Jump to content

Recommended Posts

Posted

தமிழ் மக்களுடைய வாக்கு தமிழ் மக்களினுடைய வேட்பாளரின் வாக்காக மாறியுள்ளது!

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kavi arunasalam

‘யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்த

ஈழப்பிரியன்

அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது. நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.

அக்னியஷ்த்ரா

எப்பூடி....? ஆயுதப்போராட்டத்திற்கு பின் சுடச்சுட பொன்சிக்கு குத்தி புளங்காகிதமடைந்து சொன்ன செய்தி போலவா ....?   அப்பூடியா...? பேரம்பேசும் பலத்தை வைத்து என்ன புடுங்கினார் முக்கியமாக உங்க ஆள

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

ஒவ்வொரு நாளும் புடுங்கிப்பார்த்தா வேரே வராதே ஐயா பிறகெப்படியாம் மரவள்ளியிலை கிழங்குவரும்

உது பாஞ் அவர்களுக்கு புரியுமோ,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/8/2024 at 21:08, Kapithan said:

ஆயுதப்  போராட்டமும் அதன் பின்னரான காலத்தில் கொடுக்கப்படாத செய்தியையா இந்தத் தேர்தல் உலகுக்கும் தென்னிலங்கைக்கும்  கொடுக்கப்போகிறது? 

எப்பூடி....? ஆயுதப்போராட்டத்திற்கு பின் சுடச்சுட பொன்சிக்கு குத்தி புளங்காகிதமடைந்து சொன்ன செய்தி போலவா ....?

On 26/8/2024 at 21:08, Kapithan said:

அரியநேந்திரனின் போட்டி என்பது தமிழர்களின் வாக்கைச் சிதறடித்து அவர்களின் பேரம்பேசும் பலத்தை இல்லாதொழிக்கும் என்பது நிலாந்தனுக்குத் தெரியாதா? 

அப்பூடியா...? பேரம்பேசும் பலத்தை வைத்து என்ன புடுங்கினார் முக்கியமாக உங்க ஆள் ...? ஏக்கிய ராஜ்ய 
அதனுடைய மீனிங் எனக்குமட்டுமே தெரியும் என்னிடம் மட்டும்  ரணில் சொல்லியிருக்கிறார் போன்ற உதார்களையும், கிழக்கு மாகாணத்தை முற்றாக விட்டுக்கொடுத்துவிட்டு நஸீரின் மாட்டு புரியாணியை  கிண்டியதையும்,
கல்முனை பிரதேசபை பிரிப்பு போராட்டத்திற்கு வந்து செருப்பு  விளக்குமாறு  கதிரையால் வெழுவை வாங்கியதை தவிர   ...?

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/8/2024 at 16:32, island said:

மக்கள் மிகவும் எழுச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்த 1977 ம் ஆண்டு தேர்தலிலேயே தமிழீழம் என்ற கொள்கைக்கு கிடைத்த வாக்கு 52 வீதம் மட்டுமே என்ற நிலையில் இன்றைய நிலையில் 50 வீதம்  கிடைக்காது என்ற ஜதார்த்தத்தை புறக்கணித்து முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட தீர்மானமே பொது வேட்பாளர் என்பது. 

பொய்யான தகவல். இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்குக் கிடைத்த சராசரி தமிழ் வாக்குகள் மொத்தத் தமிழ் வாக்காளர்களில் 72%. அதுவரை நடந்த தேர்தல்களில் இத்தேர்தலிலேயே தமிழர்கள் பெருமளவில் வாக்களித்து 18 உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினர். அம்முறை த.ஐ.வி.மு எதிர்க்கட்சியாக வந்தது.

அதற்கான ஒற்றைக் காரணம் தனி ஈழமே.

சிங்கள பெளத்தத்துடன் சரணாகதியாகி அடையாளம் துரக்கும் ஒருவரின் மன உளைச்சலே இது. கடந்து செல்வோம். 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரஞ்சித் said:

1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை  முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது.

தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125

தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு  கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில்  காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக)

100/801125* 421594 = 52.62

 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. 

உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? 

 ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக்  கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ? 
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, island said:

100/801125* 421594 = 52.62

என்னுடைய தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் இராசலிங்கம் அவர்கள் பெரும் வெற்றி ஒன்றை 1977 இல் பெற்றிருந்தார். நான் அப்போது சிறுவன். அவரை தோளில் வைத்து தூக்கிக் கொண்டு எங்கள் சந்தியால் போனார்கள். உங்களின் தரவுகளைப் பார்த்த பின், உடுப்பிட்டி தொகுதி முடிவுகளை போய்ப் பார்த்தேன். அவருக்கு 63.44% மட்டுமே கிடைத்திருக்கின்றது. நான் இன்னும் மிக அதிகமாகவே அவருக்கு கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நீதியான, சுதந்திரமான ஒரு ஜனநாயகத் தேர்தலில் ஒரு வேட்பாளர் 60% அல்லது மேலே எடுப்பது என்பது மிக அரிதான ஒரு நிகழ்வே.

இராசலிங்கம் அவர்களுக்கு வாக்கு போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்ட தர்மரத்தினத்திற்கும் (சுயேட்சை), மோதிலால் நேருவிற்கும் (தமிழ் காங்கிரஸ்) எந்த அடிப்படையில் வாக்களித்தவர்கள் வாக்களித்தார்கள் என்பது அன்று எங்களுக்கு தெரியும். ஊரில் பலரும் இதைப் பற்றி கதைத்தார்கள்.     

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, island said:

1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை  முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது.

தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125

தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு  கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில்  காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக)

100/801125* 421594 = 52.62

 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. 

உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? 

 ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக்  கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ? 
 
https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1977.pdf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த 52.62 வீத வாக்குகளும் தமிழ் மக்களால் உண்மையிலேயே தமிழீழம் தான் வேண்டும் என்று தமிழர்களால் அளிக்கபட்ட வாக்குகளா தமிழ் மக்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் தான். தமிழரசு கட்சி தமிழீழம் தான் என்றால் அதுக்கும் வாக்களிப்பார்கள், கொடிய யுத்தத்தை நடத்திய இராணுவ தளபதி தான் நாட்டை ஆளவேண்டும் என்றாலும் அதற்க்கும் வாக்களித்தார்கள் இதை எல்லாம் விளங்கி கொண்ட புதிய ஏமாற்று தான் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர்.
அர்சுனா தான் தமிழின தலைவன் என்கிறார்கள். அழுது கண்ணீர் வடிக்கின்ற சீரியல் நாடகங்களை இலங்கை தமிழர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றபடியால் டொக்டர் அர்ச்சுனாவும் இப்போது அழுது நான் இறந்துவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்று எல்லாம் பேச தொடங்கி இருக்கின்றார். முஸ்லிம்களை நான் உயிராக நேசிக்கின்றன் என்று எல்லாம் முஸ்லிம்களிடம் சொல்லி பார்த்தார் அவர்களோ அவர்களது மேடையை விட்டே இவரை இறக்கிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, வாதவூரான் said:

இந்த ஶ்ரீலங்கா தேர்தல. திணைக்கள புள்ளிவிபரங்களில் இருந்தே ரஞ்சித்திற்கு பதிலளித்திருந்தேன்.  72 வீதம் என்று பொய்யான தகவலை அவர் தந்திருந்தார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, island said:

இந்த ஶ்ரீலங்கா தேர்தல. திணைக்கள புள்ளிவிபரங்களில் இருந்தே ரஞ்சித்திற்கு பதிலளித்திருந்தேன்.  72 வீதம் என்று பொய்யான தகவலை அவர் தந்திருந்தார்.  

இதிலை  சிங்கள முஸ்லிம் வாக்குகளும் உண்டு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில். எப்படி தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் கணக்கு பார்த்தீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, வாதவூரான் said:

இதிலை  சிங்கள முஸ்லிம் வாக்குகளும் உண்டு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில். எப்படி தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் கணக்கு பார்த்தீர்கள்

ஒரு பிரதேசத்தை தனி நாடாக அல்லது சமஸ்டி பிரதேசமாக அறிவிப்பதானால் அந்த பிரதேச மக்களின் ஒப்புல் வேண்டும் என்பது தான் சர்வதேச  சட்டம். அப்படியானால் அந்த பிரதேசத்தில் உள்ள சிங்கள முஸ்லீம் வாக்காளரது வாக்கு செல்லாது என்று சர்வதேச நாடுகளுக்கு கூறு ஒரு நாட்டை உங்களால் உருவாக்க முடியுமா?  அதாவது தூய தமிழனுன் வாக்கு மட்டுமே செல்லுபடியானது என்று ஐநா மன்றத்துக்கு கூறி அங்கீகரிக்கும் படி கேட்பது சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதா? 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, island said:

