Jump to content

எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இதில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது.

நாவலர் பிறந்தது 1822. இறப்பு 1879.

நாவலருடைய பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரம் யாரிடம் உள்ளது?? 🧐

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள்.  அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார்

தமிழ் சிறி

திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது  என நாம் யோசித்து இருந்தோம்.

nilmini

சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900  ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம்  ஆண்டுக்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

நாவலருடைய பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரம் யாரிடம் உள்ளது?? 🧐

ஏற்கனவே  1800 களின் இடைப்பட்டது என்று  தெரியும். 

அனால், நான் சொல்வது  தவறு என்றால், இதுவும் தவறாக இருக்க  வேண்டும், அந்த நிலையில் இருப்பவர் (துறை பேராசிரியர்) இந்த விடயத்தில் தவறு விடுவதத்திற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

https://tamilnation.org/sathyam/east/navalar_hudson.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இதில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது.

நாவலர் பிறந்தது 1822. இறப்பு 1879.

ஏன்?? தகப்பனின்   தாயின்  பூட்டன். என்றால்  சரியாக இருக்கும் ..5 தலைமுறை கடந்து விட்டது இல்லையா?? கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் வரும்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

ஏன்?? தகப்பனின்   தாயின்  பூட்டன். என்றால்  சரியாக இருக்கும் ..5 தலைமுறை கடந்து விட்டது இல்லையா?? கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் வரும்

தகப்பனின் தாய் - அப்பம்மா.

தகப்பனின் பிள்ளை (இந்த விடயத்தை பதிந்தவர்) , அப்பம்மாவுக்கு (தகப்பனின் தாய்) பேரன் / பேத்தி.

 பேரன் / பேத்தியின் சந்ததி (பிள்ளைகள்) அப்பம்மாவுக்கு பூட்டன் / பூட்டி. 

நாவலர் பதிந்தவரின் சந்ததி என்றல்லவா வருகிறது.

பின்வளமாக பாவித்து  இருக்கிறார் போல இருக்கிறது. 

பூட்டன் / பூட்டி. பேரன் / பேத்தி அப்படி பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kadancha said:

சந்ததி

நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள்.   ....7 தலைமுறை வரை   ஆண் வழியில் உடக்கு  இருக்கும் என்பார்கள்    எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு  எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு  இரத்த உறவுகள் பெண்  வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும்  ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர்  எனறு படித்த ஞாபகம் 

மற்றும் சந்ததி. என்று சொல்லாமல்   சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

வணக்கம் நில்மினி. எதிர்பாராத யாழ்கள உறவுகளின் சந்திப்பு தரும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்சிறிக்கு நன்றிகள்.

வணக்கம் பாஞ் அண்ணா. எனக்கும் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. உங்களை இதற்கு முன் சந்திக்கவிட்டாலும், சிறி உங்களை கூட்டி வந்து "யார் என்று  சொல்லுங்கள் பார்ப்போம்” என்றபோது, உடனேயே பாஞ் அண்ணா தான் என்று சொல்லிவிட்டேன். நிறைய உறவினர்களை 30, 40  வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். சிலரை முதல்தடவையாக சந்தித்தேன். என்றாலும், பாஞ் அண்ணாதான் இவர் என்று சரியாக கணித்துவிட்டேன்.  

பலகாரப்பகுதியில் சந்தித்தாலும், குசா அண்ணா வராததால் பலகாரத்தால் தலைகள் இந்தத்திரியில் உருளாது. வேற உருட்டல் தான் இந்த திரியில் நடைபெறும் கலியான வீட்டில் ஒரு பொதி, ரிசெப்ஷனில் ஒரு பொதி என்று ஒன்றுக்கு இரண்டாக கிடைத்து. வீடுவரை கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.

தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா. சுவாரசியமாக திரி போகிறது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nilmini said:

கலியான வீட்டில் ஒரு பொதி, ரிசெப்ஷனில் ஒரு பொதி என்று ஒன்றுக்கு இரண்டாக கிடைத்து. வீடுவரை கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.

