Jump to content

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தலுக்காகவே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தவிர்க்கிறதோ?

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க தேர்தலுக்காகவே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தவிர்க்கிறதோ?

ஈரான் அடுத்த ஈராக்காக மாறும் எண்டுறியள்......? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஈரான் அடுத்த ஈராக்காக மாறும் எண்டுறியள்......? 

ஈராக்கை , ஈரான் கூட‌ அமெரிக்க‌னோ இஸ்ரேலோ ஒப்பிட்டு பார்த்தால் அழிவு வேறு மாதிரி இருக்கும்

 

ஈரான் மேல் உள்ள‌ கோவ‌த்தை லெப‌னான் மீது இஸ்ரேல் காட்டுது இது முற்றிலும் கோழைத் த‌ன‌ம்

 

நெத்த‌னியாகு தானே ஊட‌க‌ம் முன்னாள் துணிந்த‌வ‌ர் யார் சொல்லையும் கேக்க‌ மாட்டார் அதென்ன‌ அமெரிக்கா தேர்த‌ல் முடிவுக்காக‌ காத்து இருக்கின‌ம் என்று பாட்டி வ‌ட‌ சுட்ட‌ க‌தை சொல்லுகின‌ம் ஆய்வாள‌ர்க‌ள் ஹா ஹா😁...................................

ஈரானுக்கு பின்னால் சில‌ அவ‌ர‌பி நாடுக‌ள்

 

ர‌ஸ்சியா

வ‌ட‌கொரியா

பாக்கிஸ்தான்......................ஈரானுக்கு தேவையான‌ ஆயுத‌ங்க‌ள் இந்த‌ மூன்று நாடுக‌ளிட‌ம் இருந்து கிடைக்கும்

 

ஈரான் வேற‌ அணுகுண்டு செய்து விட்டார்க‌ள் என்று க‌தை அடி ப‌டுது 

 

வெளிப்ப‌டையா அறிவித்தால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மூத்தா போகும்😛....................

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றால்…

ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகினார்.

பின்னர் ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் போட்டியில் நுழைந்ததிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. ஜோ பைடன் போட்டியில் இருந்தபோது, ட்ரம்ப்தான் வெற்றிப் பெறுவார் என கூறப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் வந்தவுடன் ட்ரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அமெரிக்க அரசியல் கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்கத்திலிருந்தே முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு பிரபல தொழிலதிபரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின், முன்னாள் செய்தி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடனான எலான் மஸ்க்கின் நேர்காணல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியை தொடர்ந்து இந்த பேட்டி வெளிவந்துள்ளது. இதில் எலான் மஸ்க் பேசியதாவது;

இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல் என்பது எனது கருத்து. சட்டவிரோதமானவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சில முக்கிய மாநிலங்களுக்கு வேண்டுமென்றே கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பர். இவ்வாறு ஸ்விங் ஸ்டேட்களில் ஆயிரக்கணக்கான மக்களை வைத்தால் வைத்தால் என்ன ஆகும்?.

எனது கணிப்பு என்னவென்றால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜனநாயக கட்சியினர் இருந்தால், சட்டவிரோதமானவை அனைத்தையும் சட்டபூர்வமானதாக மாற்றுவர்.” என எலான் மஸ்க் தெரிவித்தார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் ஸ்டேட்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஸ்விங் மாகாணங்களாக இருக்கும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

https://thinakkural.lk/article/310450

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பை ஆதரித்தும் எதிர்த்தும் WWE வீரர்கள் பிரசாரம் - அண்டர்டேக்கர், ஹல்க், பட்டிஸ்டா ஆதரவு யாருக்கு?

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்பிற்கு ஆதரவாக ஹல்க் ஹோகன் பிரசாரம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸாம் காப்ரல்
  • பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்
  • 22 அக்டோபர் 2024

டொனால்ட் டிரம்ப் கடைசியாக WWE போட்டிகளில் (World Wrestling Entertainment - WWE)) சிறப்பு விருந்தினராக தோன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு முன்னாள் WWE வீரர்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

'ஹல்க் ஹோகன்' என்று அழைக்கப்படும் டெர்ரி போல்லியா ஒரு பிரபல WWE வீரர் ஆவார். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தனது சட்டையை கீழித்து, உள்ளே அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையை வெளிக்காட்டினார். அதில் "டிரம்ப் 2024" என்று எழுதியிருந்தது.

அவர் "டிரம்ப்மேனியா (trumpmania) உலகெங்கும் பரவட்டும்" என்று கோஷமிட்டார். (Wrestlemania என்பது பிரபலமான ஒரு மல்யுத்த போட்டி, அதுபோல ஹல்க் ஹோகன் "டிரம்ப்மேனியா" என்ற சொல்லை குறிப்பிட்டார்)

அமெரிக்காவில் மதம் ஒரு கேலிக்குள்ளாக்கப்படுகிறது என்று கடந்த வாரம், முன்னாள் மல்யுத்த வீரராக இருந்து ஊடக ஆளுமையான டைரஸ் உடனான நேர்காணலில் டிரம்ப் தெரிவித்தார்.

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களுடனான நேர்காணல்களுக்கு வர மறுத்த டிரம்ப், WWE பிரபலமான 'தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் மார்க் காலவே தொகுத்து வழங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

"நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அரசியலை மீண்டும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிட்டீர்கள்", என்று மார்க் காலவே கூறினார்.

அதை டிரம்ப் ஆமோதித்தார்.

 
 

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டிரம்ப் இவ்வாறு பிரசாரம் செய்வது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக கருதப்படுகிறது.

"பெரும்பாலான அமெரிக்க மக்கள் தேர்தல் நெருங்கும் போது மட்டுமே நாட்டின் அரசியல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கவனிக்கிறார்கள். அவர்கள் சமீபத்திய விஷயங்களை கருத்தில் கொண்டே வாக்களிக்கின்றனர்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார். இவர் ஒரு தன்னார்வ பத்திரிகையாளர் மற்றும் Ringmaster: Vince McMahon and the Unmaking of America என்ற நூலின் ஆசிரியர்.

"இந்த மல்யுத்த வீரர்களின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை பலரும் கேட்கிறார்கள். இதன் மூலம் அரசியல்மயப்படாதவர்களையும், புதுமையான எண்ணங்களை கொண்டவர்களையும் அவர் ஈர்க்கலாம்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் டிரம்பின் இந்த உத்தி குறித்து கூறினார்.

இதுபோன்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் மல்யுத்த வீரர்களை வைத்து பிரசாரம் செய்வதன் மூலம் டிரம்ப் இளைஞர்களை கவர முயற்சித்து வருகிறார். இது போன்ற தளங்கள் டிரம்பின் பிரசாரத்திற்கு மிக முக்கியமாக இருப்பதாக, அவரது ஆலோசகர்கள் செமாஃபோர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். டிரம்ப் 'ஒரு நட்சத்திரம்' என்று மூத்த தகவல் தொடர்பு ஆலோசகர் அலெக்ஸ் புரூஸ்விட்ஸ் அந்நிறுவனத்திடம் தெரிவித்தார்.

"டிரம்பின் முந்தைய பிரசாரத்தை விட தற்போது நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். டிரம்பை ஒரு தனி நபராக முன்னிறுத்தி வருகிறோம். இது டிக்டாக்கில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க அரசியலில் 78 வயதாகும் டிரம்பின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மறுபிரவேசம் ஆகியவற்றை மல்யுத்தத்துடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம் என்று ரிங்மாஸ்டர் என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது யதார்த்தத்தையும், கற்பனையையும் இணைக்கும் ஒரு கலை, உணர்ச்சிகளை உயர்த்தும் ஒரு உளவியல் மற்றும் தவறுகளை சரியாக மாற்றும் ஒரு திறன் என்று அவர் விவரித்தார்.

 
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் மார்க் காலவே

"சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அரசியலில் ஒருவர் உண்மைகளையும், பொய்களையும், சில நேரம் பாதி உண்மையை மட்டும் சரியான அளவில் உற்சாகத்துடனும் நேர்மையுடனும் கூற வேண்டும்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் தெரிவித்தார்.

