Jump to content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!


Recommended Posts

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

1707198742-4511.jpg&w=&h=&outtype=webp

2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி நேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது. 
இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் சுரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது
ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது. என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

island

எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில்,  இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவத

ரசோதரன்

தமிழ்நாட்டு, அமெரிக்க அரசியல்கள் பற்றி கதைப்பது இலகுவானது, அண்ணை. நேரமும் நல்லாவே போகும். இலங்கைத் தமிழ், ஈழ அரசியல் பற்றிக் கதைப்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் ஆகவும் முடியலாம். சில வேளைகளில்

ஈழப்பிரியன்

தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும் வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும் ஒரே செயல். இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு தோல்வி பயம் காரணமா? திமுக விமர்சிப்பது ஏன்?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI/FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அ.தி.மு.க-வின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது ஏற்கத்தக்கதா? இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்லும், பணப்பட்டுவாடா அதிகம் நடக்கும் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் வரலாறா? போட்டியில் அ.தி.மு.க இல்லாதது யாருக்கு சாதகமாக இருக்கும்?

2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

புறக்கணிப்பு ஏன்?

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா களம் காண்கிறார்.

ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

“தி.மு.க-வினரும் அமைச்சர்களும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதோடு, பணபலம் மற்றும் படைபலத்துடன் பல்வேறு அராஜக மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்”, “மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க மாட்டார்கள்” என்பதால், இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இத்தகைய பணப்பட்டுவாடா மூலம் அக்கட்சி வென்றதாக எடப்பாடி பழனிசாமி சில உதாரணங்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதும் இதே வார்த்தைகளை அவர் பிரதிபலித்தார். “இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற எல்லா ஆட்சி அதிகார பலத்தையும் தி.மு.க பயன்படுத்தும். பணத்தை வாரி இறைப்பார்கள், பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக சென்று பண மழை பொழிவார்கள். ஜனநாயக படுகொலை நடக்கும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது,” எனக் கூறினார்.

 

சரியான முடிவா?

அண்ணாமலை
படக்குறிப்பு,பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

இந்தத் தேர்தல் புறக்கணிப்பின் மூலம் நல்ல வாய்ப்பை அ.தி.மு.க இழந்துவிட்டதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

“இந்தத் தேர்தலில் அ.தி.மு.க நின்றிருந்தால் அக்கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்திருக்கும். இந்தப் புறக்கணிப்பால், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் பா.ம.க, நாம் தமிழர் கட்சிக்குப் பிரிய வாய்ப்புகள் உண்டு,” என்கிறார் ப்ரியன்.

இப்படிப் பிரியும் வாக்குகளில் கணிசமாக 60% வாக்குகள் பா.ம.க-வுக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு என்கிறார் அவர். அதற்கு, விக்கிரவாண்டி தொகுதியில் கணிசமாக வன்னியர் வாக்குகள் பா.ம.க-வுக்குச் செல்லும் என்பதே காரணம் என்கிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அ.தி.மு.க-வின் பாக்யராஜ் (35.25%) பிடித்தார். பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார்.

 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் புகழேந்தி 49% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 43% வாக்குகளைப் பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க தவறவிட்டுவிட்டதாக ப்ரியன் கூறுகிறார்.

அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பை பிரதான அரசியல் கட்சி எனும் முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் ப்ரியன், தி.மு.க தேர்தல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை களத்தில் நின்று மக்களிடம் கொண்டு செல்வதுதானே எதிர்க்கட்சியின் வேலையாக இருக்கும் என்றும் கூறினார்.

“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலையொட்டி அத்தொகுதிக்குச் சென்று தொடர்ந்து பேசுவார். அதன்மூலம் கவனம் பெறுவார். அப்போது அ.தி.மு.க எங்கு இருக்கும், என்ன செய்யும்?” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

முந்தைய தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் மீது குறை கூறினாலும், இடைத்தேர்தலில் நின்று தோற்றிருந்தாலும் மக்கள் அவ்வாறு பேச மாட்டார்கள் என்கிறார் ப்ரியன்.

'தோல்வி பயம்'

பத்திரிகையாளர் ப்ரியன்
படக்குறிப்பு,பத்திரிகையாளர் ப்ரியன்

அ.தி.மு.க, தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே தேர்தலை புறக்கணித்துள்ளதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித்தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டன்டைன்.

“தி.மு.க மீது விமர்சனங்களை எழுப்பும் அ.தி.மு.க, முன்பும் இடைத்தேர்தல்களில் நின்றிருக்கக் கூடாது. இந்தத் தேர்தல் நியாயமான முறையிலேயே நடக்கும்,” என்றார்.

அ.தி.மு.க எனும் கட்சியை நிலைநிறுத்தியதே தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் தான் என, 1973-இல் நடந்த திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலை நினைவுகூர்கிறார் அவர்.

1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கி சில மாதங்களில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், அ.தி.மு.க சார்பில் முதன்முறையாக இரட்டை இலை (தனிச்சின்னம்) சின்னத்தில் போட்டியிட்ட கே. மாயத்தேவர் 2.60 லட்சம் வாக்குகள் பெற்று அ.தி.மு.க-வின் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். தி.மு.க-வின் பொன் முத்துராமலிங்கத்தால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. சிண்டிகேட் காங்கிரசின் வேட்பாளர் வி.சி.சித்தன் இரண்டாம் இடம் பெற்றார். தமிழக இடைத்தேர்தல்கள் வரலாற்றில் ஆளுங்கட்சி அல்லாத ஒரு புதிய கட்சி பெற்ற இந்த வெற்றி இன்று வரை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

“ஆனால், முன்பு 5 இடைத்தேர்தல்களை புறக்கணித்த ஜெயலலிதா தான், தருமபுரி பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்,” என்கிறார், கான்ஸ்டன்டைன்.

