Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தமிழ் இளம் தலைமுறையினர் விவாதிக்கிறார்கள்--தலைமுறை இடைவெளி பற்றி-video

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்டும் விளங்கேலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்போன்ற பாமரமக்களுக்கு இதெல்லாம் விளங்காது?இருந்தாலும் சின்னக்குட்டியாருக்கு நன்றிகள்.

கனடிய தமிழ் இளம் தலைமுறையினர் விவாதிக்கிறார்கள்--தலைமுறை இடைவெளி பற்றி

தலையங்கத்திலேயே குழப்பம்.இவர்களை எப்படி தமிழ் இளம் தலைமுறையினர் என்று சொல்வது?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

தலைமுறை இடைவெளி என்பது ஒரு வாதத்துக்கு மட்டுமே சரியானது.

இவர்களுக்கு உள்ளது தலைமுறை இடைவெளியன்று. மொழி இடைவெளி என்பதே உண்மை.

இவர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் கவனம் செலுத்தி அவற்றைக் கற்க முடியாத தன்மையே தொடர்பாடல் ரீதியான கருத்துப் பரிமாற்றம் ரீதியான இடைவெளிகளை அதிகரிக்கச் செய்து தலைமுறை இடைவெளி என்று இவர்கள் இனங்காட்டுவது உருவெடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தலைமுறை இடைவெளி இங்கில்லை என்பதை ஏன் சொல்கிறேன் என்றால் கேளுங்கள்..

இவர்கள் அணிந்திருக்கும் உடைகளில் இருந்து ஆபரணங்கள் உள்ளடங்க.. தலை வெட்டு உட்பட வளர்த்தவர்களால் வடிவமைக்கப்பட்டவை. அதுவும் இவர்கள் போல இளையவர்களால் தான் இவர்களுக்கு என்று வடிவமைக்கப்பட்டது என்று சொல்வார்களா..??! முடியாது.

பசன் இண்டஸ்-ரீயில் கொடிகட்டிப் பறப்பவர்கள் பலர் வயதானவர்கள். இளசுகள் வெறும் மொடல்களாக பொருட்களைக் காட்சிப்படுத்தவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர்.

தலைமுறை இடைவெளி மண்ணாங்கட்டி என்று ஒன்றுமே கிடையாது. நாம் வாழும் சூழலுக்கு அவசியமான மொழிகளைக் கற்று சரி வர கருத்துப் பரிமாற்றங்களையும் தொடர்பாடல்களளயும் உலக நடைமுறை மாற்றங்களையும் உடனுக்குடன் கிரமமாக அறிந்து கொள்ளும் போது.. இந்த இடைவெளி என்பது இருக்கவே இருக்காது.

இது கொஞ்சப் பேர் தங்களுக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாகக் காட்டி தங்கள் வழிதவறிய செயற்பாடுகளையும் தங்களின் புதிய வாழ்வியல் சீரழிவுகளையும் நியாயப்படுத்தலாகவே நோக்க வேண்டியுள்ளது. இது கூட இப்ப ஒரு பசனா வளர்க்கப்பட்டு வருகிறது. இதை முதலில் கிள்ளி எறிய வேண்டும். இவர்கள் முதலில் ஆங்கிலம் மட்டும் கற்பதைச் செய்யாமல்.. தமிழ் மற்றும் பிறமொழிகளையும் கற்கும் போது இந்த இடைவெளி என்பது இல்லாமல் செய்யப்படலாம் அல்லது குறுகி வரலாம்.

நான் அவதானித்ததில் இருந்து வயதானவர்களுக்கும் இளையவர்கள் என்று தம்மை இனங்காட்டிக் கொள்வோர்க்கும் இடையில் கருத்துப்பரிமாற்றம் தொடர்பாடல் நிகழ்வது அரிதாகி வருவதே இந்த இடைவெளிக்குக் காரணம். அதை தலைமுறை இடைவெளி என்று இனங்காண்பது சரியானதல்ல.

காரணம்.. எந்த முழு வளர்ச்சியடைந்த சுகதேகி மனிதனாலும் எந்த மாறும் சூழலுக்கும் தன்னை இசைவாக்கிக் கொள்ளக் கூடிய தன்மை இயல்பாக இருக்கும். அதுமட்டுமன்றி நவீன தொழில்நுட்ப அறிவு என்பது ஏதோ புதிசாப் படிச்சுப் பட்டம் பெற்றால் தான் விளங்கனும் என்றில்லை. பாவனையாளர்களை இலக்கு வைத்தே பொருட்களும் தொழில்நுட்பமும் உருவாக்கப்படுகிறது. அது வயதானவர்களை ஒதுக்கி.. இளையோர் மட்டும் பாவிக்க என்று ஒன்றை உருவாக்கிறதில்லை. அவரவவர் தேவைக்கு தெரிவு செய்ய பொருட்களை தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.

ஆகவே இந்த இடைவெளி என்பது அதிகரிக்க இப்படியான தலைமுறை இடைவெளி என்ற இனங்காட்டல் அல்லது அங்கீகாரம் கூட அந்த இடைவெளியை அதிகரித்து நிரந்தரமாக்கும் வகையில் பெரியோர்கள் புறக்கணிக்கப்பட வாய்ப்பு ஏற்படுத்தும். இது பெரியோர்கள் கவனிப்பாரற்று விடவும் தனிமைப்படவும் வழி வகுக்கும்.

நாம் பெரியோரோடு பழகும் போது அவர்களின் மட்டத்துக்கும் எம்மைவிடச் சிறியோர்களோடு பழகும் போது அவர்களின் மட்டத்துக்கும் எமது வயதை அண்டியவர்களோடு பழகும் போது அந்த மட்டத்துக்கும் இறங்கி அவரவர் எண்ண ஓட்டங்களோடு கலக்கும் வகையில் எம்மை தயார் செய்வோம் என்றால் (இதற்கு அவரவர் எமது எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொள்ள மொழி முக்கியமானது) இந்த இடைவெளிகள் இருக்கவே இருக்காது. ஒரு சுமூகமான சூழல் இருக்கும் எல்லோரிடமும். :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஒன்டும் விளங்கேலை...

எனக்கும் விளங்கிறது குறைவு தான் .. விளங்க முயற்ச்சிததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சின்னக்குட்டி

இணைப்புக்கு நன்றி சின்னக்குட்டி

இதை பெரும் வாதங்களை முன் வைக்காமல்

ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் எம்மை அடைத்துக் கொள்ளாமல்

Cross Road நிகழ்வை பார்த்தால் நல்லது என நினைக்கிறேன்.

கனடாவில் வாழும்

இளம் சமுதாயம் என்ன நினைக்கிறது என்பதை

பேசுகிறார்கள்.

அவர்கள் தம்மை தமிழராக நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

அது நமக்கு மகிழ்ச்சியான ஒரு விடயம்.

இது போன்ற பிரச்சனைகள்

கனடாவில் மட்டுமல்ல

அனைத்து புலம் பெயர் நாடுகளிலும்

இருக்கவே செய்கிறது.

அவர்கள் மனம் திறந்து பேசுவதை

பிஞ்சிலே கிள்ளி எறியத்தான் முனைகிறோமே தவிர

அவர்களை நாம் புரிந்து கொள்ள முயலவில்லை?

இதுதான் நமக்கும்

புலத்தில் வாழும் இளைஞர்களுக்கும்

இடையே உள்ள இடைவெளி...........?

பிரச்சனை?

நமது பெற்றோர் போல் நாமில்லை

நம்மைப் போல் நமது குழந்தைகள் இல்லை?

சற்று யோசிப்போம்?

நம் பெற்றோர்

நம்மைப் போல வேறு மொழிகளை பேசியதில்லை?

நம்மை போல் உடை உடுத்தியதில்லை?

நாம் புலம் பெயர்ந்த பின் வெகுவாக மாறியே இருக்கிறோம்.

ஆம் என்கிறீர்களா?

இல்லை என்கிறீர்களா?

நம் பெற்றோர்களில் எத்தனை பேர்

நமக்கு முன்னால்

மது அருந்தியிருப்பார்கள்?

நம்மவர்களில் எத்தனை பேர்

குழந்தைகள் முன் மது அருந்துகிறார்கள்?

