Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

மிகவும் துல்லியமாக ஆசிய அமெரிக்கர்களின் ட்ரம்ப் நோக்கிய மனப்பாங்கைப் பிரதிபலித்திருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்: வரி குறைய வேண்டும் (பெரும்பாலும் அதிக வருமானம் இருந்தால் இதை நாடுவர்), சமூக நலத்திட்டங்கள் குறைய வேண்டும் (நாம் பத்து டொலரோடு வந்து மில்லியனராகவில்லையா? இங்கே பிறந்தவனுக்கு என்ன கொள்ளை😎?), இவையிரண்டினாலும் நம் வங்கிக் கணக்கில் பணம் சேர வேண்டும்- இந்த குறுகிய "காசு வட்டத்திற்குள்" நின்று யோசிக்கும் ஆசிய அமெரிக்க குடிகளாகவே என்னுடைய பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்.

இப்படித் தான் இங்கும் அவரின் ஆதரவாளர்களான எங்கள் மக்கள் எல்லோரும் வாதாடுவார்கள். இப்பொழுது ட்ரம்ப் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் 'No Tax for the Middle Class' பற்றி பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்............... விக்கிரவாண்டியில் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்குப் போட்டதிற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா..........🫣.  

  • Replies 142
  • Views 10.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது..  சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்து

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதை

  • குமாரசாமி
    குமாரசாமி

    விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

இப்படித் தான் இங்கும் அவரின் ஆதரவாளர்களான எங்கள் மக்கள் எல்லோரும் வாதாடுவார்கள். இப்பொழுது ட்ரம்ப் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் 'No Tax for the Middle Class' பற்றி பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்............... விக்கிரவாண்டியில் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்குப் போட்டதிற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா..........🫣.  

அநேகமான ஐனநாயக தேர்தல்களின் போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையில் தானே எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அநேகமான ஐனநாயக தேர்தல்களின் போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையில் தானே எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.

கட்சி மற்றும் வேட்பாளர்கள் கொடுக்கும், சொல்லும் வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்களிலிருந்து தான் நாங்கள் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது சரியே, விசுகு ஐயா. ஆனால், ஒவ்வொரு பொதுமகனிடனும் ஓரளவாவது பொதுநலமும், நீண்டகால நோக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதே ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தானே. இதைவிட மனிதாபிமானம் என்பதும் தன்னளவில் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் தானே.

'அகதிகளுக்கு எல்லைகளை மூடி விடுவோம்............' என்ற ஒரு காரணம் போதும் எனக்கு அப்படிச் சொல்லும் கட்சியிடம் இருந்து விலகுவதற்கு.   

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஏன் விலகுகிறேன் என்பதற்கான பூரண விளக்க உரையை பைடன் இன்று வழங்குவார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அகதிகளுக்கு எல்லைகளை மூடி விடுவோம்............' என்ற ஒரு காரணம் போதும் எனக்கு அப்படிச் சொல்லும் கட்சியிடம் இருந்து விலகுவதற்கு.   

அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

. விக்கிரவாண்டியில் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்குப் போட்டதிற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா........

இருக்கிறது,. பணம் கொடுத்த பின் வாக்கு அளிக்கிறார்கள்,........மற்றும் வாக்குறுதிகளை  மீறலாம் அல்லது வரி கூட்டலாம்.  இங்கே இன்னும் பணம் கொடுக்கவில்லை,.....மேலும் வரி குறைத்தால். வேறு வழிகளில் மக்களிடமிருந்து  அந்த பணம் அறவிடப்படமாட்டாதா. ??

1 hour ago, ஈழப்பிரியன் said:

அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.

உண்மை ஆனால் வாக்கு அளிக்கும் காரணம் வேறுறாக. இருக்கும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.

சில நம்மவர்களே இருக்கின்றார்கள், அண்ணா. ஆனால், 80/20 கூட இல்லை என்று தான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kandiah57 said:

இருக்கிறது,. பணம் கொடுத்த பின் வாக்கு அளிக்கிறார்கள்,........மற்றும் வாக்குறுதிகளை  மீறலாம் அல்லது வரி கூட்டலாம்.  இங்கே இன்னும் பணம் கொடுக்கவில்லை,.....மேலும் வரி குறைத்தால். வேறு வழிகளில் மக்களிடமிருந்து  அந்த பணம் அறவிடப்படமாட்டாதா. ?