தங்கையே! இதுபோதும் உங்கள் தலையும் எங்ளுடன் சேர்ந்து உருள.😆🤪

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

postmarked-stamp-from-ceylon-in-the-phil

மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை  முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை  பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் ......... !  😂

  • Thanks 1
  • Haha 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2024 at 15:34, Kandiah57 said:

நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள்.   ....7 தலைமுறை வரை   ஆண் வழியில் உடக்கு  இருக்கும் என்பார்கள்    எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு  எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு  இரத்த உறவுகள் பெண்  வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும்  ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர்  எனறு படித்த ஞாபகம் 

மற்றும் சந்ததி. என்று சொல்லாமல்   சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏

எழுத்து பிழை விட்டு விட்டேன் மன்னியுங்கள் 🙏🙏🙏 துடக்கு என்று வரவேண்டும்   உடக்கு   பிழை ஆகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2024 at 14:34, Kandiah57 said:

மற்றும் சந்ததி. என்று சொல்லாமல்   சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா???

ஆம், எப்படியும் அழைக்கலாம். உறவை சொல்லுவதற்கே சந்ததி என்பதை  பாவித்தேன்

3 minutes ago, Kandiah57 said:

துடக்கு என்று வரவேண்டும்

இப்போதும் அப்படித்தானே, ஆண் வழிதானே துடக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kadancha said:

ஆம், எப்படியும் அழைக்கலாம். உறவை சொல்லுவதற்கே சந்ததி என்பதை  பாவித்தேன்

இப்போதும் அப்படித்தானே, ஆண் வழிதானே துடக்கு.

ஆம் ஆனாலும்  இப்போது உதுகளை. எல்லாம் நான் பார்ப்பது இல்லை  எவன் பணக்காரரே   அவர்  தான் சொந்தம் துடக்கு எல்லாம்  🤣🤣🤣 இப்படியாக முன்னேறி. விட்டேன்   எனது உறவுகள் கூட அப்படி தான்    🤣🤣🙏. நீங்கள் எப்படியோ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2024 at 15:34, Kandiah57 said:

சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது 7 தலைமுறை வரை   ஆண் வழியில் துடக்கு  இருக்கும் என்பார்கள்    எனது உறவினர்கள் இந்த துடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு. உறவுகள் பெண்  வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்*

நாம் – முதல் தலைமுறை, 

தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, 

பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, 

பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை, 

ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை, 

சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை, 

பரன் + பரை – ஏழாம் தலைமுறை,

ஆக,

பரன் + பரை = பரம்பரை 

ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை – 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, 

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

ஆதாரம் கூக்கிள் ஆண்டவர்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, Paanch said:

ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை, 

சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை, 

பூட்டன் பூட்டிக்கு  அடுத்த (அல்லது முதல் தலைமுறையை?) தலைமுறையை, நாம் (இலங்கையில் ) அழைப்பது 

கொப்பாட்டன், கொப்பாட்டி

கோந்துறு, மாந்துறு 

என்றல்லவா?

நீங்கள் சொல்லியது, தமிழ்நாட்டில் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், இலங்கை தீவாகையால், பழைய சங்கத் தமிழ் பல சொற்கள் நிலைத்து விட்டது.

Edited by Kadancha
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

ஏழு தலைமுறை – 480 வருடங்கள்..

பாஞ்ச் ஐயா  இது பிழை   தயவுசெய்து சரியாக கணிக்கவும்.  🤣😂,.... 🙏, ..7*60=420 ஆகும்  .....420*2 =840     ஆயிரம் வரவில்லை 

மற்றும் உங்கள் உறவு முறைகள்  சிறப்பு   நேரத்திற்கும் முயற்ச்சிக்கும். வாழ்த்துக்கள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து

5 hours ago, Paanch said:

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்*

நாம் – முதல் தலைமுறை, 

தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, 

பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, 

பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை, 

5 hours ago, Paanch said:

ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,👇

ஏழு தலைமுறை – 480 வருடங்கள்..

