Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா  பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ்  வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட்

2010 உல‌க‌ கோப்பையில்

அக‌ன்ரீன‌ அணிய‌ 4-0 என‌ வென்ற‌வை

 

அப்பேக்க‌ ப‌ய‌ங்க‌ர‌ துடியாட்ட‌மாய் விளையாடின‌வை..................2014 உல‌க‌ கோப்பையிலும் அதே துடியாட்ட‌ விளையாட்டு தொட‌ர்ந்த‌து.......................அந்த‌ உல‌க‌ கோப்பை வென்ற‌ பிற‌க்கு . அதுக்கு பிற‌க்கு ஜேர்ம‌ன் சின்ன‌ அணிக‌ளிட‌ம் உல‌க‌ கோப்பையில் 2-0 என‌ தோத்த‌வை...................இத்தாலி ம‌ற்றும் கொல‌ன்ட் ஓட‌ ஒப்பிடும் போது ஜேர்ம‌ன் ஒவ்வொரு உல‌க‌ கோப்பையிலும் க‌ல‌ந்து கொள்ளுகிற‌ நாடு...........................

 

2026க‌ளில் புதிய‌ சாத‌னை ப‌டைப்பின‌ம் என‌ ந‌ம்புவோம் புல‌வ‌ர் அண்ணா........................

 

என‌க்கு டென்மார்க் அணிய‌ விட ஜேர்ம‌ன் அணிய‌த் தான் அதிக‌ம் பிடிக்கும்.....................2002உல‌க‌ கோப்பையில் ப‌ல‌மான‌ பிரான்ஸ்ச‌ வீழ்த்தி டென்மார்க் 2-0 வென்ற‌தை ம‌ற‌க்க‌ முடியாது😁..................................

  • Replies 123
  • Views 7.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜேர்மன் 05 ........ ஸ்கொட் 01.......! ஸ்கொட்லாந்தின் 01 கோலும் கூட தவறுதலாக ஜெர்மன் வீரரின் தலையில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது....... ஜெர்மனியின் 5 வது கோல் மேலதிகமான 3 நிமிடத்துக்குள் அதாவது 9

  • nunavilan
    nunavilan

    இன்றைய போட்டி முடிவுகள் போலந்து 1  நெதர்லாந்து 2 ------------------ ஸ்லொவேனியா 1 டென்மார்க் 1 ----------------------- சேர்

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி வெற்றி மேல் வெற்றி   2014உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு அந்த‌ அணிக்கு என்ன‌ ஆச்சு என்று தெரிய‌ வில்லை தொட‌ர் தோல்விக‌ளை ச‌ந்திக்கின‌ம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, புலவர் said:

ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா  பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ்  வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட்

ஜேர்மனிய  அணியை முற்று முழுதாக மாற்ற  வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருந்தாலும் தற்போதைய அணி நன்றாகவே விளையாடி உள்ளார்கள். பல சந்தர்ப்பங்களை தவற விட்டிருந்தாலும்.... ஜேர்மனி உதைபந்தாட்ட அணி நல்லதொரு விளையாட்டு அணி.. நன்றாக விளையாடி கடைசி நிமிடங்களில் மட்டுமே தோற்றவர்கள்.

ஸ்பானிய அணி வீரமானவர்கள் என்றால்  ஜேர்மனிக்கு பத்து கோல்கள் அல்லவா அடித்திருக்க வேண்டும்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

துருக்கி  ஐரோப்பிய உதைபந்தாட்ட நிகழ்விலிருந்து வெளியே சென்றதில் மட்டற்ற மகிழ்சி.👍🏼
விளையாட்டில் அரசியல் இல்லை என்பவர்களுக்கு நல்ல செருப்படி.


Wolfsgruß«: Was steckt hinter der nationalistischen Geste? - DER SPIEGEL

எனக்கும், துருக்கி தோற்றது பயங்கர சந்தோசம். 😁

ஜேர்மனிக்கு கிடைக்காதது, துருக்கிக்கும் கிடைக்கக் கூடாது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி ஆட்டங்கள்
9 ம் திகதி ஸ்பெயின் - பிரான்ஸ்
10 ம் திகதி நெதர்லண்ட் -  இங்கிலாந்து

யேர்மனி நன்றாக விளையாடியதாகவே நான் கருதுகிறேன்
பழையவிளையாட்டுக்கள் பற்றி தெரியாது

10 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு டென்மார்க் அணிய‌ விட ஜேர்ம‌ன் அணிய‌த் தான் அதிக‌ம் பிடிக்கும்...