இங்கு கொடுக்க்கப்படும் சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை. அவற்றை மீறமுடியாது. வருமான வரி குறைப்பு என்பது ஒரு திட்டவட்டமான வாக்குறுதி. அதுதுடன் இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுழற்சி முறையில் வேறு தேர்தல்களும் வந்து கொண்டேயிருக்கும். அவையும் மிக முக்கியமானவையே, ஆதலால் சும்மா வாய்க்கு  வந்ததை எல்லாம் சொல்லி விட்டு ஓடித் தப்ப முடியாது.

சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை அல்ல. உதாரணம்: ரஷ்யா - உக்ரேன் சண்டையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற வாக்குறுதி. வெளியேற முடியா விட்டால், வேறு விதமாக உருட்டுவார்கள்.

வேறு வழிகளில் அரசாங்கம் பணத்தை மக்களிடமிருந்து அறவிடுவதற்கு திருத்தங்களும், வாக்களிப்பும் நடக்க வேண்டும். பல மாநிலங்கள் எதிர்க்கும். ஆனால் சமூக நலத் திட்டங்களை, ஆராய்ச்சிகளை, உதவிகளை மத்திய அரசு குறைக்கலாம். அதைத் தான் செய்வார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

உண்மை ஆனால் வாக்கு அளிக்கும் காரணம் வேறுறாக. இருக்கும்   

பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரசோதரன் said:

கட்சி மற்றும் வேட்பாளர்கள் கொடுக்கும், சொல்லும் வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்களிலிருந்து தான் நாங்கள் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது சரியே, விசுகு ஐயா. ஆனால், ஒவ்வொரு பொதுமகனிடனும் ஓரளவாவது பொதுநலமும், நீண்டகால நோக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதே ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தானே. இதைவிட மனிதாபிமானம் என்பதும் தன்னளவில் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் தானே.

'அகதிகளுக்கு எல்லைகளை மூடி விடுவோம்............' என்ற ஒரு காரணம் போதும் எனக்கு அப்படிச் சொல்லும் கட்சியிடம் இருந்து விலகுவதற்கு.   

ஆனால் தமிழகத்தில் கையில் காசு வாங்கிக்கொண்டு வாக்குகளை செலுத்துவதை இதனுடன் நீங்கள் ஒப்பிட்டது தவறல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஆனால் தமிழகத்தில் கையில் காசு வாங்கிக்கொண்டு வாக்குகளை செலுத்துவதை இதனுடன் நீங்கள் ஒப்பிட்டது தவறல்லவா??

அப்படி இரண்டையும் நான் ஒப்பிட்டது தவறாக இருக்கலாம், விசுகு ஐயா. எனக்கு தோன்றியதை ஒரு அவசரத்தில் அலசி ஆராயாமல் எழுதி விட்டேனோ என்று இப்பொழுது தோன்றுகின்றது.

பொதுவாகவே தமிழ்நாட்டில் காசு வாங்கி வாக்குப் போடும் எவரும் சொல்லும் ஒன்று: எங்களின் பணத்தை தானே அவர்கள் எங்களுக்கு கொடுக்கின்றார்கள் என்று. 

இதைப் பின் தொடர்ந்து வரும் எந்தப் பாதிப்பை பற்றியும் பலரும் அங்கு நினைத்துப் பார்ப்பதில்லை.

இங்கும், அமெரிக்காவில், வரி வேண்டாம் என்பவர்கள் சொல்வதும் அதுவே: எங்களின் உழைப்பு எங்களுக்கு மட்டுமே, என் வீட்டிற்கு மட்டுமே என்று.

அந்த வகையில் தான் இரண்டையும் ஒப்பிட முயற்சித்தேன்.

அமெரிக்காவில் இது வெறும் பேச்சு மட்டுமே. இப்படியான ஒன்று இங்கு வரவே முடியாது. மத்திய அரசின் முதுகெலும்பே மக்கள் கொடுக்கும் வரிப்பணம் தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

மத்திய அரசின் முதுகெலும்பே மக்கள் கொடுக்கும் வரிப்ப

வரி கொடுத்து தான்  சம்பளம் பெறுகிறோம் ... பிறகு  சாமன்கள். வேண்டும்போது  மீண்டும் வரி கொடுக்கிறோம்   ஒரு குறிப்பிட்ட பணம். அரசாங்கத்திற்கு  மீண்டும் மீண்டும்  வரியை செலுத்துகிறது    இது சரியா???    வரி அறவிடதா நாடுகளும் உலகில் உண்டு தானே   ??  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

வரி கொடுத்து தான்  சம்பளம் பெறுகிறோம் ... பிறகு  சாமன்கள். வேண்டும்போது  மீண்டும் வரி கொடுக்கிறோம்   ஒரு குறிப்பிட்ட பணம். அரசாங்கத்திற்கு  மீண்டும் மீண்டும்  வரியை செலுத்துகிறது    இது சரியா???    வரி அறவிடதா நாடுகளும் உலகில் உண்டு தானே   ??  