எனக்கு முதல் எனது ஏழாவது பரம்பரை 1800( 1)
இல் பிறந்தால் அவருக்கு 25  இல் ஒரு மகன் பிறக்கின்றான்   1825  2
அந்த மகனுக்கு ஒரு மகன் 25  இல்  1850  3
அவருக்கும் ஒரு மகன் 25  இல்  1875 4
1875  இல் பிறந்த எனது மூதாதை தனது 25  இல்
ஒரு மகனைப் பெற்றுக் கொள்கின்றார்
அப்போது 1900  5
 
1925   6
1950  7

என்று 150  வருடங்களில் 7பரம்பரையைக் காணலாம்

அந்தக்காலத்தில் குழந்தைப் பருவத்திலேயே திருமணங்கள்    நடந்து வந்திருப்பதால் 150 வருடங்களை விடக் குறைந்த வருடங்களிலேயே
7அல்லது 8பரம்பரையினரைக் காணலாம்  

நான் 25  வயதில் தந்தை
எனக்கும் ஒரு பேத்தி இப்போது இருக்கின்றாள்
எனது அப்பா இன்றும் உயிருடன் இருந்தால் அவருக்கு 100  வயது
தனது 100  வது வயதில் பூட்டப்பிள்ளையைக் கொண்டிருப்பார்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை  முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை  பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் .

இந்த தபால் முத்திரையின் அசல் என்னிடம் இருக்கிறது. அத்துடன் ஆறுமுகநாவலர் பாடசாலையின் 150 ஆவது நிறைவு விழாவுக்கு ஏன்னை ஒருநாள் தலைமை விருந்தினராக 2006 ஆம் ஆண்டு அழைத்திருந்தனர். அப்போது எல்லா ஆதீனங்கள், இலங்கை இந்து கலாச்சார அமைச்சர், ஆறு திருமுருகன் மற்றும் பலர் அந்த  5 நாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்தார்கள்.அப்போது எனக்கு இந்திய தபால் துறை 150 ஆண்டு விழாவை கௌரவித்து  வெளியிட்ட முத்திரையும், ஒரு கடிகார கொம்பனி வெளியிட்ட நாவலர் படம் போட்ட கடிகாரமும் பரிசளித்தார்கள்.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

மிக்க மகிழ்ச்சி சகோதரி...... உங்களுடன் அளவிலாவது பெரும் பாக்யம்......!  🙏

9 hours ago, வாத்தியார் said:

நடந்து

எனக்கு முதல் எனது ஏழாவது பரம்பரை 1800( 1)
இல் பிறந்தால் அவருக்கு 25  இல் ஒரு மகன் பிறக்கின்றான்   1825  2
அந்த மகனுக்கு ஒரு மகன் 25  இல்  1850  3
அவருக்கும் ஒரு மகன் 25  இல்  1875 4
1875  இல் பிறந்த எனது மூதாதை தனது 25  இல்
ஒரு மகனைப் பெற்றுக் கொள்கின்றார்
அப்போது 1900  5
 
1925   6
1950  7

என்று 150  வருடங்களில் 7பரம்பரையைக் காணலாம்

அந்தக்காலத்தில் குழந்தைப் பருவத்திலேயே திருமணங்கள்    நடந்து வந்திருப்பதால் 150 வருடங்களை விடக் குறைந்த வருடங்களிலேயே
7அல்லது 8பரம்பரையினரைக் காணலாம்  

நான் 25  வயதில் தந்தை
எனக்கும் ஒரு பேத்தி இப்போது இருக்கின்றாள்
எனது அப்பா இன்றும் உயிருடன் இருந்தால் அவருக்கு 100  வயது
தனது 100  வது வயதில் பூட்டப்பிள்ளையைக் கொண்டிருப்பார்🙏

அப்போதெல்லாம் பெண்கள் பொதுவாக வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.....பெண்கள் 13 / 14 வயதுக்குள் .....எனது அம்மம்மா , ஆச்சி போன்றோர் அப்படித்தான்...... அதுகளுக்கு ஒரு சோறும் ஒரு சாறும் (கறி) சமைக்கத் தெரிந்தால் போதும்......அதுதான் அதிகபட்ச தகுதி .........    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பூட்டன் பூட்டிக்கு  அடுத்த (அல்லது முதல் தலைமுறையை?) தலைமுறையை, நாம் (இலங்கையில் ) அழைப்பது 

கொப்பாட்டன், கொப்பாட்டி

கோந்துறு, மாந்துறு 

என்றல்லவா?