2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டதைத்தான் கான்ஸ்டன்டைன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் இன்பசேகரன் சுமார் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட தமிழ்க்குமரன் இரண்டாமிடம் பெற்றார். ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட அன்பழகன், டெபாசிட் இழந்தார்.

தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தலிலும் தோற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள் என்ற அச்சத்திலேயே அ.தி.மு.க புறக்கணித்துள்ளதாக கான்ஸ்டன்டைன் கூறுகிறார்.

 

ப.சிதம்பரம் விமர்சனம்

ப. சிதம்பரம்

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

அ.தி.மு.க குறித்த தி.மு.க-வின் இத்தகைய விமர்சனங்கள் குறித்து பதிலை அறிய அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம். அப்போதும், “தி.மு.க-வின் எட்டு அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியை முகாமிட்டுள்ளனர். பணப்பட்டுவாடா அதிகளவில் நடக்கும். தேர்தல் புறக்கணிப்பு குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் தெளிவாக விளக்கியுள்ளார், அதைத்தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை,” என்றார்.

இதையே அ.தி.மு.க-வின் மூத்தத் தலைவர் வளர்மதியும் எதிரொலித்தார். “தேர்தலைப் புறக்கணித்துவிட்டதால் இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை,” என்கிறார் அவர்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்காக, மேலிட உத்தரவின் பேரிலேயே அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாக,” எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் அதன் முடிவுகளை தானாக எடுப்பதாகவும் பா.ஜ.க இதில் ஒன்றும் செய்யவில்லை என்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

இடைத்தேர்தல்களும் பணப்பட்டுவாடா புகாரும்

பணப்பட்டுவாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படபடம்

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சித் தரப்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் எழுவது வழக்கம்.

“தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வெற்றி கௌரவப் பிரச்சினையாக பார்க்கப்படுவதாலேயே ஆளுங்கட்சியின் மீது பணப்பட்டுவாடா புகார்கள் எழுகின்றன,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்.

தி.மு.க-வுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’வும், அ.தி.மு.க-வுக்கு 'கும்மிடிப்பூண்டி ஃபார்முலா'வும் உள்ளது எனக்கூறுகிறார் ஷ்யாம்.

2009 -ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் தி.மு.க வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் 'திருமங்கலம் ஃபார்முலா' எனப் பரவலாக அறியப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடந்த சுமார் 35 இடைத்தேர்தலில் 30 இடைத்தேர்தல்களை ஆளுங்கட்சியே வென்றிருப்பதாக அவர் கூறுகிறார்.

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு எப்போதுமே அரசியல் நகர்வுதான். அடுத்த தேர்தலில் கூட்டணிக்கு அது கட்டியம் எனும் ரீதியில்தான் அ.தி.மு.க-வின் புறக்கணிப்பைப் பார்க்க முடியும்,” என்கிறார் ‘தராசு ஷ்யாம்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவருடைய ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு, டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன், அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் மதுசூதனனை சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ‘டோக்கன்’ வழங்கியதாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. எனினும் அப்புகாரை தினகரன் மறுத்திருந்தார்.

2019-இல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தி.மு.க-வும் 9 தொகுதிகளில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் வெற்றி பெற்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா இறந்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க சார்பில் பணிமனை அமைத்து, பட்டியில் கால்நடைகளை அடைப்பது போல அடைத்து அங்கேயே மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு, பணமும் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க புகார் எழுப்பியது. அதேபோன்று, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எண்ணற்ற பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

இதுபோன்று, பல இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி மீது புகார் எழுவதும் அதனை அக்கட்சி மறுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cp66rejnn64o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசியல் கட்சிகளிடம் ஒரு நாலைந்து 'டெம்பிளேட்' அறிக்கைகள் இருக்குது போல: போட்டியிட்டால் ஒன்று, போடியிடா விட்டால் ஒன்று, கூட்டணி வைத்தால் ஒன்று, கூட்டணி வைக்கா விட்டால் ஒன்று, .......

'நம்பர் டூ நான் தான், நான் தான்...' என்று எல்லோருமே சொல்கின்றனர், இந்த நேரத்தில் போய் எடப்பாடியார் பதுங்கலாமா? ஜெயலலிதாவே இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார் என்றால், அவர் எப்பவுமே ஒன்று அல்லது இரண்டு தானே. அவர் இருந்த போது, யாராவது நான் தான் நம்பர் டூ, ஜெயலலிதா நம்பர் த்ரீ என்று சொல்லி இருக்கத்தான் முடியுமா...... அப்படி யாராவது சொல்லி இருந்தால், அடுத்த முறை ஆட்சிக்கு வந்த அம்மா செய்த முதல் வேலை அந்த ஆளைத் தூக்கி உள்ளே போடுவதாகத்தான் இருந்திருக்கும். 

இடைத் தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் வெல்லும். இது ஒன்றும் புதிது இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சிக்கு என்று ஒரு கடமை இருக்குதல்லவா?

விக்கிரவண்டியில் 40, 30, 30 வீதங்கள் என்பது சாதிவாரியான கணக்கு. பாமக தங்களின் 40 வீதத்தில் பெரும்பான்மையை எடுக்கலாம் என்று கணக்கு போடுகின்றது. ஆனாலும் இது பலமாகப் பிரியும். அவர்களில் எல்லோரும் பாமகவிற்கும், மருத்துவர் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்கள் இல்லை. 

திமுக விசிகவுடன் உதவியுடன் அவர்களின் 30 வீதத்தை முழுசாக தாங்களே எடுக்கலாம் என்று நினைக்கின்றனர்.

மிகுதி 30இல் நாதக, பாஜக என்று பல பங்குகள் பிரியும்.

இந்த நிலையில் அதிமுக போட்டியிட்டாலும், இரண்டாவது இடம் கிடைப்பது சந்தேகமே. அதனால் தான் எடப்பாடியார் விலகுகின்றார் போல.

