Jump to content

மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 சீனாவும் இந்தியாவும் என்ன வெள்ளி பார்க்கினமே? 😂

சீனன் வெள்ளி பார்க்கிரானோ இல்லையோ இந்தியா வெள்ளி பார்த்ததுதான் வரலாறு.

😁

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

Baba banaras என்ற தீவிர முஸ்லிம் எதிர்ப்பு, இந்திய தீவிர தேசியம் பேசும் கீச்சகக் கணக்கில் இருந்து "1000 இந்துக்கள் கொல்லப் பட்டிருப்பதாக" செய்தி பரப்புகிறார்கள். இதை நம்பி  எடுபட்டுப் போகும் யாழ் உறவுகள் அவதானமாக, பொய்ச்செய்திகளின் காவிகளாக மாறாமல் இருக்க வேண்டும்😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சீனன் வெள்ளி பார்க்கிரானோ இல்லையோ இந்தியா வெள்ளி பார்த்ததுதான் வரலாறு.

😁

பங்களாதேஷ்ல பாக்கிஸ்தான் 53 வருசம் கழிச்சு தன்ரை வேலைய காட்டியிருக்கு எண்டு கதைக்கினம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

பங்களாதேஷ்ல பாக்கிஸ்தான் 53 வருசம் கழிச்சு தன்ரை வேலைய காட்டியிருக்கு எண்டு கதைக்கினம் 😄

பாகிஸ்தானுக்குப் பின்னணியில் யார்? 

St. Martin தீவை இராணுவத் தளமாக்க மேற்கு நாடு கேட்டதாக பிரதமரே கூறியுள்ளார். 

இதற்குப் பிறகும் சந்தேகம் தீரவில்லை என்றால் யாம் என் பறையும்? 

🤣

இனி தெற்காசியாவில் தொடர்ச்சியான அரசியல் மாற்ங்களையும் அரசியல் படுகொலைகளையும் காண முடியும்.  கொரிய தீபகற்பத்தில் விரைவில் போர் ஆரம்பமானாலும் ஆச்சரியம் இல்லை. 

ஐரோப்பாவையும் ஆசியாவையும் போருக்குள் தள்ளிவிட்டு, வட அமெரிக்கா தன்னை உலகின் அடுத்த யுகத்திற்குள் (AI)  கொண்டு செல்கிறது.

இதன் விளைவுகளை அடுத்த 5 வருடங்களில் நாம் காண முடியும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

ஐரோப்பாவையும் ஆசியாவையும் போருக்குள் தள்ளிவிட்டு, வட அமெரிக்கா தன்னை உலகின் அடுத்த யுகத்திற்குள் (AI)  கொண்டு செல்கிறது.

ஆசியாவைப்பற்றி சொல்லத்தெரியேல்லை. ஆனால் ஐரோப்பாவுக்குள்ள நடந்த போரில அமெரிக்காவுக்கு பயங்கர வெற்றி.

அவைக்கொரு யூனியன்...அதுக்கொரு யூரோ  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2024 at 12:38, நிழலி said:

எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை.

ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார்.

அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர்.

சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர்.

இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான்.

//இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி  அமெரிக்கா ஓடவைத்ததோ//

 

கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது.

மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது)

அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். 

பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.

பங்களாதேஸ் செய்திகளையோ அரசியலையோ பின்பற்றுவதில்லை.

ஆனாலும் அண்மையில் இலக்கு காணொளியில் ஆய்வாளர் அரூஸ் தான் இந்த செய்தியை சொன்னார்.மற்றும்படி இது சரியா பிழையா என்றெல்லாம் தெரியாது.

அடுத்து இவரது தந்தை ரகுமான் இந்திள உளவுப்படையால்த் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக நீண்ட நாட்களுக்கு முன் அறிந்தேன்.இது கூட சரி பிழை தெரியாது.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்க்க சரியாக வந்தது.

இந்தியா அயலிலும் அமெரிக்கா கடல் கடந்தும் தமக்கு பிடிக்காக அரசுகளை நிம்மதியாக இருக்க விடுவதில்லை அதனால் இப்படியும் இருக்கலாம் என்று எண்ணிவிட்டேன்.

