Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

திரும்பவும் அந்த இதுக்குள்ளையே நிக்குது இந்த மனுசன்.. யோவ் தமிழனே கருப்புதான்யா.. முதல்ல நீங்க வெள்ளை எண்ட நினைப்ப விட்டு வெளில வாங்க.. நீங்க எல்லாம் வெள்ளை எண்டா அப்ப வெளைக்காரன் என்ன..? 

1986ம் ஆண்டு கடுமையான குளிர் நேரம். நடுங்கிக் கொண்டு நின்றோம். குளிருக்கு சிகெரெட் இழுக்க  இழுக்க இன்பமாக இருந்தது.   உடலில் இருந்து வாய் வழியாக வந்த புகையும், சிகரெட் புகையும் சங்கமித்துக் கொண்டிருந்தன.

நண்பன் ஒருவன் சேர்ட்டுடன் வந்து நின்றான். நாங்கள் மூடிக் கட்டிக் கொண்டிருந்தோம்.

”உனக்கு குளிர இல்லையா?” என்று என்னுடன் கூட இருந்தவன் அவனைப் பார்த்துக் கேட்டான்.

”நான் வந்து ஐஞ்சு வருசமாச்சு. குளிர் பழகிட்டுது” என்று பதில் நடுங்கிக் கொண்டு  அவனிடம் இருந்து வந்தது

”அப்ப, ஐஞ்சு வருசத்திலையே இப்பிடி எண்டால் இஞ்சை பிறந்த யேர்மன்காரன் வெறும்  மேலோடை எல்லோ  குளிருக்குள்ளே திரிவான்” என்று இவன் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

ஊரில கோவம் வந்தா அப்பத்தா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லும்.. ஒம்பது புள்ளை பெத்தவளுக்கு ஒரு புள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் எண்டு..😂

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2024 at 17:39, குமாரசாமி said:

நான் கறுப்பு ஜேர்மன்காரன்  ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது

On 9/8/2024 at 17:39, குமாரசாமி said:

நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும்

முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன்,

ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு.

மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன்  எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் ,

எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான்.

எமக்கு  முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள்.

எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள்   ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது 

இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது,  தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம்,

உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன.

குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள்   ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது 

இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது,  தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை,

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் நன்மைக்காக இலங்கையில் உள்ள இன்னொரு மொழி சிங்களம் படிக்காதே என்று  வெறுப்பை துண்டிவிட்டதும் அவர்கள் மனத்தில் பதிந்து வேறு மொழி படிப்பதில்  பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்

1 hour ago, valavan said:

ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன.

கைஸ் - நீங்கள் நைஸ்சை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நைஸ், வாவ் முன்பிருந்தே சுப்பர் என்று சொல்வது போன்று (எனக்கு தெரிந்து) பாவித்துவந்தார்கள். ஆனால் இந்த வேற லெவல் என்பது தான் என்ன பொருள் என்பதே விளங்கவில்லை 🤣

தமிழ்நாட்டு தொலைகாட்சி மூலம் இறக்குமதியான பொருள் என்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் நன்மைக்காக இலங்கையில் உள்ள இன்னொரு மொழி சிங்களம் படிக்காதே என்று  வெறுப்பை துண்டிவிட்டதும் அவர்கள் மனத்தில் பதிந்து வேறு மொழி படிப்பதில்  பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்

கைஸ் - நீங்கள் நைஸ்சை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நைஸ், வாவ் முன்பிருந்தே சுப்பர் என்று சொல்வது போன்று (எனக்கு தெரிந்து) பாவித்துவந்தார்கள். ஆனால் இந்த வேற லெவல் என்பது தான் என்ன பொருள் என்பதே விளங்கவில்லை 🤣

தமிழ்நாட்டு தொலைகாட்சி மூலம் இறக்குமதியான பொருள் என்கின்றார்கள்.

