Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், மாவோ, பெரியார் என்று எல்லோரும் அடையாளமே… வழிகாட்டிகளே.. 

அப்படியென்றால் ஏன் இவர்களுடைய படம்கள் வைக்கப்படவில்லை?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒருவரின் படம் வைக்க வேண்டிய தேவை என்ன?? 

சீமான் போராடி இந்தியாவில் புலிகளின். தடைகளை அகற்றுமாறு செய்ய முடியுமா???   அல்லது எப்போது ஆவது புலிகளின். தடைகளை நீங்குமாறு போராடினாரா?   இல்லை என்றால் ஏன??? 

  • Replies 64
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள்,  பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    முன்னரே சீமான் சொல்லும் போது  எனக்கான வாக்கு இப்ப பாடசாலைகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள். அது இப்போ தான் வெளிய வருது. பெற்றோர் சொல்லி பிள்ளைகள் திராவிடத்துக்கு வாக்கு போட்டார்கள்.

  • Eppothum Thamizhan
    Eppothum Thamizhan

    இதில் பிரபாகரனை என் இழுக்கிறீர்கள். இரட்டை இலை MGR உடையது. ஆனால் மைக் சின்னம்? எழுத்தில் வறட்சி  தெரிகிறது. படம்வரைவதோடு மட்டும் நிறுத்திகொண்டால் இருக்கிற மரியாதையையாவது காப்பாற்றி கொள்ளலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால் ஏன் இவர்களுடைய படம்கள் வைக்கப்படவில்லை?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒருவரின் படம் வைக்க வேண்டிய தேவை என்ன?? 

சீமான் போராடி இந்தியாவில் புலிகளின். தடைகளை அகற்றுமாறு செய்ய முடியுமா???   அல்லது எப்போது ஆவது புலிகளின். தடைகளை நீங்குமாறு போராடினாரா?   இல்லை என்றால் ஏன??? 

தொடர்ந்து அவதானித்ததில் உங்களின் சிலகருத்துகளுக்கு பதில் சொல்வதும், பதில் சொல்லுபவர்கள் தாங்களே தங்கள் சட்டையை கிழித்துவிட்டு பைத்தியம் என்று சொல்வதும் ஒன்றுதான் என்ற சங்கடமான நிலமையை உருவாக்குகிறது ஜயா..🥲🥲🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தொடர்ந்து அவதானித்ததில் உங்களின் சிலகருத்துகளுக்கு பதில் சொல்வதும், பதில் சொல்லுபவர்கள் தாங்களே தங்கள் சட்டையை கிழித்துவிட்டு பைத்தியம் என்று சொல்வதும் ஒன்றுதான் என்ற சங்கடமான நிலமையை உருவாக்குகிறது ஜயா..🥲🥲🙏

கேள்விகளுக்கு பதில் இல்லையா??  கவலை இல்லை     எனது கருத்துகள் பிழை என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கள்    எற்றுக் கொள்ள முடியும்   நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில், டாஸ்மார்க், கஞ்சா, குட்கா, பெண் தொடர்பு, இப்படி தவறான வழிகளில் போன பலர், ஒரு 25-30 வயதுக்குள் யதார்த்தம் புரிந்து நல்வழிக்கு வருவது சகஜம்தான்.

அதே போல் சீமான் மகுடிக்கு மசியும் ஒரு batch தெளிய, இன்னொரு பேட்ச் உள்ளே வரும்🤣.

சீமான் அணியில் இருந்த ரஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், இன்னும் பல முன்னாள் இளைஞர்களுக்கு சீமானின் டகால்டி வேலை பிடிபட்டதும் அவர்கள் வெளியேற அவர்கள் இடத்தை இடும்பாவனம் போன்றோர் பிடித்தனர்.

அடுத்து இவர்கள் போக இன்னொரு குரூப் வரும்.