"ஆனால் அரசியல் விதிகள் மற்றும் கொள்கைகள் சார்ந்து அல்லாமல் மல்யுத்தம் போல உற்சாகமும், சுய அடையாளம் சார்ந்ததாக மாறலாம்", என்று அவர் எச்சரித்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன், டிரம்ப் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் சிறுவயதில் மல்யுத்தம் பார்த்து வளர்ந்தார். அவர் எப்பொழுதும் மல்யுத்த வீரர்களை பொழுதுபோக்காளர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையையும் அளித்தார்.

ஒரு காலத்தில் சிறிய நிறுவனமாக இருந்த WWE, அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் கென்னடி மக்மஹோனின் கீழ் உலகின் மிகப் பெரிய மல்யுத்த நிறுவனமாக மாறியதைப் போன்றே டிரம்பும் தொழிலதிபராக வளர்ந்து வந்தார். இருவருமே குடும்ப நிறுவனங்களில் அதிகாரத்திற்கு வந்து, அதை அதிக அளவில் வளர்த்தெடுத்தனர்.

அதிபர் ரீகனுக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் கீழ் இந்த நிறுவனம் செழித்து இருந்தது. இவர்கள் இருவரும் விசாரணையில் இருந்து தப்பினர். இதற்கு பிறகே டிரம்ப் அவரது தொழிலாளர்களுக்கு கடுமையான விதிகளை விதித்ததாகவும், வின்சென்ட் கென்னடி மக்மஹோன் WWE விளையாட்டு வீரகளுக்கு வழங்கும் சுகாதார சலுகைகளை நிறுத்தியதாகவும் ஜோசஃபின் ரைஸ்மேன் குற்றம் சாட்டினார்.

1980களின் பிற்பகுதியில், நியூ ஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஹோட்டலில் டிரம்ப் WWE-இன் மார்க்கீ ரெஸில்மேனியா நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தினார். அப்போது தான் இந்த இருவரின் பாதைகள் ஒன்றிணைந்தன.

 
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வின்சென்ட் மக்மஹோனை (கீழே நடுவில் இருப்பவர்) பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரரான பாபி லாஷ்லியை (வலது) தோற்கடித்த டிரம்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரர்

2007 ஆம் ஆண்டு, இருவரும் ஒரே போட்டிக்குள் நுழைந்தனர். அதில் டிரம்ப் WWE-யின் தலைமை அதிகாரிக்கு சவால் விடுத்தார். அவர் அரங்கின் கூரையின் மேல் இருந்து ரசிகர்களின் மீது அமெரிக்க டாலர்களை பொழிந்தார்.

"ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் முதல்முறையாக டிரம்ப் பேசியது இதுவே முதல் முறை", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார்.

இருவருக்கும் இடையேயான பகை 2023 ஆம் ஆண்டு 'ரெஸில்மேனியா' மல்யுத்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியான 'பாட்டில் ஆஃப் பில்லியனர்ஸ்' -இன் போது தொடங்கியது. அதில் இருவரின் சார்பாக மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த போட்டியில் தோல்வியடையும் போட்டியாளரின் உரிமையாளர் தலை மொட்டையடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது.

இந்த ஒரு போட்டி மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வருவாயை எட்டியது என்று மல்யுத்த பத்திரிக்கையாளரும் பாட்காஸ்டருமான பிரையன் அல்வாரெஸ் தெரிவித்தார்.

இந்த மல்யுத்த நிகழ்ச்சியில் எத்தனையோ போட்டி நடந்தாலும், மக்கள் ஒருவர் தலையை மொட்டையடித்துக் கொள்ளும் நிபந்தனையினால் இந்த போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்ப் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு WWE போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பிலும் இல்லை.

ஆனால் அவர் அதிபரான பிறகு மக்மஹோனின் மனைவி லிண்டாவை தனது அமைச்சரவையில் சிறு வணிக நிர்வாகியாக பணியமர்த்தினார். தற்போது டிரம்ப் சார்பு கொண்ட ஃபர்ஸ்ட் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் தலைவராக லிண்டா உள்ளார்.

 
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல், மல்யுத்தம், WWE

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் மீண்டும் அதிபராவது குறித்து, WWE-யை சேர்ந்தவர்களில் சிலருக்கு உடன்பாடு இல்லை.

'தி அனிமல் பட்டிஸ்டா' என்று அழைக்கப்படும் டேவ் பட்டிஸ்டா, கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஜிம்மி கிம்மலின் நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டிரம்பை கேலி செய்தார்.

"டொனால்ட் டிரம்ப் ஒரு வலிமையான மனிதர் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். அவர் அப்படி இல்லை", என்று அவர் கூறினார்.

ஆயினும்கூட, சில பிரபல மல்யுத்த வீரர்கள் வழக்கத்திற்கு மாறான வழிகளில் டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

"தெருவில் இருக்கும் ஒரு சாதாரண நபரிடம் ஹல்க் ஹோகனைத் தெரியுமா என்று நீங்கள் கேட்டால், மல்யுத்த ரசிகர் அல்லாத ஒருவர் கூட ஆம் என்று சொல்வார். டிரம்ப் இது போன்ற மிக பிரபலமான நபர்களை தனது பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்", என்று அல்வாரெஸ் பிபிசியிடம் கூறினார்.

"டிரம்ப் மல்யுத்தத்தை போலவே அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்", என்று அல்வாரெஸ் கூறினார்.

திங்கட்கிழமையன்று டிரம்புடனான தனது நேர்காணலின், "அரசியல்வாதிகளைப் போலவே மல்யுத்த வீரர்களும் மக்கள் கவனத்தை பெற்றால்தான் உண்மையிலேயே சிறந்து விளங்க முடியும்", என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் ஆர்வத்துடன் முன்னோக்கி சாய்ந்த போது, "நீங்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்" என்று அல்வாரெஸ் குறிப்பிட்டார்.

"நீங்கள் ஒரு வழி அல்லது வேறு வழியில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளீர்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸை ஆதரித்து நன்கொடை அளித்த பில்கெட்ஸ்; எத்தனை கோடி தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தொழிலதிபர் பில்கேட்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து, ரூ.420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நன்கொடை குறித்த தகவலை பில்கேட்ஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பில்கேட்ஸ், நன்கொடை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தொழிலதிபர் பில்கேட்ஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

இந்தத் தேர்தல் வித்தியாசமானது. நான் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கிறேன். நான் நீண்ட காலமாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பயணித்துள்ளேன்” இவ்வாறு தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரசாரக் குழுக்களுக்கு அதிகளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளார். கமலா ஹாரிசுக்கு இதுவரை 50 க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல், தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/311098

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் கழுதை மற்றும் யானை

ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதை உள்ளது. இது 1828இல் தொடங்கியதாக கருதப்படுகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ ஜாக்ஸனை கழுதை என பொருள்படும் விதமாக ‘ஜாக் ஆஸ்’ என குடியரசுக் கட்சியினர் அழைத்தனர்.

இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அவர், கழுதையை பிரசாரங்களில் சின்னமாகப் பயன்படுத்திக்கொண்டார். கழுதை பிடிவாதம் நிறைந்தது, முட்டாள்தனமானது என விமர்சகர்கள் பார்த்தனர். ஆனால், அது அடக்கமானது மற்றும் புத்திசாலிதனமானது என ஜனநாயகவாதிகள் சிலர் கூறினர்.

இப்போது குடியரசு கட்சியினரின் யானையைப் பற்றி பார்க்கலாம். 1860களில் ஆப்ரஹாம் லிங்கனின் தேர்தல் பிரசாரங்களின்போது, செய்தித்தாள்களில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என சிலர் கூறுகின்றனர். ஒருவேளை வலிமையின் சின்னமாக இருக்கலாம்.

எனினும், கார்டூனிஸ்டும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான தாமஸ் நஸ்ட் 1874இல் இதை பத்திரிகையில் வரைந்த பின்னரே அது பிரபலமடையத் தொடங்கியது.

ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் யானையை முட்டாள்தனமானது, விகாரமானது எனக் கூறலாம். ஆனால், குடியரசுக் கட்சியினர் இதை வலிமை மற்றும் புத்திசாலிதனத்தின் சின்னம் என்று கூறினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த இரு சின்னங்களும் அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62j4yv844do

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு?; கருத்து கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பின் முடிவுகளின் படி, முன்னால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப்புக்கு இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலா ஹாரிசுக்கு சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

இந்தியாவை பொருத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை பயனுள்ளதாக அமைகிறது. அத்துடன், அதிக அளவில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதையும் உறுதி செய்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தொடர்பான கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 47 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகவும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவரைவிட 2 சதவீத வாக்குகள் குறைவாக அதாவது 45 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/311149

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை கிறிஸ்தவ நாடாக்க விரும்பும் இவர்கள் 'டிரம்ப் கடவுளின் பிரதிநிதி' என்று நம்புவது ஏன்?

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2017 செப்டம்பரில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் மதத் தலைவர்களுடன் டிரம்ப்
  • எழுதியவர்,செசிலியே பேரியா
  • பதவி,பிபிசி நியூஸ் முண்டோ
  • இருந்துஓக்லஹோமாவிலிருந்து
  • 28 அக்டோபர் 2024, 

அமெரிக்காவின் தெற்கு ஓக்லஹோமாவில் சுமார் 2,000 பேர் வசிக்கும் எல்ஜின் எனும் டவுன் பகுதி உள்ளது. அங்கு கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில், சனிக்கிழமை வழிபாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாதிரியார் டஸ்டி டெவர்ஸ் (36), பிரகாசமான முகத்துடன் பாதிரியார் உடையில் தோன்றினார்.

அங்கு கூடியிருந்த சுமார் 100 தேவாலய உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினத்தவர்.

தேவாலயத்தின் லாபியில் சில துண்டுப் பிரசுரங்கள் இருந்தன. அவற்றில் இறந்த குழந்தைகளை சித்தரிக்கும் படம் இடம் பெற்றிருந்தது.

"இதைப் படிக்கும் போது, அமெரிக்காவில் மூன்று குழந்தைகள் அநியாயமாக தாயின் வயிற்றில் படுகொலை செய்யப்பட்டது நினைவுகூரப்படும்" என்று அந்த புத்தகங்களின் தலைப்பு கூறுகிறது. கருக்கலைப்பை நம் காலத்தின் "ஹோலோகாஸ்ட்" என்று அவை விவரிக்கின்றன.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதாரம் மற்றும் குடியேற்றக் கொள்கை பிரச்னைகளை போன்று கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளும் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது.

புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த பழமைவாத வலதுசாரி புராட்டஸ்டண்ட் வாக்காளர்கள் இடையே அரசியலும் மதமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கான தெளிவான அடையாளமாக இந்த துண்டுப்பிரசுரங்கள் உள்ளன.

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்
படக்குறிப்பு, கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில் கருக்கலைப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன

ஒரு கோடை நாளில், பலத்த மழை பெய்து கொண்டிருக்கையில், உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு பிரார்த்தனை தொடங்கியது. தேவாலயத்தின் போதகர் கிடார் வாசித்து சபை உறுப்பினர்களுடன் பாடல்களைப் பாடினார்.

டஸ்டி டெவர்ஸ் எல்ஜினில் பிறந்தவர். செனட்டரான அவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். மதம் தொடர்பான படிப்பு மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்தில் நற்செய்தி போதிப்பார்; ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் அவர் ஓக்லஹோமா கேபிட்டலில் முன்மொழிவுகளை முன்வைப்பார்.

ஓக்லஹோமாவில் அரசியல்வாதிகள் உள்ளூர் தேவாலயங்களில் அதிகாரம் செலுத்துவதும், நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் சகஜம்.

அமெரிக்க 'பைபிள் பெல்ட்’ என்றழைக்கப்படும் மாகாணங்களில் இல்லினாய்சும் ஒன்று. இங்கு பல ஆளுமைகள், அரசியலிலும் அதே சமயம் மதம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இரட்டை தலைமை பொறுப்பில் இருப்பது பொதுவான ஒன்று. இப்பகுதியில் மக்கள் பிரதானமாக புராட்டஸ்டண்ட் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

அமெரிக்காவில் `பைபிள் பெல்ட்’ மாகாணங்கள் எனப்படும் மாகாணங்களில் குறைந்தது 9 மாகாணங்கள் புராட்டஸ்டண்ட்கள் மற்றும் குடியரசுக் கட்சி சார்ந்த ஆதரவாளர்களை உள்ளடக்கியது. முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த தேர்தலில் இந்த மாகாணங்களில் தான் வெற்றி பெற்றார். (ஜார்ஜியா மட்டும் ஒரே விதிவிலக்கு)

தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள எல்ஜின் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க பழமைவாத புராட்டஸ்டண்ட் தலைவர்களின் எழுச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது.

இதில் முக்கியமான மையப் பகுதியாக ஓக்லஹோமா உள்ளது. இது ஒரு தீவிர மதம் சார்ந்த மாகாணம். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேபிடல் உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஓக்லஹோமா அரசியலில், கடவுளும் நாடும் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஏனெனில் மரபுவழி கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை தாராளவாத இடதுசாரிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்று நம்புகிறார்கள்.

 

மதம் மற்றும் அரசியலின் இணைப்பு

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்
படக்குறிப்பு, அமெரிக்காவின் அதிகார அமைப்புகள் மாற வேண்டும் என போதகர் டஸ்டி டெவர்ஸ் வாதிடுகிறார்

"என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி அறிய அன்றைய திருச்சபை வழிப்பாடு எப்படி இருந்தது?" என்று என்னிடம் டெவர்ஸ் கேட்டார்.

நீண்ட உரையாடலுக்குப் பிறகு, கருக்கலைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது, ஆபாசப் படைப்புகளை நிறுத்துவது மற்றும் வருமானம், சொத்து வரிகளை வசூலிப்பதை நிறுத்துவதுதான் அவரது அரசியலின் முக்கிய நோக்கம் என்று அவர் என்னிடம் கூறினார்.

ஆனால் டெவர்ஸின் நீண்ட கால இலக்கு இன்னும் சுவாரஸ்யமானது. அமெரிக்காவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்றுவதே அவரது குறிக்கோள்.

அந்த பணியை நிறைவேற்றுவதற்கான வழிகளில் முக்கியமானது, உயர் அரசியல் பதவிகளை ஆக்கிரமிப்பது தான்.

"வெள்ளை மாளிகையை கடவுளின் தேசமாக மாற்ற விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை நான் அவரிடம் முன்வைத்தேன்.

"பூமியில் உள்ள அனைத்துமே கடவுளின் பிரதேசம் தான்” என்று பதிலளித்தார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் டெவர்ஸ் தற்போதுள்ள கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

டிரம்ப் தங்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று டெவர்ஸ் நினைக்கிறார். பைபிள் பெல்ட்டில் உள்ள மற்ற போதகர்களின் கருத்தும் அதே தான்.

டிரம்ப் குடியரசுக் கட்சியை இடதுசாரி பக்கம் சாய்ப்பதாக அவர் கூறுகிறார்.

37 வயதான ஆரோன் ஹாஃப்மேன், டெவர்ஸுடன் பணிபுரிகிறார். அவர் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை. அவர் தற்போது ஓக்லஹோமாவில் உள்ள புதிய பாப்டிஸ்ட் தேவாலயத்தில் போதகராக தயாராகி வருகிறார். தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான கோடு மங்கலாக இருக்கக்கூடாது என்று அவர் நம்புகிறார்.

"கிறிஸ்துவத்தை அரசியலில் இருந்து பிரிக்க முடியாது. அமெரிக்க மக்கள் இயேசு கிறிஸ்துவை மறந்துவிட்டார்கள்" என்று அவர் கண்ணீருடன் என்னிடம் கூறினார்.

 

மதம் செல்வாக்கு செலுத்துகிறதா?

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்
படக்குறிப்பு, ஓக்லஹோமாவில் ஆசிரியர் பணியிலிருந்து சுஜி ஸ்டீபன்சன் ராஜினாமா செய்துவிட்டார்.

ஆனால் இந்த கலாசார மோதல் சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்த கேள்விக்கான பதில் `ஆம் பாதிக்கும்’.