(இது அனைவரையும் குறிப்பதாக ஆகாது)

நம்மைப் பற்றி யோசித்தால்

நமது மாற்றத்தை பற்றி யோசித்தால்

நிச்சயம் இங்கே சம்பாசனையில்

ஈடுபட்ட இளைஞர்கள்

குறித்து தெளிவு ஏற்படும்!

அவர்கள் மனம் திறந்து

உண்மை பேசுகிறார்கள்!

அவர்களால் பொய் பேச முடியும்

அது தேவையில்லை

நம்மை நமது பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்................

நாங்கள் அவர்களது நம்பிக்கையை

வீணாக்க மாட்டோம் என்கிறார்கள்!

கல்லூரி போவதாக சொல்லி விட்டுத்தான்

எங்களால் எமது நண்பர்களை சந்திக்கக் கூட

போக முடிகிறது என்கிறார்கள்?

ஒருவரோடு பழகினாலே காதல் என சந்தேகப்படுகிறார்கள்?

எல்லாம் சினிமா கலாச்சாரம்

என்று சொல்லத் தெரியாமல் முழிக்கிறார்கள்.

அவர்களுக்கு அந்த விபரம் புரியவில்லை?

நட்புக்கும் நேசத்துக்கும் வித்தியாசம் தெரிய

நமது நண்பர்கள் நமது வீட்டில்

நமது பெற்றோருடனும் இணைந்தால்

நமது நண்பர்கள்

எப்படியானவர்கள் என்று

பெற்றோர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்கிறார்கள்!

பல்கலைக் கழகம் சென்று

டாக்டராகு என அனைத்து பெற்றோரும்

நச்சரிக்கிறார்கள்.

முடியாத பல மாணவர்கள்

மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள்

இது மட்டுமல்ல

இதை விட விருப்பமான எத்தனையோ

துறை மூலம் கற்று தேற முடியும் என

அவர்களது குமுறல்களை சொல்கிறார்கள்!

இவர்கள் பேசுவதை

அனைத்து பெற்றோரும்

கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களது வேதனைகளை

பிரச்சனைகளை

அவர்கள் சொல்லும் போது

அவர்களது பேச்சுக்கு

நாம் செவி சாய்க்க வேண்டும்.

தமிழர் பிரச்சனையை

இலங்கை அரசு

அன்று சற்று செவி சாய்த்திருந்தால்

இன்றைய யுத்தம் ஆரம்பித்திருக்காது?

இவர்களுக்கு நாம் செவி சாய்க்காது போனால்

இவர்கள் வீட்டை யுத்த களமாக்கி

பிரிந்துதான் போவார்கள்!

சற்று சிந்தியுங்கள்!

இவர்கள் எமது குழந்தைகள்

இவர்கள் மூலம்தான்

எமது சமூகம் தலை நிமிர வேண்டும்.

நமது கனவுகள் நனவாக வேண்டும்.

ஒரு தமிழ் மாணவனுக்கு

விருது கிடைத்தது என்ற செய்தியை

பார்த்தால் நாம் பாராட்டுகிறோம்.

மகிழ்கிறோம்.

அண்மையில் கனடாவில்

புற்று நோய்க்கான ஆராச்சியில்

ஈடுபட்ட தமிழ் இளைஞன் குறித்து

இங்கே நினைவுபடுத்துகிறேன்.

அந்த இளைஞன்

அந்த ஆராச்சியை

எந்த மொழியில் செய்தான் என்று

நாம் தேடவில்லை

பாராட்டவில்லை?

அவன் ஒரு தமிழன் என்ற மகிழ்வில் பாராட்டினோம்!

அதை தவிர

வேறு எதுவும் நமக்கு தெரியாது!

இந்த இளைஞர்கள்

தொலைக் காட்சியில் பேசினார்கள்

எமக்கு அவர்களை தெரிந்தது.

இங்கே நமக்குள் ஏதோ

நெருடுகிறது?

அதுதான் பிரச்சனை!

அவர்களது பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயல்வோம்.

எம்மோடு மனம் விட்டு பேசச் சொல்வோம்.

இதற்கு நாம் தயாரில்லை என்றால்?

அவர்களுக்கு நாம் கொஞ்சமும்

செவி சாய்க்கா விட்டால்

நாம்தான் தனிமைப்படுத்தப்படுவோம்

நிச்சயம் அவர்களல்ல!

tvi தொலைக் காட்சிக்கும்

தயாரிப்பானருக்கும்

பங்கு கொண்டோருக்கும் பாராட்டுகள்!

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தெரிந்தாலும் தமிழில் பேசுவதையே வெக்கமாக, அல்லது சலிப்பாக நினைக்கும் சில உறவுகளைச் சந்திக்க வேண்டியும் நேற்பட்டது. அதற்கு யாழ்களமும் விதிவிலக்கல்ல.

பொதுவிடங்களில் ஆங்கிலத்தில் கதைத்தால் தான் மதிப்பு என்று நினைக்கவும் செய்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கனடாவில்

புற்று நோய்க்கான ஆராச்சியில்

ஈடுபட்ட தமிழ் இளைஞன் குறித்து

இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இதற்கு நாம் தயாரில்லை என்றால்?

அவர்களுக்கு நாம் கொஞ்சமும்

செவி சாய்க்கா விட்டால்

நாம்தான் தனிமைப்படுத்தப்படுவோம்

நிச்சயம் அவர்களல்ல!

தமிழ் மாணவர்கள் சாதிப்பது என்பது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. வெட்டுப்புள்ளி அறிமுக காலத்துக்கு முன்பிருந்தே இலங்கையில் இருந்து உலகெங்கும் தமிழர்கள் கல்வியில் சாதனை படைத்தே வருகின்றனர்.

அப்போ இருந்த வசதிகளை விட பல மடங்கு வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ள சூழலில் தமிழர்கள் வாழ்ந்தும் ஓரிருவர் தான் இப்படி சாதனைகளைச் செய்கின்றனர் என்ற நிலையை நாம் பார்க்கத் தவறுகின்றோம். 60% தமிழ் மாணவர்களால் நிறைந்திருந்த பொறியியல் பீடங்களும்.. துரைராஜா போன்ற பல அறிஞர்களும்.. இளைஞர்களாக இருந்துதான் சாதித்தனர்.

ஆனால் புகலிடத்தில் உள்ள மக்கள் தொகையோடு ஒப்பிடும் போதும் உள்ள வசதிகளோடு ஒப்பிடும் போதும் சாதனை மட்டம் குறைவு என்றே சொல்லலாம்.

ஏன் இந்த நிலை..???!

இளையோரின் கவனச் சிதறல் இதில் முக்கியமானது. ஈழத்தில் கல்வி கற்கும் நடைமுறை இங்கில்லாத போதும்.. வெள்ளையின மாணவர்கள் கல்வி என்று வந்தால் தங்களை அர்ப்பணித்து ஆய்வுகளில் ஈடுபடுவதை அவதானிக்கலாம். நம்மவர்கள் பலர் அப்படியன்று. பலருக்கு படிக்க வாய்ப்பிருந்து நேரத்தை வீணடிப்பதைக் காணலாம். குறிப்பாக இளம் மாணவர்கள்.

பல்கலைக் கழகச் சூழலில்.. இவர்களை நான் அவதானித்திருக்கின்றேன். இவர்கள் குழுச் செயற்பாடு என்பது தனிமைப்பட்ட நிலையில் இருப்பதை தெளிவாகக் காணலாம். இன்று இவர்கள் இதைப் பற்றி விவாதிக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணமே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலை எதிர் கொள்வதுதான். வெள்ளையின மாணவர்களோ பிற இனத்தவரோ.. இவர்களை ஒரு எல்லைக்குள் தான் அணுகுவர். இவர்கள் கனடாவில் பிறந்திருக்கட்டும்.. லண்டனில் பிறந்திருக்கட்டும்.. இவர்களை அவர்கள் வேறுபடுத்தித்தான் நோக்குகின்றனர். இதுதான் நடைமுறை யதார்த்தம்.