கைஸ்  - guys

வேற லெவல். - இன்னுமொரு படி என எடுக்கலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கைஸ் - நீங்கள் நைஸ்சை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நைஸ், வாவ் முன்பிருந்தே சுப்பர் என்று சொல்வது போன்று (எனக்கு தெரிந்து) பாவித்துவந்தார்கள். 

விளங்க நினைப்பவன் சொல்வதும் சரிதான் நைஸ் என்பதும் பூந்து விளையாடுது

அதே நேரம்  கீழே நுணா சொன்னமாதிரி இந்த கைஸ் விளையாட்டை 16:22 லிருந்து இந்த வீடியோவில் பாருங்க எத்தன கைஸ் போடுறாரெண்டு, அப்படியே தளபாட கடையையும் பார்த்ததாச்சு ஆனால் அது தவறில்லை நாங்கள் நினைச்சமாதிரிதான் அவர்கள் வாழோணும் எண்டில்லை

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் இந்த வேற லெவல் என்பது தான் என்ன பொருள் என்பதே விளங்கவில்லை

அதொண்டுமில்லை இங்கிலீஷில் உள்ள  Another Level  என்ற வார்த்தையை அப்படியே பொளந்து பாதி தமிழை சேர்த்து வேற லெவல் என்று உருவாக்கி விட்டார்கள், 

இந்தியாவில் See you later என்பதை அப்புறமா பார்க்கலாம் என்று தமிழில்மொழிமாற்றி  சொல்வதுபோல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2024 at 07:15, ஏராளன் said:

கறுப்பு வெள்ளையில் ஒன்றுமில்லை அண்ணை, உங்களோட பழகினவை சொல்வதைப் பார்த்தால் கறுப்புத் தோலிற்குள் ஒரு வெள்ளை மனசு இருக்கிறது.

“கறுப்புத் தோலிற்குள் ஒரு வெள்ளை மனசு இருக்கிறது.”

இது தவறு. தோலுக்குள் அல்ல, காலுக்குஅடியில் வெள்ளைத் தோலே இருந்து மிதிபடுகிறது. இது இயற்கை கறுவலுக்கு தந்த வரம். அறியாமல் அடிமைப்பட்டோம்.🥴

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் முழுவதும் வாசிக்க கிடைத்தது. நல்லதொரு பதிவு.

சரியாக எடுத்துக் கொண்டால் பலருக்கும் இனியாவது உதவக் கூடும்???

தன்னை சுயவிமர்சனம் செய்வதே முதலாவது படி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2024 at 20:35, தமிழ் சிறி said:

@வீரப் பையன்26 பையா…. நீங்கள், குமாரசாமி அண்ணை… அஜித் மாதிரி… தக்காளிப்பழ நிறத்திலை இருப்பார் என்று சொன்னீங்கள்.
எல்லாம் பொய்யா… பையா… 😂 🤣

உவ‌ர் தாத்தா க‌ண்டிய‌லோ

கூக்கில்ல‌ வார‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்து என்னை ஏமாற்றுகிறார் அதை வைச்சு தான் சொன்னேன் 

தாத்தா ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி என்று.....................உண்மையான‌ ப‌ட‌ம் கிடைக்க‌ட்டும் வைச்சு செய்கிறேன் உவ‌ரை  லொல்😁................................... 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2024 at 21:54, வீரப் பையன்26 said:

உவ‌ர் தாத்தா க‌ண்டிய‌லோ

கூக்கில்ல‌ வார‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்து என்னை ஏமாற்றுகிறார் அதை வைச்சு தான் சொன்னேன் 

தாத்தா ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி என்று.....................உண்மையான‌ ப‌ட‌ம் கிடைக்க‌ட்டும் வைச்சு செய்கிறேன் உவ‌ரை  லொல்😁................................... 

பிறகு மறந்துபோய் விட்டுடக்கூடாது பையா ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2024 at 18:38, suvy said:

பிறகு மறந்துபோய் விட்டுடக்கூடாது பையா ..........!  😂

ஹா ஹா.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.