Jump to content

ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2024 at 17:35, ரசோதரன் said:

ராஜராஜ சோழ ஆட்சிக் காலத்தின் ஒரு பக்கத்தை பற்றித் தான், அது ஒரு பொற்காலம் என்று, பொதுவாக நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த அரசின் கடும் வரிச் சுமை பற்றிய இன்னொரு பக்கமும் இருக்கின்றது. கேரளாவில் அவர்களின் ஆட்சியை ஒரு கொடுங்கோல் ஆட்சி என்று கூடச் சொல்லுவார்கள்.

கேரளாவில் மட்டுமல்ல அவர்களின் ஆட்சி  ஒரு ஒரு கொடுங்கோல் ஆட்சியே தான்.

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது..  சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்து

ரசோதரன்

ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதை

குமாரசாமி

விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கேரளாவில் மட்டுமல்ல அவர்களின் ஆட்சி  ஒரு ஒரு கொடுங்கோல் ஆட்சியே தான்.

🤣...........

கல்கியின் கதையும், மணிரத்தினத்தின் படமும் கூட உங்களில் என்ணத்தில், கருத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை போல............😜.

ஒரு சமூகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக சில சாகசக் கதைகளும் தேவை தானே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இதில் ரூம் போட்டு யோசிக்க என்ன இருக்கிறது? மேலே நான் சுட்டிய காரணங்களை விட, பலமான இராணுவம், அதனால் வரும் உலக மேலாண்மை (ஐரோப்பாவுக்கு அடிவிழும் போதெல்லாம் ஓடி வந்து காப்பாற்றுவது போல😎), உள்ளூர் பொருளாதாரத்தில் கூட பல்லினத் தன்மை-diversity (எனவே ஒரு கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கும் முட்டாள் தனமின்மை) எனப் பல காரணங்கள் உண்டு.

ஆனால், இவையெல்லாம் இருந்தாலும், உள்ளக ஆட்சியில் ஸ்திரத் தன்மை இல்லாமல் போனால் அமெரிக்காவும் இன்னொரு பணக்கார Emirate வளைகுடா நாடு போல ஆகும். இதை உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லையானால், வேறெந்த பொருளியல் அளவீட்டையும் ஆழப் புரிந்தாலும் அமெரிக்க டொலரின் மேலாண்மை குழப்பமாகத் தான் இருக்கும்!

இதே போல ஒரு உலக நிதி மேலாண்மை சுயெஸ் கால்வாய் பிரச்சினை வரும் வரை பிரிட்டன் பவுண்ட்சுக்கு இருந்தது, சாம்ராஜ்ஜியம் விழ அதுவும் இல்லாமல் போனது. 

ஜப்பானிடம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவமே உள்ளது (ஜப்பானிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை காக்கும் கடமை அமெரிக்க அரசிற்குரியதாக உள்ளது), ஜப்பானிய ஜென் நாணயம் 6% ரிசர்வ் நாணயமாக பயன்படுத்தப்படுகிறதல்லவா?

மிகவும் பொருளாதார உறுதித்தன்மை கொண்ட நாடாக சிங்கப்பூர் இருந்தும் ஏன் அதன் நாணயம் கையிருப்பு நாணயமாக அமெரிக்க நாணயத்தினை புறந்தள்ள முடியவில்லை?

5 hours ago, விசுகு said:

ஏனெனில் டொலரை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதை இனி மாற்றுவதாயின் பொது நாணயம் என்பது சாத்தியமே இல்லை. ஒவ்வொருவரும் மகாராஜா என்று நிற்பார்கள். 

யூரோ கூட டொலருக்கு போட்டியாக வந்தது என்று வெளியில் சொல்லப்படுகிறது. ஆனால் ஐரோப்பியர்கள் அப்படி நினைப்பதில்லை. 

பொது நாணய அங்கீகாரம் அமெரிக்க  நாணயத்திற்கு மட்டும் இல்லை, வேறு சில நாணயத்திற்கும் உள்ளது ஆனால் அவையினால் ஏன் அமெரிக்க நாணயம் போல் வர முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

பொது நாணய அங்கீகாரம் அமெரிக்க  நாணயத்திற்கு மட்டும் இல்லை, வேறு சில நாணயத்திற்கும் உள்ளது ஆனால் அவையினால் ஏன் அமெரிக்க நாணயம் போல் வர முடியவில்லை.