இது தான் அவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தின்நோக்கமே. அரசாங்கம் முஸ்லிம்களின் திட்டமிட்ட காணிபிடிப்பை கண்டும் காணாமல் விட்டதும் அதனால் தான். எல்லாம் சட்டப்படி தான் என்றால் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமக்களைத் தவிர்த்து தான் பார்க்கவேண்டும் (கள்ளக்காணி பிடிச்ச முஸ்லீமையும் தவிர்க்க வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, வாதவூரான் said:

இது தான் அவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தின்நோக்கமே. அரசாங்கம் முஸ்லிம்களின் திட்டமிட்ட காணிபிடிப்பை கண்டும் காணாமல் விட்டதும் அதனால் தான். எல்லாம் சட்டப்படி தான் என்றால் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமக்களைத் தவிர்த்து தான் பார்க்கவேண்டும் (கள்ளக்காணி பிடிச்ச முஸ்லீமையும் தவிர்க்க வேண்டும்)

அப்படியானால் சர்வதேசத்துக்கு பெரும்பான்மையை காட்ட போகிறோம் என்று ஏன் பொது வேட்பாளரை நிறுத்தினார்கள்?  
 
சிங்கள, முஸ்லீம. மக்களின் வாக்குகளை கணக்கில் எடுக்க கூடாது என்று சர்வதேச நாடுகளுக்கோ ஜநா மன்றத்துக்கோ தமிழர் தரப்பால் உத்தியோகபூர்வமாக கூற முடியுமா? 

அப்படிக்  கூற முடியாது என்றால் சர்வதேசத்துக்கு காட்ட போகிறோம் என்று கூறுவது முட்டாள்தனம் தானே! 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, island said:

கூறலாம். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப்பற்றிதான் இங்கே கதைக்கிறோம் என்றுநினைக்கிறன். சிங்களவருக்கு அவர்களுடைய அரசாங்கம் இருக்குது முஸ்லிம் அரச பங்காளிகளாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்மக்களின் பெரும்பான்மையானோர் எதை விரும்புகிறார்கள் என்று தான் காட்ட வேணுமே ஒழிய வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் மூலம் குடியேறிய சிங்களவரோ முஸ்லீமோ என்ன விரும்புகிறார்கள் என்று காட்டத்தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தைச் சார்ந்த வேட்பாளருக்கு தான் எப்பவும் போடுவினம். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே சட்டவிரோத குடியேறிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வாதவூரான் said:

இதை ஒரு போதும் நிரூபிக்க உங்களால் முடியாது. இப்படி தமிழருக்குள் மட்டும் கூறி அவர்களை உசுப்பேற்றி உசுபேற்றி ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளால் சிதைக்கப்பட்ட  தமிழரின் அரசியல்  பலத்தை மேலும்  சிதைக்க மட்டுமே  முடியும்

சர்வதேசத்துக்கு காட்டுவதானால் அவர்கள் உலக நடைமுறையையே வலியுறுத்துவார்கள். இதுவரை 70 வருடங்களாக நடந்தது அதுதான்.  அந்த பட்டறிவை பட்டும் கூட தெளிய முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, island said:

இது என்னெண்டால் உங்கள் வீட்டிற்குள் அத்துமீறி 10பேர் குடியிருந்துகொண்டு உங்களுக்கு சுதந்திரம் வேணுமோ என்று பொது வாக்கெடுப்புநடத்தச்சொல்லி கேட்கிறமாதிரி இருக்கு

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, island said:

1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை  முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது.

தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125

தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு  கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில்  காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக)

100/801125* 421594 = 52.62

 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. 

உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? 

 ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக்  கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ? 
 
அதே சிறிலங்கா தேர்தல் திணைக்களம்தான் இதனையும் சொல்கிறது.

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போட்டியிட்ட இடங்கள் 23. அவற்றுள் அவர்கள் வெற்றிபெற்ற இடங்கள் 18. 

23 தொகுதிகளில் முன்னணியின் சராசரி வாக்கு வீதம் 64 ( பதியப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில்).

இவற்றில் இருந்து முன்னணி வெற்றிபெறாத ஐந்து இடங்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் வீதம் 72.9  ( பதியப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில்). 