ஆனாலும், தமிழ்நாடு தேர்தல் களநிலவரம் 2026ம் ஆண்டும், கூட்டணிக் கட்சிகளில் மாற்றம் இல்லை என்றால், இதுவே தானே. ஒரு வேளை எடப்பாடியார் பாமகவிற்கு  இப்பவே விட்டுக் கொடுப்பது பின்னர் 2026 இல் வரப் போகும் கூட்டணிக்கு ஒரு அச்சாரமாகவும் இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை பாமக 2026 தேர்தலில் பாஜ கவுடன் கூட்டு வைக்குமென.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

நான் நினைக்கவில்லை பாமக 2026 தேர்தலில் பாஜ கவுடன் கூட்டு வைக்குமென.

👍.......

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியாவது வென்று, வேறு எது தர்மபுரி தான், ஒரு மத்திய அமைச்சர் பதவி, வேறு என்ன சுகாதாரத்துறை தான், பெற்று விடலாம் என்ற கணக்கு முடிந்துவிட்டது. இனிமேல் வேற ஒரு கணக்கு போடுவார்கள்........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

நான் நினைக்கவில்லை பாமக 2026 தேர்தலில் பாஜ கவுடன் கூட்டு வைக்குமென.

இதிலும் பயனடைய போவது நாம் தமிழர் தான். இரண்டாவது இடத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அடுத்த கட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2024 at 16:31, ரசோதரன் said:

👍.......

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியாவது வென்று, வேறு எது தர்மபுரி தான், ஒரு மத்திய அமைச்சர் பதவி, வேறு என்ன சுகாதாரத்துறை தான், பெற்று விடலாம் என்ற கணக்கு முடிந்துவிட்டது. இனிமேல் வேற ஒரு கணக்கு போடுவார்கள்........

ஆனால் இவ‌ர்க‌ளுக்கு என்று அர‌சிய‌ல் கொள்கை எதுவும் இல்லை

இவ‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது......................க‌டும் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்றும் கேலிக‌ள் செய்வ‌து ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை

பிற‌க்கு பார்த்தால் அவ‌ர்க‌ளுட‌ன் கூட்ட‌னி

இவ‌ர்க‌ளின் தொண்ட‌ர்க‌ள் எப்ப‌டி தான் இவையோட‌ இருக்கின‌ம் என்று புரிய‌ வில்லை

 

ஜ‌யா காடுவெட்டி குரு இருக்கும் போது பமாகா பல‌மாய் இருந்த‌து இபோது அர‌சிய‌லில் அப்ப‌னும் ம‌க‌னும் வீழ்ச்சிய‌ ச‌ந்திக்கின‌ம்.................ம‌க்கள் இவ‌ர்க‌ள் மீது வைச்ச‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌க்கள் இவ‌ர்க‌ள் மீது வைச்ச‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து.......................................

மக்களா.........இவர்களின் சில 'இன சனங்கள்' மட்டும் என்று தான் சொல்ல வேண்டும். தைலாபுரம் ஒரு ஜமீன் ஆகியது, அங்கு குடியிருப்பவர்கள் ஜமீன்தார்கள் ஆனார்கள் என்பது தான் இவர்களின் சாதனை.........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ளின் தொண்ட‌ர்க‌ள் எப்ப‌டி தான் இவையோட‌ இருக்கின‌ம் என்று புரிய‌ வில்லை

 உறவே,  அது சாதி பற்று வெறி ☹️

Link to comment
Share on other sites

இவர்கள்(பாமக) விரும்பிய சின்னம் கிடைக்காதாம். மாம்பழ சின்னத்தை தரும்படி கேட்டுள்ளார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

இவர்கள்(பாமக) விரும்பிய சின்னம் கிடைக்காதாம். மாம்பழ சின்னத்தை தரும்படி கேட்டுள்ளார்களாம்.

👍...

சமீப தேர்தல் தோல்வியால் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விட்டார்கள். அத்துடன் மாம்பழமும் போய் விட்டது. ஆனாலும் பாஜகவின் பங்காளிகள் என்றபடியால், மாழ்பழத்தை திரும்பவும் கொடுப்பார்கள். வாசனுக்கு சைக்கிள் சின்னத்தை உடனேயே கொடுத்தது போல.

இடைத்தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையங்களாலேயே நடத்தப்படுகின்றது என்கின்றனர். சத்ய பிரதா சாகு தான் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி, முடிவுகளை எடுப்பவர். அவருக்கு தான் மத்தியிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக, நாம் தமிழர் ஆகிய இரண்டில் எந்தக் கட்சிக்கு அதிமுக வாக்குகள் கிடைக்கும்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த போது, இடைத்தேர்தல் போட்டியில் அதிமுக இல்லாதது எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், "அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்" என்று பேசினார்.

அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இப்படி பாமகவும், நாம் தமிழர் கட்சியும் தங்களுக்கு வாக்களிக்குமாறு அதிமுகவினரிடம் கோரிக்கை வைப்பது ஏன்? இது குறித்து அதிமுக கூறுவது என்ன?

 
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார்.

ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, "தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று அறிக்கை வெளியிட்டது.

விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்கு வங்கி

பட மூலாதாரம்,@EPSTAMILNADU

விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்கு வங்கி

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 84,157 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா அஸ்மி 8,216 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தார்.

திமுகவுக்கு 48.41 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 43.47 வாக்குகளும் கிடைத்தன. திமுக மற்றும் அதிமுக இடையே இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக எம்எல்ஏ புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் அப்போது அதிமுக, பாமக மற்றும் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அதிமுக-வின் பாக்யராஜ் (35.25% வாக்குகள்) பிடித்தார். பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும், இடைத்தேர்தலை புறக்கணித்ததன் மூலம் அதிமுக தனக்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 
அன்புமணி ராமதாஸ்

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் பாமக மற்றும் நாம் தமிழர்

அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளதால், தி.மு.க, பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம்.