😭

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வீரப் பையன்26 said:

014 உல‌க‌ கோப்பையிலும் அதே துடியாட்ட‌ விளையாட்டு தொட‌ர்ந்த‌து.......................அந்த‌ உல‌க‌ கோப்பை வென்ற‌ பிற‌க்கு

அந்தப் போட்டித் தொடரில் பிரேசிலை பிரேசில் மண்ணிலேயே  7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவைத்து எடுத்தவர்கள். அந்த உலகக் கோப்பையை வென்ற பின்னர். சின்ன சின்ன அணிகளிடம் அடிவாங்குகிறார்கள். முன்பெல்லாம் அதிக தடைவைகள் உலகக் கோப்பையிலும் சரி ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளிலும் சரி அதிக தடைகைைள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்றால் அது ஜேர்மன் அணிதான். தற்போதையை அணியை அடியோடு மாற்ற வேண்டும். 

12 hours ago, குமாரசாமி said:

தற்போதைய அணி நன்றாகவே விளையாடி உள்ளார்கள்.

 விளையாட்டில் கோல்களை அடிக்க வேண்டும். அதுலவும் ஸ்பானியா நேரத்தோடு கோல் போட்டிருந்த நிலையில் கடைசி நிமிடம் வரைக்கும் கோல்கள் போடாது இழுத்தடித்தது பெரும்பிழை.  பரீட்சைக்கு முதலே படித்து ஆயத்தமாகாமல் கடைசிநாள் பஸ்சுக்குள் படித்து சோதனை எழுதின மாதிரித்தான் இதுவும். மேலதிக நேரத்தில் ஸ்பானியாவைpன் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

 சிறிய அணிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய சுவிஸ்>ஓஸ்ரியா>துருக்கி அணிகள் வெளியேறி விட்டன. முதல்சுற்றுக்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்ததாத இங்கிலாந்து .பிரான்ஸ்.கொலண்ட் ஸ்பானிய அணிகள் உள்ளே வந்து விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

அரை இறுதி ஆட்டங்கள்
9 ம் திகதி ஸ்பெயின் - பிரான்ஸ்
10 ம் திகதி நெதர்லண்ட் -  இங்கிலாந்து

யேர்மனி நன்றாக விளையாடியதாகவே நான் கருதுகிறேன்
பழையவிளையாட்டுக்கள் பற்றி தெரியாது

😭

இங்லாந்

ஜேர்ம‌ன்

பிரான்ஸ்

 

இப்ப‌டியா நாடுக‌ளில் திற‌மை இருந்தால் உட‌ன‌ த‌ங்க‌ளின் நாட்டுக்கு விளையாட‌ விடுவின‌ம்

 

டென்மார்க் நாட்டில் திற‌மையான‌ வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் இருந்தாலும் டென்மார்க் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது

 

 

டென்மார்க் அணி விளையாடும் போது பாருங்கோ யாரும் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாடுகின‌மா என்று

 

அது தான் எழுதினேன் என‌க்கு டென்மார்க் அணிய‌ விட‌ ஜேர்ம‌ன் அணிய‌ தான் அதிக‌ம் பிடிக்கும் என்று

 

டென்மார்க் அணி விளையாடின‌தை தொலைக் காட்சியில் பார்த்த‌து என்றால் ஒரு ம‌ச்சும் முழுதா பார்த்து இருக்க‌ மாட்டேன்...................ஒரு சில‌ விளையாட்டை அரையும்குறையுமா பார்த்து இருப்பேன்

 

 

2002ம் ஆண்டு உல‌க‌ கோப்பை பின‌ல்  ஜேர்ம‌ன் பிரேசில் கூட‌ விளையாடின‌ விளையாட்டை முழுதா பார்த்தேன்.....................அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் என‌க்கு பிரேசில் அணிய‌ ரொம்ப‌ பிடிக்கும் 

என‌து டெனிஸ் பொற்றோர்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் சேர்ந்து பிரேசில‌ ஆத‌ரிச்சு விளையாட்டை பார்த்து ர‌சித்தோம்....................