நீங்கள் சொல்லியது, தமிழ்நாட்டில் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், இலங்கை தீவாகையால், பழைய சங்கத் தமிழ் பல சொற்கள் நிலைத்து விட்டது.

தமிழ்நாடு தனிநாடல்ல அது இந்தியாவில் இருக்கிறது, இந்தியாவில் இருக்கின்ற பல மொழிகள் சங்கத் தமிழோடு சேர்ந்து இனிமை பெற்று உருவான தமிழ் சொற்கள் தமிழ்நாட்டுத் தமிழில் ஒலிப்பது வரவேற்கக்கூடியதே.

இலங்கையில் அப்படியல்ல, இருமொழிகள் மட்டும் பேசும் இரு இனங்களைக் கொண்டநாடு. அதில் ஒரு மொழிசார்ந்த இனமான சிங்களத்தை தமிழ்மொழி பேசுபவன் பேசினாலே, பேசியவன் பிடரிக்குச் சேதம் என்று பழமொழியே இருக்கும்போது…சங்கத் தமிழோடு சேர்ந்து சிங்களமும் உருவாக்கிய  சொற்களைப் பாவித்தால் அது தமிழன் உயிருக்கே உலைவைக்கும்.😳

பழைய சங்கத் தமிழ் சொற்கள்  இலங்கையில் நிலைத்து நிற்பதும் நன்மைக்கானதே.🤔

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 hours ago, Kandiah57 said:

பாஞ்ச் ஐயா  இது பிழை   தயவுசெய்து சரியாக கணிக்கவும்.  🤣😂,.... 🙏, ..7*60=420 ஆகும்  .....420*2 =840     ஆயிரம் வரவில்லை 

மற்றும் உங்கள் உறவு முறைகள்  சிறப்பு   நேரத்திற்கும் முயற்ச்சிக்கும். வாழ்த்துக்கள்  

On 22/6/2024 at 18:20, Paanch said:

ஆதாரம் கூக்கிள் ஆண்டவர்.

கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!!

இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும‌ண‌ நிக‌ழ்வு உங்க‌ளின் ச‌ந்திப்புக்க‌ள் . சொந்த‌ முறை இவை அனைத்தையும் அழ‌காய் எழுதி இருந்தீங்க‌ள் அக்கா 🥰🙏. த‌மிழ் சிறி அண்ணா என‌க்கு க‌ட‌ந்த‌ வ‌ருட‌மே சொன்னார் நீங்க‌ள் அவ‌ரின் சொந்த‌ம் என்று . இன்பமோ துன்பமோ எனது மூத்த‌ அண்ண‌ன் போல் த‌மிழ் சிறி அண்ணா கூட‌ எதையும் ப‌கிர்ந்து கொள்வேன். த‌மிழ்சிறி அண்ணாவும் ஒளிவும‌றைவு இல்லாம‌ எல்லாத்தையும் சொல்லுவார் . க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லாம‌ ப‌ழ‌கும் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ந‌ல்ல‌ உற‌வு🥰🙏 ...........................

தமிழ் சிறி அண்ணா வ‌ய‌தில் என‌க்கு மாமா மார் இருக்கினம் 

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று கூப்பிட்ட‌தால் இன்று வ‌ரை அண்ணா என்று தான் தமிழ் சிறி அண்ணாவை அழைக்கிற‌ நான்

இன்னொரு முக்கிய‌மான‌ மேட்டார்

ஈழ‌த்து அர‌விந்த‌ சாமிய‌ யாழில் எல்லாரும் தாத்தா தாத்தா என்று தான்  அழைப்ப‌து ஆனால் அவ‌ரின் வ‌ய‌துக்கும் இள‌மைக்கும் அவ‌ர் தாத்தா கிடையாது யாழில் 2008க‌ளில் இணைந்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை  தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சி

அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை கைவிட‌ முடியாது , அது வேற‌ யாரும் இல்லை உங்க‌ட‌ அண்ணா குமார‌சாமி..................................

