Jump to content

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CR2.png?resize=606,375&ssl=1

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

கடந்த 20 வருடமாக சட்டன் (Sutton) பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார்.

சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக கூறுகிறார்.

ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும், இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டத் தொழிலைத் தொடர்ந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணித் தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன் கவுன்சிலராக இருந்து, மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனஞ் செலுத்துகிறார்.

தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கூட்டிக் காட்டியுள்ளார்.

CR1.png?resize=600,396&ssl=1

சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகிய இடங்களில் வசிக்கும் பலருடன் தான் பேசி வருவதாக தெரிவித்த அவர், வாடகை, வீட்டிற்கான கட்டுத்தொகை, மற்றும் சேவைகளிற்கான கட்டணங்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அவர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார்.

அதிகரிக்கும் குற்றச் செயல்கள், தேசிய சுகாதார சேவைக்கான காத்திருப்புப் பட்டியல், வீட்டுப் பிரச்சினைகள், தெருக்கள் மற்றும் பசுமையான இடங்கள் குறித்த சிக்கல்கள் என எமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்வன குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியன சிறப்புற இருக்கும் தகுதிவாய்ந்தவை. பிரிட்டனின் எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்தைத் தொழிற்கட்சி கொண்டுள்ளது. அத்துடன் பிரிட்டனின் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் தேவையான மாற்றத்தையும் அது வழங்கும். சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்தப் பொதுத் தேர்தல் அமைகின்றது.

அரசியல் என்பது பொதுச் சேவையாக இருக்க வேண்டும் என தான் நம்புவதாக கூறுகின்ற அவர், அனைத்து குடும்பங்களுக்கும் சேவை செய்வதும், பிரித்தானிய சமூகத்துக்கு பக்கபலமாக இருப்பதும் தனக்குரிய மேன்மையான செயல்கள் எனவும் கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) வலியுறுத்தி உள்ளார்.

CR3.png?resize=600,600&ssl=1

https://athavannews.com/2024/1389293

@ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெல்ல வாய்ப்பில்லை!

தமிழர்களாக இருக்கும் சிலர், இரண்டாம் தலைமுறை உட்பட, பல்வேறு கட்சிகளின் கீழ் போட்டியிட்டு தமிழரது வாக்குகளை “சும்மா” எடுக்கலாம் என்று நினைக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போட்டியிடும் தொகுதி லிப்டெம் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டது. இந்த முறை தொழிட்கட்சியே பெரும்பான்மை பலத்துடன் வெல்லக்கூடிய சாத்தியம் இருந்தாலும் லிப்டெம் கட்சியின் தலைவர்எட்வேர்ட் டேர்பிக்கு தமிழர்களிடத்தில் வசல்வாக்கு அதிகம். லிப்டெம்க்குப் போகும் தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தொழில் கட்சி தமிழரை நிறுத்தியிருக்கலாம். எது எப்படி இருந்த போதிலும் தமிழர்கள் அவருக்கு தமது வாக்குகளைப் அளித்து தமிழர்களின்குரல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஸ்ரட் போட் தொகுதியில் போட்டியிடும்  உமா குமரன் வெ;வதற்கு சாத்தியம் உண்டு.கடந்த தேர்தலில் கரோ 2000 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர் தொகுதி மாறிநிற்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2024 at 07:10, கிருபன் said:

தமிழர்களாக இருக்கும் சிலர், இரண்டாம் தலைமுறை உட்பட, பல்வேறு கட்சிகளின் கீழ் போட்டியிட்டு தமிழரது வாக்குகளை “சும்மா” எடுக்கலாம் என்று நினைக்கின்றனர். 

இரண்டாம் தலைமுறை கூட அப்படியான எண்ணங்கள் வைத்திருப்பை ஏற்று கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் ஜூலை 2024* 

 

இலங்கை வம்சாவளி வேட்பாளர்கள்

 

*கன்சர்வேட்டிவ் கட்சி*

 

*ரணில் ஜெயவர்தன* 

ஹாம்ப்ஷயர் வட கிழக்கு 

2015 முதல் எம்.பி

*கவின் ஹரன்* 

Southend மற்றும் ரோச்போர்டில் தெற்கு 

 

*தொழிலாளர் கட்சி*

 

*உமா குமரன்* 

ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் வில் 

*கிறிஷ்னி ரெஷஹரன்*

சட்டன் மற்றும் சீம் 

 

*தாராளவாத ஜனநாயகவாதிகள்*

 

*கமலா குகன்*

ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட்

 

*பசுமைக் கட்சி*

 