கடந்த திங்கள்கிழமை, பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “இத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது. பணம் கொடுத்து இக்கூட்டத்துக்கு மக்கள் வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால், நாம் பணத்திற்கு மயங்குபவர்களா? இத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே என்று நினைத்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்கு கூட திமுகவுக்கு விழக்கூடாது. அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று பேசினார்.

சீமான்

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

படக்குறிப்பு,விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

அதேபோல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், இந்த இடைத்தேர்தல் என்பது தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்குமான போட்டி என்று கூறினார்.

"அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் உறவுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது எதிரி திமுகவை விரட்ட உதவுங்கள். எத்தனையோ முறை உங்கள் கூட்டணியில் இல்லாதபோதும் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். எனவே இம்முறை எனக்கு ஆதரவு கொடுங்கள்" என்று கூறினார்.

விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அதிமுகவின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும்" எனக் கூறினார்.

இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று கட்சிகளும் அதிமுகவின் வாக்குகளைப் பற்றி பேசும் நிலையில், அதிமுக வாக்குகள் யாருக்கு என்பது தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா

பட மூலாதாரம்,AFP

பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம்

இதுகுறித்து பாமக வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டபோது, "அதிமுக உருவானதே திமுகவை எதிர்க்க தானே. அவர்களின் பரம அரசியல் எதிரி திமுக தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அதிமுக தேர்தல் களத்தில் இல்லாதபோது, திமுகவுக்கு எதிராக நாங்கள் தான் நிற்கிறோம். எனவே தான் அதிமுகவினரிடம் ஆதரவு கேட்கிறோம். இதில் என்ன தவறு. திமுகவை எதிர்க்க அவர்கள் எங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள்" என்று கூறுகிறார்.

ஆனால் இதை மறுக்கும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, "தேர்தல் புறக்கணிப்பு என்றால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது மட்டுமல்ல, தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தான் பொருள். ஒரு குடிமகனாக அதிமுக தொண்டனுக்கு வாக்களிக்க உரிமை உண்டு தான். அதற்காக அவர்கள் இன்னொரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இதை எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தெளிவாகக் கூறியுள்ளார்." என்கிறார்.

விக்கிரவாண்டியில் நடந்த பாமகவின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது.

இது தொடர்பாக பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, "ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம். எனவே தான் அவரது புகைப்படத்தை வைத்தோம்" என்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவை ஊழல்வாதி என அழைத்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாமகவுக்கு அவரது புகைப்படத்தை பயன்படுத்த உரிமையில்லை என்கிறார் அதிமுகவின் ஜவஹர் அலி.

"அம்மா ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக பார்ப்பது சந்தோஷம் தான், ஆனால பாமக தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே இதைச் செய்கிறது. எப்போதும் போட்டி திமுக- அதிமுக இடையே தான்.

அதேபோல நாங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு அளித்தார்கள். அதற்கு நன்றி, மற்றபடி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் மற்ற கட்சியின் பக்கம் சாய மாட்டார்கள்" என்கிறார் ஜவஹர் அலி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் கடந்த ஜூன் 27ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர்.

இதற்கு முழு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

'அதிமுக செய்த தவறு'

குபேந்திரன்
படக்குறிப்பு,மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன்

விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது என்றும் ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் கை ஓங்கும் என்பதால் தான் தோல்வியைத் தவிர்க்க அதிமுக இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன்.

"அதிமுக செய்தது மிகப்பெரிய தவறு. தொடர்ந்து பல தோல்விகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்துள்ளது உண்மைதான். ஆனாலும் அதிமுக களம் கண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவுக்கு போட்டி அதிமுக தான் என்ற நிலையை அவர்களே மாற்றுவது போல உள்ளது. அதிமுகவின் சில வாக்குகள் பாமக பக்கம் செல்லவும் வாய்ப்புள்ளது" என்கிறார் குபேந்திரன்.

அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

"வெற்றி, தோல்வி மற்றும் பிரசார செலவுகள் என்பதைத் தாண்டி தேர்தல் என்பது தொண்டர்களைச் சந்திக்கவும் கள நிலவரத்தை தெரிந்துகொள்ளவும் ஒரு தலைவருக்கு உதவும். தொண்டர்களும் உற்சாகமாக செயல்படுவார்கள்.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மற்றும் ஆளுமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது முடிவு தொண்டர்களை பாதிக்கும். அதிமுக தொண்டர்களின் சோக மனநிலையைப் புரிந்துகொண்டு தான் மற்ற கட்சிகள் அவர்களை குறிவைக்கின்றன." என்கிறார் குபேந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?

விழுப்புரம் மாவட்டத்தில் விரிந்து பரந்து கிடக்கும் தொகுதிகளில் ஒன்று விக்கிரவாண்டி. இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களும் உள்ளடங்கிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் கிராமப்புற பகுதிகளே அதிகம் என்பதால், நகரங்களில் நடக்கும் தேர்தல்களைப் போலன்றி, வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் சின்னங்கள், ஆங்காங்கே கட்சிக் கொடிகள் என தேர்தலுக்கான எல்லா அம்சங்களுடனும் பரபரப்பாக இருக்கிறது விக்கிரவாண்டி.

கடந்த 2007ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக, இந்தத் தொகுதியின் பெரும்பகுதிகள் கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதியாக இருந்தன.

இந்தத் தொகுதி உருவான பிறகு இதுவரை இங்கே நான்கு தேர்தல்கள் நடந்திருக்கின்றன. 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2016, 2021 தேர்தல்களில் திமுகவும் 2019இல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவும் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 

கடந்த 2021இல் வெற்றி பெற்ற திமுகவின் நா. புகழேந்தி, சமீபத்தில் காலமான நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி.

சுமார் 2,35,000 வாக்காளர்களைக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதியில் கடந்த முறை சுமார் 49 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளரான நா. புகழேந்தி. அதற்கு அடுத்ததாக அதிமுகவின் வேட்பாளரான ஆர். முத்தமிழ் செல்வன் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால், இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துவிட்டது. அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது.

