Jump to content

யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 03:50 PM
image
 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185925

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவருக்கு என்ன மன அழுத்தமோ. ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான முடிவு எடுத்த வைத்தியருக்கு அஞ்சலிகளோ அனுதாபங்களோ சொல்வதும் தவறானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மனுசர் தானே ஐயா. முதலில் மனுசர் அதன் பின்பே மருத்துவர். நீங்கள் படித்து ஒரு மருத்துராக பணியாற்றினால் அதன்பிறகும் மனுசர் தானே. 

இன்னோர் வலைத்தள செய்தியின் பிரகாரம் காதல் திருமணம் சம்மந்தமான நிச்சயமற்ற தன்மையே/குழப்பமே அவர் வாழ்வை முடித்துக்கொள்ள காரணம் என சொல்லப்படுகின்றது. உண்மை பொய் தெரியாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒரு வைத்தியருக்கு அவர்படிக்கும் காலத்தில் உளவியல் சம்பந்தமாக நிறையப் படித்திருப்பார். ஆழ்ந்த இரங்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மருத்துவர் என்றால் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து எத்தனை பெண்கள் வரிசையில் நிற்பார்கள். எத்தனை பெற்றோர் தமது பிள்ளையை கட்டிக்கொடுக்க வரிசையில் நிற்பார்கள்.

ஆனால், இந்த தம்பி தான் கண்டபெண்ணை மட்டுமே உலகம் என நினைத்து வாழ்ந்துவிட்டாரோ என்னமோ.

ஒரு மனுசனுக்கு மருத்துவ கல்வி புகட்டும் பாடத்தை விட இந்த இலக்கியம், சினிமா, கவிதை, பாடல், ஜோடி, சமூகம் காதல் பற்றி உசுப்பேத்திவிடும் கனம் அதிகம்.

இங்கு இந்த தம்பி விடயத்தில் மருத்துவ கல்வி தோற்றுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தமான செய்தி. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். 

அந்த வைத்தியசாலையில் இருக்கும் வைத்தியர் பற்றாக்குறை பற்றியும், அதிக வேலைப் பளு பற்றியும் சமீபத்தில் ஊரிலிருந்து வந்த பின்னர் எழுதியிருந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் எழுதலாம் ஆனால் இறந்தவருக்கு அதுதான் தீர்வாகி உள்ளது. அவரால் பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.. ஒருவருக்கும் அவரது பிரச்சனையோ அல்லது அவரது விருப்பங்களோ தெரியவில்லை. 

எல்லாவற்றையும் வெளிப்படையாக கதைத்து தீர்வுகளை எடுக்கும் நிலை எங்களது சமூகத்தில் இல்லை. மற்றவர்கள் என்ன கூறுவார்களோ என்ற நிலையில்தான்/பயத்தில்தான் அனேகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மன வருத்தம்,மனநோய்,அது சம்பந்தமான நோய்களுக்கும் நாம் நாடுவது வைத்தியர்களைத்தான்..... இதர மனிதற்கு 
மருத்துவ ஆலோசனையும் மன நிம்மதி வழங்கங்கூடியவர்களும் அவர்கள்தான்....அவர்களே குறுக்கு வழியை தேடினால் அவர்கள் படித்த படிப்பு என்ன என்பதே கேள்வி.

****

Edited by இணையவன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து  உறவுகளுக்கும்  எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும்.

On 14/6/2024 at 09:29, குமாரசாமி said:

மன வருத்தம்,மனநோய்,அது சம்பந்தமான நோய்களுக்கும் நாம் நாடுவது வைத்தியர்களைத்தான்..... இதர மனிதற்கு 
மருத்துவ ஆலோசனையும் மன நிம்மதி வழங்கங்கூடியவர்களும் அவர்கள்தான்....அவர்களே குறுக்கு வழியை தேடினால் அவர்கள் படித்த படிப்பு என்ன என்பதே கேள்வி.

****

ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ  கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே  போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2024 at 19:09, P.S.பிரபா said:

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் எழுதலாம் ஆனால் இறந்தவருக்கு அதுதான் தீர்வாகி உள்ளது. அவரால் பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.. ஒருவருக்கும் அவரது பிரச்சனையோ அல்லது அவரது விருப்பங்களோ தெரியவில்லை. 

எல்லாவற்றையும் வெளிப்படையாக கதைத்து தீர்வுகளை எடுக்கும் நிலை எங்களது சமூகத்தில் இல்லை. மற்றவர்கள் என்ன கூறுவார்களோ என்ற நிலையில்தான்/பயத்தில்தான் அனேகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

 

 

நான் அறிந்து கொண்டவரையில் அவரது அம்மாவின் பிடிவாதமும் காதலியின் பிடிவாதமுமே அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது..தாயார் இன்னும் வயது இருக்கிறது 3, 4 ஆண்டுகள் பின்னர் பார்க்கலாம் என்றும், காதலி இல்லை தாமதிக்க வேண்டியதில்லை என்ற இரு பக்க அழுத்தங்களுமே அந்த வைத்தியரை தவறான வழிக்கு கொண்டு போய் இருக்கிறது;.பாவம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.🙏
 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து  உறவுகளுக்கும்  எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும்.

ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ  கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே  போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?

டொக்டர்,எஞ்சினியர் கலாச்சாரம் உள்ள நாட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது.
மத செறிவூட்டல் போல் இலங்கை இந்திய நாடுகளில் உள்ள பிள்ளைகளை டொக்டர் இஞ்சினியர் என்ற மடப்பள்ளி சிந்தனை ஊட்டல்களை தூக்கியெறிய வேண்டும்.

பிள்ளைகளை சுய சிந்தினையில் வளர்க்காமல் நீ டொக்டருக்கு படி...நீ எஞ்சியருக்கு படி என்ற மூளைச்சலவைகளால் நாடும் முன்னேறவில்லை. மக்களும் முன்னேறவில்லை.

மாறாக அறப்படித்தவர்களே தற்கொலை உதாரணங்களாக மாறிவிட்டார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் :  வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா -  யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர்.  அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு  ஐம்பது வாகன‌ங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த  ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார்.  29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார்.  அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன.   தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல்  இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள்  தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து,  1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள்  முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன :  கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அள‌ம்பில்.
    • நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். "இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார்.   பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள். காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர். "தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார். கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார். பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார். "அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார். கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன. மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன. பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார். "ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார். "ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c4nnq1glz9no
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.