இந்த ஆண்டு மட்டும், குறைந்தது மூன்று `பைபிள் பெல்ட்’ மாகாணங்களில் மத சார்பு கொண்ட முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

லூசியானாவில் அனைத்து பள்ளி வகுப்பறைகளின் சுவர்களிலும் கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அலபாமா மாகாணத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் உறைந்த கரு முட்டைகள் சிசுக்களே என்று தீர்ப்பளித்ததை அடுத்து செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதேபோல், ஓக்லஹோமாவில், உயர் கல்வி அதிகாரி ரியான் வால்டர்ஸ் எடுத்த முடிவு மிகவும் விவாதத்திற்கு உட்பட்டது. ஜூன் மாதம், மாநிலத்தின் பொதுப் பள்ளிகளில் பைபிள் கற்பித்தலைக் கட்டாயமாக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.

இருப்பினும், ஓக்லஹோமா மிகப்பெரிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாகாணமாகும். இந்த முடிவு மத சுதந்திரத்திற்கு எதிரானது என பல ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

"நாம் தேவாலயத்தையும் மாகாணத்தையும் தனித்தனியாக அணுக வேண்டும்” என்று புராட்டஸ்டன்ட் மற்றும் முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியரான 44 வயதான சுஜி ஸ்டீபன்சன் கூறுகிறார்.

சுஜி கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சி ஆதரவாளரான வால்டர்ஸை கடுமையாக விமர்சித்தார். வால்டர்ஸ் கடந்த மே மாதம் ஓக்லஹோமா ஆசிரியர் சங்கத்தை `பயங்கரவாத அமைப்பு’ என்று அழைத்தார்.

இதுதொடர்பாக வால்டர்ஸ் பிபிசியிடம் பேச மறுத்துவிட்டார்.

பள்ளியின் இந்த முடிவுக்கு பல பெற்றோர்களும் உடன்படவில்லை.

கிறிஸ்தவரான எரிகா ரைட்டும் அதில் ஒருவர். பைபிள் போதிப்பதற்கு பதில், அவர்களின் ஏழ்மை நிலையை மாற்ற வழி செய்யலாம் என்று அவர் கருதுகிறார்.

ஓக்லஹோமா கிராமப்புற பள்ளிகள் கூட்டணியின் நிறுவனர் மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவாளரான ரைட், அரசுப் பள்ளிகளில் போதுமான நிதி இல்லை என்றும், பல மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் வீட்டில் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

"ஓக்லஹோமாவின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் பேர் ஏழைகள். பல பகுதிகளில் அதிகமான வறுமை உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

ஓக்லஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் சாமுவேல் பெர்ரி அரசியல் மற்றும் மதம் பற்றிய பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பள்ளியில் பைபிள் கற்பிக்க வேண்டும் போன்ற முடிவுகள் ஒரு பெரியளவிலான செயல்திட்டத்தின் கீழ் எடுக்கப்படுகின்றன என்று அவர் நம்புகிறார்.

இந்த கொள்கைகள் தீவிர மத நம்பிக்கை கொண்ட தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ தேசியவாதத்தின் கொள்கைகளை பரப்பும் நபர்களால் இயக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த சித்தாந்தம் அமெரிக்க குடிமை வாழ்க்கை மற்றும் மரபுவழி ஆங்கிலோ-புராட்டஸ்டண்ட் கலாசாரத்தை ஊக்குவிக்கிறது.

"கிறிஸ்தவ தேசியவாதம் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

 

"டிரம்ப் கடவுளால் அனுப்பப்பட்டவர்”

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்

பட மூலாதாரம்,JACKSON LAHMEYER

படக்குறிப்பு, "இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர் டிரம்ப்" என்கிறார், ஜாக்சன் லஹ்மியர்

பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள இத்தகைய போதகர்கள் மிகவும் ஏழ்மையான சமூகங்கள் மத்தியில் சிறிய தேவாலயங்களை நிறுவுவதன் மூலம் அவர்களைப் பின்பற்றுபவர்கள் இடையே பெரும் செல்வாக்கு கொண்டுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த குழு முன்னேற டிரம்பை தங்களுக்கான சிறந்த தேர்வாக கருதுகின்றன.

ஓக்லஹோமா பாதிரியாரான ஜாக்சன் லஹ்மியர் ஒரு தீவிர டிரம்ப் விசுவாசி.

"டிரம்ப் இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர்" என்று அவர் கூறுகிறார். இவர் டிரம்பிற்கான போதகர்கள் குழுவை நிறுவியவர்.

வரவிருக்கும் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக கிறிஸ்தவ வாக்குகளை திரட்டுவதே அவர்களின் நோக்கம்.

டிரம்ப் மீதான தாக்குதலில் அவர் உயிர் பிழைத்ததை 'கடவுளின் அற்புதம்' என்று லாஹ்மியர் கூறுகிறார்.

"எங்கள் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதற்கு மிக அருகில் இருந்தோம்" என்று ஓக்லஹோமாவின் துல்சா பகுதியை சேர்ந்த முன்னாள் செனட் வேட்பாளரான லாஹ்மியா தொலைபேசி உரையாடலில் கூறினார்.

இருப்பினும், புராட்டஸ்டண்ட் மத போதகரான லாஹ்மியா தன்னை ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கிறார்.

"கிறிஸ்தவ தேசியவாதி என்ற பட்டத்தின் மூலம் எங்களை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அது உண்மையல்ல" என்று அவர் கூறுகிறார்.

 
அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்
படக்குறிப்பு, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசியலில் செல்வாக்கு செலுத்தியதாக பாதிரியார் பால் பிளேயர் வாதிடுகிறார்

ஓக்லஹோமா நகரத்தின் புறநகர்ப் பகுதியான எட்மண்டில் உள்ள ஃபேர்வியூ பாப்டிஸ்ட் தேவாலயத்தின் தலைவரான பாஸ்டர் பால் பிளேயரும், தன்னை அப்படி அடையாளப்படுத்துவதை எதிர்க்கிறார்.

"நான் ஒரு கிறிஸ்தவனா? என்றால் ஆம் என்பேன். நான் ஒரு தேசியவாதியா? என்றாலும் ஆம் என்பேன். அதற்காக சிலர் எங்களை கிறிஸ்தவ தேசியவாதியாக சித்தரிப்பதை நான் ஏற்கவில்லை. இந்த நாட்டில் ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக இருப்பது ஒரு களங்கமாக மாறி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

1980களில் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருந்த போது எடுத்த படங்களையும் அவர் காட்டினார்.

தற்போது லிபர்ட்டி பாஸ்டர் பயிற்சி முகாமின் பொறுப்பாளராக பிளேயர் உள்ளார். புராட்டஸ்டண்ட் தலைவர்கள் அரசியலில் தங்கள் மதக் கொள்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை அங்கு கற்றுக்கொள்கிறார்கள்.

"இந்தப் பயிற்சி போதகர்களுக்கு வாழ்வின் அனைத்து கட்டங்களையும் பைபிள் ரீதியாக சிந்திக்க உதவுகிறது. அவர் அமெரிக்கா முழுவதும் உள்ள புராட்டஸ்டண்ட் உள்ளூர் தலைவர்களின் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். அவர்கள் தங்களை 'தேச பக்தி கொண்ட போதகர்கள்' என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

அவர்களில் பலரைப் போலவே, அமெரிக்கா மீண்டும் பாரம்பரிய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிளேயர் விரும்புகிறார். 1776 இல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது இந்த மதிப்புகள் கையெழுத்திடப்பட்டன.

"வரலாற்று ரீதியாக, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று அவர் கூறுகிறார்.

கடந்த 2020 தேர்தலில் நியாயமாக டிரம்ப் தான் வெற்றியாளர் என்றும், 2021 ஜனவரியில் தலைநகர் மீதான தாக்குதலில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 'அரசியல் கைதிகள்' என்றும் பிளேயர் நம்புகிறார்.

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி ஓக்லஹோமாவில் நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக வருவார் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.

பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் அரசியல் தலைவர்கள் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் நம்பிக்கைகளைப் பரப்புவதாகும். இதனை அவர்கள் 'தெய்வீக பணி' என்கின்றனர்.

 

டிரம்ப் மற்றும் கருக்கலைப்பு பிரச்னை

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் தன் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தார், அத்தகைய நீதிபதிகளை நியமித்தார்

டிரம்பின் ஆதரவாளர்கள் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வரலாற்று நியமனங்கள் மற்றும் அவரது பதவிக்காலத்தில் பிற முடிவுகளுக்காக அவரைப் பாராட்டினர். இந்த நியமனம் பல ஆண்டுகளாக நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தது.