இந்தத் தொகுதியில் பெரும் எண்ணிக்கையில் சமூகரீதியில் வன்னியரும் அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவரும் அதற்கு அடுத்தபடியாக பிற இடைநிலை சாதியினரும் வசிக்கிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்

இந்த முறை பிரதானமான மூன்று கட்சிகளுமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றன. திமுக சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர்கள் அணியின் செயலாளரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகமும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள். மொத்தமாக 29 பேர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜூலை 10ஆம் தேதி இங்கே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அடிப்படையில், விவசாயத்தை மையமாகக் கொண்ட தொகுதி விக்கிரவாண்டி. ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் அரிசி வர்த்தகம் நடந்த பகுதி இது. தற்போது அரிசி வர்த்தகம் குறைந்திருந்தாலும் விவசாயம், இங்குள்ள கடைத் தெருவில் நடக்கும் வர்த்தகத்தை மையமாக வைத்தே இந்தப் பகுதியின் பொருளாதாரம் இயங்கி வருகிறது.

 

விக்கிரவாண்டி தொகுதியின் தேவைகள் என்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்

இந்தப் பகுதி பெரிதும் கிராமப்புறங்களைக் கொண்ட பகுதி என்பதால், சில இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கின்றன.

"அத்தியூர் திருக்கைக்கு அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றுகூட இல்லை. ஒன்று ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கருவாட்சிக்கு போக வேண்டும். இல்லாவிட்டால், கெடாருக்குச் செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை. வரும் சட்டமன்ற உறுப்பினர் இங்கிருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தையும் மேம்படுத்தித் தர வேண்டும்" என்கிறார் அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த வீரமணி.

அதேபோல, இப்பகுதியில் பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சிறிய சிப்காட் ஒன்றை உருவாக்கி, தொழிற்சாலைகள் ஏதும் வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் விக்கிரவாண்டி டவுனை சேர்ந்த பிரகாஷ். அதேபோல, இங்கிருக்கும் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு நகரங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது விக்கிரவாண்டி. ஒரு காலத்தில் தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான முக்கிய நிறுத்தமாக இந்தப் பகுதி இருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை வந்த பிறகு, தென் தமிழகத்தை நோக்கிச் செல்லும் பேருந்துகளும் அங்கிருந்து சென்னையை நோக்கி வரும் பேருந்துகளும் தங்கள் ஊரில் நின்று செல்வதில்லை என்ற குறையை இப்பகுதியைச் சேர்ந்த எல்லோருமே சொல்கிறார்கள்.

"சென்னையிலிருந்து வரும் பேருந்துகள் விக்கிரவாண்டிக்கு அருகில் நிற்காமல் ஊரைத் தாண்டிச் சென்று சுங்கச்சாவடியில்தான் நிற்கின்றன. விக்கிரவாண்டிக்கு என டிக்கெட்டும் கொடுப்பதில்லை. விழுப்புரத்திற்குத்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதேபோல, சென்னையை நோக்கி வரும் பேருந்துகளும் டோல்கேட்டில் ஆட்களை இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன.

முத்தமிழ்ச்செல்வன், ராதாமணி, புகழேந்தி, எம்.பி. ரவிக்குமார் என எல்லோரிடமும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. தினமும் சில பேருந்துகளாவது விக்கிரவாண்டியில் நின்று செல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்," என்கிறார் விக்கிரவாண்டி வர்த்தகர் சங்கத்தின் பொருளாளர் சாதிக் பாட்சா.

 

திமுகவின் இடைத்தேர்தல் வியூகம் என்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்

ஆளும்கட்சி என்பதால் இந்தத் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனத் தீவிர முனைப்புடன் களத்தில் இறங்கியிருக்கிறது திமுக. இந்தத் தொகுதியில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லவில்லையென்றாலும் பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, தாமோ அன்பரசன், வி.சி. கணேசன், அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர் என ஒன்பது அமைச்சர்கள் இந்தத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர களப்பணியில் இறங்கியிருக்கின்றனர். பிரசாரம் முடிவடையும் கடைசி இரு நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயத்தின் காரணமாக 65 பேர் உயிரிழந்தது இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், தற்போதைய அரசின் நலத்திட்ட உதவிகளை மையமாக வைத்து தேர்தலைச் சந்திக்கிறது திமுக.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்

அக்கட்சியின் வேட்பாளரான அன்னியூர் சிவாவுக்கு தொகுதிக்குள் நல்ல அறிமுகம் இருப்பது, அந்தக் கட்சிக்குக் கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால், அமைச்சர்கள் சகிதம், உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் சிவா.

"கட்சியினுடைய சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன். இந்தத் தொகுதியின் வாக்காளர்களுக்கு நெருங்கிய உறவினராக இருப்பவன். அதனால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் சிவா.

கள்ளச்சாராய விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது என நம்புகிறார் அவர். "கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டப் பேரவையிலேயே விளக்கம் கொடுத்துவிட்டார் முதலமைச்சர். அது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான். இனிமேல் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகப் புதிய சட்டங்களையும் சட்டப் பேரவையில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். ஆகவே அது தேர்தலில் எதிரொலிக்காது" என்கிறார் சிவா.

பொதுவாகவே இந்தத் தொகுதியில் திமுக வலுவாக இருப்பதும் அமைச்சர்கள் வரிந்துகட்டி வேலை பார்ப்பதும் திமுகவை கரை சேர்த்துவிடும் என நம்புகிறார்கள் கட்சிக்காரர்கள்.

 

கடும் போட்டியைக் கொடுக்க நினைக்கும் பாமக

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்
படக்குறிப்பு,பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி. அன்புமணி

ஆனால், தொகுதியில் திமுகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுகாட்ட நினைக்கிறது.

மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காமல் இருப்பதன் மூலம் திமுக வன்னியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்தும் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது பாமக.

அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி, ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர்.

