Jump to content

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 AUG, 2024 | 07:53 AM
image
 

ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/191842

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

solingen-100-1920x1080.jpg

நகர திருவிழாவிற்கு வந்தவர்களை முன்பின் தெரியாத ஒரு குற்றவாளி கத்தியால் சரமாரியாக குத்தியதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். கத்திக்குத்துகள் பாதிக்கப்பட்டவர்களின் கழுத்தை இலக்காகக் கொண்டவை என்பதால், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் இது ஒரு வெறித்தனமாக தாக்குதல். குற்றவாளி தப்பியோடி இருக்கிறார். இன்னும் துல்லியமான தனிப்பட்ட விளக்கம் கிடைக்கவில்லை. குற்றத்திற்கான நோக்கம் இன்னும்  தெளிவாக இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரம் தோன்றி 650வது ஆண்டை குறிக்கும் திருவிழாவில் இது நடந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என கூறப்படுகிறது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் பிரதமர் Wüst அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இச்செயல் நாட்டின் இதயத்தை தாக்கியது. Solingen இன் மேயர் Kurzbach அதிர்ச்சி, திகில் மற்றும் பெரும் சோகம் பற்றி பேசினார். உள்துறை மந்திரி ரியுல் அன்றிரவு குற்றம் நடந்த இடத்திற்கு வந்து நிலைமையை கண்டறிந்து கொண்டார்.

https://www.deutschlandfunk.de/polizei-geht-von-einzeltaeter-aus-110.html

மேலும் எட்டுப் பேர் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அதில் ஐந்து பேர் பெரும் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

👇 காணொளி. 👇

https://www.tagesschau.de/inland/solingen-attacke-100.html

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் நடந்த ... இந்த கத்திக்குத்து, எங்களுக்கு தெரிய முதல்..
வட்டுக்கோட்டையில் உள்ள  @ஏராளன்க்கு தெரிஞ்சிட்டுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில் நடந்த ... இந்த கத்திக்குத்து, எங்களுக்கு தெரிய முதல்..
வட்டுக்கோட்டையில் உள்ள  @ஏராளன்க்கு தெரிஞ்சிட்டுது. 😂

வீரகேசரிக்கு தானண்ணை திரிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக அதிக கத்திக்குத்துக்கள் நடைபெறுகின்றன. இது அகதிகளாக் வந்த ஒரு சமூகத்தினரால் மட்டுமே நடத்தப்படுகின்றது.
இவற்றை கவனிக்கும் போது யார் யாருக்கெல்லாம் பரிதாபக்கூடாது.கவலைப்படக்கூடாது.உதவி செய்யக்கூடாது. நியாயபூர்வமாக நடக்கக்கூடாது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக அதிக கத்திக்குத்துக்கள் நடைபெறுகின்றன. இது அகதிகளாக் வந்த ஒரு சமூகத்தினரால் மட்டுமே நடத்தப்படுகின்றது.
இவற்றை கவனிக்கும் போது யார் யாருக்கெல்லாம் பரிதாபக்கூடாது.கவலைப்படக்கூடாது.உதவி செய்யக்கூடாது. நியாயபூர்வமாக நடக்கக்கூடாது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

பெரிய பெரிய கருப்பு ஆடுகள் எல்லாம் திட்டமிட்டு நாடு நகரங்களையெல்லாம் எதையோ நோக்கி நகர்த்திக் கொண்டுருக்கிறார்கள் போல் இருக்கின்றது . .......களவு ,  கொலைகள் , கொள்ளைகள் , வன்புணர்வுகள் , போதைப்பொருள் பாவனைகள் ,சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயம் மற்றும் குடும்ப அமைப்புகள் இவையெல்லாம் உலகநாடுகளில் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடக்கின்றன . ........!  😴

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக அதிக கத்திக்குத்துக்கள் நடைபெறுகின்றன. இது அகதிகளாக் வந்த ஒரு சமூகத்தினரால் மட்டுமே நடத்தப்படுகின்றது.
இவற்றை கவனிக்கும் போது யார் யாருக்கெல்லாம் பரிதாபக்கூடாது.கவலைப்படக்கூடாது.உதவி செய்யக்கூடாது. நியாயபூர்வமாக நடக்கக்கூடாது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

எ னக்கென்னமோ இது புடினின் வேலையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம். இன்றைக்குக்கூட US பொருளாதாரத் தடைகளை Russia மீது விதித்திருக்கிறது. 

