Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                        மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும்.

                        பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள்.

                      விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது.

                     நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

                     விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள்.

IMG-0879.avif

  விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம்.

   எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது.

IMG-0890.avif

இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும்.
அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன்.

               குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள்.

                              குகைக்கு போகும் பாதை.

IMG-0889.avif

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஹவாய்  பயணக் கட்டுரை,  படங்களுடன் மிகவும் சிறப்பாக உள்ளது. 👍
தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம். animiertes-schule-smilies-bild-0031.gif

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அண்ணை.

சுவியண்ணை கைலாசா போல இடம் தேடுறார், நல்ல தீவாகப் பார்த்து பேசி முடிச்சுக் குடுங்கோ!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது

ஆஹா! எரிமலையை நோக்கி இன்னொரு எரிமலையா?  😂
எழுதுங்கள் வாசிக்கலாம் 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா .......சுவாரஸ்யமாய் எழுதுகின்றீர்கள் பிரியன் ........தொடருங்கள் . .......!  😂

எங்களுக்கு  பரவாயில்லை . ..... இதை வாசிக்க வாசிக்க  ரசோதரனுக்கு காதாலை புகை வரவேணும் . .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமாய் எழுதுகிறீர்கள் தொடருங்கோ ...நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0879.avif

  விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம்.

நன்றாக இருக்கின்றது, அண்ணை.........❤️.

இந்த மாதிரி வீதியுடன் பொதிகள் எடுக்கும் இடம் கலிஃபோர்னியாவில் எங்காவது இருந்தால், நீங்கள் எழுதியிருப்பது போலவே,  வருவோர் போவோர் சிலர் அவர்களின் வாகனங்களை மெதுவாக நிற்பாட்டிக் கொண்டே, ஒன்றோ இரண்டோ, அவர்களால் முடிந்த அளவு, பொதிகளை எடுத்துக் கொண்டும் போவார்கள்.............🤣

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூடாக இருக்கும் போதே பெயர்களை எழுதியுள்ளார்கள்.

IMG-0913.jpg
விமான நிலையமும் பொதிகள் எடுக்குமிடமும்

https://imgur.com/a/ZqXWL9q

விமானநிலையத்திலிருந்து போகும்போதே வெளியே சகல இடங்களும் ரைக்ரரால் டிஸ் போட்டு பிரட்டி எறிந்த மாதிரி இருந்தது.

ஆங்காங்கே தீப்பிழம்பாக வந்து காய்ந்து போய் இருப்பதாக சொன்னார்கள்.

தீப்பிழம்பாக வந்து காய்ந்து போயிருப்பது இரும்பு காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறது.

இதை லாவா என்று சொல்கிறார்கள்.சில இடங்களில் இந்த லாவா தொடர்ந்து பல மைல்களுக்கு உள்ளன.

IMG-0883-Original.jpgIMG-0886-Original.jpg
IMG-0972-Original.jpg
IMG-0987-Original.jpg
IMG-0990-Original.jpg
IMG-0995-Original.jpg
சாதாரண மழை தண்ணிக்கே ஐயோ குய்யோ என்று கத்திக் குழறும் நாங்கள் இந்த மாதிரி ஒரு அழிவை நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களை எண்ண மிகவும் கஸ்டமாக இருந்தது.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த இடத்தில்… வெப்பம் எத்தனை பாகை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG-0879.avif

பலாலியை விட சின்ன விமானநிலையம் போல கிடக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

இந்த இடத்தில்… வெப்பம் எத்தனை பாகை?

கூடுதலான வெப்பநிலை என்றால் 85 வரை போகும்.ஆனாலும் குளிர் இல்லை.

இந்த தீவில் புதுமை என்னவென்றால் ஒரு வீதியால் போகும்போது ஒருபக்கம் வெய்யிலும் ஒருபக்கம் புகாராகவும் இருக்கும்.

நிற்கும்இடத்தில் இருந்து காலநிலையைப் பார்த்து எங்கும் போகமுடியாது.4-5 விதமான காலநிலை இருக்கும்.

ஆவணி தான் வெப்பமான காலம்.

20 minutes ago, குமாரசாமி said:

IMG-0879.avif

பலாலியை விட சின்ன விமானநிலையம் போல கிடக்கு....

https://imgur.com/a/ZqXWL9q

ஒவ்வொரு விமான சேவைக்கும் ஒவ்வொரு இடம் வைத்துள்ளார்கள்.

முழு இடத்தையும் காணொளி வடிவில் எடுத்திருந்தேன்.
காணொளிகளை நேரடியாக இணைக்க முடியாததால் புதிதாக ஒரு ணையத்தில் இணைத்தேன்.
ஆனால் அதன் லிங்கை மட்டுமே இணைக்க முடியும். மேலே இணைத்திருந்தேன்.
உங்களுக்காக மீண்டும் மேலே இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

கூடுதலான வெப்பநிலை என்றால் 85 வரை போகும்.ஆனாலும் குளிர் இல்லை.