"இரு முறை திமுக வெற்றிபெற்ற தொகுதி இது. ஆனால் தொகுதியின் எந்தப் பகுதியிலும் சாலைகளும் சாக்கடை வசதிகளும் சரியாக இல்லை. நாங்கள் வெற்றி பெற்று வந்தால் போராடி, இதையெல்லாம் தீர்ப்போம். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்கிறார் அன்புமணி.

இவருக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகள் இணைந்து பணியாற்றுவது இவருக்குப் பலமாக இருக்கிறது. கூட்டணியின் எல்லாத் தலைவர்களும் இணைந்து மிகப் பெரிய பிரசாரப் பொதுக் கூட்டத்தையும் வியாழக்கிழமையன்று நடத்தி முடித்திருப்பதால் தெம்பாக இருக்கிறார் அன்புமணி.

 

முத்திரையைப் பதிக்க முயலும் நாம் தமிழர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்
படக்குறிப்பு,நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா

மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபிநயா, மிகப்பெரிய தொண்டர் படையுடன் ஒவ்வொரு குக்கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.

வாகனத்தில் இருந்தபடியே பேசாமல், இறங்கிச் சென்று மக்களிடம் பேசுகிறார். மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, சுயவேலை வாய்ப்பை வழங்குவதாகச் சொல்லி வாக்கு கேட்கிறார் அபிநயா. நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தியிருக்கும் நாம் தமிழர் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்க நினைக்கிறது. அதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்கிறது அக்கட்சி.

இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் அக்கூட்டணியில் இருந்த தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் திமுக கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக 32,198 வாக்குகளைப் பெற்றது.

இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதால் அதிமுக பெற்ற சுமார் 65 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரண்டுமே குறிவைத்துள்ளன.

இந்தச் சூழல் தங்களுக்குச் சாதகமானது என பாமக கருதுகிறது. இந்த முறை திமுகவுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும்தான் நேரடிப் போட்டி என்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகளான அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கே திரும்பும் என அக்கட்சி கருதுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்
படக்குறிப்பு,இங்குள்ள பெரிய ஏரியைத் தூர்வார வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக விக்கிரவாண்டி மக்கள் வைக்கிறார்கள்

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாமக, அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டன. அப்போது அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.

"கடந்த 2019இல் நாங்கள் இணைந்துதான் அதிமுகவின் முத்தமிழ்செல்வனை வெற்றிபெற வைத்தோம். அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தாலும் நாங்கள் நண்பர்கள்தான். ஆகவே அதிமுகவின் முழு வாக்கும் எங்களுக்குத்தான் கிடைக்கும். ஆகவே நான் வெற்றி பெறுவது சாதாரண விஷயம்" என்கிறார் அன்புமணி.

மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சியும் அதே நம்பிக்கையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் எட்டாயிரத்து இருநூறு வாக்குகளையே பெற்றிருந்தாலும் இந்த முறை அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறது அந்தக் கட்சி.

"யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை எடப்பாடி கே. பழனிச்சாமி மறைமுகமாகச் சொல்லிவிட்டார். அது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதிமுக போட்டியிடாததால் இவர்களுக்குப் போட்டுவிட்டுப் போகலாம் எனப் பலர் நினைக்கிறார்கள். நாங்களும் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத நிலையில், எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்கிறோம். அந்தக் கட்சிக்காரர்களே இரட்டை இலை நிற்காததால் மைக்கிற்கு வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள்" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அபிநயா.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சட்டமன்றத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்றாலும் மூன்று கட்சிகளுமே வெவ்வேறு காரணங்களுக்காக இந்தத் தேர்தலை முக்கியமாகக் கருதுகின்றன. ஆகவே, தொகுதிக்குள் அனல் பறக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/ckrgz2xlr7zo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இதுவரை நடந்தது என்ன?- 8 முக்கியத் தகவல்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN

படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா
4 மணி நேரங்களுக்கு முன்னர்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 10) நடைபெற உள்ளது. இதற்காகத் தீவிரமாக நடைபெற்று வரும் பிரசாரம் இன்று (ஜூலை 😎 மாலையுடன் முடிகிறது.

அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு, அக்கட்சியின் வாக்குகளைப் பெறப் பா.ம.க - நாம் தமிழர் கட்சி இடையே நிலவும் போட்டி, தேர்தல் சமயத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகப் பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க இல்லாமல் மும்முனைப் போட்டி என பல விஷயங்கள் நடந்துள்ளன.

எத்தனை வாக்காளர்கள்?

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டு எம்.எல்.ஏ-க்களை இழந்த விக்கிரவாண்டி

கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி (51.71% வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் ராதாமணியை (41.93% வாக்குகள்) 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வம், தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டார்.

இம்முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வனை விட 9,573 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவைச் சேர்ந்த புகழேந்தி வெற்றி பெற்றார்.

 
விக்கிரவாண்டி

பட மூலாதாரம்,UDHAYSTALIN

இடைத்தேர்தல் ஏன் நடைபெறுகிறது?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் வேட்பாளர்கள் யார்?

விக்கிரவாண்டி

பட மூலாதாரம்,X/NAAMTAMILARORG

இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் ஓமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியுள்ளது.

அ.தி.மு.க இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது ஏன்?

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, [...] மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்தார்.

இந்த தேர்தல் தி.மு.க-வுக்கு ஏன் முக்கியம்?

தி.மு.க-பா.ம.க-நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 32,198 வாக்குகளைப் பெற்றது.

அதிமுக வாக்குகளை பாமகவால் ஈர்க்க முடிந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக மாறும்.

ஆளும் தி.மு.க அரசின் நலத்திடங்களுக்கு மக்கள் என்ன மதிப்பெண் வழக்குவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது.

"கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் அமையாது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

 
விக்ரவாண்டி

பட மூலாதாரம்,X/DRARAMADOSS

அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வாக்குகளை ஈர்க்க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான திமுக கூட முயற்சிகளை மேற்கொண்டது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி தி.மு.க தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்," என்று பேசினார்.