தவறான தகவல்களை எழுதியிருந்தால் அழித்துவிடவும்.

தகவல்களுக்கு நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sheikh-hasina-1.jpg?resize=700,375

மீண்டும் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் ஜாய் தெரிவித்துள்ளார்.

 

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சஜீப் வசீத் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பங்களாதேஷின் நிலைமையில் வெளிநாட்டு தலையீடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஐ. எஸ் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

https://athavannews.com/2024/1395208

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா, பாகிஸ்தானா? ஹசீனாவின் மகன் பேட்டி

``அம்மாவின் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி!” - மோதி மற்றும் வங்கதேச இந்துக்கள் பற்றி ஹசீனாவின் மகன் பேசியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES/SAJEEB WAZED FACEBOOK

படக்குறிப்பு,வங்கதேசத்தில் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகன் சஜீப் வாஜித் ஜாய்
2 மணி நேரங்களுக்கு முன்னர்

வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிய ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய், தனது தாயின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததற்கு நாட்டில் உள்ள ஒரு சிறு குழுவினரின் சதியும், ஐஎஸ்ஐயும் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தனது தாயின் உயிரை காப்பாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவின் விசாவை மேற்கத்திய நாடுகள் ரத்து செய்ததாக வெளியான தகவலும், அவர் பிற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ (ANI) செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கதேசத்தின் ஒரு சிறிய குழு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தான் நம்புவதாக சஜீப் வாஜித் கூறியுள்ளார். ஏனென்றால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த முகாந்திரமும் இல்லை. போராட்டக்காரர்கள் கோரியபடி இட ஒதுக்கீட்டை அரசு வெகுவாகக் குறைத்துவிட்டிருந்தது.

 

இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுத்தது ஹசீனா அரசாங்கம் அல்ல, நீதிமன்றம் தான் என்று அவர் கூறினார்.

"போராட்டத்தில் காவல்துறையை அத்துமீறி தாக்குதல் நடத்துமாறு அரசு ஒருபோதும் உத்தரவிடவில்லை. அத்துமீறி அதிகாரத்தை பயன்படுத்திய காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் உடனடியாக இடைநீக்கம் செய்தது, ஆனால் போராட்டக்காரர்கள் திடீரென எனது தாயாரின் அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரத் தொடங்கிவிட்டனர்" அவர் விவரித்தார்.

"மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? அவர்கள் மாணவர்கள் அல்ல, கலவரக்காரர்கள். அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க தூண்டப்பட்ட பயங்கரவாதிகள். நாட்டில் இனப் படுகொலை சூழலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் எனது தாயார் பதவி விலகினார்.” என்று சஜீப் வாஜித் ஜாய் கூறியுள்ளார்.

அமெரிக்கா குறித்து சஜீப் வாஜித் ஜாய் கூறியது என்ன?

ஷேக் ஹசீனா

பட மூலாதாரம்,FB/SAJEEB WAZED

படக்குறிப்பு,மகள் மற்றும் மகனுடன் ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சஜீப் வாஜித் ஜாய், `இதில் அமெரிக்கா ஈடுபட்டதா இல்லையா என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறினார். ஆனால் நிலைமையைக் கூர்ந்து கவனித்தால், போராட்டக்காரர்களை அரசுக்கு எதிராக யாரோ தூண்டிவிட்டதை உணரமுடியும் என்றார்.

மேலும் கூறுகையில், “ஆரம்பத்தில் போராட்டம் அமைதியாக நடந்தது. முதல்கட்ட போராட்டத்திற்கு பிறகு இடஒதுக்கீட்டை அரசு குறைத்தது. வன்முறையைத் தடுக்க தேவையான எல்லாவற்றையும் அரசாங்கம் செய்தது. இந்த வன்முறை சில அடையாளம் தெரியாதக் குழுக்களால் பரப்பப்பட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளால் இந்த வன்முறை தூண்டப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

 

பிரதமர் மோதிக்கு சஜீப் நன்றி

சஜீப் வாஜித், தனது தாயார் ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அப்போது அவர், “இந்திய அரசின் உடனடி நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைந்து சீக்கிரம் முடிவெடுத்ததால்தான் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.” என்றார்.

''உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும். எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கக் கூடாது. வங்கதேசம் இந்தியாவின் கிழக்கு அண்டை நாடு. எனவே, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ” என்றார்.

ஷேக் ஹசீனாவின் அரசு வங்கதேசத்தை பொருளாதார முன்னேற்றத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றதை யாராலும் மறுக்க முடியாது என்றார். "தீவிரவாதிகளை கட்டுப்படுத்தி இந்திய துணைக் கண்டத்தின் கிழக்கு எல்லையில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டினார். நாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்பதை நிரூபித்தோம். ஆனால் நாட்டின் மற்ற அரசுகள் தோல்வியடைந்தன." என்று அவர் கூறினார்.

``அம்மாவின் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி!” - மோதி மற்றும் வங்கதேச இந்துக்கள் பற்றி ஹசீனாவின் மகன் பேசியது என்ன?

பட மூலாதாரம்,SAJEEB WAZED FACEBOOK

படக்குறிப்பு,சஜீப் வாஜித் ஜாய்

'இடைக்கால அரசாங்கம் அரசியலமைப்புக்கு முரணானது'

வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு அரசியலமைப்பிற்கு முரணானது என சஜீப் வாஜித் தெரிவித்தார். வங்கதேச அரசியலமைப்பின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசாங்கமும் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று அவர் விளக்கினார்.

தொண்ணூறு நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும், எனவே இடைக்கால அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை தேர்தலை நடத்துவதாக இருக்க வேண்டும்.

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று, அவருக்கும் இடைக்கால சபை உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் முகமது ஷஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

யூனுஸை இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக்கியது குறித்து பேசிய சஜீப் வாஜித் "இவர்களுக்கு ஆதரவாக இந்நாட்டில் இங்கு ஒரு சிறிய குழு செயல்படுகிறது. சமூகத்தில் உள்ள மேல் தட்டு மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் உள்ளது" என்று கூறினார்.

"அரசாங்கத்தில் ஆலோசகராகப் பணியாற்றிய எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன், விருப்பத்தின் பேரில் ஒருவரை பதவியில் நியமிப்பது வேறு, அரசாங்கத்தை நடத்துவது வேறு. அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் இல்லாத ஒருவர் நாட்டை வழிநடத்துவது மிகவும் கடினம். அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். அவரால் ஆட்சியை நடத்த முடியுமா?” என்றார் அவர்.

 
``அம்மாவின் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி!” - மோதி மற்றும் வங்கதேச இந்துக்கள் பற்றி ஹசீனாவின் மகன் பேசியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆகஸ்ட் 8 அன்று இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து சஜீப் வாஜித் கூறுகையில், "இந்த நாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் நம்பகத்தன்மையை நிலைநாட்டி, இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரே ஒரு அரசுதான் உள்ளது. வங்கதேசத்தின் வரலாற்றில் கடந்த 15 வருடங்கள் சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான காலமாக இருந்தது.

ஷேக் ஹசீனாவின் காலத்தில் நாடு மிக விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை விமர்சிப்பவர்கள் கூட மறுக்க முடியாது. தற்போதைய தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்திற்கு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அவரால் சிறுபான்மையினரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா?

சிறுபான்மையினர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நான் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறேன். சிறுபான்மையினரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். ஜனநாயகத்தை மீட்டு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்புகிறேன். இதுவே எங்களின் இலக்கு." என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

 

சிறுபான்மையினர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நான் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறேன். சிறுபான்மையினரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். ஜனநாயகத்தை மீட்டு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்புகிறேன். இதுவே எங்களின் இலக்கு." என்றார்.

 

🫣.........

இதோ அடுத்த நாமலும் ரெடி........... நாமல் - 2 வாறாரு, கதற விடப் போறாரு........

இவர் இருப்பது அமெரிக்காவில்.  அமெரிக்காவில் இருந்தாலே 'ஜனநாயகத்தை காப்பாற்றப் போகின்றேன்.........' என்று வசனம் அதுவாகவே வாயில் வரும் போல...... 

இவர்களின் கட்சியான அவாமி லீக்கின் ஆயுதப் பிரிவு(??) மாணவர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்ட பின் தான் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது.

