும் செல்லிப்பேசியில் கொண்டிருப்பது போன்ற  வெளி இருந்ததா?

இப்போது இளவட்டம் (சந்ததி Z   (90 நடு - 2005 - 2010  காலத்தில் பிறந்தவர்கள்) ) பாவிக்கும் சங்கேத சொற்கள் , சந்ததி  Y  க்கு (80 நடு - 90 நடு காலத்தில் பிறந்தவர்கள்), கூட சிம்மசொப்பனம்.

(இங்கே நிலாமதி / யாயினி  இணைத்து என்று நினைவு, கோப்பாய் ஆசிரிய பயிற்சி  கூடத்தில். தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறுவர் /பதின்ம வயது   உளவியலாளர் ஆற்றிய உரையை பார்க்கவும். ) 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

என்னிடம் வர முடியுமா??  

நீங்க யாரு.. புறாவுக்கே பெல் அடிச்சவர் ஆச்சே..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

சீமானுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

நீங்கள் சொல்வதை கூட சீமான் எதிர்பார்ப்பாக கொண்டிருக்கலாம்.

அனால், இளவட்டம் கணை மூடி கொண்டு சீமான் குறித்த ஒருவரின் படத்தை வைப்பதால், அவதானிக்காமல் சிந்திக்காது வாக்களிக்கும் என்பது , இவ்வட்டத்தின் தகவல், சிந்தனை, பொதுவெளிப்பார்வை போன்றவற்றை மிகவும் குறைவாக மதிப்பிடுவது.

சிறு உதாரணம், உங்கள் (நானும் உள்ளடக்கம்) இளவட்ட வயதில், இப்பொது இருக்கும் தகவல், சிந்தனை, உலகத்தில் நடப்பதை கையில் இருக்கும் செல்லிப்பேசியில் கொண்டிருப்பது போன்ற  வெளி இருந்ததா?

இப்போது இளவட்டம் (சந்ததி Z   (90 நடு - 2005 - 2010  காலத்தில் பிறந்தவர்கள்) ) பாவிக்கும் சங்கேத சொற்கள் , சந்ததி  Y  க்கு (80 நடு - 90 நடு காலத்தில் பிறந்தவர்கள்), கூட சிம்மசொப்பனம்.

(இங்கே நிலாமதி / யாயினி  இணைத்து என்று நினைவு, கோப்பாய் ஆசிரிய பயிற்சி  கூடத்தில். தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறுவர் /பதின்ம வயது   உளவியலாளர் ஆற்றிய உரையை பார்க்கவும். ) 

என்னுடைய கருத்துகள்  பிரபாகரன் பற்றிய தகவல்கள் உபயோகிக்கபடவிடில்.  கமல் போன்றே சீமான் வாக்கு வங்கி இருக்கும் என்பது  நீங்கள் இதை எற்க வேண்டும் என்பதில்லை   சீமானுக்கு இளைஞர்கள் வாக்கு போடக். காரணம் என்ன உண்டு”??? என்று நீங்கள் கருதுகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

என்னுடைய கருத்துகள்  பிரபாகரன் பற்றிய தகவல்கள் உபயோகிக்கபடவிடில்.  கமல் போன்றே சீமான் வாக்கு வங்கி இருக்கும் என்பது  நீங்கள் இதை எற்க வேண்டும் என்பதில்லை   சீமானுக்கு இளைஞர்கள் வாக்கு போடக். காரணம் என்ன உண்டு”??? என்று நீங்கள் கருதுகிறீர்கள்

அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

அனால் , பொதுவாக, சந்ததி மாற்றம். வேறு குறிப்பிட்ட கங்களும் இருக்கலாம்.

உங்களுடையது கருத்து.

அனால், நான்  சொல்லும் இளவட்டம் எப்படி வாக்களிப்பை அணுகும் என்பது யதார்த்தம்.

சீமானின் அரசியல் செயற்பாட்டுடன், கமலை எவ்வாறு ஒப்பிடுவது, இருவரும் ஏறத்தாழ  ஒரே கொள்கைகள்  வைத்து இருக்கிறார்கள் என்ற எடுகோள் வைத்தாலும்.

மாறாக, கமல் பிரபாகரன் விடயத்தை கையில் எடுத்தாலும் (அப்படி எடுப்பதற்கு ஓர் மரபு தேவை, சீமானிடம் மட்டுமே அது உள்ளது என்பது வேறு விடயம்) , சீமான் போல வாக்கு வராது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

ஒகே நன்றி வணக்கம் 2026 இல் சந்திப்போம்  🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அதாகப்பட்டது, 

பிரபாகரனது பெயரைப் பாவித்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு மட்டும்தான் உரிமை உள்ளது.  அதில் யாரும் பங்கு கேட்கக்கூடாது. 

கேட்டால் கெட்ட கோபம் வரும் .....

ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள்,  பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன்றும் அதன் வடுக்கள் தீரவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான்.

அதை வியாபாரம் ஆக்கினால், கோவம் வருவது நியாயம்தானே? பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்பதாகட்டும் அல்லது நீங்கள் கூறும் உண்டியல் குலுக்கலாகட்டும் இவையாவும் மகிழ்ச்சிகளையா கொட்டிக் கொடுக்கின்றன.  இந்த வரிசையில் மேடைக்கு மேடை பிரபாகரன் படத்தைப் போட்டும், புலிக் கொடி பிடித்தும்  சீமான்  செய்வது அரசியல் வியாபாரமாக உங்களுக்குத் தெரியவில்லையா?

“பிரபாகரன்தான் எனது தலைவன்என்று சீமான் சொல்வதில் எவருமே கருத்துக்களை வைக்க முடியாது. அது சீமானின் தனிப்பட்ட விடயம். ஆனால் பிரபாகரன் படங்களை பெரிதாக மாட்டி, புலிக்கொடி பிடித்து  மேடையில் முழங்குவதன் உள்நோக்கம் புரியவில்லையா? பிரபாகரன்தான் என் தலைவன் என்று சொன்னால் போதாதா? ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் படம் வைத்து   புலிக்கொடி ஏற்றினால்தான் அவரது தம்பி, தங்கைகள்சீமானின் தலைவர் பிரபாகரன்எனப் புரிந்து கொள்வார்களா? சீமான் போன்றவர்கள் இளம் வயதினரை உருவேற்றுவார்கள். அவர்களில் சிலர் தீக்குளிப்பார்கள். தலைவர்கள் போய் அஞ்சலி செய்துவிட்டு வருவார்கள். இப்படியானவர்களின் அரசியல் வியாபாரம் அறியவில்லையா?

எங்களது ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அடுத்தது என்ன என்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக எங்களுக்குத் தெரியவில்லை. இவர் ஒருத்தர் இடையில் புகுந்துநாம் தமிழர்என்று புலிக்கொடி பிடித்துக் கொண்டுஅவர் பிழை இவர் பிழைஎன மேடைக்கு மேடை  ஊழையிட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாவீரர்களுக்குப்  போர்த்தி வீரவணக்கம் செலுத்திய புலிக்கொடி இன்று சீமானின் கைகளில் இருக்கும் போது  அவமானமாகத் தெரியவில்லையா?

கடல் ஆமையைப் பிடிப்பதும், கொல்வதும், அதன் இறைச்சியை சந்தைப்படுத்துவதும் இலங்கையில் சட்டப்படி ஒரு குற்றச் செயல். ஆனால் சீமானோ தனக்கு பிரபாகரன் ஆமை இறைச்சி படைத்து  விருந்து தந்தார் என்கிறார்.  ஒரு காட்சியையே சினிமாபோல் கற்பனையில் உருவாக்கி மேடைகளில் பிரபாகரனையே  இழிவு படுத்தினார் என்பது  ஏனோ சீமானின் தம்பி தங்கைகளுக்குப் புரியவில்லை

சீமான் தனது கட்சிக் கொள்கைகளைச் சொல்லட்டும். தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்கட்டும். திராவிடக் கட்சிகளை விமர்சிக்கட்டும்.  இதிலெல்லாம் தலையிட நான் வருவதில்லை. ஏனென்றால் அது  அவர்களது தமிழ்நாட்டு அரசியல்.

முதலமைச்சர் ஆனாலும் கூட, ஈழத் தமிழர்களுக்காக சீமான் ஏதும் செய்யப் போவதில்லை.  இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kavi arunasalam said:

பிரபாகரன் தலைவன் என்று சொல்லலாம் ஆனால் அவர் படங்களை வைக்ககூடாது..

ஈழவிடுதலைப்போராட்டம் வடுக்களை சுமந்ததால் யாரும் அதை எடுத்து பேசகுடாது..

ஒன்றுக்கொன்று முரணான ஒரு தெளிவில்லாத கருத்துக்கள்..

விடுதலைப்போராளி சேகுவாரா படாத துயரம் இல்லை போராடாத போராட்டம் இல்லை அதற்காக யாரும் சேகுவாராவை பேசாமல் இருந்ததில்லை படத்தை கூட்டங்களில் வைக்காமல் இருந்ததில்லை.. அடையாளங்களை சுமக்காத அரசியல்வாதிகள் இல்லை..

காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், மாவோ, பெரியார் என்று எல்லோருமே போராடியவர்கள்தான்.. எல்லோர் போராட்டமும் எம்மைபோலவே துயரங்களையும் இழப்புகளையும் உள்ளடக்கியதுதான்.. ஆனாலும் இன்று உலகமெல்லாம் அவர்களை விரும்புவர்களுக்கு அவர்கள்  அடையாளமே…  வழிகாட்டிகளே.. அவர்கள் படங்களை சின்னங்களை யார் யாரோ உலகின் ஏதோ மூலையில் ஏதோ ஒரு மொழிபேசுபவர்களும் காவுகிறார்கள்.. 