முதலிலேயே சொல்லி விட்டேனே 

மற்றவர்கள் ஏற்கவில்லை. ஏற்க தயங்குகிறார்கள். காரணம் பல.... அவ்வாறு வீண் சிரமங்களை எடுப்பதை விட டொலர் இருப்பது பாதுகாப்பு எல்லோருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2024 at 19:24, ஈழப்பிரியன் said:
On 24/7/2024 at 17:51, ரசோதரன் said:

அகதிகளுக்கு எல்லைகளை மூடி விடுவோம்............' என்ற ஒரு காரணம் போதும் எனக்கு அப்படிச் சொல்லும் கட்சியிடம் இருந்து விலகுவதற்கு.   

அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.

பிரக்சிற் வாக்கெடுப்பின்போது பிரக்சிற்றுக்கு ஆதரவாக தமிழர்களில் 99 வீதமானவர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள் என்பதே. ஐரோப்பா தமழ்மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். அந்த வகையில ஐரோப்பிய ஒன்றயத்தில் இருப்பது நல்லது என்று தமிழ்மக்களின் சார்பு நிலையில் இருந்து கூட அவர்கள் யோசிக்கவில்லை.அவர்களுக்கு யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது.தாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி எண்ணம்.உண்மையில் ஐரோபாவில் வந்தவர்களை அங்கே வாழ வசதியில்லாமல் வந்தவர்கள் என்ற குருட்டுக்கண்கொண்டு பார்க்கிறார்கள். உண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இஙகிலாந்தை விட நல்ல வசதியான வாழ்க்கை இருக்கிறது.நம்மவர்கள் வருவது ஆங்கில மூலக்கல்வி என்ற ஒன்றுக்காககத்தான் என்பதே.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா அக்காவின் வருகை போட்டியில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் கமலா அக்கா ஜனாதிபதி ஆக முடியுமா என்பது சந்தேகமே. 

வெறும் ஆள் மாற்றம் ஜனாதிபதி போட்டியில் வெற்றி பெற போதுமானது என நான் நினைக்கவில்லை. 

பைடன் ஆட்சியில் கமலா அக்கா உப அதிபர். பைடன் ஆட்சி ஒரு தோல்வி என கருதினால் இங்கு கமலா அக்காவின் பங்கும் தோல்வியில் உள்ளது. 

எனவே, சிங்கமே வெற்றி வாகை சூடுவார் என நான் ஊகிக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2024 at 12:11, ஏராளன் said:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

22 JUL, 2024 | 02:51 PM
image
 

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார்.

பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன்  வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold'' என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.

https://www.virakesari.lk/article/189090

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

 

கமலாவுக்காக தமிழ்நாட்டில் பூசை.

இந்த விசயம், கமலா ஹாரிஸுக்கு தெரியுமா.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரன்களை யாராவது மறப்பார்களா?

மசாலைத்தோசை சுடும் கமலா கரீஸ்.

3 hours ago, தமிழ் சிறி said:

இந்த விசயம், கமலா ஹாரிஸுக்கு தெரியுமா.  😂

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மசாலைத்தோசை சுடும் கமலா கரீஸ்.

IMG_APphoto_Election_2B2_2_1_BS5U4K3H.jp

11harris10-articleLarge.jpg?quality=75&a

kamala-harris-iowa.JPG

பண்டி இறைச்சி பொரிக்கும்... கமலா ஹாரிஸ். 😂
இந்திய  மக்களுக்கு... இந்தப் படத்தை காட்டிப் போடாதேங்கோ.
பாவங்கள்... நொந்து போடுவாங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

பண்டி இறைச்சி பொரிக்கும்... கமலா ஹாரிஸ். 😂
இந்திய  மக்களுக்கு... இந்தப் படத்தை காட்டிப் போடாதேங்கோ.
பாவங்கள்... நொந்து போடுவாங்கள். 🤣

முஸ்லீம்களுக்குத் தான் பிரச்சனை.

