Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது முகநூல் பதிவினைப் படியெடுத்துக் கீழே மீள்பதிவு செய்துள்ளேன். அங்கு நான் ஏற்றிய நிழற்படங்களைக் காண இறுதியில் உள்ள முகநூல் இணைப்பைச் சொடுக்கவும். இனி அந்தப் பதிவு :

        சங்கே முழங்கு !

                -சுப.சோமசுந்தரம்
                
           Suddenly I felt, "Today why don't I blow my own trumpet ?". சுய தம்பட்டத்தில் அப்படியென்ன அலாதி இன்பம் ? எதையும் அனுபவித்தால்தானே தெரியும் ? எனவே இக்கட்டுரைத் தலைப்பும் அங்ஙனமே அமையப்பெற்றது. எத்துணைச் சிறிய பெருமையானாலும் (முரண் தொடை - oxymoron !), அந்த என் பெருமையைச் சங்கே முழங்கு !
              நான் சார்ந்த கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான MUTA பேரியக்கத்தில் ஒரு மரபு உண்டு. சங்க உறுப்பினர்கள் ஓய்வு பெறும்போது அந்தந்தக் கல்லூரிக் கிளையின் மூலமாக மட்டுமே பணி நிறைவு விழா நிகழ்த்தப் பெறும். நான் ஒரு கணிதப் பேராசிரியராக ஜூன் 2020ல் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஓய்வு பெற்றேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு யாருக்கும் பெரிய அளவில் பணி நிறைவு விழா நடைபெறவில்லை (நடத்தியே ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை !).
            கணிதம் மற்றும் MUTA பேரியக்கத்தின் மூலமாக என்னுடன் நெருக்கமான பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதப் பேராசிரியர் முனைவர் கை. அண்ணாதுரையும், பல்கலைக்கழகத்தில் எனது துறை நண்பரான முனைவர் சங்கர்ராஜூம் என்னைக் கௌரவிக்கும் வகையில் இளம் கணிதப் பேராசிரியர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியே தீருவது என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கியது ஆசிரியர் என்ற முறையில் எனது பெருமை. நடத்தியே காட்டினர். வெகு தொலைவில் உள்ள இளம் ஆசிரியப் பெருமக்களையும் நிகழ்ச்சி கவர்ந்திருந்தது தனிச்சிறப்பு; நனி சிறப்பு.
               தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எல். ரவிசங்கர் அவர்களும், கல்லூரி பேராசிரியர்கள் சார்பில் (MUTA வின் சார்பில் எனச் சொல்வது நடைமுறையில் பொருத்தமான ஒன்று) பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரான தோழர் பேரா. ராஜ ஜெயசேகரன் அவர்களும் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். 
           பயிற்சிப் பட்டறையில் சொற்பொழிவாளராய்ப் பல்வேறு ஐஐடி நிறுவனங்களில் இருந்தும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் வந்திருந்த எனது நண்பர்களான பேராசிரியர் பெருமக்கள் நிகழ்விற்கு மெருகேற்றினர். அன்னாருக்கு அடியேன் வாழும் நாள் வரை நன்றிக் கடப்பாடுடையவன். பங்கேற்பாளர்கள் பயனுறும் வகையில் அவர்களின் திட்டமிடல் அமைந்தமை அந்நிகழ்ச்சிக்கான வலிமை.
             இரண்டாவது நாள் மாலையில் நடைபெற்ற வாழ்த்தரங்கில் மேடையில் என்னையும் எனது துணைவியாரையும் அமர வைத்துச் சிறப்பித்தது எனக்கான அரும்பெறல். நெடுந்தூரப் பயணத்தையும் பொருட்படுத்தாது நண்பர்கள் வந்து வாழ்த்தினர். கணிதத்தில் எனது கற்பித்தல் திறனையும், ஆசிரியர் இயக்கம் சார்ந்தும் மற்றபடியும் சமூகப் போராட்டக் களங்களில் எனது பங்களிப்பையும், எழுத்துலகில் எனது சிறிய (அவர்கள் கூற்றின்படி சீரிய) பணியினையும் வெகுவாக அவர்கள் பாராட்டி எனக்குப் புத்துயிர் ஊட்டினர். ஏதோ ஒரு வகையில் என்னுள் ஒரு பன்முகத்தன்மை இருக்குமோ என்று என்னையே எண்ண வைத்தனர்.
            ஐந்து நாட்களும் கழிந்ததே தெரியவில்லை என்பது பங்கேற்பாளர்கள் பொத்தாம் பொதுவாக இறுதியில் தந்த பின்னூட்டம். ஒவ்வொரு சொற்பொழிவையும் நுணுக்கமாக அணுகி, தாம் பெற்ற பயன்களை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டது நிகழ்வின் வெற்றிக்குக் கட்டியங் கூறியது. சமீப காலங்களில் நான் பங்கேற்ற கணித நிகழ்வுகளில் இது மகுடமாய்த் திகழ்வதாய் உணர்கிறேன். இவ்வுணர்வே எனக்கான மிகப்பெரிய கௌரவம்.
              கணிதப் பகுப்பாய்வு ((Mathematical) Analysis) என்ற தலைப்பில் நிகழ்வை அமைத்தபோதும் இத்துணைப் பேரைப் பங்கேற்க வைத்து மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்தோர் பேரா.அண்ணாதுரை, அவருக்கு உறுதுணையாய் நின்ற பேரா. சங்கர்ராஜ், திருவள்ளுவர் கல்லூரி கணிதத்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் மாணாக்கரே !
             சிறு வயதிலிருந்தே அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்ட நான், அறிவுலகில் எனக்கு ஒளி ஏற்றியவர் அவரே என உணர்பவன். இந்தப் பயிற்சிப் பட்டறை அனுபவத்தின் மூலம் எனது நண்பர்கள் யார் யாரென்றும், இன்ன பிற உலகியலையும் எனக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் எனது தோழர் பேரா.அண்ணாதுரை என்பது மிகையில்லை.