இவர்கள் எப்படி பெரியவர்களை தனிமைப்படுத்திவிட்டு தலைமுறை இடைவெளி என்று இனங்காட்டிக் கூறிக் கொள்கின்றனரோ.. இதே நிலை பல்கலைக்கழகங்களில் இவர்கள் படிக்கும் இடங்களிலும்... இவர்களை பாவித்து விட்டு தூக்கி வீசிவிட்டுப் போகும் நிலை தான் இருக்கிறது. அந்த இக்கட்டுத்தான் இவர்கள் இப்படி ஒரு சிந்தனையைச் செய்யத் தூண்டி இருக்கிறது.

கனடா சரி எங்கும் சரி வெள்ளை வெள்ளையோடதான் சேரும். இவை இவையோடதான் சேர முடியும். மாறி சேர்ந்தாலும் கூட அது நீடிப்பது அரிது. எனவே இவர்கள் பெரியவர்களோடு இடைவெளியை அதிகரிப்பின்.. பாதிக்கப்படப் போவது ஒரு தரப்பல்ல.. இரு தரப்பும் என்பதை இளையவர்களும் பெரியவர்களும் புரிந்து கொண்டு.. அந்த வகையில் சகஜமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்ய வேண்டும். பல பெற்றோர் அந்த நிலைக்கு வந்தும் விட்டனர். நாம் பெற்றோரின் கருத்துக்களையும் இந்த நிலையில் இவர்கள் முன்னிலையில் கேட்டறிந்திருக்க வேண்டும். ஒரு பக்கச் செய்தியை மட்டும் வைத்து நிலைமையை மதிப்படுவது சரியான மதிப்பீடாகாது.

தாயகத்திலும் தான் பெற்றோர் நச்சரிக்கின்றனர்.. பிள்ளைகள் படிக்கின்றனர். படித்தனர். அதேன் புகலிடத்துக்கு வந்த உடன முடியல்ல. காரணம்.. புகலிடத்தில் பெற்றோரில் தங்கி இருக்க வேண்டிய தேவை குறைவு. குறித்த வயதை அடைந்ததும் அரச பணம் கிடைக்கும். கடனுதவிகள் கிடைக்கும். சுதந்திரச் செயற்பாட்டுக்கு அது வழிவகை செய்து கொடுக்கும். ஆனால் தாயகத்தில் அந்த நிலையில்லை. இதுதான் இவர்கள் திசைமாறி சிந்திக்கத் தூண்டுகிறதே தவிர கல்வி என்பதற்கான அடிப்படைக் காரணி எங்கும் ஒன்றுதான்.

சமூகம் என்ற அலகின் அடிப்படை தேவை என்பதும் ஒப்பீட்டளவில் ஒன்றுதான். இதை இந்த இளைய தலைமுறை சிந்தித்து உணர வேண்டும், இன்றேல் அவர்களா அனுபபப்பட்டு உணர்ந்து திருந்துவார்கள்.

இவர்கள் தமிழர்கள் என்று அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தான் இப்படி தமிழர்களாக உள்ளனரே தவிர.. இவர்களை வெள்ளையர்கள் 100% அணுசரித்துப் போவார்கள் என்றால்.. இவர்கள் தங்களைத் தமிழர்கள் என்றே இனங்காட்ட மாட்டார்கள். ஆனால் வெள்ளையர்கள் அதற்குத் தயார் இல்லை...! கண்ணும்.. தலைமுடியும் தோலும் அதற்கு இடமளிக்காது..! :(

Edited by nedukkalapoovan

இணைபிற்கு நன்றி சின்னகுட்டி தாத்தா!! :lol:

இவர்களை நான் அவதானித்திருக்கின்றேன். இவர்கள் குழுச் செயற்பாடு என்பது தனிமைப்பட்ட நிலையில் இருப்பதை தெளிவாகக் காணலாம்.

நெடுக்ஸ் தாத்தா சொல்லும் இந்த விடயத்துடன் நான் ஒத்து போகிறேன் குழுசெயற்பாடு நம்மன்ட ஆட்களிற்கு கொஞ்சம் கஷ்டம் தான் குழுசெயற்பாட்டை கூட தனிபட்ட செயற்பாடா பார்கிறவர்கள் தான் நம்மில் பலர் :( எங்கள் பல்கலைகழகத்திலும் இதை நான் அவதானித்திருகிறேன்!!

மற்றது தாத்தா சொன்ன விடயம் வெள்ளை வந்து வெள்ளையோட தான் சேரும் என்பதை ஏற்கமாட்டேன் அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை நீங்க சொல்வது மிகவும் குறைவு இங்கே பார்த்தா எல்லாரும் ஒன்றாக தான் பழகுவார்கள் ஆனா நம்ம ஆட்கள் வந்து தனிய குழு ஒன்றை வைத்து கொள்வார்கள் அவர்களுடன் சேராமல் என்று கூறலாம் தாத்தா அத்துடன் அவர்கள் வெறுபேற்றும் செயற்பாடுகளை நம்ம ஆட்கள் நன்றாக செய்வார்கள் என்று சொல்லலாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வயசு வந்து அவர்களின் மனதில் தான் உள்ளது"

தமிழ் தெரிந்தாலும் தமிழில் பேசுவதையே வெக்கமாக, அல்லது சலிப்பாக நினைக்கும் சில உறவுகளைச் சந்திக்க வேண்டியும் நேற்பட்டது. அதற்கு யாழ்களமும் விதிவிலக்கல்ல.

பொதுவிடங்களில் ஆங்கிலத்தில் கதைத்தால் தான் மதிப்பு என்று நினைக்கவும் செய்கின்றார்கள்

இதற்கு

அந்தக் குழந்தைகள் காரணமல்ல தூயவன்.

பெரும்பாலும் பெற்றோர்தான் காரணம்...........

குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும்

என்ற மனோநிலையை சிறு வயதில் உருவாக்குவதே

பெரும்பாலான பெற்றோர்தான்.

புலத்தை விடுங்கள்

இலங்கையிலேயே

ஒரு சில ஆங்கில கல்லூரிகளில்

குழந்தைகளை சேர்த்ததே

கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கிலல்ல.

ஆங்கிலத்தில் குழந்தைகள் பேச வேண்டும் என்ற கருத்தில்?

ஆங்கிலம் கற்பிக்கும் கல்லூரிகளில்

எமது மொழியில் பேசினால் தண்டனை பெற வேண்டும்

என்ற நிலை இருந்தது? :)

இருந்தாலும்

அங்கு எமது மொழி எங்கும் பேசப்படுகிறது?

இங்கு?

இன்றும் புலம் பெயர் நாடுகளில் உள்ள

குழந்தைகளை

லண்டன் கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா

போன்ற நாடுகளுக்கு

குழந்தைகளை எதற்காக பெரும்பாலான

பெற்றோர்கள் அனுப்புகிறார்கள்

என்று சற்று சிந்தியுங்கள்?

யாழ் களத்தில் கூட

இது குறித்த கருத்து பரிமாற்றத்தை கண்டிருப்பீர்கள்?

அது கூட தவறல்ல.

காரணம்

ஆங்கில கல்வி இல்லாத

பல புலம் பெயர் நாடுகளில்

நம் குழந்தைகள்

பெரும்பாலும் மன உழைச்சலுக்கு ஆளாகிறார்கள்?

குறிப்பாக

ஜெர்மனி மற்றும் சுவிஸ் (ஏனைய இடங்களிலும் இருக்கலாம்?)

ஆகிய நாடுகளில் உள்ள ஆசிரியர்களின் வெறுப்புணர்வால்

பல குழந்தைகள் மேலே கல்வி கற்க முடியாமல் போயிருக்கிறது?

ஒரு சில குழந்தைகள் விதி விலக்காக தப்பி இருக்கிறது.

இதுதான் உண்மை!

யாழ் களத்தில்

பெற்றோரான பலர் இருக்கிறீர்கள்?

உங்கள் அனுபவங்களை பகிருங்கள்

அது பலரது கண்களை திறக்க வழி செய்யும்.

கெளரவம் பார்த்து பேசாது இராதீர்கள்?

எமது குழந்தைகள் என்னதான் அதிக புள்ளிகள் எடுத்தாலும்

அந்த ஆசிரியர் பரிந்துரை செய்யவில்லை என்றால்

இவர்களால் மேல் நிலை பள்ளிகளுக்கு செல்ல முடிவதில்லை.

