Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில்  தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.

அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறைவேற்றுத்துறையின் ஒருசில அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளேன்.இச்சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடனும்,சுயாதீன தரப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது.ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எதிராகச் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படலாம்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டன.இவ்விடயம் குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சு அறிவியல் ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கைக்கு அமைய  வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி,நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நான்  ஒன்றிணைந்து கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில்  தகனம் செய்யப்பட்டமைக்கு  மன்னிப்பு கோரும் வகையில்  அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.அத்துடன் கவலையடைகிறோம்.

1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கரும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த  சம்பவங்கள்  பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.இருப்பினும் நாட்டு பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக் கணக்கான தமிழர் கொலையையும், சொத்துக்கள் சேதத்தையும்….  ஜனாசா எரிப்புடன் ஒரே தராசில் வைத்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார் நீதி அமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஆயிரக் கணக்கான தமிழர் கொலையையும், சொத்துக்கள் சேதத்தையும்….  ஜனாசா எரிப்புடன் ஒரே தராசில் வைத்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார் நீதி அமைச்சர்.

எலி ஏன் அம்மணமா ஓடுது? ஓ! சனாதிபதித்தேர்தல் வருதோ?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிழம்பு said:

அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

தெரியாமல் செய்தால் மன்னிப்பு கேட்கலாம்

திட்டம் போட்டே செய்தால் 

அது இனப் படுகொலை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாதவூரான் said:

எலி ஏன் அம்மணமா ஓடுது? ஓ! சனாதிபதித்தேர்தல் வருதோ?

இரண்டு வெவ்வேறு சம்பவங்களையும் ஒன்றாக்கி… போனால் போகுது என்ற ரீதியில் மன்னிப்பு கேட்டதன் மூலம் தமிழ் மக்களை மேலும் காயப் படுத்தி விட்டார் விஜயதாச ராஜபக்ச. இதிலும் பார்க்க மன்னிப்பு கேட்காமலே இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

large.IMG_6887.jpeg.e17ba62db88dff16d954

  • கருத்துக்கள உறவுகள்

ஐ யாம் சாரி,.........😏

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதி வியஜதாச ராஜபக்ச 100% அரசியல் காரணங்களுக்காக(வாக்குகளுக்காக) இப்படி ஒரு மன்னிப்பை முஸ்லிம்களிடமும், தமிழ் மக்களிடமும் கேட்கிறார். இவரின் பாராளுமன்ற உரைகளை கேட்டவர்களுக்கு தெரியும் எப்படியான இனவாதி இவர் என்பது. 

  • கருத்துக்கள உறவுகள்

atha.jpg?resize=750,375

ஜனாஸா எரிப்பு – மன்னிப்பை விட தண்டனையே அவசியம் – அதாவுல்லா கோாிக்கை!

ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கெட்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்கத் தண்டனை பெற்றக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம்  தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

 

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டிருந்தாா்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாஸாக்களை  எாித்தமை குறித்து மன்னிப்பு கோாியமை நல்ல விடயம். ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி வெளியிடப்பட்டமையால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது.

இவ்விடயம் தொடா்பாக நான் பல தடவை இந்தச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன். எனவே மன்னிப்புக் கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1393408

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் இறந்த சில  முஸ்லீம்களின் உடல் எரிப்பு சம்பந்தமாக அமைச்சர் கேட்ட மன்னிப்பிற்கு,  முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

ஆனால்.... ஜூலை கலவரத்தில் தமிழர்கள்   பல ஆயிரம் உயிர்களை இழந்தும்,
பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்த போதும்..  
பொத்தாம் பொதுவாக  விஜயதாச ராஜபக்ச  கேட்ட மன்னிப்பிற்கு தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளமை கண்டிக்கப் படவேண்டியது.

உங்களால்... தமிழ் மக்களுக்கு அரசியல்  செய்யும் யோக்கியதை இல்லா விட்டால், தயவு செய்து ஒதுங்கி இருங்கள். செய்யக் கூடிய திறமையானவர்கள் அதனை தொடர்வார்கள்.

அரசியல் என்பது... வேலை மாதிரி... சொத்து, புகழ்  சேர்ப்பதற்குரிய இடம் அல்ல.
அது ஒரு இனத்திற்கு செய்யும் சேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

295490964_10221371268213952_2676684312529312946_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=gJEjrc8gMOkQ7kNvgEvU3LH&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYD_EdoPMeADmGZbxn-wBtbPzl-tQLcRD1hHYEL_Rm8Gdw&oe=66A5C7B3

 

நன்றி @kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஆனால்.... ஜூலை கலவரத்தில் தமிழர்கள்   பல ஆயிரம் உயிர்களை இழந்தும்,
பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்த போதும்..  
பொத்தாம் பொதுவாக  விஜயதாச ராஜபக்ச  கேட்ட மன்னிப்பிற்கு தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளமை கண்டிக்கப் படவேண்டியது.

தலைவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீண்டெளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Sajith-Premadasa.jpg?resize=700,375

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வேண்டும் – சஜித் கோாிக்கை!

தகனமா, அடக்கமா என்ற விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகனக் கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம் எனவும் இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டதாகவும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன போன்ற விடயங்களையும முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை கைவிட்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச் செயலைச் செய்ய தவறான தீர்மானங்களை எடுத்தவர்களைக் வெளிப்படுத்தி, தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1393496

  • கருத்துக்கள உறவுகள்

452505810_888789616619345_42351343549655

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2024 at 11:14, வாதவூரான் said:

எலி ஏன் அம்மணமா ஓடுது? ஓ! சனாதிபதித்தேர்தல் வருதோ?

நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்து விட்டது. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறாராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.