 

 

பிரேசில் ஜேர்ம‌ன‌ 2-0 வென்ற‌து....................அந்த‌ இர‌ண்டு கோல்ல‌ அடிச்ச‌து பிரேசில் ரொனால்டோ👏.........................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

அது தான் எழுதினேன் என‌க்கு டென்மார்க் அணிய‌ விட‌ ஜேர்ம‌ன் அணிய‌ தான் அதிக‌ம் பிடிக்கும் என்று

ஒரு சிறந்த யேர்மன் அணி தோற்றுவிட்டது😟

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி ஆட்டத்தில்
ஸ்பெயின் 2 - 1 பிரான்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பேனிய‌ன் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰......................

  • கருத்துக்கள உறவுகள்
நேற்றைய ஸ்பெயின் பிரான்ஸ் போட்டிக்கு பிறகு இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் இவ்வாறாக கூறினார்...
யாராவது லாமினின் ஐடியை சரி பார்த்து 16 வயது தான் என்பதை உறுதி படுத்த வேண்டும் ஏனெனில் இந்த சிறுவனிடம் 25 வயதுக்கு உள்ள முதிர்ச்சி இருக்கிறது... ஆடுகளத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அவரது குனாதிசயத்தை பற்றி எவரும் பேசுவதில்லை அந்த சிறுவன் ஒரு ஐரோப்பிய கோப்பைக்கான போட்டி இது என பார்க்காமல் மனதில் எந்த அழுத்தமும் இன்றி எதோ உள்ளூர் போட்டி போல் விளையாடுகிறான் எதோ இதற்கு முன்பு 10 ஆண்டுகள் கால்பந்து விளையாடிய அனுபவம் உள்ள ஒரு வீரரை போல லாமின் தொடர்ந்து இது போல் ஆடினால் காற்பந்து உலகம் ஒர் சிறந்த வீரரை பெற்றுள்ளது என்று தான் நான் கூறுவேன் என்றார்..!!!
David Beckham 💜
  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸியின் கையில் குழந்தையாக ஸ்பெயினின் 16 வயது ஹீரோ லாமைன் யமால் - வைரல் புகைப்பட பின்புலம்

1277363.jpg

யூரோ கோப்பை அரையிறுதியில் ஸ்பெயின் அணி பிரான்சை 2-1 என்று வீழ்த்தி இறுதிக்குச் சென்றதன் பின்னால் ஹீரோவாக எழுச்சி பெற்றார் 16 வயது லாமைன் யமால். கால்பந்தாட்டத்தின் உலக ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸி கைக்குழந்தை ஒன்றை கைகளில் சுமந்தபடியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

மெஸ்ஸியின் கைகளில் தவழும் அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, இன்று அதிகாலை யூரோ 2024 அரையிறுதியில் பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பும் ஸ்பெயின் அணியின் பிரமாதமான சமன் கோலை அடித்த லாமைன் யமால் என்ற 16 வயது ஹீரோதான்.மெஸ்ஸி கையில் எப்படி இன்றைய ஹீரோவான குழந்தை வடிவ லாமைன் யமால் என்றால், பார்சிலோனா கிளப்பில் எப்போதும் ஒரு சடங்கு உண்டு. காலண்டருக்காக வீரர்கள் குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். ஜோவான் மான்ஃபோர்ட் அப்போது எடுத்த புகைப்படத்தில் மெஸ்ஸி கையில் எதேச்சையாக தவழ்ந்தது இன்றைய நட்சத்திரம் லாமைன் யமால்தான். லாமைன், பிரான்ஸை வெளியேற்றிய அந்த சமன் கோலை அடித்த நிலையில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ள சூழலில், இந்தப் புகைப்படம் இன்று வைரலாகியுள்ளது.

17206107563078.png

யார் இந்த லாமைன் யமால்? - ஒரு சுருக்கமான பின்னணி: கேட்டலோனியாவில் 2007-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பிறந்தவர் லாமைன் யமால். மொராக்கோ தந்தைக்கும் ஈக்வட்டோகினியா தாய்க்கும் பிறந்தவர் யமால். இவருக்கு 7 வயதாக இருக்கும் போது இவரது குடும்பம் பார்சிலோனாவுக்குக் குடிபெயர்ந்தது. இவர் பார்சிலோனா இளையோர் கால்பந்து அகாடமியில் சேர்ந்தார். யமால் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முழுப்பெயர் லாமைன் யமால் நஸ்ரவ்யி இபானா. 16 வயதிலேயே பார்சிலோனாவுக்கு ஆடிய இளம் வீரர் என்ற சாதனைக்கு உரியவர் யமால்.