மிகச் சுருக்கமாக சொன்னால், ஒரு அரசிற்கு நிதி வசதி தேவை. நிதியைத் திரட்டுவதற்கு வேறு வழிகள் இருந்தால், மக்களிடம் இருந்து வரி வசூலிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.

ராஜராஜ சோழ ஆட்சிக் காலத்தின் ஒரு பக்கத்தை பற்றித் தான், அது ஒரு பொற்காலம் என்று, பொதுவாக நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த அரசின் கடும் வரிச் சுமை பற்றிய இன்னொரு பக்கமும் இருக்கின்றது. கேரளாவில் அவர்களின் ஆட்சியை ஒரு கொடுங்கோல் ஆட்சி என்று கூடச் சொல்லுவார்கள்.

அளவான, அதே நேரத்தில் நியாயமான வரி என்பது இன்றியமையாததே. அந்த வரிப் பணத்தை அரசு என்ன செய்கின்றது என்பதே பிரதான கேள்வி என்று நினைக்கின்றேன்.

நியாயமான வரி என்பதில் வரவுக்கேற்ற வரி என்பதும் அடங்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2024 at 01:26, ரசோதரன் said:

இப்படித் தான் இங்கும் அவரின் ஆதரவாளர்களான எங்கள் மக்கள் எல்லோரும் வாதாடுவார்கள். இப்பொழுது ட்ரம்ப் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் 'No Tax for the Middle Class' பற்றி பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்............... விக்கிரவாண்டியில் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்குப் போட்டதிற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா..........🫣.  

'No Tax for the Middle Class' ?

இது ஒரு சவாலான விடயமாக இருக்கும், ஆனால் சுவாரசியமான தகவல்கள், அமெரிக்கா பாதீட்டிற்கான வரி வருமான இடைவெளி கிட்டதட்ட 2 ரில்லியன் குறைவாக உள்ளது இதில் வருகின்ற வருமான வரி மூலமான வரியில் தனிநபர் வருமான வரி (நிருவன வரி அல்ல 11% ?) 48% இதில் மத்திய தரத்தினரின் வருமான வரியினை தள்ளுபடி செய்வார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, vasee said:

இல்லை, இத் திட்டம் இங்கு அமெரிக்காவில் நடைமுறைக்கு வராது. இது ஒரு வெறும் பேச்சு, அது வெறும் பேச்சாகவே முடியும்.

சமீபத்தில் நடந்த ஜி - 20 மாநாட்டின் போது, உலகம் முழுக்க மிகப் பெரிய பணக்காரர்களிடமிருந்து 2% அதிக வரி ஒன்றை அறவிட்டால் அதனால் உலகிற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று ஒரு பொருளாதார அறிஞர் (பிரெஞ்சு பொருளாதார அறிஞர் கேப்ரியால் ஜிக்மேன்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் இலாபமோ அல்லது சொத்தோ சேர்க்கும் பெரும் பணக்காரர்கள் இந்த வகையில் வருவார்கள். இங்கு குடியரசுக்கட்சி ஆட்சியில் இருந்தால், உலகமே இதற்கு சம்மதித்தாலும், இதற்கு குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இலேசில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் 'வரி எதிர்ப்பு' கொள்கை என்பது இந்த அளவில் தான் நடைமுறை சாத்தியமானது.    

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

உங்கள் கருத்திற்கு நன்றி, அமெரிக்காவிலே அதிக வருமானமீட்டும் மிக குறுகியதொகை பிரிவினரால் சமச்சீரற்ற பொருளாதார நிலையினால் அதிகளவில் உள்நாட்டு பொருளாதாரத்தில் சிக்கல்கள் நிகழ்கிறது ஆனால் அதனை மாற்றும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது எனவே  நினக்கிறேன் அதனை தவிர்த்து அமெரிக்க வல்லாதிக்கத்தினை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் கூட அண்மைக்காலங்களில் பெரிதாக எதிர்பார்த்த விளைவை உண்டாக்காமல் எதிர்மறை விளைவினை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அமெரிக்க கொள்கைகளின் தோல்வியாக நான் கருதுகிறேன், உதாரணமாக 2014 முதல் உக்கிரேனை பல்லுப்புடுங்கிய பாம்பாக இருந்த இரஸ்சியாவிற்கெதிராக ஒரு பலச்சமனிலையினை பேணுவதற்காக எடுத்த முயற்சிகள் எதிர்பாராவிதமாக பின்விளைவின உருவாக்கி உலக பொருளாதாரத்தில் 7% சரிவினை அமெரிக்க பொருளாதாரத்தடைகள் ஏற்படுத்தியுள்ளது (ஐ எம் எப்) கருத்தின் பிரகாரம்) அதே போல் பல பிளவுபட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார மையங்களை தோற்றுவித்துள்ளது இந்த அமெரிக்க கொள்கை.