https://www.facebook.com/share/p/29V5kSEYXwbVtrZJ/?mibextid=oFDknk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

உங்கள் ஓய்வு காலங்கள் சிறப்புற வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள்.
நீங்கள் யாழ்களத்தில் இணைந்திருப்பது எமக்கு பெருமை 🙏

  • கருத்துக்கள உறவுகள்

icegif-105.gif

சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.   animiertes-applaus-smilies-bild-0027.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம் பேராசானே.
ஓய்வு காலத்திலும் ஓயாது உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இரண்டாவது நாள் மாலையில் நடைபெற்ற வாழ்த்தரங்கில் மேடையில் என்னையும் எனது துணைவியாரையும் அமர வைத்துச் சிறப்பித்தது எனக்கான அரும்பெறல். நெடுந்தூரப் பயணத்தையும் பொருட்படுத்தாது நண்பர்கள் வந்து வாழ்த்தினர். கணிதத்தில் எனது கற்பித்தல் திறனையும், ஆசிரியர் இயக்கம் சார்ந்தும் மற்றபடியும் சமூகப் போராட்டக் களங்களில் எனது பங்களிப்பையும், எழுத்துலகில் எனது சிறிய (அவர்கள் கூற்றின்படி சீரிய) பணியினையும் வெகுவாக அவர்கள் பாராட்டி எனக்குப் புத்துயிர் ஊட்டினர். ஏதோ ஒரு வகையில் என்னுள் ஒரு பன்முகத்தன்மை இருக்குமோ என்று என்னையே எண்ண வைத்தனர்.

(தோழரே என்று அழைப்பது தான் உங்களுக்கு பிரியமானது என்று நினைக்கின்றேன்......)

தோழரே,

உங்களிடம் பன்முகத்தன்மை உள்ளது என்பது மட்டும் இல்லை, நீங்கள் அவை ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பு பெற்றுள்ளீர்கள் என்பதே உண்மை. நீங்கள் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்றே ஆரம்பத்தில் நான் நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது நீஙகள் ஒரு கணிதப் பேராசிரியர் என்று. உங்களின் இயக்க நடவடிக்கைகளும், சமூகப் போராட்டங்களும் உங்களின் மிகச் சிறப்பான அடுத்த பக்கங்கள்........❤️.

உங்களின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய எங்களின் வாழ்த்துகள். எங்களுக்காக இங்கு எழுதுங்கள், உங்களின் அனுபவங்களை தொடர்ந்து எங்களுடன் பகிருங்கள்.........

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பேராசிரியரே

முதலில் வாழ்த்துக்கள்.அடுத்து மிகுதியிருக்கும் வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஓய்வு காலத்தை சந்தோசமாக அனுபவியுங்கள் பேராசிரியரே. அதில் சிறிது நேரத்தை எம்முடனும் பகிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2024 at 03:39, சுப.சோமசுந்தரம் said:

சிறு வயதிலிருந்தே அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்ட நான், அறிவுலகில் எனக்கு ஒளி ஏற்றியவர் அவரே என உணர்பவன். இந்தப் பயிற்சிப் பட்டறை அனுபவத்தின் மூலம் எனது நண்பர்கள் யார் யாரென்றும், இன்ன பிற உலகியலையும் எனக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் எனது தோழர் பேரா.அண்ணாதுரை என்பது மிகையில்லை.

அண்ணாதுரை எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கிறார். வாழ்த்துக்கள்👏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.