Jump to content

பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dug.jpg?resize=750,375&ssl=1

பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன.

பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும்.

அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது.

எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள்.

பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1388164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள், இணக்க அரசியல் என்போர் கூட அவருக்குத்தான் நன்றி கூறவேண்டும். அவரை வைத்துத்தான் பலர் பிரபல்யமடைகிறார்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் உங்கள் கட்சி சார்பாக ஏராளானமானவர்கள் (என் நண்பர்கள் உட்பட) இருக்கின்றார்களே அதற்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்?
இன்று..
பிரபாகரனும் இல்லை..
தாக்குதல்களும் இல்லை...
உங்கள் நண்பர்கள் ஏன் இன்னும்  தம் மண்ணிற்கு திரும்பாமல் இருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

dug.jpg?resize=750,375&ssl=1

பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

மைக்கு கிடைச்சால் என்ன வேணும் என்றாலும் சொல்லீட்டு போகலாம் என்று நினைக்க கூடாது..எல்லாரும் அங்க சுத்தி, இங்க சுத்தி கடசியாக எங்க வந்து நிற்பீர்கள் என்பது தெரியும்....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உண்மை என்ன வெனில் ஒட்டுமொத்தமான ஆயுத போராட்டதினால் தமிழருக்கு கிடைத்த பலன் புலப்பெயர்வு அதன்மூலம்  புலம்  பெயர்ந்த தமிழரின் பொருளாதார முன்னேற்றம், புதிய தலைமுறையின் கல்வி, தொழில்நுபட்ப முன்னேற்றம் மட்டுமே. 

தாயகத்தில் வாழ்ந்து வரும் மக்களை பொறுத்தவரை விளைவு அரசியல் ரீதியான பாரிய இறங்கு முகம். பாரிய உயிரிழப்புகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு. தங்கி வாழ்வோர்  தொகை அதிகரிப்பு இன்னும் பல. 

ஆயுதப் போராட்டத்தின் பலனகளை அனுபவிப்பவர்களுல் டக்லஸும் ஒருவரே. 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைப்பை மாத்திவிடுங்கள் ( டக்கி புலம்பெயர் தமிழர்கள் தலைவருக்கு நன்றிக்கடனாக இருக்கட்டாம் என்று) இல்லாவிட்டால் இப்படியான செய்திகளை வாசிக்கமாட்டேன்

Edited by ragaa
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2024 at 09:17, தமிழ் சிறி said:

பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

large.IMG_6583.jpeg.46144348b68a557b1d63

  • Like 8
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2024 at 09:17, தமிழ் சிறி said:

பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? தமிழன் பிரபாகரனையும் நக்கும், சிங்கள நாயக்கர்களையும் நக்கும்.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2024 at 07:42, குமாரசாமி said:

புலம்பெயர் நாடுகளில் உங்கள் கட்சி சார்பாக ஏராளானமானவர்கள் (என் நண்பர்கள் உட்பட) இருக்கின்றார்களே அதற்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்?
இன்று..
பிரபாகரனும் இல்லை..
தாக்குதல்களும் இல்லை...
உங்கள் நண்பர்கள் ஏன் இன்னும்  தம் மண்ணிற்கு திரும்பாமல் இருக்கின்றார்கள்?

இப்படி இடக்கு மடக்கான கேள்வியை கேட்டா நாங்கள் எப்படி பதில் சொல்வது....
13 ஆம் திருத்த சட்டத்தை வைத்து நாங்கள் இன்னும் 15 வருசம் அரசியல் நடத்த வேணும் ....
 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.