இப்படியான ஆசிரியர்களால்

நம் குழந்தைகள்

மன வலிக்கு ஆளாகி

தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்?

அதை பெற்றோரிடம் பலரால் சொல்லவும் முடிவதில்லை.

பெற்றோருக்கு அது புரிவதுமில்லை?

இறுதியில்

ஆங்கில நாடுகளுக்கு குழந்தைகளை

அழைத்துக் கொண்டு போக நினைக்கிறார்கள்.

அதுவும் குடியுரிமை உள்ளவர்களால் அல்லது

எவராவது உறவினர்கள் உள்ளவர்களால் மட்டுமே முடிகிறது?

வதிவிட உரிமை உள்ளவர்களோ

அல்லது

அதுவும் இல்லாதவர்களாலோ முடிவதில்லை.

பாவப்பட்ட ஜென்மங்கள்!

வாழும் நாட்டு கலாச்சார அதிர்ச்சியிலிருந்து

மற்றுமொரு கலாச்சார அதிர்ச்சிக்குள் குழந்தைகள்

அகப்பட்டு தத்தளிக்கிறார்கள்

இதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது?

அநேக குழந்தைகள்

பெரும்பாலான நேரத்தை

பள்ளிகளிலும் நண்பர்களோடும் செலவிடுகிறார்கள்.

சாப்பிடும்

தூங்கும் நேரத்தைதான் வீட்டில் செலவிடுகிறார்கள்.

அந்த நேரத்தில் கூட

பெற்றோரோடு வெகு நேரத்தை

குழந்தைகளால் செலவிட முடிவதில்லை.

பெற்றோர்கள்

வேலைக்கு சென்று விட்டு

பல பிரச்சனைகளோடு வருகிறார்கள்.

வந்ததும் தமது பிரச்சனைகளையே

பார்க்க நேரம் போதுவதில்லை.

நான் கனடா போன போது

கண்ட ஒரு உண்மை.

தாயும் தந்தையும் வெவ்வேறு

நேரங்களில் பணிக்கு செல்கிறார்கள்.

குழந்தைகள் பெற்றோர் இல்லாத நேரத்தில்தான்

பள்ளி சென்று களைத்து வருகிறார்கள்.

எதையோ வேகமாக உண்டு விட்டு

வீட்டுக்கு வந்து பாடங்களை சொல்லிக் கொடுக்கும்

ஒருவரிடம் டியுஸன் பெற்று விட்டு

உடனே

பக்கத்தில விளையாட ஓடி விடுகிறார்கள்.

பின்னர் அந்தக் களைப்போடு வந்து

குளித்து விட்டு

பள்ளிக்கான வீட்டு வேலைகளை செய்கிறார்கள்.

மீண்டும் பெற்றோர்

செய்து வைத்த அல்லது

பக்கத்து கடையில் வாங்கி வைத்த

ஏதோ ஒன்றை சாப்பிட்டு விட்டு

தூங்க போய் விடுகிறார்கள்.

இவர்கள் தூங்கிய பின்னரே

பெற்றோர் வீடு திரும்புகிறார்கள்!

இனி

இவர்கள் எவரோடு மொழி பேசுவது?

நாம் ஏன் நமது குறைகளை

ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?

சிந்திக்க மறுக்கிறோம்?

Edited by AJeevan

இணைபிற்கு நன்றி சின்னகுட்டி தாத்தா!! :(

நெடுக்ஸ் தாத்தா சொல்லும் இந்த விடயத்துடன் நான் ஒத்து போகிறேன் குழுசெயற்பாடு நம்மன்ட ஆட்களிற்கு கொஞ்சம் கஷ்டம் தான் குழுசெயற்பாட்டை கூட தனிபட்ட செயற்பாடா பார்கிறவர்கள் தான் நம்மில் பலர் :) எங்கள் பல்கலைகழகத்திலும் இதை நான் அவதானித்திருகிறேன்!!

மற்றது தாத்தா சொன்ன விடயம் வெள்ளை வந்து வெள்ளையோட தான் சேரும் என்பதை ஏற்கமாட்டேன் அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை நீங்க சொல்வது மிகவும் குறைவு இங்கே பார்த்தா எல்லாரும் ஒன்றாக தான் பழகுவார்கள் ஆனா நம்ம ஆட்கள் வந்து தனிய குழு ஒன்றை வைத்து கொள்வார்கள் அவர்களுடன் சேராமல் என்று கூறலாம் தாத்தா அத்துடன் அவர்கள் வெறுபேற்றும் செயற்பாடுகளை நம்ம ஆட்கள் நன்றாக செய்வார்கள் என்று சொல்லலாம்!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வயசு வந்து அவர்களின் மனதில் தான் உள்ளது"

இதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறேன் ஜமுனா.

நாம் எப்போதும்

நம்மவரோடுதான் இணைந்து கொள்கிறோம்.

அதற்கும் நாம்தான் காரணம்?

நாம் ஒரு விழாவுக்கு போனால்

நமக்கு தெரிந்த சிலரோடு

அது தமிழராக இருந்தால் கூட

ஒரு குழுவாகத்தான் இருக்க முயல்கிறோம்.

இவை குழந்தைகளது அடி மனதில் பதிகின்றன.

அவர்களும் தலை செய்வதை தொடர்கின்றன.

இவை ஆங்கிலம் பேசும் நாடுகளை விட

ஏனைய புலம் பெயர் நாடுகளில் குறைந்து வருகிறது.

இப்படி நாங்கள் பேசாமல் இருந்ததற்கு

ஆங்கிலம் பேசாத நாடுகளில்

மொழி தெரியாமை முக்கிய காரணம்.

ஆங்கிலம் பேசும் நாடுகளில்

எமக்கு ஆங்கிலம் தெரிந்ததால்

அவர்களோடு பேசும் தேவை எமக்கில்லை.

முக்கியமுமில்லை.

எமது தேவைகளை நம்மால் செய்து கொள்ள முடியும்!

எம்மை விட கறுப்பான

கறுப்பர்கள் ஈகோ இல்லாமல்

எவரோடும் இணைந்து கொள்வதை

பெரும்பாலும் பார்க்க முடிகிறதே!

நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மை

நம்மை அப்படி ஆக்குகிறது?

நாம் எவரோடும் பேசாத போது

எவரும் எம்மோடு பேச மாட்டார்கள்?

லண்டனில்

தமிழனே தமிழனோடு பேசுவதில்லை!

இது உண்மை!

ஒரே லிப்டில்

ஒரே புகையிரதத்தில் பக்கத்தில் இருந்து போகும்

ஒரு தமிழன் ஒரு தமிழனை பார்த்து

புன்னகைப்பது கூட இல்லை!

நாம் சிரிப்பது கூட இல்லை

நம்மளோடு எவன் பேசுவான்? :(

Edited by AJeevan

  • தொடங்கியவர்

//லண்டனில்

தமிழனே தமிழனோடு பேசுவதில்லை!

இது உண்மை!

ஒரே லிப்டில்

ஒரே புகையிரதத்தில் பக்கத்தில் இருந்து போகும்

ஒரு தமிழன் ஒரு தமிழனை பார்த்து

புன்னகைப்பது கூட இல்லை!//

இது உண்மை..ஏனென்றால் ஜரோப்பிய பெரும் நிலபரப்பு நாடுகளில் நானும் வாழ்ந்திருக்கிறேன் வித்தியாசம் தெரிகிறது.

பிரித்தானியா தீவு கொஞ்சம் வித்தியாசம் தான்

கடலால் சூழ வசிக்கும் தீவு கூட்டங்களில் வாழ்பவர்கள் அநேகமாக அப்படித்தான் இருப்பார்களோ :)

எம்மை விட கறுப்பான

கறுப்பர்கள் ஈகோ இல்லாமல்

எவரோடும் இணைந்து கொள்வதை

பெரும்பாலும் பார்க்க முடிகிறதே!

நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மை

நம்மை அப்படி ஆக்குகிறது?

நாம் எவரோடும் பேசாத போது

எவரும் எம்மோடு பேச மாட்டார்கள்?