விஜை தயவு வைத்து கூட்டணி வைத்தால் மட்டும் நாதகவில் உள்ள ஏனையோர் தேறலாம். அல்லது சீமானின் பெட்டி மட்டுமே நிறையும். ஏனையோர் டெபாசிட் இழந்து ஒட்டாண்டி ஆக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

இனி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம்

ஜாதி பேதி எல்லாம் மெது மெதுவாய் அழியும்

நீங்கள் சொல்வது போலவே ஜாதி பேதம் அழிந்தால் அது இன்னொரு புதுயுகமாகவே இருக்கும். ஆனால் உண்மையில் நிலைமை தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டல்லவா போகின்றது. அவர்களின் மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளை பார்த்திருப்பீர்கள் தானே, ஒவ்வொருவருக்கும் ஒன்றல்லவா இருக்கின்றது. அதில் பெருமை வேறு கொள்கின்றார்கள். 

இந்தப் பாடலும், வள்ளிக் கும்மியும் சமீபத்தில் பெரிய எடுப்பில் கொங்கு மண்டலம் எங்கும் கொண்டாடப்பட்டது:

 "சத்தியம் சத்தியமே,
 சின்னமலை சத்தியமே!
 கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே!
 இது போதும், இது போதுமே,
 எனக்கு வேறு ஏதும் வேண்டாம், அம்மா!"

ஒவ்வொரு ஊர்களிலும் ஆயிரக்கணக்கான அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் பங்கு பற்றியிருந்தார்கள். உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நாங்கள் இங்கே கதைக்கும் தேசியம் இவர்களிடம் என்று போய் சேரும்? ஓரிரு மிகப் பெரிய நகரங்களை விட, மற்ற இடங்கள் எல்லாமே ஏதோ ஒரு 'பெல்ட்' என்று தானே இன்றுவரை அடையாளப்படுத்தப்படுகின்றது.    

பாமக அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே 'ஏமாற்றுக் காதல்' பற்றி சொல்லியிருந்தனரே. திருமண வயதை 21 ஆக கூட்டுவோம் என்றது அது. அது தெட்டத் தெளிவாக பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை தானே. ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியும்.

இது எங்கே மாறுது. எங்கேயும், எதுவும் மாறவில்லையே. 

நாதகவும் இதில் எதையும் மாற்றவில்லையே. மாற்ற முயலவும் இல்லையே. 

நீட் சோதனையால் அனித்தா முதலாவதாக இறந்த பின், நாதக போராட்டத்திற்கு போகவில்லையே. விசிகவும், கம்யூனிஸ்டுகளும் தானே முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். காரணம் என்னவென்று ரஞ்சித் ஒரு தடவை சொல்லியும் இருக்கின்றார். 

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் முதலில் முன்னுக்கு நின்றது வைகோ. நாதக அங்கே ஆரம்பத்தில் போகவில்லை.  

இன்றும் இதுவே தான் நிலைமை. தொல்.திருமாவும், சீமானும், ரஞ்சித்தும் ஒரே மேடையில், ஒரே போராட்டத்தில் அமர்வார்களா, இல்லை தானே. எல்லோரையும் உள்வாங்காமல் அதை எப்படி உண்மையான தேசியம் என்று நாங்கள் சொல்ல முடியும்?

எங்களிற்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் எங்கள் எல்லோரையும் உள்வாங்கி இருந்தார். அதனால் தானே அவரை தேசிய தலைவர் என்று நாங்கள் சொன்னோம். 

சமீப காலங்களில் தமிழக அரசியலில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் என்றால் அது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரே. விஜய்காந்திற்கும் எந்த அடையாளமும் இருக்கவில்லை. நாதகவோ, சீமான் அவர்களோ இந்த வரிசையில் இல்லை. அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முன்னரை விட அதிக வாக்குகளை அவர் பெறுவார் என்பது வெறும் ஊகம் என்பது என் அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

சீமான் அணியில் இருந்த ரஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், இன்னும் பல முன்னாள் இளைஞர்களுக்கு சீமானின் டகால்டி வேலை பிடிபட்டதும் அவர்கள் வெளியேற அவர்கள் இடத்தை இடும்பாவனம் போன்றோர் பிடித்தனர்.