இந்த தீவில் புதுமை என்னவென்றால் ஒரு வீதியால் போகும்போது ஒருபக்கம் வெய்யிலும் ஒருபக்கம் புகாராகவும் இருக்கும்.

நிற்கும்இடத்தில் இருந்து காலநிலையைப் பார்த்து எங்கும் போகமுடியாது.4-5 விதமான காலநிலை இருக்கும்.

ஆவணி தான் வெப்பமான காலம்.

தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன். 🙂

giphy.gif?cid=6c09b952nhgfk22vsndyxzhbsg

கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்க.. கடற்கரை பக்கம் போகவில்லையா. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நன்றாக இருக்கின்றது, அண்ணை.........❤️.

இந்த மாதிரி வீதியுடன் பொதிகள் எடுக்கும் இடம் கலிஃபோர்னியாவில் எங்காவது இருந்தால், நீங்கள் எழுதியிருப்பது போலவே,  வருவோர் போவோர் சிலர் அவர்களின் வாகனங்களை மெதுவாக நிற்பாட்டிக் கொண்டே, ஒன்றோ இரண்டோ, அவர்களால் முடிந்த அளவு, பொதிகளை எடுத்துக் கொண்டும் போவார்கள்.............🤣

ரசோதரன் நின்ற 5 நாட்களில் ஒரு நாள் கூட ஒரு பொலிசைப் பார்க்கவில்லை.

சரி எப்படியான யூனிபோம் போட்டிருப்பார்கள் என்று போன இடமெல்லாம் தேடினேன்.ஒருத்தனும் அகப்படவில்லை.

உங்களுக்கு நம்பவே கஸ்டமாக இருக்கும். இதுதான் உண்மை.

4 minutes ago, தமிழ் சிறி said:

கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்க.. கடற்கரை பக்கம் போகவில்லையா. 😂

கடற்கரைக்கும் போனோம்.ஆனால் கண்ணுக்க குளிர்ச்சியாக எதுவும் தென்படவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hawaii Vocanoses National Park 

க்கு இருதடவைகள் போயிருந்தோம்.எனக்கு Lifetime membership என்றபடியால் வாகனத்தில் எத்தனை பேர் இருந்தாலும் எல்லோரையும் இலவசமாக போகவிடுவார்கள்.

பெரியதேசம்.ஒரே நாளில் சுற்றிப் பார்க்க முடியாது.இயன்றளவு பார்த்தோம்.இந்த இடங்களில் பெரிதாக எரிமலை இல்லை என்றாலும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் அதன் சீற்றம் குறைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது கூட அரைமைல் தூரத்திலிருந்தும் தாங்க முடியாத வெக்கையடித்தது.

படங்களை இணைக்கிறேன்.

காணொளிகளைப் பார்க்க விரும்பினால் இணைக்கும் சுட்டிகளை அழுத்தி பார்க்கலாம்.

வழமையில் பெரிதாக எரிந்து மலைகளில் இருந்து தீப்பிழம்பு ஆறாக ஓடும்.நாங்கள் போனநேரம் எரிமலை தணிந்திருந்தது.ஆனாலும் எந்தநேரமும் வெடிக்கலாம் என்றே சொன்னார்கள்.

IMG-0935-Original.jpgஇந்த இடத்தில் யாரோ ஒருவர் காலை வைத்து பார்த்து கால் எரிந்துவிட்டதாக எழுதிப் போட்டுள்ளார்கள்.

IMG-0940-Original.jpg
IMG-0941-Original.jpgIMG-0942-Original.jpg

https://imgur.com/a/noz6feo

மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் காணொணி பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக உள்ளது. 👍
தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம். animiertes-schule-smilies-bild-0031.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

IMG-0879.avif

பலாலியை விட சின்ன விமானநிலையம் போல கிடக்கு....

எங்கன்ட பலாலி சர்வதேச விமான நிலையம் கண்டியளோ ......😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவாய் சில நுhற்றாண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்தார்கள்.ஜப்பான் பிடித்துவிடும் என்று அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து 1959 இல் அமெரிக்க மாநிலமாக பிரகடனப்படுத்தினார்கள்.

அவர்களுக்கென்று ஒரு மொழி வைத்திருக்கிறார்கள்.ஆங்கிலமும் பேசுகிறார்கள்.

கூடுதலான ஆட்களைப் பார்த்தால் ஏறத்தாள பிலிப்பைன்ஸ்காரர் மாதியே இருக்கிறார்கள்.ஆதிகாலத்திலேயே பிலிப்பைன்ஸ் ஜப்பானிஸ்  என்று பலரும் குடியேறியிருக்கிறார்கள்.

நிறையவே பழங்கள் உள்ளன.சிறிய பப்பாப்பழம் ஒரு டாலருக்கு விவசாயிகள் சந்தையில் விற்கிறார்கள்.பழம் தேன் தான்.கலிபோர்ணியாவிலும் கவாயன் பப்பாபழம் பிரபல்யம்.