*சரித் குணவர்தன* 

சவுத்கேட் மற்றும் வூட்கிரீன் 

*நரணி ருத்ரராஜன்* 

ஹேம்னர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் 

 

*சீர்திருத்த UK*

 

*மயூரன் செந்தில்காந்தன்*

எப்சம் மற்றும் ஈவெல் 

*லூசியன் பெர்னாண்டோ*

ஹேஸ்டிங்ஸ் மற்றும் ரை

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை நடைபெறவுள்ள பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் அறுவர் போட்டி

Published By: VISHNU   03 JUL, 2024 | 02:35 AM

image
 

(நா.தனுஜா)

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரிட்டன் பொதுத்தேர்தல் வியாழக்கிழமை (4) நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன்வாழ் ஈழத்தமிழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதன்படி இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட அறுவர் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் மற்றும் டெவினா போல், கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன், த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா-ராஜன், லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் ஆகியோரே வியாழக்கிழமை (4) நடைபெறவிருக்கும் பிரிட்டன் பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் இலங்கை பின்னணியைக்கொண்ட தமிழர்களாவர்.

அவர்கள் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தமது அணுகுமுறை மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு என்பன குறித்து வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் வருமாறு:

உமா குமாரன்

கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்களும், போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தவர்களுமாவர். '2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இற்றைவரை ஒருவர்கூட பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நம்பமுடியவில்லை. இப்போரின்போது இடம்பெற்ற உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் ஒருபோதும் மறவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் பட்சத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதையும், நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக சகல கட்டமைப்புக்களுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவேன்.'

கெவின் ஹரன்

பிரிட்டனில் பிறந்த கெவின் ஹரனின் தந்தை யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், 1970 களின் இறுதியில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தவருமாவார். 'யுத்தத்தின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும். இலங்கை உரோம் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானமொன்றைக் கொண்டுவருவதன் ஊடாகவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தமுடியும். இவ்விடயத்தில் இராஜதந்திர அணுகுமுறை இன்றியமையாததாகும்.'

நாராணி ருத்ரா-ராஜன்

'இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மிகமோசமான முறையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டபோதும், 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடியின்போதும் பிரிட்டன் அரசாங்கங்கள் உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளன. இருப்பினும் எமது கட்சி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் அவசியமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கும்'

 டெவினா போல்

'சமாதானம், அங்கீகாரம் மற்றும் நீதி என்பவற்றை அடைந்துகொள்வதற்கான தமிழர்களின் போராட்டத்தில் தொழிற்கட்சி எப்போதும் தோளோடு தோள் கொடுத்துவந்திருக்கின்றது. அதன்படி நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் ஈழத்தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் எமது கட்சியின் ஏனைய தலைவர்களுடன் இணைந்து, அந்நோக்கத்தை முன்னிறுத்தி செயலாற்றுவேன்.'

https://www.virakesari.lk/article/187545

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamils in Britain Election: நாடாளுமன்றத்தில் நுழைய இவர்கள் ஆசைப்படுவது ஏன்?

பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் ஜூலை 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பல்வேறு தொகுதிகளில் எம்.பி.க்கள் பதவிக்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்கள் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டது என்ன?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் சதோச மனித புதைகுழி "ஸ்கேன்" செயல்பாடு ஆரம்பம்; காணொளி, புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு தடை மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள்  இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198110
    • எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்;   https://thinakkural.lk/article/311839
    • அதே. இது ஒரு இடியாப்ப சிக்கல். எந்த ஒரு தனி நபரோ நாடோ தனி முடிவுகளை எடுத்து தள்ளி நிற்க முடியாது. கூட்டு முயற்சியை விட்டு தனித்தலின் மறுபக்கம் அவர்களையே புதைத்து விடும்.  நேட்டோவில் கூட அவ்வாறு தான். 
    • நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1407540
    • இது சரி தான்    சின்ன மேளம்      மேளத்தை குறிக்காது     இளம்பெண்கள் நடனத்தைக் குறிக்கும்   உதாரணமாக சினிமாவில் குத்தாட்டம் போடுறது போல்   தனியாக இரண்டு இளம்பெண்கள் ஆடுவார்கள்   1970. ஆம் ஆண்டு பார்த்து உள்ளேன்    கைதடியில்.  ஒரு திருமண நிகழ்வில்   நாலாவது சடங்கு அன்று   மணமக்கள் முன்னிலையில் ஆடினார்கள்.   முல்லைத்தீவு சேர்ந்த சின்ன மேளக் கோஸ்டி 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.