கல்யாண சுந்தரம் நாம்தமிழர் கட்சியிலிருந்து வெளியேறினாலும் இன்றுவரை அந்த கட்சியின் நிலைப்பாடுகளையும்,கொள்கைகளையும் குறைத்து பேசவில்லை.மாறாக அண்ணன் சீமான் என கருத்துக்களை கூறிவருகின்றார். ராஜீவ் அவர்கள் தான் கலைஞர் கருணாநிதியை எவ்வளவிற்கு வழிச்சு ஊத்த முடியுமோ அவ்வளவிற்கு வழிச்சு ஊத்தினார். ஆதற்கேற்ப அவர் தாவிய கட்சியும் வைச்சு செய்கின்றார்கள்.

6 minutes ago, ரசோதரன் said:

எங்களிற்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் எங்கள் எல்லோரையும் உள்வாங்கி இருந்தார். அதனால் தானே அவரை தேசிய தலைவர் என்று நாங்கள் சொன்னோம். 

பொய் சொல்லப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பொய் சொல்லப்படாது.

உண்மையிலேயே கேட்கின்றேன். அவர் எவரையாவது ஏதாவது ஒரு வகையில் தகாதவர்கள் என்று தள்ளி வைத்தாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ரசோதரன் said:

உண்மையிலேயே கேட்கின்றேன். அவர் எவரையாவது ஏதாவது ஒரு வகையில் தகாதவர்கள் என்று தள்ளி வைத்தாரா?

 

4 minutes ago, ரசோதரன் said:

உண்மையிலேயே கேட்கின்றேன். அவர் எவரையாவது ஏதாவது ஒரு வகையில் தகாதவர்கள் என்று தள்ளி வைத்தாரா?

இல்லை.அறவே இல்லை. 

அவருக்கும் சத்திய சோதனையாக பல மாற்றுக்கருத்தாளர்கள் இருந்தார்கள்.
நான் சொல்ல வருவது என்னவெனில் எல்லோராலும் உள்வாங்கப்படும் தலைவர்கள் உலகில் இல்லவே இல்லை என.....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள்,  பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன்றும் அதன் வடுக்கள் தீரவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான்.

அதை வியாபாரம் ஆக்கினால், கோவம் வருவது நியாயம்தானே? பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்பதாகட்டும் அல்லது நீங்கள் கூறும் உண்டியல் குலுக்கலாகட்டும் இவையாவும் மகிழ்ச்சிகளையா கொட்டிக் கொடுக்கின்றன.  இந்த வரிசையில் மேடைக்கு மேடை பிரபாகரன் படத்தைப் போட்டும், புலிக் கொடி பிடித்தும்  சீமான்  செய்வது அரசியல் வியாபாரமாக உங்களுக்குத் தெரியவில்லையா?

“பிரபாகரன்தான் எனது தலைவன்என்று சீமான் சொல்வதில் எவருமே கருத்துக்களை வைக்க முடியாது. அது சீமானின் தனிப்பட்ட விடயம். ஆனால் பிரபாகரன் படங்களை பெரிதாக மாட்டி, புலிக்கொடி பிடித்து  மேடையில் முழங்குவதன் உள்நோக்கம் புரியவில்லையா? பிரபாகரன்தான் என் தலைவன் என்று சொன்னால் போதாதா? ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் படம் வைத்து   புலிக்கொடி ஏற்றினால்தான் அவரது தம்பி, தங்கைகள்சீமானின் தலைவர் பிரபாகரன்எனப் புரிந்து கொள்வார்களா? சீமான் போன்றவர்கள் இளம் வயதினரை உருவேற்றுவார்கள். அவர்களில் சிலர் தீக்குளிப்பார்கள். தலைவர்கள் போய் அஞ்சலி செய்துவிட்டு வருவார்கள். இப்படியானவர்களின் அரசியல் வியாபாரம் அறியவில்லையா?