த‌மிழ்சிறி அண்ணாவின் ம‌க‌ன் அழ‌காய் த‌மிழில் க‌தைக்கிறார் என்று எழுதி இருந்தீங்க‌ள் உண்மையில் வாசிக்க‌ ச‌ந்தோஷ‌மாய் இருந்த‌து...................இப்ப‌டி ம‌ற்ற‌ பெற்றோர்க‌ளும் பிள்ளைக‌ளுக்கு த‌மிழ் சொல்லிக் கொடுத்தால் ஆயிர‌ம் வ‌ருட‌ம் ஆனாலும் புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌மிழ் அழியாது🙏🥰......................

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

மிக்க மகிழ்ச்சி சகோதரி...... உங்களுடன் அளவிலாவது பெரும் பாக்யம்......!  🙏

மிகவும் நன்றி சுவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2024 at 01:57, satan said:

ஆறுமுக நாவலரைச்சாட்டி சிறியரோட சொந்தங்கொண்டாட ஆளாளுக்கு கிளம்ப போறார்கள்.

இதோ 6மணித்தியாலம் முந்தியே வீரப்பையன் 26 கிளம்பிவிட்டார்👇😆

6 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா என‌க்கு க‌ட‌ந்த‌ வ‌ருட‌மே சொன்னார் நீங்க‌ள் அவ‌ரின் சொந்த‌ம் என்று . இன்பமோ துன்பமோ எனது மூத்த‌ அண்ண‌ன் போல் த‌மிழ் சிறி அண்ணா கூட‌ எதையும் ப‌கிர்ந்து கொள்வேன். த‌மிழ்சிறி அண்ணாவும் ஒளிவும‌றைவு இல்லாம‌ எல்லாத்தையும் சொல்லுவார் . க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லாம‌ ப‌ழ‌கும் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ந‌ல்ல‌ உற‌வு🥰🙏 ...........................

தமிழ் சிறி அண்ணா வ‌ய‌தில் என‌க்கு மாமா மார் இருக்கினம் 

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று கூப்பிட்ட‌தால் இன்று வ‌ரை அண்ணா என்று தான் தமிழ் சிறி அண்ணாவை அழைக்கிற‌ நான்

இன்னொரு முக்கிய‌மான‌ மேட்டார்

ஈழ‌த்து அர‌விந்த‌ சாமிய‌ யாழில் எல்லாரும் தாத்தா தாத்தா என்று தான்  அழைப்ப‌து ஆனால் அவ‌ரின் வ‌ய‌துக்கும் இள‌மைக்கும் அவ‌ர் தாத்தா கிடையாது யாழில் 2008க‌ளில் இணைந்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை  தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சி

அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை கைவிட‌ முடியாது , அது வேற‌ யாரும் இல்லை உங்க‌ட‌ அண்ணா குமார‌சாமி..................................

த‌மிழ்சிறி அண்ணாவின் ம‌க‌ன் அழ‌காய் த‌மிழில் க‌தைக்கிறார் என்று எழுதி இருந்தீங்க‌ள் உண்மையில் வாசிக்க‌ ச‌ந்தோஷ‌மாய் இருந்த‌து...................இப்ப‌டி ம‌ற்ற‌ பெற்றோர்க‌ளும் பிள்ளைக‌ளுக்கு த‌மிழ் சொல்லிக் கொடுத்தால் ஆயிர‌ம் வ‌ருட‌ம் ஆனாலும் புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌மிழ் அழியாது🙏🥰......................