இது உலக பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பினை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தலாம், மறுவளமாக அமெரிக்க பொருளாதாரம் பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளது (இதனை சில ஆண்டுகளாக சொல்லி உள்ளேன்) இதனை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சீர் செய்யலாம்?

துரதிஸ்ரவசமாக எந்த கட்சியாலும் முடியாது எனவே நான் நினைக்கிறேன் ஏனெனெனில் இந்த உக்கிரேன் அமெரிக்க கொள்கை ஒரு வண்ணாத்தி பூச்சி இறக்கை செயலாக ஒரு பொருளாதார சுனாமி ஒன்றினை உருவாக்குகிறது, அதன் ஒரு அங்கமாக ஜப்பானிய பொருளாதார கொள்கையாக பார்க்கிறேன், அவர்கள் யதார்த்தத்திற்கேதிரான  (எனது கருத்து) ஒரு போர் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள் அதன் முடிவு என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

 ஒற்றைப் படையான, single metric இனை வைத்துக் கொண்டு நீங்கள் செய்யும் எதிர்வு கூறல்களின் குறைபாட்டை முன்னரும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இது "அமெரிக்காவில் எல்லாம் திறமாக இருக்கிறது" என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால், நீங்கள் எதிர்வு கூறும் பாதிப்புகள் எவையும் இங்கே நிகழவில்லை. டொலரின் ஆதிக்கம் உலகில் குறையவில்லை. டொலரை போட்டு மிதிக்க கிளம்பிய பிரிக்ஸ் நாணயம் ரன்வேயில் இருந்து மேலே எழவேயில்லை😂.

இனியும் எழும்பாது என்று தான் பலர் சொல்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? டொலரின் பின்புலம் தங்கக் கையிருப்பிலோ, அமெரிக்காவின் மொத்தக் கடனிலோ தங்கியிருக்கவில்லை. இலாபத்தை முன்னிறுத்தும் பொருள்முதல்வாதம், வெளிப்படைத்தன்மையான நிதி நிர்வாகம், பாரபட்சமில்லாத சட்ட ஆட்சி இவை தான் அமெரிக்க டொலர் வைப்பு நாணயமாகவும், பரிமாற்ற நாணயமாகவும் நிலைக்க காரணங்கள்.

உள்ளூரில் இணையவெளியின் பாவனையைக் கூட  வெளிப்படையாக கையாளும் இயல்பில்லாத சீனாவின், ரஷ்யாவின் நாணயங்களை முட்டாள்கள் தான் நம்பிக் கையிருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்வர். தென்னாபிரிக்கா இன்னும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து வெளிவராமல் தவிக்கிறது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு"கடன்முறி, கடன்முறி" என்று நீங்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இனியும் எழும்பாது என்று தான் பலர் சொல்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? டொலரின் பின்புலம் தங்கக் கையிருப்பிலோ, அமெரிக்காவின் மொத்தக் கடனிலோ தங்கியிருக்கவில்லை. இலாபத்தை முன்னிறுத்தும் பொருள்முதல்வாதம், வெளிப்படைத்தன்மையான நிதி நிர்வாகம், பாரபட்சமில்லாத சட்ட ஆட்சி இவை தான் அமெரிக்க டொலர் வைப்பு நாணயமாகவும், பரிமாற்ற நாணயமாகவும் நிலைக்க காரணங்கள்

உள்ளூரில் இணையவெளியின் பாவனையைக் கூட  வெளிப்படையாக கையாளும் இயல்பில்லாத சீனாவின், ரஷ்யாவின் நாணயங்களை முட்டாள்கள் தான் நம்பிக் கையிருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்வர். தென்னாபிரிக்கா இன்னும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து வெளிவராமல் தவிக்கிறது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு"கடன்முறி, கடன்முறி" என்று நீங்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறீர்கள். 