அந்த கன்சர்வேடிவ் பெரும்பான்மை காரணமாகவே, 2022 இல் உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திய தீர்ப்பை ரத்து செய்தது. உச்சநீதிமன்றம் அந்த முடிவை மாகாணங்களின் கைகளில் விட்டு விட்டது.

ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் போன்ற பைபிள் பெல்ட் மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளன. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அங்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும்.

இருப்பினும், அதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இத்தேர்தலில் `கருக்கலைப்பு’ பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பைபிள் பெல்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த குடியரசுக் கட்சியின் கன்சர்வேடிவ் பிரிவு, கருக்கலைப்புக்கு முழுமையான தடையைக் கொண்டுவர விரும்புகிறது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சாத்தியமாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

முன்னாள் அதிபர் டிரம்புடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், டிரம்ப் தனது நிர்வாகத்தின் போது முக்கிய கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் கொடுத்தார். ஏராளமான கிறிஸ்தவ மத குருமார்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்.

 

வெள்ளை மாளிகையில் போதகர்களா?

அமெரிக்கா, கிறிஸ்தவ தேசியவாதம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2020ம் ஆண்டு தங்கள் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரி டிரம்ப் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைகளில் பைபிளுடன் தெருக்களில் இறங்கினர்

டிரம்ப் பதவிக்காலத்தில், 'ஃபெயித் அண்ட் ஆப்பர்சூனிட்டி இனிஷியேட்டிவ்' (Faith and Opportunity Initiative) என்ற புதிய அரசாங்க அலுவலகத்தை உருவாக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

ஆவணத்தில் கையொப்பமிடும் போது அவர், "நம்பிக்கை என்பது அரசாங்கத்தை விட சக்தி வாய்ந்தது, கடவுளை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை" என்றார்.

ஓக்லஹோமா தொழிலதிபர் க்ளே கிளார்க் நிறுவிய புதிய தீவிர வலதுசாரி 'ரீவேகன் அமெரிக்கா டூர்' (ReAwaken America Tour movement) முன்னெடுப்பில் பலர் சேர்ந்தனர்.

இன்று இந்த இயக்கத்தில் போதகர்கள், குடியேற்ற எதிர்ப்பு, பால்புதுமையினர் (LGBTQ+) எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளனர். டிரம்ப் அவர்களை வழிநடத்துவதாக உணரும் பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இடதுசாரிகளுக்கு எதிராக ஆன்மீகப் போரை நடத்தும் கடவுளின் வீரர்கள் என்று இந்த இயக்கத்தினர் தங்களை சொல்கின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை ‘பிராஜக்ட் - 25’ இல் சேர்த்துள்ளதாக கருதப்படுகிறது.

அமெரிக்க பெடரல் அரசையும், அமெரிக்கர்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களையும் சீர்திருத்த வேண்டும் என்று கூறும் டிரம்பின் முன்னாள் ஆலோசகர்களின் சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளை உள்ளடக்கியதே பிராஜக்ட்-25 ஆகும்.

டிரம்ப் இந்தத் திட்டத்தில் இருந்து விலகியிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வெள்ளை மாளிகையில் கால் பதித்தால், இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள செல்வாக்குமிக்க மதக் குழுக்கள் அந்த செயல்திட்டத்தை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பின் அதிகம் அறியப்படாத பக்கங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,ALAMY

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவதும், இரண்டு அதிபர் வேட்பாளர்களின் பலதரப்பட்ட புகைப்படங்கள் அமெரிக்க வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அந்த வேட்பாளர்கள் மேடைகளில் இருந்து பேசுவது, பேரணியில் கூட்டத்தை நோக்கி கையசைப்பது மற்றும் விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படங்கள்.

ஆனால், இந்தக் கட்டுரையில், அதிகம் அறியப்படாத புகைப்படங்கள் வழியாக, அந்த இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்த ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை நாம் காணப் போகிறோம்.

மேலே உள்ள புகைப்படம், வெள்ளை மாளிகை என்றால் என்ன என்பதை டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் புரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களுக்கு மூன்று வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹாரிஸ் தனது குழந்தைப் பருவத்தின் தொடக்க காலத்தை கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் கழித்தார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் நியூயார்க் பெருநகரத்தின் குயின்ஸில் வளர்ந்தார்.

 

கமலா ஹாரிஸ் (கீழே உள்ள இடதுபக்க படத்தில், இடமிருந்து முதலில் இருப்பவர்) மற்றும் அவரது சகோதரி மாயா (நடுவில்) ஆகியோர் இந்தியாவை சேர்ந்த அவர்களின் தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார்கள். ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர்.

டொனால்ட் டிரம்பின் தந்தை பிரெட் டிரம்ப், ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் மகன். அவரது தாயார் மேரி ஆன் மெக்லியோட் டிரம்ப், ஸ்காட்லாந்தில் பிறந்தவர். டிரம்பின் பெற்றோர், அவரை 13 வயதில் நியூயார்க் ராணுவ அகாடமியில் சேர்த்தனர்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,KAMALA HARRIS / @REALDONALDTRUMP

கமலா ஹாரிஸ் கனடாவின் மாண்ட்ரீயலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படித்தார். அவரது தாயார் அங்குள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார்.

பின்னர் கமலா ஹாரிஸ் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள, முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றான ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

டொனால்ட் டிரம்ப், ‘நியூயார்க் ராணுவ அகாடமியில் 1959ஆம் ஆண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகள், தனக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தனது தலைமைத்துவ திறன்களை வடிவமைக்க அது உதவியதாகவும்’, ஒருமுறை தெரிவித்திருந்தார்.

பின்னர் வியட்நாம் போரில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கல்வி காரணங்களுக்காகவும், ஒருமுறை எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் அது ஒத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,ALAMY

சிறு வயதிலிருந்தே, ஹாரிஸின் தாயார் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்குக் கற்பித்து வந்தார். கமலா ஹாரிஸ், 2004இல் வாஷிங்டனில் நடைபெற்ற ‘வருடாந்திர மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுதந்திர அணிவகுப்பில்’ கலந்துகொண்டார்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் பட்டம் பெற்ற டிரம்புக்கு, அவரது தந்தைக்குப் பிறகு குடும்ப வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவு குடும்பத்திடம் இருந்து கிடைத்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவுக்கு திரும்பினார், அங்கு அவர் மாநிலத்தின் குற்றவியல் நீதி அமைப்பின் உச்சிக்கு விரைவாக உயர்ந்தார். அதன் அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் மூலம் கிடைத்த உந்துதலை, 2016இல் அமெரிக்க செனட் சபைக்கு வெற்றிகரமாகப் போட்டியிடப் பயன்படுத்திக் கொண்டார்.

அமெரிக்க செனட் சபையில் கமலா ஹாரிஸ் நுழைந்த அதே நேரத்தில், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்த டிரம்ப், முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் ஒரு மந்தமான அதிபர் பிரசாரத்தை நடத்தினார். இருப்பினும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனால், துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இருவரும், டிரம்ப் மற்றும் மைக் பென்ஸை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தின் முடிவிலும், பைடன்-ஹாரிஸ் பதவிக் காலத்தின் தொடக்கத்திலும், கொரோனா ஊரடங்குகள், கட்டாய முகக்கவசம் போன்ற உத்தரவுகள், மினியாபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் ஃப்லாய்ட் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அமைதியின்மை போன்ற பிரச்னைகளை அமெரிக்கா சமாளித்துக் கொண்டிருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துணை அதிபராக முத்திரை பதிக்க கமலா ஹாரிஸ் சில நேரங்களில் போராட வேண்டியிருந்தது. ஆனால் 2022இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, தான் உரக்கப் பேசவேண்டிய விஷயம் எது என்பதை அவரால் உணர முடிந்தது.

கருக்கலைப்பு உரிமைகள் இயக்கத்திற்கான வெள்ளை மாளிகையின் சாம்பியனாக கமலா ஹாரிஸ் மாறியதில், அதிபர் பைடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அதேநேரம், பழமைவாதத்தை நோக்கிய உச்சநீதிமன்றத்தின் நகர்வுக்கும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுக்கும் காரணமாக இருந்தவர் டிரம்ப்தான்.