பிரபாகரனும் அவர் போராட்டமும் புலிகளின் சின்னங்களும் ஆயிரம் நூற்றாண்டுகள் ஆனாலும் அவரை விரும்புவர்களுக்கு அடையாளமே.. அவற்றை அவர்கள் காவத்தான் போகிறார்கள்..

காகங்கள் திட்டி மாடுகள் சாவதில்லை…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kavi arunasalam said:

ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள்,  பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன்றும் அதன் வடுக்கள் தீரவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான்.

அதை வியாபாரம் ஆக்கினால், கோவம் வருவது நியாயம்தானே? பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்பதாகட்டும் அல்லது நீங்கள் கூறும் உண்டியல் குலுக்கலாகட்டும் இவையாவும் மகிழ்ச்சிகளையா கொட்டிக் கொடுக்கின்றன.  இந்த வரிசையில் மேடைக்கு மேடை பிரபாகரன் படத்தைப் போட்டும், புலிக் கொடி பிடித்தும்  சீமான்  செய்வது அரசியல் வியாபாரமாக உங்களுக்குத் தெரியவில்லையா?

“பிரபாகரன்தான் எனது தலைவன்என்று சீமான் சொல்வதில் எவருமே கருத்துக்களை வைக்க முடியாது. அது சீமானின் தனிப்பட்ட விடயம். ஆனால் பிரபாகரன் படங்களை பெரிதாக மாட்டி, புலிக்கொடி பிடித்து  மேடையில் முழங்குவதன் உள்நோக்கம் புரியவில்லையா? பிரபாகரன்தான் என் தலைவன் என்று சொன்னால் போதாதா? ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் படம் வைத்து   புலிக்கொடி ஏற்றினால்தான் அவரது தம்பி, தங்கைகள்சீமானின் தலைவர் பிரபாகரன்எனப் புரிந்து கொள்வார்களா? சீமான் போன்றவர்கள் இளம் வயதினரை உருவேற்றுவார்கள். அவர்களில் சிலர் தீக்குளிப்பார்கள். தலைவர்கள் போய் அஞ்சலி செய்துவிட்டு வருவார்கள். இப்படியானவர்களின் அரசியல் வியாபாரம் அறியவில்லையா?

எங்களது ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அடுத்தது என்ன என்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக எங்களுக்குத் தெரியவில்லை. இவர் ஒருத்தர் இடையில் புகுந்துநாம் தமிழர்என்று புலிக்கொடி பிடித்துக் கொண்டுஅவர் பிழை இவர் பிழைஎன மேடைக்கு மேடை  ஊழையிட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாவீரர்களுக்குப்  போர்த்தி வீரவணக்கம் செலுத்திய புலிக்கொடி இன்று சீமானின் கைகளில் இருக்கும் போது  அவமானமாகத் தெரியவில்லையா?

கடல் ஆமையைப் பிடிப்பதும், கொல்வதும், அதன் இறைச்சியை சந்தைப்படுத்துவதும் இலங்கையில் சட்டப்படி ஒரு குற்றச் செயல். ஆனால் சீமானோ தனக்கு பிரபாகரன் ஆமை இறைச்சி படைத்து  விருந்து தந்தார் என்கிறார்.  ஒரு காட்சியையே சினிமாபோல் கற்பனையில் உருவாக்கி மேடைகளில் பிரபாகரனையே  இழிவு படுத்தினார் என்பது  ஏனோ சீமானின் தம்பி தங்கைகளுக்குப் புரியவில்லை

சீமான் தனது கட்சிக் கொள்கைகளைச் சொல்லட்டும். தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்கட்டும். திராவிடக் கட்சிகளை விமர்சிக்கட்டும்.  இதிலெல்லாம் தலையிட நான் வருவதில்லை. ஏனென்றால் அது  அவர்களது தமிழ்நாட்டு அரசியல்.

முதலமைச்சர் ஆனாலும் கூட, ஈழத் தமிழர்களுக்காக சீமான் ஏதும் செய்யப் போவதில்லை.  இதுதான் உண்மை.

சிறப்பான கருத்துக்கள். விருப்பு அடையாளம் முடிந்துவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kavi arunasalam said:

முதலமைச்சர் ஆனாலும் கூட, ஈழத் தமிழர்களுக்காக சீமான் ஏதும் செய்யப் போவதில்லை.  இதுதான் உண்மை.

நிச்சயமாக 100% உண்மை    உங்கள் கருத்துகளும் சிறப்புமிக்கது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.