உங்கள் கருத்திற்கு நன்றி,

2 hours ago, Justin said:

இனியும் எழும்பாது என்று தான் பலர் சொல்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? டொலரின் பின்புலம் தங்கக் கையிருப்பிலோ, அமெரிக்காவின் மொத்தக் கடனிலோ தங்கியிருக்கவில்லை. இலாபத்தை முன்னிறுத்தும் பொருள்முதல்வாதம், வெளிப்படைத்தன்மையான நிதி நிர்வாகம், பாரபட்சமில்லாத சட்ட ஆட்சி இவை தான் அமெரிக்க டொலர் வைப்பு நாணயமாகவும், பரிமாற்ற நாணயமாகவும் நிலைக்க காரணங்கள்.

நீங்கள் கூறும் இந்த அமெரிக்க பண்புகள் வேறு எந்த நாட்டிலும் இல்லையா? ஏன் அவ்வாறிருக்க அமெரிக்க நாணயத்தினை reserve currency ஆக பயன்படுத்துகிறார்கள் என்று எப்போதாவது சிந்த்தித்ததுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, vasee said:

உங்கள் கருத்திற்கு நன்றி,

நீங்கள் கூறும் இந்த அமெரிக்க பண்புகள் வேறு எந்த நாட்டிலும் இல்லையா? ஏன் அவ்வாறிருக்க அமெரிக்க நாணயத்தினை reserve currency ஆக பயன்படுத்துகிறார்கள் என்று எப்போதாவது சிந்த்தித்ததுண்டா?

இதில் ரூம் போட்டு யோசிக்க என்ன இருக்கிறது? மேலே நான் சுட்டிய காரணங்களை விட, பலமான இராணுவம், அதனால் வரும் உலக மேலாண்மை (ஐரோப்பாவுக்கு அடிவிழும் போதெல்லாம் ஓடி வந்து காப்பாற்றுவது போல😎), உள்ளூர் பொருளாதாரத்தில் கூட பல்லினத் தன்மை-diversity (எனவே ஒரு கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கும் முட்டாள் தனமின்மை) எனப் பல காரணங்கள் உண்டு.

ஆனால், இவையெல்லாம் இருந்தாலும், உள்ளக ஆட்சியில் ஸ்திரத் தன்மை இல்லாமல் போனால் அமெரிக்காவும் இன்னொரு பணக்கார Emirate வளைகுடா நாடு போல ஆகும். இதை உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லையானால், வேறெந்த பொருளியல் அளவீட்டையும் ஆழப் புரிந்தாலும் அமெரிக்க டொலரின் மேலாண்மை குழப்பமாகத் தான் இருக்கும்!

இதே போல ஒரு உலக நிதி மேலாண்மை சுயெஸ் கால்வாய் பிரச்சினை வரும் வரை பிரிட்டன் பவுண்ட்சுக்கு இருந்தது, சாம்ராஜ்ஜியம் விழ அதுவும் இல்லாமல் போனது. 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, vasee said:

ஏன் அவ்வாறிருக்க அமெரிக்க நாணயத்தினை reserve currency ஆக பயன்படுத்துகிறார்கள் என்று எப்போதாவது சிந்த்தித்ததுண்டா?

ஏனெனில் டொலரை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதை இனி மாற்றுவதாயின் பொது நாணயம் என்பது சாத்தியமே இல்லை. ஒவ்வொருவரும் மகாராஜா என்று நிற்பார்கள். 

யூரோ கூட டொலருக்கு போட்டியாக வந்தது என்று வெளியில் சொல்லப்படுகிறது. ஆனால் ஐரோப்பியர்கள் அப்படி நினைப்பதில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

யூரோ கூட டொலருக்கு போட்டியாக வந்தது என்று வெளியில் சொல்லப்படுகிறது. ஆனால் ஐரோப்பியர்கள் அப்படி நினைப்பதில்லை. 

அடிவாங்கியதால் அடங்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அடிவாங்கியதால் அடங்கிவிட்டார்கள்.

புரியவில்லை அண்ணா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

புரியவில்லை அண்ணா?

ஆரம்பத்தில் யூரோ இருந்ததைவிட இன்னும் முன்னேற்றம் கண்டிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும்.

கமலாவுக்காக தமிழ்நாட்டில் பூசை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் யூரோ இருந்ததைவிட இன்னும் முன்னேற்றம் கண்டிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும்.

உக்ரேன் யுத்தத்தை ஆரம்பித்ததில் அதுவும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் யூரோ இருந்ததைவிட இன்னும் முன்னேற்றம் கண்டிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும்.

கமலாவுக்காக தமிழ்நாட்டில் பூசை.

பெறுமதி தான் முன்னேற்றம் என்றால் டொலரோ யூரோவோ பக்கத்தில் நிற்கவே முடியாதே ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.