டிரம்ப், ஓவல் அலுவலகத்தில் இருந்த காலத்தில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதோடு மட்டுமல்லாது குடியேற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,WHITE HOUSE / GETTY IMAGES

துணை அதிபராக ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக 2021இல் குவாத்தமாலாவுக்கு சென்றார். மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் தெற்கு எல்லையை அடையும் லத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருந்தது.

அவர் பதவியில் இருந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்னைகளில் யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் மிகவும் குழப்பமான ஒரு சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்பப் பெற்றது ஆகியவை அடங்கும்.

அமெரிக்க அதிபராக டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் 2017இல் சௌதி அரேபியாவுக்கு சென்றதுதான். அமெரிக்க தொழில்துறையை ஊக்குவிப்பது, சர்வதேச போர்களில் இருந்து தனது நாட்டை விலக்கி வைப்பது தொடர்பான கருத்துகளை டிரம்ப் ஆதரிக்கிறார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS

கமலா ஹாரிஸ், டக் எம்ஹாஃப் (கீழே உள்ள புகைப்படம்) என்பவரை மணந்தார். டக் எம்ஹாஃப், கமலா ஹாரிஸின் சார்பாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். எம்ஹாஃப்பின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளான, கோல் (இடதுபுறம் இருப்பவர்), எல்லா (வலதுபுறம் இருப்பவர்) ஆகியோரை தாயாக இருந்து கவனித்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் பல்வேறு குடும்ப உறுப்பினர்கள் அவரது அரசியல் வாழ்க்கையில் பங்கு வகித்துள்ளனர். இருப்பினும் அவரது மனைவியும், முன்னாள் ‘முதல் அமெரிக்க பெண்மணியுமான’ மெலனியா டிரம்ப் 2024 பிரசாரத்தில் அவருக்கு ஆதரவாகத் தோன்றுவது குறைவாகவே உள்ளது.

டிரம்பின் முதல் மனைவி இவானாவுடன், டிரம்புக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். டொனால்ட் ஜூனியர் (கீழே உள்ள படத்தில் இடதுபுறத்தில் இருந்து இரண்டாவது), இவான்கா (வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது) மற்றும் எரிக் (வலதுபுறத்தில் கடைசியாக).

அவரது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடன் அவருக்கு டிஃப்பனி (இடதுபுறத்தில் கடைசியாக) என்ற மகள் உள்ளார். அவர் தனது மூன்றாவது மனைவி மெலனியாவை (இடதுபுறத்தில் மூன்றாவதாக) 2005இல் மணந்தார், இவர்களுக்கு பரோன் என்ற ஒரு மகன் உள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,ALAMY / AP

கமலா ஹாரிஸ், 2024 அதிபர் பந்தயத்தில் கிட்டத்தட்ட தாமதமாகவே நுழைந்தார். போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடனுக்கு பதிலாக அவர் அதிபர் வேட்பாளராக ஆக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஒரு பெரிய மற்றும் முக்கியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின மற்றும் ஆசிய-அமெரிக்க பெண் என்ற வரலாற்றை அவர் படைத்தார். இல்லினாயின் சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

டொனால்ட் டிரம்ப் இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியில் இருந்து மூன்றாவது முறையாக அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அரிய பெருமையைப் பெற்றார். விஸ்கான்சின், மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் பேசினார்.

பென்சில்வேனியாவில் பிரசாரத்தின்போது அவர் மீது நடத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், காதில் கட்டுப்போட்ட நிலையில் மில்வாக்கியில் அவர் உரையாற்றினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS / EPA-EFE

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: அரபு அமெரிக்கர்களின் ஆதரவு கமலா ஹாரிஸ், டிரம்ப் இருவரில் யாருக்கு?

அரபு அமெரிக்கர்களின் வாக்குகள் யாருக்கு?

பட மூலாதாரம்,AFP

  • எழுதியவர், ரபீட் ஜபூரி, மிச்சிகனில் இருந்து
  • பதவி, பிபிசி அரபி

அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், மிச்சிகனின் அரபு அமெரிக்க சமூகம் ஒரு குழப்பத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறலாம்.

இங்குள்ள 15 தேர்வாளர் வாக்குகள் (Electoral votes, தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியம் என்று கருதப்படுபவை) சமநிலையில் இருப்பதால், பல அரபு அமெரிக்கர்கள் முன்னெப்போதையும் விட சிக்கலானதாக உணரும் ஒரு முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறார்கள்.

கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு அவர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. உள்நாட்டுப் பிரச்னைகள், மத்திய கிழக்கு மோதல்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களுக்கு இது மிகவும் சிக்கலானது.

 
 

இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான போட்டியை நவீனகால வரலாற்றில் மிக நெருக்கமான ஒன்றாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தற்போது தேசிய வெகுஜன வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

எனினும், அமெரிக்கத் தேர்தல்களில் அடிக்கடி நடப்பதைப் போல, தேர்வாளர் குழு முறையே இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்று கருதப்படும் முக்கியமான மாகாணங்களில் மிச்சிகனும் ஒன்று என்பதால் இதன் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இங்குள்ள அரபு அமெரிக்கர்கள், குறிப்பாக அதிக அரபு மக்கள்தொகை கொண்ட டியர்பார்ன் போன்ற நகரங்களால், வாக்குகளை திசை திருப்ப முடியும். இந்த இடங்களில் பொதுவாக வெற்றி தோல்வி மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

 

மாறுபட்ட, பிளவுபட்ட சமூகம்

ரிமா மெரூஹ்
படக்குறிப்பு, மத்திய கிழக்குப் போர் அரபு அமெரிக்கர்களின் முக்கிய தேர்தல் பிரச்னையாக உள்ளது என்கிறார் ரிமா மெரூஹ்

மிச்சிகனில் உள்ள அரபு அமெரிக்கர்கள் அனைவரும் ஒரே விதமாக வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கூற முடியாது. மாகாணம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசியல் சார்புகளும், முன்னுரிமைகளும் மிகவும் வேறுபடுகின்றன. இவை அவர்களுடைய மாறுபட்ட கலாசாரப் பின்னணிகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டங்கள் இரண்டையும் பிரதிபலிக்கின்றன.

டியர்போர்னில் உள்ள பொருளாதார மற்றும் சமூக சேவைகளுக்கான அரபு சமூக மையத்தில் அரபு அமெரிக்க சமூகங்களுக்கான தேசிய அமைப்பை இயக்கும் ரிமா மெரூஹ், அரபு வாக்குகளைத் துல்லியமாக எண்ணுவது சிரமமானது என்று பிபிசியிடம் கூறினார்.

"அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அரேபியர்களை ஒரு தனித்துவமான இனக் குழுவாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதனால் அவர்களின் எண்ணிக்கையைக் கூறுவது கடினம். ஆனால் மிச்சிகனில் குறைந்தது 300,000 அரபு அமெரிக்க வாக்காளர்கள் இருக்கின்றனர்," என்று மெரூஹ் மதிப்பிடுகிறார்.

இந்த எண்ணிக்கைகளைப் புரிந்துகொள்ள மிச்சிகனில் கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். டிரம்ப் 2016இல் மிச்சிகனில் வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2020இல் ஜோ பைடன் இந்த மாகாணத்தைக் கைப்பற்றியபோது, 100,000 வாக்குகள் வித்தியாசம் இருந்தன.

எனவே அரபு வாக்காளர்கள் மிச்சிகனின் வாக்காளர்களில் ஒரு சிறிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அத்தகைய நெருக்கமான போட்டியில் அவர்களால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

பாரம்பரியமாக, அரபு அமெரிக்க வாக்காளர்கள் ஒரு பிரச்னையை மையப்படுத்தி அணி திரண்டதில்லை என்றாலும், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்கிறார் மெரூஹ்.

காஸா போருக்குப் பிறகு, ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல அரபு அமெரிக்கர்கள் கவனம் செலுத்தும் ஒரு முக்கியப் பிரச்னையாக மத்திய கிழக்கு விவகாரம் உள்ளதாகக் கூறுகிறார் மெரூஹ்.

எனினும் எதிர்காலத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதில் அரபு வாக்காளர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிலைப்பாடு அந்தப் பிராந்தியத்தில் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பும் சிலர் அவரை ஆதரிக்கின்றனர்.