இந்தியர்களும் பண்டிப் பிரியர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

முஸ்லீம்களுக்குத் தான் பிரச்சனை.

இந்தியர்களும் பண்டிப் பிரியர்களே.

கமலா ஹரிசின்… இந்தியாவில் உள்ள மூதாதையர்கள் ஐயங்கார் என  நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2024 at 20:26, ஈழப்பிரியன் said:

 

கமலம் என்றால் தாமரை என்பது. தமிழ்தானே வேர்ச்சொல் சமஸ்கிருதம் வேர்ச்சொல் என்று போட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2024 at 00:56, ரசோதரன் said:

🤣...........

கல்கியின் கதையும், மணிரத்தினத்தின் படமும் கூட உங்களில் என்ணத்தில், கருத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை போல............😜.

ஒரு சமூகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக சில சாகசக் கதைகளும் தேவை தானே.........

ஐரோப்பாவில் எந்த மன்னர் கால  வரலாற்றை எழுதும் போதும் அவர்களின் எதிர்மறை அம்சங்களை தவறுகளை மறைக்காமல் எழுதியே உள்ளார்கள். ஏனென்றால்,  அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு தத்தமது சமூகங்களை முன்னேற்றிய அவர்களுக்கு  இத்தகைய சாகஸ கதையாடல்களில் தங்கி இருக்க வேண்டுய அவசியமில்லை.   காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்து கொள்ளாத பத்தாம்பசலி இனங்களுக்கே தாழ்வு மனப்பான்மையை போக்க இவ்வாறான சாகாச கதையாடல்கள் புராணங்களில் தங்கி இருக்க வேண்டிய தேவை உள்ளது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

ஐரோப்பாவில் எந்த மன்னர் கால  வரலாற்றை எழுதும் போதும் அவர்களின் எதிர்மறை அம்சங்களை தவறுகளை மறைக்காமல் எழுதியே உள்ளார்கள். ஏனென்றால்,  அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு தத்தமது சமூகங்களை முன்னேற்றிய அவர்களுக்கு  இத்தகைய சாகஸ கதையாடல்களில் தங்கி இருக்க வேண்டுய அவசியமில்லை.   காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்து கொள்ளாத பத்தாம்பசலி இனங்களுக்கே தாழ்வு மனப்பான்மையை போக்க இவ்வாறான சாகாச கதையாடல்கள் புராணங்களில் தங்கி இருக்க வேண்டிய தேவை உள்ளது.  

👍..........

ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது.

அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. 

எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. 

ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:
15 hours ago, island said:

ஐரோப்பாவில் எந்த மன்னர் கால  வரலாற்றை எழுதும் போதும் அவர்களின் எதிர்மறை அம்சங்களை தவறுகளை மறைக்காமல் எழுதியே உள்ளார்கள். ஏனென்றால்,  அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு தத்தமது சமூகங்களை முன்னேற்றிய அவர்களுக்கு  இத்தகைய சாகஸ கதையாடல்களில் தங்கி இருக்க வேண்டுய அவசியமில்லை.   காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்து கொள்ளாத பத்தாம்பசலி இனங்களுக்கே தாழ்வு மனப்பான்மையை போக்க இவ்வாறான சாகாச கதையாடல்கள் புராணங்களில் தங்கி இருக்க வேண்டிய தேவை உள்ளது.  

Expand  

👍..........

ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது.

அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. 

எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. 

ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும்.  