அந்தக் கோபத்தில ஏதேனும் செய்திருப்பாரோ,....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் - பாரிய தேடுதல் வேட்டை

மேற்கு ஜேர்மனியில் (West Germany) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்றையதினம் மாலை மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் (Solingen) நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், தொழில் நகரம் உருவாக்கப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நகரின் மையப் பகுதியில் நேற்றைய தினம் மாலை விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பாரிய தேடுதல் வேட்டை

இதன்போது அங்கு வீதிக்கு அருகில் இருந்த தாக்குதல்தாரி, அவ்வழியாகச் சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் - பாரிய தேடுதல் வேட்டை | Germany Mass Stabbing 1 Killed 4 Seriously Injured

இதேவேளை  தாக்குதலில் காயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்க அப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை நடந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சாலைகள் தடை

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் - பாரிய தேடுதல் வேட்டை | Germany Mass Stabbing 1 Killed 4 Seriously Injured

இதேவேளை குறித்த தேடுதல் நடவடிக்கை காரணமாக சோலிங்கனில் சாலைகள் தடைபட்டுள்ளன.

மேலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதால் குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://ibctamil.com/article/germany-mass-stabbing-1-killed-4-seriously-injured-1724473645

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E805-26.jpg

20171008_205629-jpg.1588039

Solingen நகரம் கத்தி தயாரிப்பிற்கு  புகழ் பெற்றது. அங்கு தயாரிக்கப் படும் கத்தி, கத்தரிக்கோல் போன்ற ஆயுதங்கள் சற்று விலை அதிகம் என்றாலும்.... அதன் பாவனையில் திருப்தியான தரம் இருக்கும். 

அங்கு வாங்கும் கத்திகள் தலைமுறை தாண்டியும் பாவிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கும் என்பது சிறப்பு. இந்தக் கத்திகளின் சிறப்பை அறிந்த  அநேகமானவர்கள்  ஜேர்மனிக்கு வரும் போது... இங்கிருந்து ஒரு கத்தியையாவது வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

கத்திக்குப் பெயர் போன நகரத்தின் 650´வது ஆண்டு விழாவில் கத்திக் குத்து நடந்தமை சோகமான விடயம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

E805-26.jpg

20171008_205629-jpg.1588039

Solingen நகரம் கத்தி தயாரிப்பிற்கு  புகழ் பெற்றது. அங்கு தயாரிக்கப் படும் கத்தி, கத்தரிக்கோல் போன்ற ஆயுதங்கள் சற்று விலை அதிகம் என்றாலும்.... அதன் பாவனையில் திருப்தியான தரம் இருக்கும். 

அங்கு வாங்கும் கத்திகள் தலைமுறை தாண்டியும் பாவிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கும் என்பது சிறப்பு. இந்தக் கத்திகளின் சிறப்பை அறிந்த  அநேகமானவர்கள்  ஜேர்மனிக்கு வரும் போது... இங்கிருந்து ஒரு கத்தியையாவது வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

கத்திக்குப் பெயர் போன நகரத்தின் 650´வது ஆண்டு விழாவில் கத்திக் குத்து நடந்தமை சோகமான விடயம்.

அப்ப சோழிங்கன் நகரத்திற்கு போனால் ஒரு கத்தி வாங்கச் சொல்லவேணும் சொந்தங்களுக்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

அப்ப சோழிங்கன் நகரத்திற்கு போனால் ஒரு கத்தி வாங்கச் சொல்லவேணும் சொந்தங்களுக்கு!!

Irsw1V_RdtuihQhvboDZW1lmvGleJQFAL2zUvu7V 

சோலிங்கன் (Solingen) நகரத்திற்குப்  போய்த்தான் கத்தி வாங்க வேண்டும் என்று இல்லை.
ஜேர்மனி முழுக்க உள்ள பெரிய கடைகளில் இந்தக் கத்தியும் இருக்கும்.
கத்தியில்.. அதன் முத்திரை குத்தப் பட்டு, Solingen என்றும் இருக்கும்.
மேலே... அங்கு கத்தி  தயாரிக்கும் நிறுவனங்களின்  முத்திரைகள் (Logo)  சில உள்ளன.