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2024 at 14:37, வீரப் பையன்26 said:

திரும‌ண‌ நிக‌ழ்வு உங்க‌ளின் ச‌ந்திப்புக்க‌ள் . சொந்த‌ முறை இவை அனைத்தையும் அழ‌காய் எழுதி இருந்தீங்க‌ள் அக்கா 🥰🙏. த‌மிழ் சிறி அண்ணா என‌க்கு க‌ட‌ந்த‌ வ‌ருட‌மே சொன்னார் நீங்க‌ள் அவ‌ரின் சொந்த‌ம் என்று . இன்பமோ துன்பமோ எனது மூத்த‌ அண்ண‌ன் போல் த‌மிழ் சிறி அண்ணா கூட‌ எதையும் ப‌கிர்ந்து கொள்வேன். த‌மிழ்சிறி அண்ணாவும் ஒளிவும‌றைவு இல்லாம‌ எல்லாத்தையும் சொல்லுவார் . க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லாம‌ ப‌ழ‌கும் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ந‌ல்ல‌ உற‌வு🥰🙏 ...........................

தமிழ் சிறி அண்ணா வ‌ய‌தில் என‌க்கு மாமா மார் இருக்கினம் 

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று கூப்பிட்ட‌தால் இன்று வ‌ரை அண்ணா என்று தான் தமிழ் சிறி அண்ணாவை அழைக்கிற‌ நான்

இன்னொரு முக்கிய‌மான‌ மேட்டார்

ஈழ‌த்து அர‌விந்த‌ சாமிய‌ யாழில் எல்லாரும் தாத்தா தாத்தா என்று தான்  அழைப்ப‌து ஆனால் அவ‌ரின் வ‌ய‌துக்கும் இள‌மைக்கும் அவ‌ர் தாத்தா கிடையாது யாழில் 2008க‌ளில் இணைந்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை  தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சிஅந்த‌ ப‌ழ‌க்க‌த்தை
கைவிட‌ முடியாது , அது வேற‌ யாரும் இல்லை உங்க‌ட‌ அண்ணா குமார‌சாமி..................................

த‌மிழ்சிறி அண்ணாவின் ம‌க‌ன் அழ‌காய் த‌மிழில் க‌தைக்கிறார் என்று எழுதி இருந்தீங்க‌ள் உண்மையில் வாசிக்க‌ ச‌ந்தோஷ‌மாய் இருந்த‌து...................இப்ப‌டி ம‌ற்ற‌ பெற்றோர்க‌ளும் பிள்ளைக‌ளுக்கு த‌மிழ் சொல்லிக் கொடுத்தால் ஆயிர‌ம் வ‌ருட‌ம் ஆனாலும் புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌மிழ் அழியாது🙏

வணக்கம் வீரப்பபையன். சிறி எல்லோருக்கும் ஒரு நல்ல சொந்தம், நட்பு. கு சா அண்ணா தாத்தாவாக இருக்குமோ நானும் எண்ணியதுண்டு. அப்படி இப்பவும் நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இன்றுடன் அவரை வேறு மாதிரி சித்தரித்து பார்ப்பார்கள். சிறியின் மகளின் கல்யாணம் மற்று ஜெர்மனி பற்றி மேலும் விரைவில் எழுதுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2024 at 12:39, Paanch said:

சங்கத் தமிழோடு சேர்ந்து சிங்களமும் உருவாக்கிய  சொற்களை

சங்கத்தமிழோடு எப்போது சிங்களம் கலந்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

சங்கத்தமிழோடு எப்போது சிங்களம் கலந்து?

