Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றை மாற்றும் தேர்தல் - ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார

இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அநுர குமார கொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) தனது வாக்கை அளித்தார்.  

வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை

இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் என்று நான் நினைக்கிறேன். காலங்காலமாக, அரசாங்கங்களை அமைப்பதற்கும், அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தலைவர்களை மாற்றுவதற்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இலங்கை வரலாற்றை மாற்றும் தேர்தல் - ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார | Presidential Candidate Anura Kumara Voted

இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன்.

அதேபோன்று வெற்றிக்குப் பிறகு அனைவரும் அமைதியாக இருக்கவும், ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அதுவாகும்.

எந்தவொரு நபரும் அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு பணியாற்றலாம். அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/presidential-candidate-anura-kumara-voted-1726919353

  • Replies 185
  • Views 9.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிப

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கி   ஒற்றுமையாக தொடர்சசியாக அரசியல் வேலைதிட்டங்களை முன்னெடுத்து

நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கினால் எப்படி காலத்தை இழுத்தடித்து அரசியல் செய்வது    சிறிதரன் சொல்லி இருக்கின்றார் எதிர்காலத்திலும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் பிரிவினைகளை ஊக்குவிக்காத அமைதியான தேர்தலாக அமைந்திருந்தது - ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 

Published By: DIGITAL DESK 3   23 SEP, 2024 | 02:55 PM

image
 

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது என  ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு நாட்டுக்கு வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டருந்த நிலையில், தேர்தல் நிறைவடைந்ததையடுத்து ஊடகவியலாளர் மாநாடொன்றை இன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.

அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது.

தேர்தல் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மை, செயற்திறன்மிக்க தன்மையுடன், எவ்வித சந்தேகங்களையும் தோற்றுவிக்காத வகையில் செயற்பட்டது.

ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட 39 பேரில் பெண் வேட்பாளர்கள் எவரும் உள்ளடங்காமை மிகுந்த கரிசனைக்குரியது. எதிர்வருங்காலத்தில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம்.

39 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக்கவில்லை. அவர்களுக்காக அரச நிதி செலவிடப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். இதனை சீரமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்

இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூறப்பட்ட அதே தினத்தில், திடீரென ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ஒன்றுக்கொன்று முரணான தன்மையைக் காண்பிக்கிறது.

தேர்தல் பிரசாரங்களின்போது சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதல்ல.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கு தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன என  ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194613

  • கருத்துக்கள உறவுகள்


உடுப்பிட்டி தொகுதியில் பியதாசவுக்கான வாக்குகள்

 

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,259 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க1,670   வாக்குகளையும்,

கே.கே பியதாச 295 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்குப் பின் இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லை - பெப்ரல்

23 SEP, 2024 | 07:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டின் (பெப்ரல்) நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வராலாற்றில் இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. தேர்தல் இடம்பெற்ற பின்னர் பல்வேறு சட்ட மீறல்கள், வன்முறைகள் தொடர்பில்  கடந்த காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகி இருக்கிறன்ற போதும் இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இதுவரை எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை.

அதனால் தேர்தலுக்கு பின்னரான இந்த காலப்பகுதியில் தொடர்ந்தும் அமைதியாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒட்டுமொத்த தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் பயமுறுத்தல், அச்சுறுத்தல்கள் என  எமது பெப்ரல் நிறுவனத்துக்கு 1800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளில் அரச அதிகாரம், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்  மற்றும் சமூக வலைத்தலங்கள் ஊடாக இடம்பெற்ற சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவானது, தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியிலிருந்து தேர்தல் தினத்தன்று வரைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடம் காணப்பட்டாலும், தேர்தல் செயன்முறை முழுவதும் சட்டம் ஒழுங்கை வினைத்திறனாகப் பேணுவதற்கும், பக்கச்சார்பற்ற வகையில் செயலாற்றுவதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஏற்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதித் தேர்தலை ஒழுங்குபடுத்தல், தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதைக் குறைத்தல், வன்முறைகளைக் குறைத்தல் மற்றும் பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாத்தமைக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கும், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் பெப்ரல் அமைப்பு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அமைதியான தேர்தலை நடத்துவதற்கு, குறிப்பாக ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த அர்ப்பணிப்புக் கொண்டு ஒத்துழைப்பு நல்கிய பிரஜைகளுக்கு  எமது நன்றிகளை தெவித்துக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/194643

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:


உடுப்பிட்டி தொகுதியில் பியதாசவுக்கான வாக்குகள்

 

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,259 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க1,670   வாக்குகளையும்,

கே.கே பியதாச 295 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

அதிகம் படித்த யாழ்ப்பாண மக்கள் தொலைபேசிக்கும், கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாமல் குத்தியிருக்கின்றார்கள்.

 

 

May be an image of 2 people, phone and text

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

 

அதிகம் படித்த யாழ்ப்பாண மக்கள் தொலைபேசிக்கு, கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாமல் குத்தியிருக்கின்றார்கள்.

 

 

May be an image of 2 people, phone and text

ஒரு தொகுதி அல்ல பல தொகுதிகளில் பியதாச யாரென்று தெரியாமலே வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

 

அதிகம் படித்த யாழ்ப்பாண மக்கள் தொலைபேசிக்கு, கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாமல் குத்தியிருக்கின்றார்கள்.

 

 

May be an image of 2 people, phone and text

தற்போது கல்குலேற்றர்கள் அதிகம் பாவனையில. இல்லை. கைத்தொலைபேசியில் இருக்கும் கல்குலேற்றரை தான் மக்கள. அதிகம் உபயோகிக்கிறார்கள். அதனால் குழப்பம் வருவது இயற்கை தானே. 😂  

தற்போதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதை விட கைத்தொலைபேசியில் யூருயூப் காணொளிகள்அதிகம் பார்ப்பதால் எதிர்காலத்தில் தொலைக்காட்சிக்கு பதிலாக தொலைபேசியை தெரிவு செய்யும் சந்தர்ப்பமும் உண்டு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

எந்த முறைப்பாடுகளும் இல்லை - பெப்ரல்

முறைப்பாடு செய்பவர்களும் .குழப்புபவர்களும் ஆட்சி அமைக்க வந்திட்டினமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த எண்ணிக்கை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 0.85 சதவீதமாகப் பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

எனினும் கடந்த 21ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு | Rejected Votes In Sl Presidential Elections Ec

இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை, குறித்த ஆய்வின் பின்னர் கண்டறிய முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/rejected-votes-in-sl-presidential-elections-ec-1727241804#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.