எங்களது ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அடுத்தது என்ன என்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக எங்களுக்குத் தெரியவில்லை. இவர் ஒருத்தர் இடையில் புகுந்துநாம் தமிழர்என்று புலிக்கொடி பிடித்துக் கொண்டுஅவர் பிழை இவர் பிழைஎன மேடைக்கு மேடை  ஊழையிட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாவீரர்களுக்குப்  போர்த்தி வீரவணக்கம் செலுத்திய புலிக்கொடி இன்று சீமானின் கைகளில் இருக்கும் போது  அவமானமாகத் தெரியவில்லையா?

கடல் ஆமையைப் பிடிப்பதும், கொல்வதும், அதன் இறைச்சியை சந்தைப்படுத்துவதும் இலங்கையில் சட்டப்படி ஒரு குற்றச் செயல். ஆனால் சீமானோ தனக்கு பிரபாகரன் ஆமை இறைச்சி படைத்து  விருந்து தந்தார் என்கிறார்.  ஒரு காட்சியையே சினிமாபோல் கற்பனையில் உருவாக்கி மேடைகளில் பிரபாகரனையே  இழிவு படுத்தினார் என்பது  ஏனோ சீமானின் தம்பி தங்கைகளுக்குப் புரியவில்லை

சீமான் தனது கட்சிக் கொள்கைகளைச் சொல்லட்டும். தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்கட்டும். திராவிடக் கட்சிகளை விமர்சிக்கட்டும்.  இதிலெல்லாம் தலையிட நான் வருவதில்லை. ஏனென்றால் அது  அவர்களது தமிழ்நாட்டு அரசியல்.

முதலமைச்சர் ஆனாலும் கூட, ஈழத் தமிழர்களுக்காக சீமான் ஏதும் செய்யப் போவதில்லை.  இதுதான் உண்மை.

 

 

சீமான், பிரபாகரனை தனது அரசியல்  நோக்கங்களுக்காகப் பாவிக்கிறார் என்பதுதான் உங்கள் உண்மையான பிரச்சனையா? 

உந்தக் கதைகளை வேறு எங்காவது அவிழ்த்து விடுங்கள். உதை நம்புவதற்கு "ஞானப்" பழம் தின்று கொட்டை போட்ட பலர்   இருக்கிறார்கள். 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அணியில் இருந்த ரஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், இன்னும் பல முன்னாள் இளைஞர்களுக்கு சீமானின் டகால்டி வேலை பிடிபட்டதும் அவர்கள் வெளியேறி,......

சீமான் சாக்கடையென்றால் , சீமானின் அணியில் இருந்து வெளியேறியோர்  இப்போது சந்தணத்திலா புரள்கிறார்கள்?!  

🤣🤣

(பின்குறிப்பு:

இந்திய அரசியலில் நாம் தலையிடக்கூடாது என்று பிறருக்கு  மகுடி வாசிப்பவர்கள்தான் தமிழ்நாட்டு அரசியலில் நாம் தமிழர் கட்சியினரை வாரியிறைப்பவர்கள். 

தங்கள் சொல்லுக்கு தாங்களே நேர்மையில்லாத மனிதர்கள் பிறருக்கு  புத்தி சொல்ல வருவது சிரிப்பை வரவழைக்கிறது)

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

என்னிடம் வர முடியுமா??  இல்லை சீமான்  பெயரை சொல்லி காசு கேட்கத்தான் முடியுமா?? சீமான் கூட்டம் என்னிடம் நெருக்குவது கிடையாது    இது ஒரு. தேவையற்ற கேள்வி என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் 

பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்று சொன்னது நீங்கள்தானே??

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பிரபாகரன் தலைவன் என்று சொல்லலாம் ஆனால் அவர் படங்களை வைக்ககூடாது..

ஈழவிடுதலைப்போராட்டம் வடுக்களை சுமந்ததால் யாரும் அதை எடுத்து பேசகுடாது..

ஒன்றுக்கொன்று முரணான ஒரு தெளிவில்லாத கருத்துக்கள்..