ஸ்பெயின் யு-15, யு-16 அணிக்கு முதலில் ஆடினார். 2023 யூரோ யு-17 தொடரில் 4 கோல்களை அடித்தார். அதில் பிரான்ஸுக்கு எதிராக செமி பைனலில் நேற்று அடித்தது போல் அதே இடத்திலிருந்து அதே போல் கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரான்ஸ் அன்று 3-1 என்று வெற்றி பெற்றது. நேற்று 2-1 என்று ஸ்பெயின் வெற்றி பெற்றது. இளம் வயதிலேயே பல சாதனைகளுக்கு உரியவராக திகழ்கிறார் யமால்.

இவர் பெரும்பாலும் இடது கால் ஆதிக்கம் கொண்ட வீரர் ஆவார். அசாத்தியமாக பந்தை எதிரணி வீரர்களிடம் இருந்து கடைந்தெடுத்துச் செல்பவர். இவரது தனிச்சிறப்பு என்னவெனில் சென்டர் பார்வர்ட், அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். அல்லது குறிப்பாக வலது ஓர விங்கர் என்று எந்த நிலையிலும் அசத்தக்கூடியவர். வெகுவேகமாக ஆடக்கூடியவர். மின்னல் வேகத்தில் எதிரணியினரின் தடுப்பு வீரர்களைக் கடந்து வளைந்த ஷாட்களை கோலுக்குள் தொலை தூரத்திலிருந்து அடிக்க கூடியவர்.

17206108173078.jfif

பிரான்ஸுக்கு எதிரான அந்த அற்புத கோல்: பிரான்ஸ் முதல் கோலை அடித்தவுடன் சற்றும் கலங்காது ஸ்பெயின் அதிவேகக் கால்பந்தாட்டத்தை ஆடியது. அப்போது 21வது நிமிடத்தில் பந்து ஸ்பானிய, பிரான்ஸ் வீரர்கள் இருவர் காலிலும் பட்டு யமாலிடம் வந்தது. இடது புறத்திலிருந்து அவர் விறுவிறுவென பிரான்ஸ் கோலுக்குள் நுழைய முயன்றார். ஆனால் கோலுக்கு அருகில் 25 அடியில் பிரான்ஸ் வீரர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். யமாலுக்கும் பிரான்ஸ் கோல் கீப்பர் மைக் மைக்னனுக்கும் இடையே 7 பிரான்ஸ் வீரர்கள் மறித்துக் கொண்டிருந்தனர். முதல் டச்சில் ஷாட் ஆடப்போகிறார் என்று பிரஞ்சுப் படை உஷாரானது.

ஆனால் பந்தை வலது புறம் விரட்டி கொண்டு சென்றார். உடனேயே 2 பிரான்ஸ் வீரர்கள் இவரை மறித்தனர். ஆனால் இவர் மறுபடியும் இடது புறம் நகர்ந்தார். அடுத்த நகர்வு கொஞ்சம் ஸ்பேஸ் கிடைத்தவுடன் தனது வழக்கமான இடது முன் பாதத்தில் இடி போல் ஒரு ஷாட்டை தூக்கி அடிக்க அனைத்து பிரெஞ்ச் வீரர்களும் கோல் கீப்பரும் அண்ணாந்து பார்க்க கோல் போஸ்ட்டைத் தடவிய படி கோலுக்குள் நுழைந்தது பந்து.

இந்த ஷாட்டை அடிக்கும் முன் இரண்டு பிரான்ஸ் வீரர்களுக்கு இடது, வலது, வலது இடது என்று போக்குக் காட்டியது அற்புதம். லாமைன் யமாலின் இந்த கோல் பல கால்பந்து யுகங்களுக்குப் பேசப்படும் என்று நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். 25 அடியிலிருந்து பிரான்ஸின் உலகின் சிறந்த கோல் கீப்பர் மைக்னன் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அடித்த ஷாட் திகைப்பூட்டும் ஷாட் ஆகும்.

அதுவும் அவரது இடது பாதத்திலிருந்து உயரே எழும்பி வளைந்து கோல் போஸ்ட்டை தடவி கோலுக்குள் சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்தக் கோலின் பிரமையிலிருந்து மீள்வதற்குள் அடுத்த 5 நிமிடங்களில் யமாலின் ஒரு மின்னல்வேக ஆட்டம் பிரான்சின் உட்பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது யமாலின் உதவியுடன் ஆல்மோவின் கோலாக, வெற்றி கோலாக அமைந்தது.