சிங்களம் பலுக்கல் பொருள் தமிழ் பொருள் வகை
ආදායම් ஆதாயம வருமானம் ஆதாயம் நயம் வணிகம்
අක්කා அக்கா தமக்கை அக்கா தமக்கை உறவுமுறை
අම්බලම அம்பலம தெருவோரத் தங்குமிடம் அம்பலம் பொதுவிடம் நாடோறும்
ඇම්බැට්ටය எம்பெட்டய நாவிதன் அம்பட்டன் நாவிதன் வணிகம்
ආණ්ඩුව ஆண்டுவ அரசாங்கம் ஆண்டான் தலைவர் நடப்பிக்கை
ආප්ප ஆப்ப அப்பம் அப்பம் அப்பம் உணவு
අරලිය அரலிய அரளி அரளி அரளி நிலைத்திணையியல்
අවරිය அவரிய கருநீல நிலைத்திணை அவுரி கருநீல நிலைத்திணை நிலைத்திணையியல்
චීත්තය (ச்)சீத்தய சீத்தை சீத்தை சீத்தை வணிகம்
එදිරිය எதிரிய எதிர்ப்பு, பகைமை எதிரி போட்டியாளர், பகைவன் படை
ඉඩම இடம தளம், நிலம் இடம் இடம், தளம் அமைப்பு
ඊළ ஈழ ஈழை ஈழை ஈழை நாடோறும்
ඉලක්කය இலக்கய குறி இலக்கு குறி படை
ඉළන්දාරියා இழன்தாரியா இளைய மனிதன் இளந்தாரி இளைய மனிதன் நாடோறும்
ඉළවුව இழவுவ இறப்பு, இறுதிச் சடங்கு இழவு இறப்பு நாடோறும்
ඉරට්ට இரட்ட இரட்டை, இரட்டையெண் இரட்டை இரட்டை, இரட்டையெண் வணிகம்
කඩල (க்)கடல கடலை கடலை கடலை உணவு
කඩය (க்)கடய கடை கடை கடை வணிகம்
කඩියාලම (க்)கடியாலம கடிவாளம் கடிவாளம் கடிவாளம் படை
කංකාණියා (க்)கங்(க்)காணியா மேற்பார்வையாளர் கங்காணி கண்காணிப்பவர் நடப்பிக்கை
කලඳ (க்)கல(ந்)த எடைக்கான சிறு அலகு கழஞ்சு 1.77 கிராம் எடை வணிகம்
කලවම (க்)கலவம கலவை, கலப்பு கலவை கலவை நாடோறும்
කාල (க்)கால காற்பங்கு கால் காற்பங்கு வணிகம்
කළුදෑවා (க்)கழுதேவா கழுதை கழுதை கழுதை நாடோறும்
කම්බිය (க்)கம்பிய கம்பி கம்பி கம்பி வணிகம்
කාන්දම (க்)கான்தம காந்தம் காந்தம் காந்தம் வணிகம்
කණ්ණාඩිය (க்)கண்ணாடிய கண்ணாடி, மூக்குக் கண்ணாடி கண்ணாடி கண்ணாடி, மூக்குக் கண்ணாடி நாடோறும்
කප්පම (க்)கப்பம வரி கப்பம் வரி படை
කප්පර (க்)கப்பர சிறு கப்பல் கப்பல் கப்பல் வணிகம்
කැරපොත්තා (க்)கெர(ப்)பொத்தா கரப்பான் கரப்பான் கரப்பான் நாடோறும்
කරවල (க்)கரவல உலர்ந்த மீன் கருவாடு உலர்ந்த மீன் உணவு
කාසිය (க்)காசிய நாணயம் காசு சிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம் வணிகம்
කට්ටුමරම් (க்)கட்டுமரம கட்டுமரம் கட்டுமரம் கட்டுமரம் வணிகம்
කිට්ටු (க்)கிட்டு நெருக்கம், அருகே கிட்டு நெருக்கம், அருகே நாடோறும்
කොඩිය (க்)கொடிய கொடி கொடி கொடி நடப்பிக்கை
කොල්ලය (க்)கொல்லய கொள்ளை கொள்ளை கொள்ளை படை
කොම්බුව (க்)கொம்புவ இன் பெயர் கொம்பு ளகரத்தின் பெயர் நாடோறும்
කොණ්ඩය (க்)கொண்டய கொண்டை கொண்டை கொண்டை நாடோறும்
කොත්තමල්ලි (க்)கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி நிலைத்திணையியல்