 

விடுதலைப்போராளி சேகுவாரா படாத துயரம் இல்லை போராடாத போராட்டம் இல்லை அதற்காக யாரும் சேகுவாராவை பேசாமல் இருந்ததில்லை படத்தை கூட்டங்களில் வைக்காமல் இருந்ததில்லை.. அடையாளங்களை சுமக்காத அரசியல்வாதிகள் இல்லை..

காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், மாவோ, பெரியார் என்று எல்லோருமே போராடியவர்கள்தான்.. எல்லோர் போராட்டமும் எம்மைபோலவே துயரங்களையும் இழப்புகளையும் உள்ளடக்கியதுதான்.. ஆனாலும் இன்று உலகமெல்லாம் அவர்களை விரும்புவர்களுக்கு அவர்கள்  அடையாளமே…  வழிகாட்டிகளே.. அவர்கள் படங்களை சின்னங்களை யார் யாரோ உலகின் ஏதோ மூலையில் ஏதோ ஒரு மொழிபேசுபவர்களும் காவுகிறார்கள்.. 

பிரபாகரனும் அவர் போராட்டமும் புலிகளின் சின்னங்களும் ஆயிரம் நூற்றாண்டுகள் ஆனாலும் அவரை விரும்புவர்களுக்கு அடையாளமே.. அவற்றை அவர்கள் காவத்தான் போகிறார்கள்..

காகங்கள் திட்டி மாடுகள் சாவதில்லை…

நன்றாகச்சொன்னீர்கள். இத்துடன் சேர்த்து புலிக்கொடி சோழர்களின் கொடி என்பதும் தெரியவேண்டும். எதை சொன்னாலும் சிலருக்கு அது எருமைமாட்டில் மழைபெய்வது போலத்தான். எமக்குத்தான் நேர விரயம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றாகச்சொன்னீர்கள். இத்துடன் சேர்த்து புலிக்கொடி சோழர்களின் கொடி என்பதும் தெரியவேண்டும். எதை சொன்னாலும் சிலருக்கு அது எருமைமாட்டில் மழைபெய்வது போலத்தான். எமக்குத்தான் நேர விரயம்.

மர மண்டைகள். அப்படி தான் இருக்கும் 🤣

20 minutes ago, Eppothum Thamizhan said:

பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்று சொன்னது நீங்கள்தானே??

தமிழர்கள்  .....இலங்கை வாழ் தமிழர்கள்   ....மர மண்டைகள். சொன்னது இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

மர மண்டைகள். அப்படி தான் இருக்கும் 🤣

தமிழர்கள்  .....இலங்கை வாழ் தமிழர்கள்   ....மர மண்டைகள். சொன்னது இல்லை 

ஏன்  இங்கு கருத்து எழுதும் மற்றவர்களெல்லாம் வேறுநாட்டவர்களோ?

9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தொடர்ந்து அவதானித்ததில் உங்களின் சிலகருத்துகளுக்கு பதில் சொல்வதும், பதில் சொல்லுபவர்கள் தாங்களே தங்கள் சட்டையை கிழித்துவிட்டு பைத்தியம் என்று சொல்வதும் ஒன்றுதான் என்ற சங்கடமான நிலமையை உருவாக்குகிறது ஜயா..🥲🥲🙏

அவர் சொன்னதை அடிக்கடி சரிதானென நிரூபிக்கிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன்  இங்கு கருத்து எழுதும் மற்றவர்களெல்லாம் வேறுநாட்டவர்களோ?

அவர் சொன்னதை அடிக்கடி சரிதானென நிரூபிக்கிறீர்கள்!

இலங்கை வாழ். தமிழர்கள்    புலம்பெயர் தமிழர்கள் இரண்டுமே வெவ்வேறு 

அவருக்கு உரிய பிரச்சனை இலங்கையிடம் தீர்வு இருந்தது என்று நிருபிக்க. முடியவில்லை   பதில் தர முடியவில்லை 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.