மட்டக்களப்பு - 34%
சாவகச்சேரி - 73.9%
யாழ்ப்பாணம் - 68.8%
கல்க்குடா - 50% - தோல்வி
கல்முனை - 30% - தோல்வி
காங்கேசந்துறை - 97%

ஊர்காவற்றுரை - 84.6%
கிளிநொச்சி - 92%
கோப்பாய் - 96.5%
மன்னார் - 55.85%
மானிப்பாய் - 94.5%
மன்னார் - 55.85%
முல்லைத்தீவு - 66%
மூதூர் - 29.5% - தோல்வி
நல்லூர் - 93%
பட்டிருப்பு - 54.6%
பருத்தித்துறை - 68.4%
பொத்துவில் - 34%
புத்தளம் - 12.5% - தோல்வி
சம்மாந்துறை - 40% - தோல்வி
திருகோணமலை - 63.3%
உடுப்பிட்டி - 79.2%
வட்டுக்கோட்டை - 85.7%
வவுனியா - 71.7%

சிங்களப் பேரினவாதத்திடம் சரணாகதி அடையவிரும்பும் நீங்கள் இதனைத்தவிர வேறு எதனைத்தான் சொல்லப்போகிறீர்கள். நடத்துங்கள், நடத்துங்கள்.

தமிழினம் அடையாளம் துரந்து இலங்கையராக சிங்கள பெளத்தத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்கிற ஒற்றை இலக்கு நோக்கிச் செயற்படும் கோடரிக் காம்புகள் இனத்திற்கெதிரான தகவல்களைச் சேகரிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருப்பது உண்மையே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

இது தான் அவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தின்நோக்கமே. அரசாங்கம் முஸ்லிம்களின் திட்டமிட்ட காணிபிடிப்பை கண்டும் காணாமல் விட்டதும் அதனால் தான். எல்லாம் சட்டப்படி தான் என்றால் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமக்களைத் தவிர்த்து தான் பார்க்கவேண்டும் (கள்ளக்காணி பிடிச்ச முஸ்லீமையும் தவிர்க்க வேண்டும்)

சிங்களத்தின் விரிவாக்கத்திற்காக உழைக்கும் ஐலண்டிடம், சிங்களக் முடியேற்றங்கள் நடப்பதே இனப்பரம்பலை மாற்றியமைக்கத்தான் என்று நீங்கள் கூறுவது கல்லில் நாருரிப்பதற்குச் சமனானது. ஏனென்றால் குடியேற்றத்தை நியாயப்படுத்துவதென்பது அவரது இலக்குகளில் ஒன்று!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

இது என்னெண்டால் உங்கள் வீட்டிற்குள் அத்துமீறி 10பேர் குடியிருந்துகொண்டு உங்களுக்கு சுதந்திரம் வேணுமோ என்று பொது வாக்கெடுப்புநடத்தச்சொல்லி கேட்கிறமாதிரி இருக்கு

உண்மை. ஆனால் அவர் உழைப்பதே அந்த அத்துமீறலை நியாயப்படுத்தத்தான் எனும்போது, சர்வஜன வாக்கெடுப்பில்  ஆக்கிரமிப்பாளரும் பங்குபற்றவேண்டும் என்று அவர் அடம்பிடிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்? 

Posted

ரனில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் தருவதாக சொல்வார். ஆனால் தரமாட்டார்.  —— விக்னேஸ்வரன்

Posted
2 hours ago, வாதவூரான் said:

ய வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் மூலம் குடியேறிய சிங்களவரோ முஸ்லீமோ என்ன விரும்புகிறார்கள் என்று காட்டத்தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தைச் சார்ந்த வேட்பாளருக்கு தான் எப்பவும் போடுவினம். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே சட்டவிரோத குடியேறிகள்.

வாதவூரான்,

இது மிகவும் தவறான அபிப்பிராயம். வடக்கு கிழக்கு என்பது அங்கு வாழும் முஸ்லிம்களினதும் தாயகம் என்பதனை நாம் மறுப்பது என்பது சிங்களவர்கள் வடக்கு கிழக்கை எம் பூர்வீக பிரதேசம் மற்றும் தாயகம் என்று நாம் உரிமை கோருவதை மறுப்பதற்கு சமம். புலிகளின் தலைமை ஒரு காலத்திலும் இவ்வாறு வடக்கு கிழக்கு என்பது தமிழ் மக்களினது தாயகம் மட்டுமே என்று ஒரு போதும் கோரியதும் இல்லை (வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்றிய பின்பும் கூட)

போர்க்காலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட வன்னியில் வாழ்ந்து வரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு வடக்கு கிழக்கு தாயகம் அல்ல. 77 களில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்ட்ட மலையக தமிழர்களில் பலர் அங்கு இடம்பெயர்ந்து அந்த மண்ணையே தம் தாயகமாக வரித்துக் கொண்டவர்கள் மற்றும் காந்தீய அமைப்பின் செயலாளர் மருத்துவர் இராஜசுந்தரம் அவர்களின் முயற்சியாலும் மலையக தமிழர்கள் பலர் குடியேறினார்கள். புளொட் இயக்கத்தில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன் மலையக / இந்திய வம்சாளிகளில் ஒருவர்.