விக்கிரவாண்டியில் நடந்த பா.ம.க-வின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது.

அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.

விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அ.தி.மு.க-வின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றும் அ.தி.மு.க தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்குத் தான் கிடைக்கும்," எனக் கூறினார்.

இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று முதன்மை கட்சிகளும் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளன.

விக்கிரவாண்டி

பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI/FACEBOOK

பிரசாரத்தில் பங்கேற்காத பிரதான கட்சி தலைவர்கள்

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யவில்லை. அதேபோல தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் நேரடியாக எவ்வித பிரசாரமும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வீடியோ வெளியிட்டு மட்டுமே ஆதரவு திரட்டினார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு திராவிட கட்சிகளின் தலைவர்களுமே நேரடியாக பிரசாரம் செய்யாத தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு

Published By: DIGITAL DESK 7   11 JUL, 2024 | 06:06 PM

image

தமிழகத்தின் வட பகுதியில் அமைந்திருக்கும் விக்கிரவாண்டி எனும் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என். புகழேந்தி ஏப்ரல் மாதம் திடீரென உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த உடன் இந்தியா முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் திகதி அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் கி. அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளராக போட்டியிட்டனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சியான திமுக, ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்து கொண்டது என்று குற்றம் சாட்சி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இதனால் திமுக-பாமக- நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் அதிமுகவின் தொண்டர்கள் தங்களது கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

சில சிறு சம்பவங்களை தவிர்த்து பெரும்பான்மையாக அமைதியுடன் தேர்தல் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 82.48 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

276 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய இலத்திரனியல் வாக்கு எண்ணிக்கை சாதனம் சீல் இடப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முழு பாதுகாப்புடன் காவல்துறையினரும், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் எடுத்துச் சென்றனர். பதிவான வாக்குகளை ஜூலை 13-ஆம் திகதி அன்று எண்ணப்பட்டு, அன்று மாலையை முடிவுகள் வெளியிடப்படும்.

இதனிடையே அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்த பிறகும், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுகவினர் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர் என்பதும், இது அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/188238

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்: திமுக, பாமக, நாம் தமிழர் வேட்பாளர்கள் நிலை என்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்
படக்குறிப்பு,பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
13 ஜூலை 2024, 04:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 276 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, இந்த இடைத்தேர்தலில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48.

ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 38,564 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 13,754 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இவர் திமுக வேட்பாளரைவிட 24,810 வாக்குகள் பின்தங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் அபிநயா 849 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் பணியில் 1,195 காவலர்களும், 24 மத்திய துணைக் காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

கடந்த 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 276 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48. இதில் ஆண்களின் வாக்குகள் 95,536, பெண்களின் வாக்குகள் 99,944.

இன்று காலை 8 மணிக்கு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலாவதாக, தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவும் உள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

வாக்குகளை எண்ணும் பணி

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN

படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா

இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராகக் களம் கண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி, ஹோமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c51yl0lpgl1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி தேர்தல்: திமுக முன்னிலை… பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்!

Jul 13, 2024 11:31AM IST ஷேர் செய்ய : 
c4ZSLRJX-FotoJet-18.jpg
 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 27,421 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக, நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அதன்படி ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 44,780 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 17,359 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 3,556 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், விக்கிரவாண்டி தொகுதி மற்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
 

https://minnambalam.com/political-news/vikravandi-bypoll-seventh-round-dmk-anniyur-siva-leading/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்
படக்குறிப்பு,அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
13 ஜூலை 2024, 04:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுக்கு வந்துள்ளது. 20வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,663 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமாக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 1,23,689. பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

நாம் தமிழர் கட்சியின் அபிநயா 9,740 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

திமுக வேட்பாளர் வெற்றி

திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
படக்குறிப்பு,அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 276 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48. இதில் ஆண்களின் வாக்குகள் 95,536, பெண்களின் வாக்குகள் 99,944, மூன்றாம் பாலினத்தவரின் வாக்குகள் 15.

இன்று காலை 8 மணிக்கு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலாவதாக, தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.

முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருந்தார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவும் இருந்தனர்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

'பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க வெற்றி'

'பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றி'

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

அதோடு, தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

'இடைத்தேர்தலில் அத்துமீறல்' - பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

பட மூலாதாரம்,K.ANNAMALAI / TWITTER

படக்குறிப்பு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியாகக் களமிறங்கி வேலை செய்துள்ளனர். அத்துமீறல்கள், முறைகேடுகள் எல்லாம் சர்வசாதாரணமாக மாறிவிட்டது" என்று கூறினார்.

இடைத்தேர்தல் முடிவுகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது என்றும், கண்டிப்பாக 2026இல் மாற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆனால், மக்கள் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். பணபலம், அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. கூட்டணிக் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றினார்கள். முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி
வாக்கு எண்ணும் பணி
படக்குறிப்பு,பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

வாக்குகளை எண்ணும் பணி

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,X- NAAMTAMILARORG/UDHAYSTALIN

படக்குறிப்பு,பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா

இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராகக் களம் கண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி, ஹோமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.

செய்தியாளர் க.மாயகிருஷ்ணன், பிபிசி தமிழுக்காக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌க்க‌ளுக்கு கொடுத்த‌ காசு

 

திமுகா 2000ரூபாய்

பாமக‌ 500 ரூபாய்

நாம் த‌மிழ‌ர் 0 ரூபாய்....................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

ஐயா ராமதாஸ் சொல்வது பாதி தான் நியாயம். ஏனெனில் தி மு க இவ்வளவும் கொடுத்தது என்றால்.. பா ம க.. கூட்டணி வைக்காமலே.. மற்றைய கட்சிக்கொடிகளையும் தூக்கி வைச்சுக் கொண்டும்.. பகுதியாக என்றாலும் காசு கொடுத்து வாங்கினது 56,000 வாக்குகள்.