அடுத்து அன்னாசி.அதுவும் தேன் மாதிரியே இருக்கும்.மாம்பழங்கள் தேடுவாரற்று வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றன.சந்தைக்குப் போனால் எல்லாமே பணம் தான்.ஏறத்தாள எமது நாட்டு காலநிலை என்றபடியால் ஊரில் சாப்பிடும் பழங்கள் அங்கேயும் இருக்கின்றன.

காலநிலை பல மாதிரியாக இருப்பதாலோ என்னவோ எந்தநாளும் வானவில்லைக் காணலாம்.

IMG-1040-Original.jpg
 
தென்னமெரிக்கா போல மலிவு என்று எதிர்பார்க்க முடியாது.நியூயோர்க்கோடு ஒப்பிடும் போது கவாயில் விலைகள் அதிகமே.சாப்பிடப் போனாலே கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டும்.

கோட்டல் எடுத்து தங்கினால் சாப்பாட்டுக்கும் தனியாக செலவு செய்ய வேண்டும்.
  வீடுகள் எடுத்திருந்தால் ஒரு சோறு கறி என்று சமைத்து சமாளிக்கலாம்.

வாடகை வாகனம் இல்லாமல் பிரயாணங்கள் செய்ய முடியாது.

முக்கியமாக பல நாடுகள் கடலில் மூழ்கிக் கொண்டு போகின்றன.ஆனால் கவாய் ஒவ்வொரு ஆண்டும் எரிமலை வெடிப்பினால் கரைந்து ஓடி கடற்கரைகளை சேர்கின்றன.

எரிந்து ஓடியவைகளை லாவா என்கிறார்கள்.தீவின் அரைவாசிக்கு இந்த லாவாவே இரும்புக்கட்டி போல படர்ந்துள்ளது.

https://imgur.com/DeBvtUo

https://imgur.com/a/JhkrE50

https://imgur.com/a/JhkrE50

முற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

நிறையவே பழங்கள் உள்ளன.சிறிய பப்பாப்பழம் ஒரு டாலருக்கு விவசாயிகள் சந்தையில் விற்கிறார்கள்.பழம் தேன் தான்.கலிபோர்ணியாவிலும் கவாயன் பப்பாபழம் பிரபல்யம்.

அடுத்து அன்னாசி.அதுவும் தேன் மாதிரியே இருக்கும்.மாம்பழங்கள் தேடுவாரற்று வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றன.சந்தைக்குப் போனால் எல்லாமே பணம் தான்.ஏறத்தாள எமது நாட்டு காலநிலை என்றபடியால் ஊரில் சாப்பிடும் பழங்கள் அங்கேயும் இருக்கின்றன.

கோட்டல் எடுத்து தங்கினால் சாப்பாட்டுக்கும் தனியாக செலவு செய்ய வேண்டும்.
  வீடுகள் எடுத்திருந்தால் ஒரு சோறு கறி என்று சமைத்து சமாளிக்கலாம்.

ஹவாய் பயணக் கட்டுரைக்கு நன்றி. 🙏
ஹவாயிலை ஒரு சின்ன வீடு வைத்திருக்கலாம் என்றால்... எரிமலை பயப்பிடுத்துது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஹவாய் பயணக் கட்டுரைக்கு நன்றி. 

சிறி நான் தான் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பயணம் புறப்படும் போது இதைப்பற்றி எழுதவே யோசிக்கவில்லை.

உங்கள் எல்லோரது வேண்டுகோளின் படியே ஏதோ தெரிந்ததை கண்டதை எழுதலாம் என்று எழுதினேன்.

இதை எழுத ஊக்கமளித்த எல்லோருக்கும் மிக்கநன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

தென்னமெரிக்கா போல மலிவு என்று எதிர்பார்க்க முடியாது.நியூயோர்க்கோடு ஒப்பிடும் போது கவாயில் விலைகள் அதிகமே.சாப்பிடப் போனாலே கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டும்.

அங்கு விலை அதிகம் தான், அண்ணை. வீட்டை விட்டு சுற்றுலா என்று வெளிக்கிட்டாச்சு, இனி என்ன விலையைப் பார்க்கிறது என்று எங்களை நாங்களே சமாதனப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.........😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரசோதரன் said:

அங்கு விலை அதிகம் தான், அண்ணை. வீட்டை விட்டு சுற்றுலா என்று வெளிக்கிட்டாச்சு, இனி என்ன விலையைப் பார்க்கிறது என்று எங்களை நாங்களே சமாதனப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.........😃

ஏற்கனவே பயணம் செய்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கும் காணொளிகளிற்கும் நன்றி அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

படங்களுக்கும் காணொளிகளிற்கும் நன்றி அண்ணா.

உங்களது ஊக்கம் தான் எழுதவைத்தது.

ஊக்கத்திற்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களது ஊக்கம் தான் எழுதவைத்தது.

ஊக்கத்திற்கு நன்றி ஏராளன்.

எனக்கு ஊரிலிருந்தே ஹவாய்த்தீவை சுற்றிக்காட்டியதற்கு நான் தான் நன்றி சொல்லவேணும்!
நன்றி அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே பயணம் செய்திருக்கிறீர்களா?

ஒரு தடவை போயிருக்கின்றேன், அண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.