Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பெப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. அப்போது, அந்த தளம் மட்டுமின்றி, அதற்கு கீழே, மேலே இருந்த (27, 29-வது மாடிகள்) தளங்களும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கின. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகள் தரையில் விழுந்ததில், 10 கார்கள் சேத மடைந்தன.

அல்கய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை கடத்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதே பாணியில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் ராணுவம் மொத்தம் 20 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ட்ரோன், அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது. மற்ற ட்ரோன்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்க முயன்றன. ரஷ்ய எல்லையில் அத்துமீறி பறந்த அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திவிட்டோம்’’ என்று ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், ஒடெசா உள்ளிட்ட 12 பெருநகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று பலமுனை தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து 100 ஏவுகணைகள் வீசப்பட்டன. ரஷ்ய போர் விமானங்கள், 100 ட்ரோன்களும் மின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தன. இதன்காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. குடிநீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் பிரதமர் டெனிஸ் கூறும்போது, “ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

எதிரிகளை உள்ளே வரவழைத்து அவர்களை சுற்றிவளைத்து தாக்கும் வியூகத்தை ரஷ்யா பின்பற்றுவதாக தெரிகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 5,800-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவம் தற்போது நடத்தியுள்ள தாக்குதலில், உக்ரைனின் மின் விநியோக கட்டமைப்பு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இதை சீரமைக்க பல வாரங்கள் ஆகும் என்று சர்வதேச பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா சார்பில் அமைதி மாநாடு? – ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா உட்பட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால், ரஷ்யா புறக்கணித்ததால், மாநாடு தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில், இந்தியா சார்பில் 2-வது அமைதி உச்சி மாநாடு நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னோட்டமாகவே, கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து, போரை நிறுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/308435

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்நாளில் மூன்றாம் உலகப்போரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது.. கடந்த மாதம் வரை இது மூன்றாம் உலகப்போராக மாறாது என்ற நம்பிக்கை இருந்தது.. ஆனால் இப்பொழுது மேற்கு அதை விரும்புவதுபோல் தெரிகிறது.. பலம் உள்ளவர்கள் வைப்பதுதான் இந்த உலகில் சட்டம்.. ஆக வெகுவிரைவில் அதை பார்க்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் ரஷ்ய போர் விமானங்கள், டிரோன்கள் தாக்குதல்

ரஷ்யா - யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராபர்ட் கிரீனால்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது நாளாக மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை தொடர்கிறது.

ரஷ்ய விமானம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது குறித்து செவ்வாய்கிழமை அதிகாலை யுக்ரேனிய அதிகாரிகள் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை வெளியிட்டனர். ரஷ்யா போர் விமானங்களைக் கொண்டு மட்டுமின்றி பெரி யஅளவில் டிரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதும் பதிவாகியுள்ளது.

இதனால், யுக்ரேனின் வான் பாதுகாப்புப் படைகள், அந்நாடு முழுவதும் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில், நீண்ட தூர வான் மற்றும் கடலில் இருந்து துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் மூலம் யுக்ரேனில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்புகளை தாக்கியதாக கூறியுள்ளது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால், யுக்ரேனில் ஒரே இரவில் குறைந்தது 6 பேர் இறந்தனர். யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதால் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

யுக்ரேனில் மின்சார உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால் பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் தாக்குதல்களை "அட்டூழியமானது" என்று விமர்சித்துள்ளார். யுக்ரேனின் எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

"சிவில் உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் கோழைத்தனமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் இது" என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
ரஷ்யா - யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள க்ரிவி ரிஹில் நகரத்தில் திங்கள்கிழமை பிற்பகுதியில் ரஷ்ய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலரை காணவில்லை.

ஜபோரிஷியா பிராந்திய நிர்வாகத் தலைவர் இவான் ஃபெடரோவ், ஜபோரிஷியா நகரில் ஒரு ஆண் கொல்லப்பட்டதாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். இந்த சம்பவத்தில் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல ஹைப்பர்சோனிக் கின்சால் (டாகர்) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை இடைமறித்து தாக்கி அழிப்பது என்பது யுக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புக்கு கடினமான ஒன்றாக உள்ளது.