ஆனால்... கத்தியை  விமானத்தில் கொண்டு வரும் போது... சிலவேளை சிக்கலை தரலாம். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அப்ப சோழிங்கன் நகரத்திற்கு போனால் ஒரு கத்தி வாங்கச் சொல்லவேணும் சொந்தங்களுக்கு!!

 

2 hours ago, தமிழ் சிறி said:

சோலிங்கன் (Solingen) நகரத்திற்குப்  போய்த்தான் கத்தி வாங்க வேண்டும் என்று இல்லை.

பேசாமல் இந்த நகரத்தை சோதிலிங்கம் ஆக்கிவிடலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23.08.2024 வெள்ளிக்கிழமை, யேர்மனி, சோலிங்கன் நகரில் நடந்த ஒரு நகரத் திருவிழாவில், ஒரு நபர் கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கியதில் 67 மற்றும் 56 வயதுடைய இரண்டு ஆண்களும் 56 வயதுடைய ஒரு பெண்ணும் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர், அவர்களில் 4 பேர் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

தாக்குதல் நடந்த இடத்துக்கு 150 மீற்றர் தூரத்தில் தாக்குதலுக்கான ஆயுதமான கத்தி பொலிஸாரால் இன்று மதியம் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது.

தாக்குதல் நடந்த இடத்தில்  இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர் இருப்பிடத்தில், சிறப்பு அதிரப்படையினர் இன்று மாலை சோதனை நடத்தி, பலரை விசாரணைக்கு உட்படுத்தி, சந்தேக நபரை கைது செய்ததாக அறிவித்திருக்கிறார்கள்.

சோலிங்கனில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என ஐஎஸ் ஊடக நிறுவனமானஅமாக்அறிவித்திருக்கிறது.

அவர்களது அறிக்கையின் கூற்றுப்படி, "இஸ்லாமிய அரசின் இராணுவ வீரர்  ஒருவராலேயே நேற்று ஜேர்மனியின் சோலிங்கன் நகரில் கிறிஸ்தவர்கள் கூட்டம் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. பாலஸ்தீனத்திலும் வேறு  இடங்களிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மேலாக நடத்தப்படும் தாக்குதல்களுக்குப்  பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததுஎன குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு உள்ளதா? .எஸ்க்கும் தாக்குதல் நடத்தியவருக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

407090922_1724538153_v16_9_1200.webp

சந்தேகப்படும்படியான  சோலிங்கன் தாக்குதலாளி பொலிஸாரிடம் சரணடைந்தார்.

சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Nordrhein-Westfalens உள்துறை மந்திரி ஹெர்பர்ட் ரியுல் (CDU) ARD இன் "Tagesthemen"  தொலைக்காட்சிக்கு   இதை அறிவித்தார். மற்றும் நாள் முழுவதும் தேடப்பட்ட ஒரு "உண்மையில் சந்தேகத்திற்குரியவர்" பற்றி பேசினார். 

"Spiegel" மற்றும் "Bild" செய்தித்தாளின் தகவலின்படி, 26 வயதான Syrer Issa al H. சனிக்கிழமை மாலை "இன்னும் இரத்த வெள்ளத்தில்" சோலிங்கன் பொலிஸ் ரோந்து அதிகாரிகளை  அணுகி... "நான் தான், நீங்கள் தேடுகிற ஆள்" என  கூறினார். 

சந்தேகத்திற்குரிய கொலையாளி சிரியாவின், டெய்ர் அல்-சோர்  நகரில் பிறந்தார். அவர் டிசம்பர் 2022 இறுதியில் ஜெர்மனிக்கு வந்து Bielefeld நகரத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஒரு வருடம் கழித்து, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகள் அடிக்கடி பெறும் துணை பாதுகாப்பு என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு சன்னி முஸ்லீம் மற்றும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியா  என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை.

https://www.morgenpost.de/panorama/article407086955/anschlag-stadtfest-solingen-news-aktuell-messerangriff-taeter-flucht.html

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதல் - சிரியாவை சேர்ந்த 26 வயது இளைஞன் கைது

