Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
02 JUL, 2024 | 01:28 PM
image
 
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர்  முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01)  இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார்.

குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. 

முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/187477

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. 

முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

😔........

முதல் தடவையாக இப்படி நடந்ததை கேள்விப்படுகின்றேன். முரல் மீன்களால் இப்படி ஒரு ஆபத்து இருக்கின்றது என்று கூட நினைத்ததில்லை.......😔 

  • கருத்துக்கள உறவுகள்

இது நடப்பது அருமை தான்.

பொதுவாக எகிறுபவை.

அவை நீரில் இருந்து எகிறும் போது, காற்றுப்பை (swim / air bladder) நிரம்பி முழு உடலும் முறுக்கெடுத்து, கிட்டத்தட்ட நீண்ட ஆட்டிலறி ஷெல் போலத்தான் வரும். 

இந்த குடும்ப மீன்களால் (முரல், sword fish,  மயில் மீன் (sail fish), பாய் மீன் (marlin குடும்பம்) இப்படியான இறப்பு அல்லது பலத்த காயம், அங்கங்கள் துண்டிக்கப்படுதல் அவ்வப்போது நடக்கிறது.

பெரிய சீலா மீன் கூட தடித்த ஈட்டியாக வரும் தன்மை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:
3 hours ago, ஏராளன் said:
குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. 

முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

😔........

முதல் தடவையாக இப்படி நடந்ததை கேள்விப்படுகின்றேன். முரல் மீன்களால் இப்படி ஒரு ஆபத்து இருக்கின்றது என்று கூட நினைத்ததில்லை

இது தற்செயலாக கழுத்துப் பகுதியில் குத்தியிருக்கலாமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

😔........

முதல் தடவையாக இப்படி நடந்ததை கேள்விப்படுகின்றேன். முரல் மீன்களால் இப்படி ஒரு ஆபத்து இருக்கின்றது என்று கூட நினைத்ததில்லை.......😔 

4 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தற்செயலாக கழுத்துப் பகுதியில் குத்தியிருக்கலாமோ?

தற்செயல் தான் அண்ணை. கூடுதலாக வயிற்றுப் பகுதிகளை தான் தாக்குவதாக பெரியவர்கள் கதைப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

இது நடப்பது அருமை தான்.

பொதுவாக எகிறுபவை.

அவை நீரில் இருந்து எகிறும் போது, காற்றுப்பை (swim / air bladder) நிரம்பி முழு உடலும் முறுக்கெடுத்து, கிட்டத்தட்ட நீண்ட ஆட்டிலறி ஷெல் போலத்தான் வரும். 

இந்த குடும்ப மீன்களால் (முரல், sword fish,  மயில் மீன் (sail fish), பாய் மீன் (marlin குடும்பம்) இப்படியான இறப்பு அல்லது பலத்த காயம், அங்கங்கள் துண்டிக்கப்படுதல் அவ்வப்போது நடக்கிறது.

பெரிய சீலா மீன் கூட தடித்த ஈட்டியாக வரும் தன்மை உள்ளது.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தற்செயலாக கழுத்துப் பகுதியில் குத்தியிருக்கலாமோ?

மேலே @Kadancha சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, அப்படி வந்த சீலா ஒன்று அந்த மீனவரின் கழுத்துப் பகுதியை பலமாக காயப்படுத்தி விட்டது என்றே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

மேலே @Kadancha சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, அப்படி வந்த சீலா ஒன்று அந்த மீனவரின் கழுத்துப் பகுதியை பலமாக காயப்படுத்தி விட்டது என்றே தெரிகின்றது.

அத்துடன் தண்ணீருக்குள் நிற்பதால் ஏற்பட்ட அதிக ரத்த வெளியேற்றமும் காரணமாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அத்துடன் தண்ணீருக்குள் நிற்பதால் ஏற்பட்ட அதிக ரத்த வெளியேற்றமும் காரணமாக இருக்கலாம். 

ஊரில் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். சில நாட்களில் வீட்டில் ஏதாவது நடந்து இரத்தம் நிற்காமல் ஓடும் போதும் கூட, இன்று இப்பொழுது கடல் பெருக்கு போல என்று கூட சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், பின்னர் படித்த விஞ்ஞான விளக்கங்கள் இதை நிராகரித்தன..........

எதுவாயினும், கடலில் காயம் பட்ட பின்னர், கரைக்கு வந்து முறையான சிகிச்சை கிடைப்பதற்கு அதிக நேரம் எடுத்திருக்கக்கூடும்.   

Edited by ரசோதரன்

இங்கு சில வருடங்களுக்கு முன், ஒரு தமிழ் இளம் பெண், கடலில் (இங்கு நாம் பெரும் ஏரிகளை கடல் என்றே சொல்வோம்) குளித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு கூரான தடி, தொண்டையில் குத்தி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரிதான், 

அது என்ன ""தாக்குதல் " ? 

கரந்தடித் தாக்குதலாக இருக்குமோ? அல்லது பதுங்கித் தாக்குதலாக இருக்குமோ? 

😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அது என்ன ""தாக்குதல் " ? 

முரல் மீன் குத்தி நபர் பலி!

முரல் மீன்.. அதிசய நலனை தரும் "ஊசி ஊசி மீனு".. ராமநாதபுர கடலில்  முட்டிமோதும் "முரல் மீன்கள்" | Health Benefits of Mural Fish and Do you  know Needlefish is the Best Healthy food ...

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார்.

குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ எனத் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/305109

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.