லண்டனில்

தமிழனே தமிழனோடு பேசுவதில்லை!

இது உண்மை!

ஒரே லிப்டில்

ஒரே புகையிரதத்தில் பக்கத்தில் இருந்து போகும்

ஒரு தமிழன் ஒரு தமிழனை பார்த்து

புன்னகைப்பது கூட இல்லை!

நாம் சிரிப்பது கூட இல்லை

நம்மளோடு எவன் பேசுவான்? :)

சரியாக சொன்னீங்கள் அஜிவன் அண்ணா கறுப்பினத்தவரை பார்த்தால் வெள்ளையர்களின் கூட்டதில் குறைந்தது ஒரு கறுபினத்தவரையாவது காணமுடியும், எமக்கு தாழ்வு மனபாங்கு என்பது சரியாக சொன்னீங்கள் :( மற்றைய விடயம் எம்மவர்கள் புகையிரத்தில் கண்டால் ஒருவரை கண்டு ஒழிக்கும் சந்தர்ப்பமே அதிகமாக பார்திருகிறேன் :( ........அப்படியே எமது சமூகத்தில் நடக்கும் விசயங்களை உன்னிபாக கவனித்து கூறி இருந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்கள் அஜிவன் அண்ணா கறுப்பினத்தவரை பார்த்தால் வெள்ளையர்களின் கூட்டதில் குறைந்தது ஒரு கறுபினத்தவரையாவது காணமுடியும், எமக்கு தாழ்வு மனபாங்கு என்பது சரியாக சொன்னீங்கள் :( மற்றைய விடயம் எம்மவர்கள் புகையிரத்தில் கண்டால் ஒருவரை கண்டு ஒழிக்கும் சந்தர்ப்பமே அதிகமாக பார்திருகிறேன் :( ........அப்படியே எமது சமூகத்தில் நடக்கும் விசயங்களை உன்னிபாக கவனித்து கூறி இருந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள்!! :(

அப்ப நான் வரட்டா!!

இது எங்களை நாங்களே தேற்றிக்க உபயோகிக்கும் வழமையான தேற்றல்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ஏனைய நாடுகளை விட அதிகம் வாழ்கின்றனர். ஆனால் அங்கு கூட நிறப் பேதம் என்பது வெளிப்படை. 2005 கரிகேன் கத்ரினாவின் தாக்கத்தின் போது கூட புஷ்ஷின் மீது குற்றச்சாட்டுகள் எழ இது வகை செய்தது.

கறுப்பினத்தவர்களை.. வெள்ளையர்கள் அணுகுவதற்கு வேறு பல காரணங்கள் உண்டு. அதையெல்லாம் இங்கு விவாதிக்க அனுமதிக்க மாட்டார்கள். அதுபோக இந்த அணுகுமுறை என்பது 100% மானதும் அல்ல. எம்மோடு ஒரு 10% அணுகுகிறார்கள் என்றால் அவர்களோடு 25% அந்தளவும் தான்.

நாம் சிரிச்சாப் போல.. வெள்ளையள் சிரிக்கும் என்றும் இல்ல.. நாங்க சிரிக்காட்டி அவை சிரிக்கமாட்டினம் என்றும் இல்ல. அவைக்கு தேவைன்னா சிரிப்பினம். நமக்கும் தேவைன்னா நாங்களும் சிரிக்கிறதுதான்..! தற்ஸ் இற். அதற்காக எப்பவும் சிரிச்சிட்டே திரியனுன்னா.. அது சாத்தியமில்ல.. இயந்திர வாழ்வில.. பலரும் பல சிந்தனையோட பயணிப்பினம்.. பொதுப் போக்குவரத்து இடங்களில். :(:)

Edited by nedukkalapoovan

நாம் சிரிச்சாப் போல.. வெள்ளையள் சிரிக்கும் என்றும் இல்ல.. நாங்க சிரிக்காட்டி அவை சிரிக்கமாட்டினம் என்றும் இல்ல. அவைக்கு தேவைன்னா சிரிப்பினம். நமக்கும் தேவைன்னா நாங்களும் சிரிக்கிறதுதான்..! தற்ஸ் இற். அதற்காக எப்பவும் சிரிச்சிட்டே திரியனுன்னா.. அது சாத்தியமில்ல.. இயந்திர வாழ்வில.. பலரும் பல சிந்தனையோட பயணிப்பினம்.. பொதுப் போக்குவரத்து இடங்களில். :):icon_mrgreen:

நெடுக்ஸ் தாத்தா சொல்லுற விசயம் எல்லாம் சரி தான் :) .........கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களுடன் அணுகுவது ஏன் என்று பேபிக்கும் கொஞ்சம் தெரியும் :lol: (பிறகு கேட்க கூடாது பேபிக்கு எல்லாம் எப்படி தெரியும் என்று பிறகு அழுவன் :( ) சிலர் தான் அவ்வாறு பழகுவார்கள் அதற்காக எல்லாரையும் குற்றம் சொல்ல ஏலாது தானே தாத்தா :lol: !!

என்ன தான் இயந்திர வாழ்கையில வாழ்ந்தாலும் நெடுக்ஸ் தாத்தா இயற்கையை காதலிக்கவில்லையா :lol: அதே மாதிரி தான் சிரிப்பும்!!அத்தோட பார்த்தா ஏனைய சமூகத்தவர்கள் தங்கள் ஆட்களை கண்டவுடன் சிரித்து உரையாடி மகிழ்கிறார்களே அப்ப அவர்கள் எல்லாம் இயந்திர வாழ்கையில் இல்லாம என்ன வாழ்கையில இருக்கீனம் தாத்தா! :lol: !அது சரி நம்ம ஆளை பார்த்து சிரித்தா அதுவும் ஒருவித பிரச்சினை தான் தன்ட உள்வீட்டில எத்தனையோ பிரச்சினயை வைத்து கொண்டு மற்றவனின்ட பிரச்சினையை பற்றி தானே கதைப்பார்கள் :D அந்த விதத்தில நெடுக்ஸ் தாத்தா சொல்லுறது ஒரு விதத்தில நியாயமாக இருக்கும் ஆனா எல்லாரும் அவ்வாறு இல்லை தானே நெடுக்ஸ் தாத்தா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் -

"ஒரு புன்முறுவல் பல கேள்விகளிற்கு சொல்ல முடியாத பதிலை சொல்லி செல்லும்"

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு மிகவும் நன்றி. 18ம் திகதிக்க்குப் பின்னர் விரிவாக காருத்து எழுதுகிறேன்

நல்லதோர் இணைப்பு....

இவர்கள் ஏன் இந்த நிகழ்ச்சியை தமிழில் வழங்கவில்லை.. இதுதான் ஒரு குறையாக தெரிகின்றது. நால்வரும் தமிழ்ர்கள், தவிர இது தமிழ் தொலைகாட்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது.

நானும் சிறுவயதில் இலங்கையை விட்டு வந்தேன்.. இங்குதான் தமிழ் கற்று கொண்டேன். ஐரோப்பிய நாட்டில் வாழும் இளைஞர்களிற்கு குறைந்தது 3 மொழி ஆவது தெரிந்திருக்கும் இல்லையா??? நாம் வாழும் நாட்டு மொழி, ஆங்கிலம், அத்துடன் Spanish or French . வேறு மொழிகளை கற்று கொள்கின்றார்கள் அனால் தழிழ் கற்று கொள்வதில்லை. இதர்க்கு என்ன காரணம்??? :lol:

எனது நண்பிக்கு நான்கு மொழிகள் எழுத, வாசிக்க தெரியும்.... ஆனால் தமிழ் ஓரளவு விளங்கிகொள்ள மட்டுமே முடியும் (அதுகும் திரைபடம் பார்த்து :lol: ). இதர்க்கு முழு காரணம் அவர்கள் பெற்றோர்கள் தான் என்றும் கூற முடியாது.... ஏன் எனில் அதில் உரையாடிய ஒருவர் கூட கூறுகிறார்... தனது கனடாவில் பிறந்த சகோதரன் தமிழ் வாசிப்பார் எழுதுவார், ஆனால் தன்னால் முடியது என்று.