ஒருவர் தன்னை நன்றாக கவனித்த தனது அப்பாவுக்கு நினைவு அஞ்சலி கொண்டாடினாராம். அதை பார்த்த இன்னொரு தமிழர்  அவருடைய அப்பா- அப்பாவோ அவைரை குடும்பத்தோடு கைவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டவர் இவர்களை கவனிப்பதே இல்லை அம்மா உணவுகள் செய்தும் உறவினர் உதவியுடன் வாழ்கை ஓடியது   அவரும் தனது அப்பாவுக்கு பெரிய அளவில் நினைவு அஞ்சலி செய்து அப்பாவின் பாச பிணைப்பை பற்றி புழுகி உரை நிகழ்த்தினாராம். அதே மனப்பான்மை தான் புனைவுகளை வரலாறாக  மாற்றி அடித்துவிடுவதும் குதுகலிப்பதும்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2024 at 16:41, விசுகு said:

முதலிலேயே சொல்லி விட்டேனே 

மற்றவர்கள் ஏற்கவில்லை. ஏற்க தயங்குகிறார்கள். காரணம் பல.... அவ்வாறு வீண் சிரமங்களை எடுப்பதை விட டொலர் இருப்பது பாதுகாப்பு எல்லோருக்கும். 

உங்கள் கருத்திற்கு நன்றி,

நிங்கள் கூறுகின்ற காரணங்களுடன் பல காரணங்கள் உள்ளது(அனைத்து நிறுவன கொடுக்கல் வாங்கலுக்கான இரசீதுகள் -invoices டொலரில் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகின்றது, SWIFT, Eurodollar, Petrodollarஎன கூறிக்கொண்டே செல்லலாம்) ஆனால் இங்கு உலக இருப்பு நாணய கருத்தினை கூறவரவில்லை ஆனால் அந்த கருத்து எழுப்பப்படும் போது அதுவும் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்பதனாலேயே அது பற்றி கேட்டேன்.

Eurodollar பாதிப்பினால் ஒரு  ஜப்பானிய வங்கி ஒன்றிற்கு2025 இல் கிட்டதட்ட 10 பில்லியன் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

இது தவிர பல அமெரிக்க வங்கிகள் கிடதட்ட 540 பில்லியன் காகித இழப்புகளை அமெரிக்க பணமுறிகளினால் ஏற்பட்டுள்ளது, இது 2008 பொருளாதார சரிவிற்கு பின்னால் ஏற்பட்ட பதில் நடவடிக்கையால் ஏற்படுகிறது(Basel3 Accord)

உலக பொருளாதார சரிவின் முன்னரான காகித இழப்பு கிட்டதட்ட 75 பில்லியன் இருந்ததாக கூறப்படுகிறது அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை ஆனால் அதன் பின்னர் பொருளாதார சரிவினால் 700 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சந்தை பொருளாதாரத்தினால் சந்தை சரிவு 10 மடங்காக மாறியது)

540X10=5trillion? 

தற்போது உள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட உள்ள பாதிப்பு 1929 இல் வந்த பொருளாதார பாதிப்பிற்கு ஒப்பானதாக கூறுகிறார்கள், 

GFC தனிய வீட்டு சந்தையில் ஏற்பட்டதாக்கம், தற்போது குறைவடைந்து செல்லும் m2 பண வழங்கள், சொத்து குமிழிகள், வங்கி திரவத்தன்மை, அரச கடன் சுமை(இது 1929 இருக்கவில்லை) இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பொருளாதார சரிவினை ஏற்படுத்த உள்ளது, இதன் போது பெரிய நிறுவனங்கள் தப்பிவிடும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே.

மிக சுருக்கமாக கூறியுள்ளேன் முன்பு விபரமாக எழுதுவதுண்டு, அதன்  முலம் மற்றவர்கள் நான் கூறவருவதனை புரிந்து அதனை எதிர்த்து ஆக்கபூர்வமான எதிர்கருத்தின் மூலம் எனது கருத்தினை குறை கூறுவதன் மூலம் புதிய விடயங்களை புரிந்து கொள்ளலாம் எனும் ஒரு  ஆசைதான்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை அதற்கு காரணம் டோல்ஸ்ரொய் கூறும் காரணமாக இருக்கலாம்,

Leo Tolstoy - “The most difficult subjects can be explained to the most slow-witted man if he has not formed any idea of them already; but the simplest thing cannot be made clear to the most intelligent man if he is firmly persuaded that he knows already, without a shadow of doubt, what is laid before him.”

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
    • இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி  👇 தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.  வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  ☹️ https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html King Charles III’s Coronation Medal The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.