25 AUG, 2024 | 01:25 PM
image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிரியாவை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தானாக முன்வந்து சரணடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலிற்கும்இந்த நபருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்று 24 மணிநேரத்திற்கும் மேல் சந்தேகநபரை தேடிவருவதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையிலேயே கைது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

சந்தேகநபர் சொலிங்ஜெனில் உள்ள அகதிகளிற்கான வீட்டை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரின் ஆடைகளில் இரத்தக்கறை காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/191924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் மீண்டும் கத்திக்குத்து தாக்குதல் - ஆறுபேருக்கு காயம் - 32 வயது பெண் கைது

Published By: RAJEEBAN   31 AUG, 2024 | 02:36 PM

image
 

ஜேர்மனியில் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு ஆறு பேரை காயப்படுத்திய 32 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு ஜேர்மனியில் திருவிழாவொன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்கானவர்களிற்கு உயிராபத்து இல்லை இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் மத நோக்கங்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் 16 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள், இவர்களில் மூவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலோனுக்கு கிழக்கே உள்ள சீகனில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் ஜேர்மனியில் சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/192472

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

கடந்த வாரம் ஜேர்மனியில் சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர்.

யேர்மனி, சோலிங்கனில் கடந்த வாரம்  ஒருவர் கண்மூடித்தனமாக பொது மக்கள் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைத் தந்திருந்தாலும் நேற்று நடந்த சம்பவம் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.

அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டிருந்தாலும், அவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் உயிராபத்து இருக்கும் பட்சத்தில் அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று யேர்மனியில் நடைமுறை ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட பல புகலிடக் கோரிக்கையாளர்கள் யேர்மனியில் தொடர்ந்து தங்கியிருக்க வாய்ப்பு இருந்து கொண்டிருந்தது. இந்த நடைமுறையில்தான் தற்சமயம் ஒரு மாறுதல் வந்திருக்கிறது.

கடந்த வாரம் சோலிங்கன் நகரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவரது புகலிடக் கோரிக்கை கடந்த வருடமே நிராகரிக்கப் பட்டு அவரது நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் நடைமுறையில் இருந்த சில அனுகூலமான விடயங்களால் அவரை  அவரது நாட்டுக்கு யேர்மனிய அரசு திருப்பி அனுப்பவில்லை. நாடு கடத்தப்பட வேண்டிய அவரால், கடந்த வாரம் நடாத்தப்பட்ட அனர்த்தமானது யேர்மனிய அரசு மீது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“வெளி நாட்டவரைத் திருப்பி அனுப்புஎன்ற குரல்கள் இப்பொழுது இங்கு பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான AFD (Alternative for Germany) கட்சியின் வாக்கு வீதம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் Sachsen, Thueringen ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல்களில் AFDயின் வெற்றி ஏற்கெனவே உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில்தான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 28 பேர்  நேற்று, யேர்மனி, லைப்ஸிக் விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமானம் மூலமாக  ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள். இந்த 28 பேரும் பல விதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதுடன் யேர்மனிய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என உள்நாட்டு அமைச்சு அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் பொறுப்பேற்றதன் பின்னர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் யேர்மனியின் முதல் நிகழ்வு இதுவாகும்.

திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளருக்கு அவர்களது நாட்டில் உயிராபத்து இருந்தாலும், அவர்களால் யேர்மனிய மக்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்ற நிலையிலேயே அவர்கள் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும்  தலா ஆயிரம் யூரோக்கள் கொடுக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.

யேர்மனிய அரசின் இந்த நடவடிக்கை தொடருமாயின், புகலிடக் கோரிக்கையாளரின் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும், இந்த நடைமுறையை வரவேற்பதாகவும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றுக் கிடைத்த செய்தி ஆறுதலைத் தந்திருந்தாலும் இன்று விடிந்த போது, “Ravensburg நகரில் 31 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் தாக்கியதில் 25 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்என ஒரு செய்தியும், “Siegen நகரில் நடக்கும் விழாவுக்குப் பயணித்த பேரூந்தில், 32 வயதான யேர்மன் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் காயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்என்ற செய்தியும் வந்திருக்கிறது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.