இட ஒதுக்கீட்டை குறைத்தார்களா.......... எங்கே, மொத்தம் 56% ஒதுக்கீட்டில் போய் விடும். பிறகு ஏன் மற்றவர்கள் 16 வருடங்கள் காலத்தை வீணாக்கி படிக்க வேண்டும்..........🫣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் - பதவி விலகினார் பங்களாதேசின் பிரதம நீதியரசர்

10 AUG, 2024 | 05:50 PM
image
 

ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பங்களாதேசின் பிரதம நீதியரசர் ஒபதுல் ஹசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

GUmpQcZWAAA6gai.jpg

ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்நீதிமன்றத்தை சூழ்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன்  பிரதம நீதியரசர் பதவி விலகுவதற்கு  ஒரு மணிநேர அவகாசத்தை வழங்கிய நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர்  65 வயது பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாட்டின் அனைத்து நீதிபதிகளுடனும் நீதிபதி சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்த பின்னரே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

இந்த நடவடிக்கையை நீதித்துறையின் சதிபுரட்சி முயற்சி என ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்ணித்தனர்.

கடந்த வருடம் நியமிக்கப்பட்ட ஹசன் பதவி விலகி பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசுவாசி என கருதப்படுகின்றார்.

https://www.virakesari.lk/article/190773

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல; ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கா

தனது ராஜினாமாவில் அமெரிக்காவின் தலையீடு இருந்ததாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டிய நிலையில் இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் திகதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, பங்களாதேஷிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார்.

நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கானை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் கான் பதவியேற்றார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை இந்த ஆட்சி தொடரும் என்ற செய்தியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பதவி விலகிய பின் ஷேக் ஹசீனா அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி பதவி விலகல் குறித்தும் அதற்கு பின்னால் உள்ள சதி குறித்தும் முதல்முறையாக ஷேக் ஹசீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். ஒருபோதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது. பிரதமர் பதவியில் நீடித்திருந்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கும். அதனால் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும். நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். எனவேதான், பதவியை ராஜிநாமா செய்தேன்.” என ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார்.

மேலும் “ மக்களின் வாக்குகளால்தான் நான் வெற்றிபெற்றேன். என்னுடைய வலிமையே மக்களாகிய நீங்கள் தான். நான் வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்ததால் நாட்டைவிட்டு வெளியேறினேன். மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் நான் கூறிய வார்த்தைகள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. போராட்டம் நடத்தும் மாணவர்களை பயங்கரவாதிகள் என ஒருபோதும் கூறவில்லை. அந்த நாளில் வெளியான காணொலிகளை மீண்டும் ஒருமுறை நீங்கள் பார்த்தால் உண்மை புரிய வரும்.

அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் சூறையாடப்படுவதாகவும் வெளிவந்த செய்திகளைக் கேட்டு துயரடைந்தேன். கடவுளின் கருணையால் மீண்டும் வங்கதேசம் திரும்புவேன் என நம்புகிறேன். எந்த நாட்டுக்காக என் தந்தையும் குடும்பத்தினரும் உயிர்த்தியாகம் செய்தார்களோ அந்த நாட்டின் நலனுக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன். போராட்ட சூழலை பயன்படுத்தி சில குழுக்கள் மக்களை திசை திருப்பினர். இதை ஒருநாள் கண்டிப்பாக உணர்வீர்கள் என நம்புகிறேன்” என ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகலில் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக ஷேக் ஹசீனாவின் கருத்து உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவிற்கு கருத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வேதாந்தா படேல் தெரிவித்ததாவது..

”ஷேக் ஹசீனாவின் கருத்துக்கள் நகைச்சுவையை வரவழைக்கிறது. ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்பது முற்றிலும் தவறானது. நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/307938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bangala-desh.jpg?resize=750,375

இந்துக்களுக்கு எதிரான வன்முறை: கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

“பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனஸ், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

பங்களாதேஷ் கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியதில், இந்து மதஸ்தலங்கள், இந்துக்களின் வீடுகள், வணிக வளாகங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் பங்களாதேஷில் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்.

இதனையடுத்து இந்து அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் 17 கோடி மக்கள் தொகையில், 8 வீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முகமது யூனுஸ், அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள் என்றும் மக்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவை சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1395634

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.