நாம் ஒன்றை நினைத்தால் நிச்சயமாக எம்மால் செய்ய முடியும்... ஆனால் இவர்கள் தமிழ் கற்று என்ன பயன் என்று நினைக்கிறார்கள் போலும். :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட இடை வெளிக்குப்பின் அஜீவன் அண்ணா மற்றும் நெடுக்கு,ஜமுனன் ஆகியோரின் கருத்துக்கள் மனதை தொடுகின்றன.கவரிமான் நீங்கள் மேலே எழுதிய கருத்தின் மூலம் எங்கள் எல்லோருக்கும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் :lol:

பலரது கருத்துகள்

நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

அனைவருக்கும் நன்றி!

இந்த இளைஞர்களது தமிழர் தொலைகாட்சி சந்திப்பை

நாம் ஏன் சற்று வித்தியாசமாக யோசிக்கக் கூடாது?

புலம் பெயர்ந்து

வாழும்

வளரும்

அல்லது

பிறந்த குழந்தைகள்

அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும்

ஒரு சில விகிதாசாரத்தை விட

பெரும்பாலான குழந்தைகள் அல்லது இளைஞர்கள்

நமது கலாச்சாரம் எனும் கோட்டை தாண்டி

வெளியே நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை

பலரும் ஏற்றுக் கொள்வார்கள்?

நாம் எப்போதும்

நமது பிரச்சனைகளை

நமக்குள்ளேயேதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இன்று வாழும் நமக்கும் மேலைத் தேசத்தவருக்கும்

பெரியதொரு இடைவெளி இருந்தே வருகிறது.

இல்லை என்று தம் பிடித்து கத்தினாலும்

உண்மை அதுதான்.

இங்கு பிறந்து வளரும் குழந்தைகள்

எம்மை விட வெகு இலகுவாக

மேலைத் தேசத்தவரோடு

எவ்வித சங்கடமுமில்லாமல்

நேருக்கு நேர் பேசக் கூடியவர்கள்.

பேசுபவர்கள்.

அப்படி இல்லை என்று சொன்னாலும்

அவர்கள் எம்மை விட

பல படிகள் உயரவே இருக்கிறார்கள்

என்பதை எந்த பெற்றோரும் மறுக்க முடியாது.

எமது குழந்தைகள் அல்லது இளைஞர்கள்

எம்மை விட்டு அன்னியப்பட்டு போகிறார்கள்

அல்லது

நாம் அவர்களை அன்னியப்படுத்துகிறோம் என்று

நினைப்போம்.

அனைத்தும் எமக்குத்தான் இழப்பு.

நமக்கு

குடும்பம் சொந்த பந்தங்கள்

குழந்தைகள் அயலவர்கள் நண்பர்கள்

இப்படி......................கணக்கிலடங்கா

உறவுகள் தேவை!

மேலதை் தேசத்தவர்களுக்கு

தானும் தன் மனைவி

அல்லது

தானும் தன் கணவனும்

பிள்ளைகளும்

குடும்பமும்

விரல் விட்டு எண்ணக் கூடிய நண்பர்களுமே

உலகம்.

அது அவர்களுக்கு போதும்.

இதைத்தான் எமது குழந்தைகளும்

பின் பற்றுகின்றன.

எதிர்காலத்தில் அதுதான் நடக்கும்.

நமது குழந்தைகள்

பாதையில் எம்மைக் கண்டால் பேசுவதில்லை.

ஏன் தெரியுமா?

நம்மவருக்கு அந்த குழந்தைகளோடு சிரித்து விட்டு

போகத் தெரியாது.

"என்ன கிளாஸ் முடிஞ்சு இவங்களோட என்ன செய்யுறாய்?

அப்பாவை பார்த்தா சொல்லுறன்"

ஒரு வெருட்டு விட்டாதான்

அவருடைய பெரியதனத்துக்கு ஆறுதல்.

அதுக்கு பிறகு

அந்தக் குழந்தைகள் ஒரு தமிழைனையும்

ஏறிட்டும் பார்க்காது.

அடுத்து..................

தமிழருக்கு தொலைக் காட்சிகள்

வானோலிகள் இருக்கின்றன.

இவற்றை நாம்தான் கேட்கிறோம்.

நமது குழந்தைகள் அதை கேட்பதே இல்லை.

வானோலிகளை கேட்டால்

குழந்தைகள் கெட்டே போகும்.

தொலைபேசி நிகழ்சிகளில் வரும் சிலர்

என்னவெல்லாம் பேசி விட்டு

தொலைபேசியை துண்டிக்கிறார்கள் என்பதை

நான் சொல்ல வேண்டியதில்லை.

கலாச்சர நெடி.....................

நமது குழந்தைகளுக்கு

அது தேவையே இல்லை!

இங்கு வாழும் குழந்தைகள் பாடசாலைகளில்

மேலைத் தேசத்தில் நடந்த ஒரு செய்தியை

அல்லது மேலைத் தேசத்து நிகழ்ச்சி

ஒன்று குறித்துதான்

பேசிக் கொள்கிறார்கள்.

கொள்வார்கள்...........

இது யதார்த்தம்.

இப்படியான சம்பாசனைகளில் பங்கு கொள்ள

நமது தொலைக் காட்சியில் வரும்

மூக்கை சிந்தும் தொடர் நாடகம்

குறித்து பேச முடியாது.

இது போன்ற நிகழ்வுகள் காரணமாக

நமது தொலைக் காட்சிகளை

நமது குழந்தைகள் பார்ப்பது

குறைந்து கொண்டே போகிறது.

சின்ன வயதில் கார்டூனும்

சற்று வளரும் போது விளையாட்டு

மற்றும் நடனங்களும்

இளைஞர்களை கவரும்.

அது அவர்களது

மன நிலையை வளர்க்கும்.

50 வயது ஒரு ஆண் 17 வயது ஒரு

பெண்ணுடன் காதல் டூயட் பாடும்

காட்சியை பார்த்தால் கொடுமை என்றுதான்

இங்கு வளரும் இளசுகள் நகைப்பார்கள்.

இவர்களை தம்மோடு தக்க வைத்துக் கொள்ள

tvi தொலைக் காட்சி

இப்படியான சம்பாசனை ஒன்றை

கனடாவில் வாழும் இளைஞர்களை வைத்து

தயாரிக்க திட்டமிட்டிருக்கலாம்?

24 மணி நேரமும்

தமிழில் அதுவும் தமது வாழ்கைக்கு

சம்பந்தமே இல்லாத மூக்கை சிந்தும்

நாடகத் தொடர்களை

(இவற்றை இன்று இந்திய மக்களே வெறுக்கத் தொடங்கியுள்ளார்கள்)

பார்த்து மனதை கெடுத்துக் கொள்ளுவதை

ஏற்றுக் கொள்ளும் பலர்

நமது குழந்தைகள் பேசும் 30 நிமிட

ஒரு ஆங்கில சம்பாசனையை கேட்க முடியாமல்

எத்தனை பேர் டீவீயை நிறுத்தினார்களோ தெரியாது

என்று சொன்னவரை நினைத்து

என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :lol:

இந்த தமிழ் தொலைக் காட்சிகள் வானோலிகள்

எப்போது புலத்துக்கு வந்தன?

அதற்கு முன் புலத்துக்கு வந்தவர்கள்

ஏனைய மொழி தொலைக் காட்சியே பார்க்கவில்லையா?

பார்த்தார்கள் : இரவு 12 மணிக்கு பிறகு ஒளிபரப்பாகும்

நிகழ்ச்சிகளை மொழி புரியாமல் கூட பார்த்தார்கள். இன்னமும்................ :lol:

இதை இத்தோடு விடுவோம்?

இலங்கையில் ரூபவாகினிதான் முதல் தொலைக் காட்சி

அதில் தமிழ் எத்தனை மணி நேரம் ஒளிபரப்பானது?

யாரும் பார்க்கவில்லை?

இப்போ மட்டும்

புலம் பெயர் படைப்புகள் என்ன வருகிறது?

எந்த படைப்புகள் அதிகம்!

தென் இந்தியாவை திட்டி திட்டி

கொட்டுவது முழுதும் அதைத்தானே?

ஒண்ணு திட்டாதே!