இளம் வயது சாதனை: 16 வயது 362 நாட்களே ஆன யமால், இளம் வயதில் யூரோ அரையிறுதி ஆடிய வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார். 1958 உலகக்கோப்பையில் இதே பிரான்சுக்கு எதிராக பிரேசிலிய கால்பந்து மேதை பீலே அரையிறுதியில் ஆடும்போது அவருக்கு 17 வயது 244 நாட்கள். அதேபோல் இளம் வயதில் யூரோ அரையிறுதியில் கோல் அடித்தவரும் யமால்தான், இவருக்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 வயது 245 நாட்களில் யூரோவில் கோல் அடித்து சாதனையை வைத்திருந்தார்.

இந்த வெற்றியோடு அரையிறுதி அல்லது இறுதியில் ஸ்பெயின் 5 முக்கியத் தொடர்களில் தோற்கடிக்கப்பட்டதே இல்லை என்ற சாதனையை வைத்துள்ளது. யூரோ கோப்பை அரையிறுதியில் லாமைன் யமால் என்னும் உலக நட்சத்திரம் உதயமானார் என்றால் அது மிகையானதல்ல.

https://www.hindutamil.in/news/sports/1277363-messi-pose-with-baby-lamine-yamal-details-about-the-viral-photo-explained-3.html

  • கருத்துக்கள உறவுகள்

Spain's Lamine Yamal becomes youngest goal-scorer at Euros

  • கருத்துக்கள உறவுகள்

Spain 2 - 1 France | Semi-Final | Highlights | UEFA Euro | 10th July 2024

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

1277363.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2024 at 23:28, விளங்க நினைப்பவன் said:

ஒரு சிறந்த யேர்மன் அணி தோற்றுவிட்டது😟

ஸ்பானியவிலுள்ள    அணிகளுக்கு விளையாடும்  ஜேர்மன்  வீரர்களை    விளையாட. அனுமதித்தது பிழை   ஆகையால் தான் தோல்வி 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

ஸ்பானியவிலுள்ள    அணிகளுக்கு விளையாடும்  ஜேர்மன்  வீரர்களை    விளையாட. அனுமதித்தது பிழை   ஆகையால் தான் தோல்வி 

பெரிய‌வ‌ரே ஏன் இந்த‌ புல‌ம்ப‌ல்

ஜேர்ம‌ன் தேசிய‌ அணிக்கு 10வ‌ருட‌மாய் நேர‌ம் ச‌ரி இல்லை........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெனால்டி உதை இங்கிலாந்துக்கு

நெதர்லாந்து 1 இங்கிலாந்து 1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநேக ஜேர்மனியர்களின் விருப்பம் நெதர்லாந்து வெற்றியடைய வேண்டும் என்பதே....இன்று மட்டுமல்ல இறுதி போட்டியிலும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இறுதி நிமிடத்தில் ஒரு கோலை போட்டு இறுதி போட்டியில் ஸ்பெயினை சந்திக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

அரை இறுதி ஆட்டத்தில்
ஸ்பெயின் 2 - 1 பிரான்ஸ்

பிரான்ஸ் அணியை பார்த்தால் ஆபிரிக்கா அணி மாதிரி இருக்கிறது.......அவர்களை வெளியோற்றினால்.  பிரான்ஸ் இலங்கைக்கு பக்கத்தில் நிற்க்கும்.  🤣😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

 

என்ன செய்யிறது? பார்க்க கவலையாத்தான் கிடக்கு....😎
முன் கூட்டியிய ஆழ்ந்த அனுதாபங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாவ‌ங்க‌ள் இங்லாந் அணி 

புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இங்லாந் அணி ஒரு கோப்பையும் தூக்க‌ல‌

 

ஸ்பேனிய‌ன் 2010 உல‌க‌ கோப்பை

 

2012 ஜ‌ரோப்பா கோப்பை 

 

இந்த‌ முறையும் ஸ்பேனிய‌னின் ஆதிக்க‌ம் தான் அதிகம்

நாளை பாப்போம் முடிவு எப்ப‌டி இருக்கு என்று.......................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பின‌ல்

 

இங்லாந் வென்றால் ம‌கிழ்ச்சி🙏🥰.............................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.