மற்றவர்கள் ஹாரிஸ் ராஜ்ஜீய ரீதியாக ஈடுபடுவதற்கும் நீண்டகால தீர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். இதுபோக, பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெயினை ஆதரிக்கும் ஒரு குழு உள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு குறித்த அவரது விமர்சனம் அவர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலிக்கிறது.

 

மத்திய கிழக்கு கொள்கை குறித்த போராட்டம்

சாம் அப்பாஸ்
படக்குறிப்பு, இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்வது மிகவும் சிக்கலானது என்கிறார் சாம் அப்பாஸ்

கமலா ஹாரிஸ் அரபு சமூகத்துடன் நட்புறவுடன் இருக்க முயன்று வருகிறார். மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கொண்டு வருவதை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், அவர் பாலத்தீனியர்களின் உரிமைகள் குறித்தும் பேசியுள்ளார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, கண்ணியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவொரு நுணுக்கமான நிலைப்பாடு, ஆனால் சாம் அப்பாஸ் போன்ற வாக்காளர்களை இதன் மூலம் ஈர்ப்பது கடினமான காரியம்.

தனது பரபரப்பான டியர்போர்ன் உணவகத்தில் அமர்ந்து பேசிய அப்பாஸ், பல அரபு அமெரிக்கர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறார். மத்திய கிழக்கில் சிந்தப்படும் ரத்தத்திற்கு பைடனும் ஹாரிஸும் நேரடியாகப் பொறுப்பாவதாக அவர் கூறுகிறார். அவருக்குத் தெரிந்த அனைவரும் ஹாரிஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.

இந்தத் தேர்தல் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளதாக அப்பாஸ் கூறுகிறார். "இரண்டு தீமைகளில் குறைந்த தீமை" ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் அவர். அவர் யாருக்கு வாக்களிப்பார் என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் தேர்தல் நாளில் தனது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

மறுபுறம், டிரம்ப். அவரது குடியேற்றக் கொள்கை முஸ்லிம்-விரோத, அரபு-விரோத அணுகுமுறையாக பலரால் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமான உறவுகள் இருந்தபோதிலும், ஆச்சர்யப்படும் எண்ணிக்கையிலான அரபு அமெரிக்கர்களின் ஆதரவை டிரம்பால் வென்றெடுக்க முடிந்தது.

அவர் அதிபராக இருந்தபோது போர்கள் எதுவும் வெடிக்கவில்லை என்ற அவரது கூற்று, அவர் பதவியில் இருந்திருந்தால் யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அவர் வலியுறுத்தியது, மோதல்கள் வேண்டாம் என்று நினைப்பவர்களிடம் எடுபட்டுள்ளது.

தனது அரபு நாட்டு சம்பந்தி மசாத் பவுலோஸை குறிப்பிட்டு டிரம்ப் பேசி வருகிறார். மசாத் பவுலோஸின் மகன், டிரம்பின் மகள் டிஃப்பனியை திருமணம் செய்துள்ளார். விரைவில் பிறக்கவிருக்கும் தனது பேரக்குழந்தை பாதி அரபு பின்னணியை கொண்டிருக்கும் என்பதை அவர் வெளிப்படையான பெருமிதத்துடன் குறிப்பிட்டு வருகிறார்.

 

மாறும் விசுவாசம்

கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனநாயகக் கட்சி மீது உண்டாகியுள்ள விரக்தி, அரபு அமெரிக்க சமூகத்திற்குள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. முதலில் பைடனை கைவிடுங்கள் என்றும், இப்போது கமலா ஹாரிஸை கைவிடுங்கள், என்ற பெயரிலும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பிரசாரம் வேகம் எடுத்துள்ளது.

அரபு மற்றும் முஸ்லிம் பிரச்னைகளுக்கு உதட்டளவில் சேவை செய்வதாகவும், அதே நேரத்தில் மத்திய கிழக்கில் வன்முறை தொடர்வதற்கு ஜனநாயகக் கட்சி, உடந்தையாக இருப்பதாகவும் அந்த பிரசாரத்தின் நிறுவனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரசாரத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் அப்தெல் சலாம், இந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிரானது அல்ல, ஆனால் ஜனநாயகக் கட்சியின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டிற்கான பதிலடி என்று வாதிடுகிறார்.

"இரண்டு அரசியல் கட்சிகளும் வெறுக்கத்தக்கவை என்ற முடிவுக்குத் தாங்கள் வந்துள்ளதாக," அவர் கூறுகிறார், முஸ்லிம் அமெரிக்கர்கள் வாக்களிக்க அணிதிரள வேண்டும், ஆனால் அவர்கள் "இரண்டு அரசியல் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்.

டிரம்புக்கு ஆதரவாக தராசுகளை சாய்க்கும் அபாயம் இருந்தாலும்கூட, இந்தக் குழு பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை வழிமொழிந்துள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் குரல்களைப் புறக்கணித்தமைக்கு ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்தெல் சலாம் கூறுகிறார்.

 
சமாரா லுக்மான
படக்குறிப்பு, சமாரா லுக்மான் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார், ஆனால் இப்போது டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்

ஏமன்-அமெரிக்க அரசியல் ஆர்வலரும் ரியல்-எஸ்டேட் முகவருமான சமாரா லுக்மேன் நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சியை ஆதரித்து வருகிறார். இருப்பினும், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அரபு அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் டிரம்பின் பிரசார அணுகுமுறையை அவர் சுட்டிக்காட்டுகிறார். டிரம்பின் பிரசாரக் குழுவினரால் தனிப்பட்ட முறையில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். பிரசார பேரணிகளுக்கு மத்தியில் முன்னாள் அதிபர் டிரம்பை அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு, டிரம்ப் மீதான பார்வையை வெகுவாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

அந்த உரையாடலின்போது டிரம்ப் "மனிதாபிமானத்தை" வெளிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். அரசியல்ரீதியாக, டிரம்ப் எந்தவித தூண்டுதலும் இல்லாமல், "மத்திய கிழக்கில் போரை நிறுத்த" வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியபோது, காஸாவில் நடந்து வரும் போர் குறித்த சமாராவின் சொந்தக் கவலைகளை டிரம்ப் முன்கூட்டியே கணித்திருந்ததைப் போல் இருந்தது என அவர் ஆச்சர்யப்பட்டார்.

தனக்குத் தெரிந்த பல அரபு அமெரிக்கர்களின் வாக்குகளுடன் சேர்ந்து தனது வாக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் நம்புகிறார். அதுகுறித்துப் பேசியபோது, "இதுவொரு தண்டனை வாக்கு," என்று சமாரா கூறினார்.

 

அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் வெல்ல முடியுமா?

சமி காலிதி
படக்குறிப்பு, அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் இன்னும் வெல்வதற்கு இன்னும் நேரமிருப்பதாகக் கூறுகிறார் சமி காலிதி.

மிச்சிகனில் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்து வந்தாலும், ஜனநாயகக் கட்சி விட்டுக் கொடுக்கவில்லை. பல அரபு அமெரிக்கர்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றிருந்த கட்சி அது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தின் மீதான பாதிப்புகளுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி இந்த சமூகத்தினரிடம் ஆதரவு பெற்று வந்தது.

மிச்சிகனில் உள்ள ஜனநாயக கிளப்பின் தலைவரான சமி காலிதி, அரபு வாக்காளர்களை வெல்ல கமலா ஹாரிஸுக்கு இன்னமும் நேரம் இருப்பதாக நம்புகிறார்.

"காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், பாலத்தீனியர்களுக்கு அதிக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு வரவும்" ஹாரிஸ் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். "காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பதில்" கமலா ஹாரிஸுக்கு உடன்பாடு இல்லை எனவும், அது அரபு அமெரிக்க வாக்காளர்களை ஈர்ப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

அரபு அமெரிக்கர்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான அங்கீகாரத்தை வழங்கும் ஒரே அரசியல் அமைப்பு ஜனநாயகக் கட்சி மட்டுமே என்று காலிதி கூறுகிறார். மத்திய கிழக்கிற்கான கமலா ஹாரிஸின் அணுகுமுறை அதிபர் பைடனின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுவதாகவும் அரபு அமெரிக்கர்களுக்கு மிகவும் சாதகமானது என்றும் அவர் நம்புகிறார்.