இல்லை கொட்டாதே!

இன்றைய இளைஞர்களை

எம்மோடு வைத்துக் கொள்ள ஒரு திட்டமாகத்தான்

இப்படியான ஒரு நிகழ்வை tvi தயாரிப்பாளர்கள்

உருவாக்கி இருப்பார்கள்.

இன்று தமது தனிப்பட்ட பிரச்சனைகளை

மனம் திறந்து பேசுகிறார்கள்.

நாளை நமது அனைத்து பிரச்சனைகளையும்

அவர்கள் பேசுவார்கள்.

இந்த சந்தர்ப்பம் : பயிற்சி

நாளைக்கு ஒரு மேலைத் தேசத்தவரது

தொலைக் காட்சியில்

நமது சமூகம் புலத்தில் எதிர் கொள்ளும்

பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள்.

அடுத்து

எமது தமிழர்கள்

தாம் பிறந்த நாட்டில் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்

என்று பேசுவார்கள்.

இது ஆரம்பம்தானே..............

அன்று அநீதிக்கா போராட வந்த

இளைஞர்களை தறுதலைகள் என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும்

அதே தறுதலைகளை

தலைவர்கள் என்று சொல்வோரையும் எனக்குத் தெரியும்.

இவை காலத்தின் கோலம்.

இங்கு பேசும் இளைஞர்களிடம்

மொழியை திணிக்க முற்படாதீர்கள்.

அன்பு : காதல் : மொழி

போன்றவை

திணிப்பால் உருவாகாது.

அது தானாக வர வேண்டும்.

இசையை கற்க வருபவனுக்கு

வாத்தியக் கருவிகள் குறித்து

ஆரம்பத்தில் புரிதல் இல்லாமல் இருக்கலாம்.

அதைத் தொட்ட பின்

அதன் சுவரங்களை மட்டுமல்ல

அதன் சரித்திரம் குறித்தும் தேட

வேண்டி வரும்.

அது போல

எமது சமூகப் பிரச்சனைகளை பேச முனையும் போது

எமது சமூகத்தின் ஆரம்பங்களை

அல்லது அதன் மூலம் குறித்த தேடலுக்குள்

இந்த இளைஞர்கள் சென்றே ஆக வேண்டும்.

அப்போது

அவர்களை அறியாமலே

அவர்களது தாய் மொழி

அவர்களுக்குள் ஜோதியாக ஒளிரத் தொடங்கும்.

(உதாரணத்துக்கு சிங்கள மொழியில் கல்வி கற்ற நானும் உதாரணம்தான்

கல்லூரியில் நான் தமிழ் கற்றதே இல்லை. நம்புவீர்களா?)

நன்றி!

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா,

மிகவும் ஆழம், அவசியம், யதார்த்தம் கூடிய கருத்துக்கள்.

எம்மவருக்கு உண்மைகள் கசக்கும். அதிகமானவர்கள் பிரச்சனைகளுக்கு முகம்கொடார்(எதிர் கொள்ளார்). ஒன்றில் பிரச்சனையை ஒதுக்குவர் இல்லை பிரச்சனைகளில் இருந்து ஒதுங்குவர். எம்மவர்க்கு அதுதான் பிரச்சனையே.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(உதாரணத்துக்கு சிங்கள மொழியில் கல்வி கற்ற நானும் உதாரணம்தான்

கல்லூரியில் நான் தமிழ் கற்றதே இல்லை. நம்புவீர்களா?)

நன்றி!

உண்மையில் என்னால் நம்பவே முடியவில்லை. உங்களின் கருத்துக்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றது.

குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம். இதனால் தான் அபிவ்விருத்தியடைந்த ஒவ்வொரு நாடும் குழந்தைகளின் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்துகின்றன.

ஏன் இவ்வளவு?எமது ஒரு குழந்தையை முறையாக நாம் வளர்க்காவிட்டால் அரசாங்கம் அதை பிடுங்கிக்கொண்டு போய் தனது வளர்ப்பில் வைத்து விடும். அகதிகளாக வந்த நாம் எக்கேடு கெட்டாலும், எமது குழந்தைகளை தம் நாட்டவராக , தேசியப் பற்றுமிக்கவராக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை இந்த அரசாங்கங்களுக்கு உண்டு. அதனால் தான் பில்லியன் கணக்கில் குழந்தைகளுக்காக செலவளிக்கிறார்கள். எமக்கு ஒரு குழந்தை பிறந்ததும் ஓடிவந்து காசுகூட தருகிறார்கள்.

எமது குழந்தைகளுக்கு தமிழ் தேசிய பற்று வரவேண்டுமென்றால் இந்த அரசாங்கங்களுக்கு இணையாக முட்டியாவிட்டாலும் ஓரளவுக்காகவேனும் நாமும் அவர்களில் invest பண்ண முன்வரவேண்டும். அப்படி என்ன திட்டங்களை எம்மவர் எடுத்து நடைமுறைப் படுத்துகிறார்கள்?

பச்ச்சைத் தண்ணியில் பலகாரம் சுடுவது தான் தமிழனின் மரபு. எல்லாம் கையை மீறிப் போன பின்னர் இஸ்ரேல் காரனை புலிகளிடன் ஒப்பிட்டு "எமடு இராணுவ ஆய்வாளர் "

எழுதும் பந்தியை வாசித்து பெருமூச்சும் கொட்டாவியும் விட்டுவிட்டு விட்ட குறையிலிருந்து சீரியலை தொடரவேண்டியது தான்.

நன்றி

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

பச்ச்சைத் தண்ணியில் பலகாரம் சுடுவது தான் தமிழனின் மரபு. எல்லாம் கையை மீறிப் போன பின்னர் இஸ்ரேல் காரனை புலிகளிடன் ஒப்பிட்டு "எமடு இராணுவ ஆய்வாளர் "

எழுதும் பந்தியை வாசித்து பெருமூச்சும் கொட்டாவியும் விட்டுவிட்டு விட்ட குறையிலிருந்து சீரியலை தொடரவேண்டியது தான்.

நன்றி

சரியாகச் சொன்னீர்கள். 100% உண்மை.

இங்க போட்டதுக்கு நன்றி சின்னப்பு..இனித்தான் பார்க்கணும்.

நன்றி சுபேஸ்

நன்றி பண்டிதர்

நான் சொல்வது முற்று முழுதாக உண்மை.

நான் கொழும்பில் பிறந்தவன்.

என் தந்தையார் ஒரு போஸ்ட் மாஸ்ட்டராக இருந்து

சிங்கள மொழி இல்லாத குறையால் மிகவும் உடைந்திருந்தவர்.

சிங்கள மொழியை கற்க மறுத்ததால்

பதவி உயர்வு இல்லாமல் இருந்தவர்.

அதனால்தானோ என்னவோ

என்னை சிங்களத்தில் கல்வி கற்க வைத்தார்கள்.

அதற்கு என் அம்மாதான் காரணமாகி இருக்க முடியும்.

அவர்களுக்கு தமிழ் மேல் பற்று இல்லை என்று

எவரும் சொல்ல முடியாது.

எனக்கு அவர்கள் வைத்த பெயரே

தமிழ் செல்வம்.

(அழுத்தினால் புரியும்)

ஜீவன் என்பது அழைக்கும் பெயர்

அது அஜீவனாகியது என்னால்............

அன்று நானும் கூட

இங்கே தொலைக் காட்சியில் பேசிய

குழந்தைகள் போலத்தான்

பேசியிருப்பேன்............

காரணம்

வீட்டில் மட்டுமே தமிழ் கேட்டது.

இல்லை சினிமா பார்த்தால் உண்டு.

பாடசாலை மற்றும் நண்பர்கள் வட்டம்

ஆகியவற்றில் கேட்டது , பேசியது

அனைத்துமே சிங்களம்தான்.............!

எனக்கு தெரிந்த தமிழ்

கொச்சைத் தமிழ்தான்.

அது எனக்கு வீட்டில் போதுமானதாக இருந்தது.

படி படி என்பது

என் பெற்றோருக்கும் விதி விலக்கல்ல.