இதனை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால், வடக்கு கிழக்கு என்பது வெறுமனே ஈழத் தமிழர்களின் தாயகம் அல்ல என்பதற்காக. அப்படி நாம் சொல்வோமாயின், எமக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

ஆனால் சிங்கள குடியேற்றங்கள் என்பது முற்றிலும் வேறு. அது திட்டமிடப்பட்ட தமிழ் இனவழிப்பின் ஒரு கூர்மையான அம்சம். அலுவல்கள் மற்றும் வணிக ரீதியான காரணங்களுக்காக வடக்கு கிழக்கிற்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்த சிங்கள மக்களை தவிர மிச்ச எல்லோரும் தமிழ் இன அழிப்பிற்காக கொண்டு வந்து குடியேற்றிய குற்றவாளிகளே

இவர்களின் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை ஒப்பிடுவது தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, நிழலி said:

நிழலி, 
நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளீர்கள் என்றுநினைக்கிறன்.நான் சொன்னது சட்டவிரோத குடியேறிகளை மாத்திரம் (தமிழ் மக்களின் காணிகளைக் கள்ளமாக பிடித்து குடியேறியோர். எனது பதிலை மீண்டும் ஒரு முறை படித்தால் புரியும்)

Posted
1 minute ago, வாதவூரான் said:

நிழலி, 
நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளீர்கள் என்றுநினைக்கிறன்.நான் சொன்னது சட்டவிரோத குடியேறிகளை மாத்திரம் (தமிழ் மக்களின் காணிகளைக் கள்ளமாக பிடித்து குடியேறியோர். எனது பதிலை மீண்டும் ஒரு முறை படித்தால் புரியும்)

விளக்கத்துக்கு நன்றி வாதவூரான்.

கள்ளக் காணி பிடித்ததாக  சொல்லப்படும் முஸ்லிம்களும் உள்ளூர் முஸ்லிம்கள் தான். அதாவது வெளியூரில் இருந்து வந்து, தமிழ் மக்களின் எண்ணிக்கை விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கிற்காக குடியேற்றப்பட்டவர்கள் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் சொத்துகளை ஆட்டையைப் போடும் எம்மவர்கள் போன்றவர்கள் இவர்கள்.
இந்த கள்ளக் காணி பிடிக்கும் விடயம் கூட பிள்ளையான், கருணாவின் கூட்டம் சொல்கின்ற குற்றச்சாட்டு. எவரும் அதற்கு எதிராக வழக்கு போட்டதாக நான் அறியவில்லை. ஆனால் அறா விலைக்கு தமிழர்களின் காணிகளை வாங்கும் உள்ளூர் முஸ்லிம்கள் பற்றி அறிந்துள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வாதவூரான் said:

இது என்னெண்டால் உங்கள் வீட்டிற்குள் அத்துமீறி 10பேர் குடியிருந்துகொண்டு உங்களுக்கு சுதந்திரம் வேணுமோ என்று பொது வாக்கெடுப்புநடத்தச்சொல்லி கேட்கிறமாதிரி இருக்கு

வாதவூரான், நீங்கள் தலைப்பை விட்டு வேறு விடயங்ங்களைப் பேசுகின்றீர்கள்.   பொது வேட்பாளர் என்பது சர்வதேச நாடுகளுக்கு எமது அரசியல் கோரிக்கையின் ஆதரவை காட்ட என்றால் சர்வதேச நாடுகள் உலக நடைமுறையின் பிரகாரமே அதை அங்கீகரிக்கும்.  எமது விருப்படி தமிழ்வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று சர்வதேச நாடுகளுக்கு கூற முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? உங்களது பொது வேட்பாளர் அரியநேந்திரனால் இப்படியான கோரிக்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டு  தூதரகங்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுக்க முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
ரஞ்சித், @ரஞ்சித் இந்த புள்ளிவிபரங்களை நீங்கள் சுயமாக தயாரித்தீர்களா? ஏனென்றால், தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களுக்கும் உங்களால் தயாரித்து இங்கு 
பிரசுரிக்கப்பட்ட போலி புள்ளிவிபரங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. கண் முன்னே ஆதாரங்கள் இருந்தும்  இப்படி புள்ளிவிபரங்களை திரிக்கின்றீர்கள் என்றால் ஆதாரங்களை தேடுவது கடினமாக இருந்திருந்தால் என்ன எல்லாம் செய்திருப்பீர்கள். 
 
 தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உண்மை புள்ளிவிபரங்களை இங்கு இணைத்துள்ளேன்.  அதை இணையத்தளத்திற்கு சென்று சரி பாருங்கள்.  
 
அது சரி,  தோல்வியடைந்த தொகுதகளின் வாக்குகளை ஏன் கழிக்க வேண்டும்.  அந்த தொகுகுதிகளின் பிரதேசங்களை தமிழீழ வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டீர்களா?  இப்படியான வினோதமான ஒரு தலை பட்சமான வாக்களிப்பு முறையை எங்கு கற்றீர்ர்கள்? 
 
ஒரு குறிப்பிட்ட பிரதேசம் தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு என்றால் அப்பிரதேசத்தில் வாழும் மக்களால் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில் 
அப்பிரேரணைக்கு அல்லது சட்டமூலதிற்கு  ஆதரவாக எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்பதை வைத்தே பிரேரணைக்கு ஆதரவான வாக்கு வீதத்தினைக்
கணக்கிடுவது உலக நடைமுறை
 
உண்மையை சுட்டிக்காட்டினால் அதை ஜீரணிக்க முடியாமல்  கோடரிக்காம்பு, துரோகி என்று திட்டித் தீர்ப்பது உங்கள் வழமையான நடைமுறை. 
இருப்பினும்,  உண்மை புள்ளிவிபரங்களை கீழே தந்துள்ளேன். உங்களுக்காக அல்ல. உங்களால் பிரசுரிக்கப்பட்ட பொய்யான  போலி புள்ளிவிபரங்களை நம்பிவிடாமல் இருக்க யாழ் இணைய வாசகர்களுக்காக தருகிறேன். 
 
Electorate Poll Rejected Valid Votes TULF Percentage
Keyts 27’673.00 132 27’541.00 17’640.00 64.05%
Vaddu 33’456.00 135 33’321.00 23’384.00 70.18%
KKS 36’695.00 218 36’477.00 31’155.00 85.41%
Manipay 33’001.00 199 32’802.00 27’550.00 83.99%
Kopay 33’619.00 149 33’470.00 25’840.00 77.20%
Uduppidi 29’706.00 123 29’583.00 18’876.00 63.81%
Point Petro 23’306.00 75 23’231.00 12’989.00 55.91%
Chavakacheri 31’748.00 91 31’657.00 20’028.00 63.27%
Nallur 33’529.00 137 33’392.00 29’858.00 89.42%
Jaffna 28’779.00 78 28’701.00 16’251.00 56.62%
Kilinochi 21’314.00 56 21’258.00 15’607.00 73.42%
Mannar 29’436.00 84 29’352.00 15’141.00 51.58%
Mullaitivu 19’672.00 76 19’596.00 10’261.00 52.36%
Vavuniya 23’496.00 80 23’416.00 13’821.00 59.02%
Trinco 29’379.00 119 29’260.00 15’144.00 51.76%
Muhur 27’965.00 115 27’850.00 7’520.00 27.00%
Kalkuda 29’459.00 217 29’242.00 12’595.00 43.07%
Batticaloa Double 109’509.00 1618 107’891.00 49’091.00 45.50%
Paddiruppu 32’532.00 243 32’289.00 15’877.00 49.17%
Samanthurai 24’944.00 82 24’862.00 8’615.00 34.65%
Kalmunai 26’005.00 101 25’904.00 7’093.00 27.38%
Pouvil Double 89’871.00 912 88’959.00 23’990.00 26.97%
Puttalam 31’205.00 134 31’071.00 3’268.00 10.52%
Total 806’299.00 5174 801’125.00 421’594.00 52.63%

Results_1977.PDF (elections.gov.lk)

Edited by island

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அனுர காலமல்ல ஜேஆர் காலத்திற்கு முன்பாக இருந்தே சிங்கள கட்சிகளுக்கு தமிழர் பிரதேசங்களில் கணிசமான வாக்குகளும் ஆதரவுகளும் இருந்துள்ளதை மறக்க/ மறைக்க முடியாத துர்ப்பாக்கய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.
    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.