எவ்வாறாயினும், சமூகத்தில் பலருக்கு அவரது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தெரியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகையால், இந்தச் சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தொடர வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் காலிதி வலியுறுத்துகிறார்.

 

விரக்தி மற்றும் அக்கறையின்மை

பாலஸ்தீன-அமெரிக்க கலைஞர் ஜெனைன் யாசின்
படக்குறிப்பு, பாலஸ்தீன-அமெரிக்க கலைஞர் ஜெனைன் யாசின் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை

ஆனால் சிலருக்கு, அரசியல் கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. பாலத்தீன-அமெரிக்க கலைஞரான ஜெனைன் யாசின் வாக்களிப்பதை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, இஸ்ரேல் மீதான அமெரிக்க கொள்கை ஒரு சமரசத்திற்கு இடமில்லாத பிரச்னை. பாலத்தீனியர்களுக்கு எதிரான ஒரு "இனப்படுகொலை"யை இரண்டு வேட்பாளர்களும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இந்தத் தேர்தலில் இருந்து விலகியிருக்க யாசின் எடுத்துள்ள முடிவு பல அரபு அமெரிக்கர்களால் உணரப்படும் ஆழ்ந்த விரக்தியைப் பிரதிபலிக்கிறது.

அரபு அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, "பாலத்தீனமே எங்கள் முழு பிரச்னை" என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் அவர். மேலும் பாலத்தீனர்களுக்கு அதே உரிமைகளைக் கோராதபோது, "கருக்கலைப்பு, பெண்கள் உரிமைகள், இனப்பெருக்க நீதி குறித்து அக்கறை காட்டுவதாக" கூற முடியாது என்பதையும் ஜனநாயகக் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிவதாக அவர் கூறுகிறார். இளம் தலைமுறை மத்தியில், இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க கொள்கைகளுக்கு எழும் எதிர்ப்புக் குரல் அதற்கான குறியீடாக இருப்பதாகவும் ஜெனைன் யாசின் குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  தான். பயங்கரவாதிகளுக்கு இருக்கடி ஆப்பு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார்?

November 3, 2024

spacer.png

அடுத்த வாரம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள அரச தலை வருக்கான தேர்தலில் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என உல கின் எதிர்கால பொருளாதார நில மைகளை துல்லியமாக கணிப்பு செய்துவரும் பொருளியல் நிபுணர் கிறிஸ்தோப் பாரோட் தெரிவித்துள் ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட் பாளரும், தற்போதைய துணை அரச தலைவருமான கமலா ஹரீஸ் ஒரு விகிதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னியில் உள்ளதாக அண்மையில் த நியூயோக் ரைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு வேட்பாளர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. வெற்றியீட்டும் விகித வேறுபாடுகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. வேறுபட்ட கருத்துக்கணிப்புக்கள், பங்குச் சந்தை நிலவரம், பொருளாதார நிலமைகள், பந்தையங்கள், எதிர்வுகூறல்கள் மற்றும் தேர்தல் மாதிரி களை ஆய்வு செய்ததன் மூலம் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பாரோட்  தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் வெற்றி காங்கி ரஸ் சபையில் பிளவுகளை ஏற்படுத்தும், அது வரிக் குறைப்பு, வர்த்த கக் கட்டுப்பாடுகள் மற்றும் வெளி விவகாரச் கொள்கைகளில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தும். ஹரீஸ் வெற்றிபெற்றால் பொருளா தாரத் தில் அதிக மாற்றம் ஏற்படாது  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், எதிர்வரும் வாரம் இடம்பெறும் தேர்தலில் ஹரீஸ் வெற்றிபெறுவார் என அலன் லிற்ச்மன் தெரிவித்துள்ளார். இவர் 1984 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இடம்பெற்ற 10 அரச தலைவர் தேர்தல்களில் 9 தேர் தல்களின் முடிவுகளை சரியாக கணிப்பிட்டவர்.
 

 

https://www.ilakku.org/அமெரிக்க-தேர்தலில்-டொனால/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள அரச தலை வருக்கான தேர்தலில் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என உல கின் எதிர்கால பொருளாதார நில மைகளை துல்லியமாக கணிப்பு செய்துவரும் பொருளியல் நிபுணர் கிறிஸ்தோப் பாரோட் தெரிவித்துள் ளார்.

large.IMG_7424.jpeg.aff744bda3f112888305

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_7424.jpeg.aff744bda3f112888305

என்னதான் தலைகீழாக நின்றாலும் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது! அடுத்த நாலு வருடங்கள் உலகில் பெரிய மாற்றங்களை உருவாக்குமா தெரியவில்லை, ஆனால் போலியான தகவல்கள் மூலம் போலியான உலகம் கட்டமைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

 

large.IMG_7424.jpeg.aff744bda3f112888305

டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உலகம் அமைதியாக இருந்ததை மறந்த/மறைத்த வர்ணசித்திரம்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  தான். பயங்கரவாதிகளுக்கு இருக்கடி ஆப்பு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு!😂

அப்ப‌ நீங்க‌ள் ஆத‌ரிச்ச‌ உக்கிரேனை ர‌ம் கைவிட்டு விடுவாரா

 

அல்ல‌து புட்டின் கூட‌ நேர‌டி மோத‌லில் இற‌குவாரா ர‌ம்

 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உல‌க‌ம் ச‌தாம் குசைன் வாழ்ந்த‌ கால‌த்தில் இருந்த‌ உல‌க‌ம் கிடையாது முற்றிலும் மாறு ப‌ட்ட‌ உல‌க‌ம்................ம‌ற்ற‌வை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள்

 

அமெரிக்க‌னும் இஸ்ரேலும் தேசிய‌ வாதிக‌ள் ஹா ஹா ந‌ல்ல‌ யோக்😁.....................................

2 hours ago, குமாரசாமி said:

large.IMG_7424.jpeg.aff744bda3f112888305

டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உலகம் அமைதியாக இருந்ததை மறந்த/மறைத்த வர்ணசித்திரம்.

வ‌ட‌கொரியா பிர‌ச்ச‌னைய‌ சிங்க‌ பூரில் பேசி தீர்த்த‌ ர‌ம்

உல‌க‌ போரை விரும்ப‌ மாட்டார் என்று நினைக்கிறேன் தாத்தா..................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்

உங்க‌ட‌ நாட்டு ஊட‌க‌ங்க‌ள் என்ன‌ சொல்லுகின‌ம்

 

யார் வெல்லுவின‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

@ஈழப்பிரியன்

உங்க‌ட‌ நாட்டு ஊட‌க‌ங்க‌ள் என்ன‌ சொல்லுகின‌ம்

 

யார் வெல்லுவின‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................................

பையா முடிவு எவருமே கணிக் முடியாத நிலை.

ரம் தோற்றால் முடிவு சொல்ல கிழமையோ மாதமோ செல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா முடிவு எவருமே கணிக் முடியாத நிலை.

ரம் தோற்றால் முடிவு சொல்ல கிழமையோ மாதமோ செல்லலாம்.

அப்ப‌டியும் ஒரு சிக்க‌ல் இருக்கா

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா👍..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அப்ப‌டியும் ஒரு சிக்க‌ல் இருக்கா

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா👍..............................

48%  ரம்  49% கமலா

இது எந்த நாளும் 1/2 வீதம் 1 வீதம் இருவருக்கும் கூடிக்குறையுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

48%  ரம்  49% கமலா

இது எந்த நாளும் 1/2 வீதம் 1 வீதம் இருவருக்கும் கூடிக்குறையுது.

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா👍........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

48%  ரம்  49% கமலா

இது எந்த நாளும் 1/2 வீதம் 1 வீதம் இருவருக்கும் கூடிக்குறையுது.

ஜேர்மனிக்கு கமலா வந்தால் தான் சந்தோசமாம்.

டொனால்ட் ரம்ப் வந்தால் ஜேர்மனிய ஆட்சியே கவுழும் என்ற நிலையில் இருக்கின்றது

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனிக்கு கமலா வந்தால் தான் சந்தோசமாம்.

டொனால்ட் ரம்ப் வந்தால் ஜேர்மனிய ஆட்சியே கவுழும் என்ற நிலையில் இருக்கின்றது

ஜேர்மனி மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகள் ரம் வருவதை விரும்பவில்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.