அனைத்து பெற்றோரும் எதிர்பார்ப்பது

தமது குழந்தைகள் பெற்றோரது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றுதானே ஒழிய

குழந்தைகளது விருப்பத்தை : லட்சியத்தை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும் என்று அல்ல?

அதுவே

நமது அனைத்து பெற்றோரதும் எதிர்பார்ப்பு?

திணிப்பு?

நாம்

நம் தேவைகளை குழந்தைகளிடம் திணிக்காதிருக்க வேண்டும்.

அவர்கள் தேவைகளை தேடி நிறைவேற்றப் பார்க்க வேண்டும்.

இதை எத்தனை பேர் செய்கிறார்கள்?

எனது கல்வி பல்கலைக் கழகம் வரை

சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில்தான்.

தமிழில் அல்ல.

நான் சிங்களத்தில் பேசினால்

என்னை தமிழன் என்று யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தமிழோ ஆங்கிலமோ கலக்காது.

நான் சிங்கப்பூருக்கு போன போது

ஜுரோங் கனிக்கா சிங்கப்பூர் (ஜப்பான்) கெமிக்கல் நிறுவனத்தில்

முழு நேரம் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

ஆசையில்தான்

பகுதி நேரமாக

சிங்கப்பூர் SBC யில்

(அன்று சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம்)

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்புகளை செய்தேன்.

அன்று 16mm திரைப்பட கமராக்களில்தான்

வெளிப்படப்பிடிப்புகளை தொலைக் காட்சிக்கு செய்து வந்தார்கள்.

இலங்கையில்

ஓய்வு காலங்களில்

திரைப்பட பயிற்சி பெற்றிருந்ததாலும்

அங்கே பணிபுரிந்ததாலும்

என் சகோதரி ஒரு தயாரிப்பாளராக

சிங்கை தொலைக் காட்சியில் இருந்ததாலும்

என்னால் இலகுவில் அங்கே நுழைய முடிந்தது.

22 வயதுக்கு பின்னர்தான் தமிழ் கற்க வேண்டி வந்தது.

அது ஒரு விபத்துதான்.

சென்னையிலிருந்து

இந்தியன் (தமிழ் பகுதிக்கு ) பகுதிக்கு

கோபாலி (நாராயணசுவாமி) அண்ணா

சென்னை தூரதர்ஸனிலிருந்து

பயிற்சி கொடுப்பதற்காக சிங்கை தொலைக் காட்சிக்கு

வந்திருந்தார்.

பயிற்சியாளராக வந்த

கோபாலி அண்ணாவை என் அக்கா அறிமுகப்படுத்திய போது

நான் பேசிய தழிழைக் கேட்டு

"என்னடா கிளித் தமிழ் மாதிரி சிங்களத் தமிழ் பேசுறே

தமிழ் கத்துக்கடா?"

என்று சொன்னவர் எனக்கு தமிழை கற்றுத் தந்தவர்.

நான் அன்று தமிழில் ஏதாவது

சிங்கை தமிழரோடு பேசினால்

"இல்ல நீ இங்கிலீசிலயே பேசுப்பா.

உனக்காக டிரான்சிலேட்டர் தேட முடியாது"

என்று சிரித்தவர்கள் கணக்கிலடிங்காது :lol:

எனவே கோபாலி அண்ணாவை என்னால் மறக்கவே முடியாது.

அவரை மறப்பது நான் தமிழை மறப்பதற்கு சமம்.

Atfilminstitute_web.jpg

கோபாலி அண்ணாவுடன் நான் என் அக்கா மலாய் ஒளிப்பதிவாளன்

கோபாலி அண்ணா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புலக குரு.

தவிரவும் ஒளிப்பதிவாளர் இயக்குனர் அசோக்குமாரின் நண்பர்.

அவரது அனைத்து படங்களிலும் இவர் இணை இயக்குனராக இருப்பார்.

Singaporecamera_web.jpg

(SBC இயக்குனர் நாடக விழாவில் கோபாலி அண்ணாவை அறிமுகம் செய்து வைக்கிறார்.

கறுப்பு உடையில் நான்)

தமிழை கற்க வைத்து முதன் முதல் மேடையில் நடிக்க வைத்த பெருமை

கோபாலி அண்ணாவையே சாரும்.

அந்த தேவையை எனக்குள் வளர்த்தவர்

அண்ணாதான்.

தேவை என்று வந்தால் புலத்தில் வாழும் குழந்தைகளுக்கு

ஏன் தமிழ் கற்க முடியாது?

தேவையில்லாத போது எதுவுமே

எவருக்குமே தேவையே இல்லை.

நம்மவர்கள் புலம் பெயர்ந்து வந்த பின்

இருக்கும் நாட்டு மொழிகளை கற்கவே இல்லையா?

தேவை என்று வந்தால்

எல்லாம் தானாக வரும்.

என்னை நினைத்தே சொல்கிறேன்.

நாமே ஒதுக்கினால் அல்லது திணிப்புகளை கொண்டு வந்தால்

அது நிச்சயம் நன்மை தராது.

இந்திய தமிழர்கள் சொல்வார்கள்

தமிழை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை

இலங்கை தமிழரையே சாரும் என்று.........

அது அவர்களது திரைப்படமும்

தொலைக் காட்சிகளும்

இங்கு வருவதால்? :o

பொண்டாட்டிமாரை

வீட்டுக்குள்ள அழ வைப்பதற்கும்

வெளியே போகவிடாமலும் பண்ணுவதற்குத்தான்

இத் தொலைக் காட்சிகள் பிரயோசனப்படுகிறதே தவிர

வேறு எந்த பொது அறிவுக்குமல்ல.

இங்கு வாழும் குழந்தைகளுக்கு

அவர்கள் வாழும் நாட்டு மொழி

அவர்களது கல்விக்கு மிக மிக முக்கியம்.

அது இன்றியமையாதது.

புலத்தில் பெரும்பாலாக தமிழ் பள்ளிகளை நடத்தி

காசு பார்ப்போர் கோயில் நடத்துவோர்

அனைவரும் நல்ல கல்வியறிவோ

அல்லது திறமையானவர்களோ அல்ல.

பெயருக்காக புகழுக்காக செய்வோர்.

இதை பலரும் அறிவார்கள்.

அடுத்து

எமது தொலைக் காட்சிகள் : வானோலிகள்

இங்கு வாழும் குழந்தைகளுக்கு

இளைஞர்களுக்கு குறிப்பிட்ட காலத்தை

கொடுத்து

அவர்கள் விரும்பிய நிகழ்ச்சிகளை

கொண்டு வர வழி செய்யலாம்.

அது அவர்களுக்கு தெரிந்த மொழியில்............

அவர்களால் அவர்கள் வாழும் நாட்டின் பிரச்சனையை

கல்வி - சமூக - வேலை வாய்ப்பு போன்றவற்றை

பேச முடியும்.

விசயம் தெரியாத பெற்றோருக்கு

பல விடயங்களை கொண்டு வர முடியும்.

பின்னர்

தேவை வரும் போது

தமிழ் தானாக வரும்!

இது நடக்காது?

காரணம்

அவர்களையும் வைத்து தொலைபேசியில் பாட்டு கேட்கும் நிகழ்ச்சி

செய்ய வைத்து விடுவார்கள்?

இல்லை என்றால் பழசுகள் வெளியேற வேண்டி வரும்.

ஆகவே அதை நிச்சயம் செய்ய மாட்டார்கள். :lol::o:lol:

இந்த நாட்டு தொலைக் காட்சிகளுக்குள்

இவர்கள் போனாலும் போவார்களே தவிர

இது நடக்கவே நடக்காது.

முடிந்தால் செய்து காட்டுங்கள்!

இல்லை என்றால் நம்மோடு எல்லாம் புலத்தில் முடிந்து விடும்.

இது 100% உண்மை.

நம்மோடு

இதற்கெல்லாம் மூடுவிழாதான்.

சும்மாதான் கேட்கிறேன்?

எத்தனை தமிழ் இணையங்கள் இருக்கு!

உலக அரங்கில்

தமிழ் நெற் செய்யும் சேவையை யாராலும் செய்ய முடியுமா?

முடிந்தால் அதையும் தமிழிலே எழுதுங்கள்

என்று சொல்லுங்களேன்?

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.