வெறும் மைக் சின்னத்தை மட்டும் வைச்சுக் கொண்டு காட்டுக்கத்துக் கத்தி மட்டும் 9000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் தான் உண்மையான சனநாயகவாதிகள். அவர்களுக்கு வாக்குப் போட்டவர்கள் தான் சாதாரண மக்கள். 

விக்ரவாண்டி

இங்கு பாமக கொடி மட்டுமா பறக்கிறது..?! ராமதாஸ் ஐயாவுக்கே  வெளிச்சம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

ஐயா ராமதாஸ் சொல்வது பாதி தான் நியாயம். ஏனெனில் தி மு க இவ்வளவும் கொடுத்தது என்றால்.. பா ம க.. கூட்டணி வைக்காமலே.. மற்றைய கட்சிக்கொடிகளையும் தூக்கி வைச்சுக் கொண்டும்.. பகுதியாக என்றாலும் காசு கொடுத்து வாங்கினது 56,000 வாக்குகள்.

வெறும் மைக் சின்னத்தை மட்டும் வைச்சுக் கொண்டு காட்டுக்கத்துக் கத்தி மட்டும் 9000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் தான் உண்மையான சனநாயகவாதிகள். அவர்களுக்கு வாக்குப் போட்டவர்கள் தான் சாதாரண மக்கள். 

விக்ரவாண்டி

இங்கு பாமக கொடி மட்டுமா பறக்கிறது..?! ராமதாஸ் ஐயாவுக்கே  வெளிச்சம். 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெற்ற‌ வாக்கு 9000 ஆயிர‌ம் இல்லை அண்ணா கூட‌..................

Screenshot-20240713-164321-Chrome.jpg

 

மாம்ப‌ழ‌க் கூட்ட‌மும் ஓட்டுக்கு 500ரூபாய் கொடுத்த‌வ‌ர்க‌ள்

 

அதோட‌ பாராள‌ம‌ன்ற‌ கூட்ட‌னி க‌ட்சி கொடிக‌ளும் ஹா ஹா..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நாம் தமிழர் கட்சியின் அபிநயா 9,740 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

பிபிசி தமிழ் வழமை போல்.. நாம் தமிழரை இட்டு குறைத்து மதிப்பிட்டு தான் செய்தி வெளியிட்டு வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

பிபிசி தமிழ் வழமை போல்.. நாம் தமிழரை இட்டு குறைத்து மதிப்பிட்டு தான் செய்தி வெளியிட்டு வருகிறது. 

இந்த தொகுதி அண்ணா வ‌ன்னிய‌ர்க‌ள் அதிக‌ம் வ‌சிக்கும் தொகுதி.....................

 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌ 10680 ப‌டித்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் தூய‌ ஓட்டு . முதிய‌வ‌ர்க‌ளின் ஓட்டுக்க‌ள் மிக‌ மிக‌ குறைவு.....................

 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்டால் மாத‌ம் மாத‌ம் கிடைக்கும் 1000ரூபாய் த‌ர‌ மாட்டோம் என்று ஆளும் அர‌சு ம‌க்க‌ளை மிர‌ட்டின‌வ‌ர்க‌ள்

ம‌க்க‌ளை அடைத்து வைத்த‌வை இந்த‌ தேர்த‌லிலும் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள்........................தேர்த‌ல் ஆனைய‌ம் எப்ப‌ தான் திருந்த‌ போகுதோ தெரியாது😁😛...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாமகவினருக்கு இது பெரும் தோல்வியே. திமுக வெல்லும், ஆனால் ஓரளவு தான் வாக்கு வித்தியாசம் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வளவு அகலமான வித்தியாசம் ஒரு அதிர்ச்சி. இது இரண்டாயிரம் ரூபாய்க்கும் (திமுகவின் கொடுப்பனவு), ஐந்நூறு ரூபாய்க்கும் (பாமகவின் கொடுப்பனவு) இருக்கும் இடைவெளி அல்ல.

நாதகவிற்கு கிடைத்த பத்தாயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளும் குறைவே, ஆனாலும் இவர்களுக்கு அந்த தொகுதியில் வாக்கு போடுவதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. 40 வீத வன்னிய மக்களும், 30 வீத பட்டியலின மக்களும் வாழும் தொகுதியில், இந்த 70 வீத மக்களில் எத்தனை பேர் நாதகவிற்கு வாக்களிப்பார்கள்? மிகுதி இருக்கும் 30 வீதத்தில் ஒரு பகுதி மட்டுமே நாதகவிற்கு வாக்களித்திருப்பார்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதிருப்தி அலைகளை பணத்தால் மட்டுமே திமுக ஈடு கட்டினார்கள் என்றில்லை. வலுவான ஒரு எதிர்த்தரப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பதே நிலவரம்.       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதிருப்தி அலைகளை பணத்தால் மட்டுமே திமுக ஈடு கட்டினார்கள் என்றில்லை. வலுவான ஒரு எதிர்த்தரப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பதே நிலவரம்.       

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி👍...............

 

ADMK போட்டி போட்டு இருந்தால் திமுக்காக்கு போன‌ அரைவாசி ஓட்டு இவ‌ர்க‌ளுக்கு கிடைச்சு இருக்கும்

 

ஜ‌யா ப‌ழ‌னிச்சாமியின் அர‌சிய‌ல் செய‌ல் பாடு அன்மைக் கால‌மாய் வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ த‌ல்ல‌☹️............ஸ்டாலின‌ விட‌ ப‌டிப்பில் பேச்சில் நாக‌ரிக‌த்தில் வாய் அட‌க்க‌த்தில் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி சிற‌ந்த‌ ம‌னித‌ர்

யாரையும்  எளிதில் தாக்கி பேச‌ மாட்டார்....................................................

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
    • இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும்.  முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள்.  இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும்.  அவ்வளவுதான்.     நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
    • நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.