කෝවිල (க்)கோவில இந்துக் கோயில் கோயில் கோயில் நாடோறும்
කුඩය (க்)குடய குடை குடை குடை நாடோறும்
කූඩය (க்)கூடய கூடை கூடை கூடை நாடோறும்
කූඩුව (க்)கூடுவ கூடு, கூண்டு கூடு கூடு, சிறு பெட்டி நாடோறும்
කුරුම්බා (க்)குரும்பா இளந்தேங்காய் குரும்பை இளந்தேங்காய் உணவு
කුලිය (க்)குலிய வாடகை கூலி வாடகை நடப்பிக்கை
මලය மலய மலைநாடு மலை வரை இடப்பெயர்
මරක්කලය மரக்கலய படகு மரக்கலம் படகு மீன்பிடி
මස්සිනා மஸ்சினா மச்சான் மச்சினன் மச்சான் உறவுமுறை
මුදල முதல பணம் முதல் முதல் வணிகம்
මුදලාලි முதலாலி வணிகர், கடையொன்றின் உரிமையாளர் முதலாளி வணிகர் வணிகம்
මුදලි முதலி பெயரின் பகுதியொன்று முதலியார் குலப் பெயர் ஒன்று பெயர்
මුරුංගා முருங்கா முருங்கை முருங்கை முருங்கை உணவு[1]
නාඩගම நாடகம மேடை நாடகம் நாடகம் நாடகம், மேடை நாடகம் பண்பாடு
නංගී நங்கீ தங்கை நங்கை இளம்பெண் உறவுமுறை
ඕනෑ ஓனே வேண்டும் வேண்டும் வேண்டும் நாடோறும்
ඔත්තේ ஒத்தே ஒற்றை எண் ஒற்றை ஒற்றை எண் வணிகம்
පදක්කම (ப்)பதக்கம பதக்கம் பதக்கம் பதக்கம் நடப்பிக்கை
පළිය (ப்)பழிய பழி பழி குற்ற உணர்வு, பழி படை
පරිප්පු (ப்)பரிப்பு பருப்பு பருப்பு பருப்பு உணவு
පත්තු කරනවා (ப்)பத்து (க்)கரனவா ஒளியூட்டு, தீ வை பற்று தீப்பிடி நாடோறும்
පොරය (ப்)பொரய போர் போர் போர் படை
පොරොන්දුව (ப்)பொரொன்துவ உடன்படிக்கை, உறுதிமொழி பொருந்து பொருந்து, உடன்படு நாடோறும்
පොරොත්තුව (ப்)பொரொத்துவ தாழ்த்தல், காத்திருத்தல் பொறுத்து காத்திருத்தல் நாடோறும்
සල්ලි சல்லி பணம் சல்லி நாணயம் வணிகம்
සෙරෙප්පුව செரெப்புவ செருப்பு செருப்பு செருப்பு நாடோறும்
සුරුට්ටුව சுருட்டுவ சுருட்டு சுருட்டு சுருட்டு நாடோறும்
තක්කාලි (த்)தக்காலி தக்காளி தக்காளி தக்காளி உணவு
තල්ලු කරනවා (த்)தல்லு (க்)கரனவா தள்ளு தள்ளு தள்ளு நாடோறும்
තනි (த்)தனி தனி தனி தனி நாடோறும்
තරම (த்)தரம அளவு, நிலை, எண்ணிக்கை தரம் தரம் வணிகம்
තාත්තා (த்)தாத்தா தந்தை தாத்தா தாத்தா உறவுமுறை
තට්ටු කරනවා (த்)தட்டு (க்)கரனவா தட்டு தட்டு தட்டு நாடோறும்
උඩැක්කිය உடெக்கிய குறுகிய மேளமொன்று உடுக்கை குறுகிய மேளமொன்று நாடோறும்
උදව්ව உதவ்வ உதவி உதவி உதவி நாடோறும்
උලුක්කුව உலுக்குவ சுளுக்கு சுளுக்கு சுளுக்கு நாடோறும்
උරුමය உருமய வழிவழி உரிமை, உரித்துடைமை உரிமை உரித்துடைமை, உரிமை நடப்பிக்கை
වෙඩි තියනවා வெடி (த்)தியனவா சுடு வெடி சூடு, வெடி படை
වෙරි வெரி குடித்த நிலை வெறி பித்து நாடோறும்ண
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.