அந்நாட்டின் கர்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதியை யுக்ரேன் சமீபத்தில் கைப்பற்றிய பிறகு, இந்த போர் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சியாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

 
ரஷ்யா - யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

அமெரிக்காவுக்கு யுக்ரேன் வேண்டுகோள்

பிப்ரவரி 2022 இல் தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்தே யுக்ரேனின் ஆற்றல் உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்து வருகிறது.

சமீப மாதங்களில், யுக்ரேனிய மின்சார உள் கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா புதுப்பித்துள்ளது, இதனால் யுக்ரேன் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இந்தப் போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்யும் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகள், அந்த ஆயுதங்களை பயன்படுத்த விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் உள் பகுதியில் தாக்குவதற்கு அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க சில மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த யுக்ரேன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்த மேற்கத்திய நாடுகள் அனுமதிக்கவில்லை.

ஐரோப்பிய விமானப்படைகள் யுக்ரேனின் வான் பாதுகாப்புடன் இணைந்து செயல்பட்டால், "உயிர்களைப் பாதுகாக்க நாம் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும்" என்று ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனது வாழ்நாளில் மூன்றாம் உலகப்போரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது.. கடந்த மாதம் வரை இது மூன்றாம் உலகப்போராக மாறாது என்ற நம்பிக்கை இருந்தது.. ஆனால் இப்பொழுது மேற்கு அதை விரும்புவதுபோல் தெரிகிறது.. பலம் உள்ளவர்கள் வைப்பதுதான் இந்த உலகில் சட்டம்.. ஆக வெகுவிரைவில் அதை பார்க்கலாம்..

அண்மைக்காலத்தில் மேற்கின் நடவடிக்கைகளைக் கவனித்தால் "உக்ரேன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தூண்டிவிடிவது போல இருப்பதைக் காணலாம். உக்ரேனை வேகமாக அழிக்க வேண்டும் " என மேற்கு விடும்புகிறது போல,🥺

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா உட்பட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால், ரஷ்யா புறக்கணித்ததால், மாநாடு தோல்வியில் முடிந்தது.

ரஸ்யா மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

1 hour ago, Kapithan said:

அண்மைக்காலத்தில் மேற்கின் நடவடிக்கைகளைக் கவனித்தால் "உக்ரேன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தூண்டிவிடிவது போல இருப்பதைக் காணலாம். உக்ரேனை வேகமாக அழிக்க வேண்டும் " என மேற்கு விடும்புகிறது போல,🥺

தாங்கள் கைவிட்டதாக இருக்க கூடாது என்ற உயரிய எண்ணமாக இருக்கலாம்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

ரஸ்யா மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

தாங்கள் கைவிட்டதாக இருக்க கூடாது என்ற உயரிய எண்ணமாக இருக்கலாம்.🙂

Global South ‘worried’ West could relax rules for Kiev’s strikes in Russia – Beijing

“Super hawks” in some countries are intentionally heating up the Ukraine conflict, the Chinese Foreign Ministry has warned
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல வருடங்கள் போகும். அழிந்தது இரண்டு தேசங்களும். இன்றைய உலகில் எவரும் எவரையும் அடித்து வெல்ல முடியாது.  

இருவர் தகராறில் மூன்றாமவர் ஒருவர் உள்ளே வந்தால் இது தான் கதி என்றும். அதுவும் அமெரிக்காவிற்கு இதைவிட பொன்னான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அண்மைக்காலத்தில் மேற்கின் நடவடிக்கைகளைக் கவனித்தால் "உக்ரேன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தூண்டிவிடிவது போல இருப்பதைக் காணலாம். உக்ரேனை வேகமாக அழிக்க வேண்டும் " என மேற்கு விடும்புகிறது போல,🥺

செலன்ஸ்கி மேற்கிற்கு நெருக்கடி கொடுக்கிறார் என நினைக்கிறேன், இரஸ்சிய  உக்கிரேன் போரில் உக்கிரேனிற்கு தோல்வி ஏற்பட்டால் அது மேற்கின் தோல்வி என்பது உலகிற்கே தெரியும், அதனால் செலன்ஸ்கி தற்போதய போரில் இரஸ்சிய ஊடுருவலுக்கு மட்டும் ஈடுபாடு காட்டுவதுடன் இந்த போரில் மேற்கின் அதி நவீன ஆயுதங்களை சோவியத் கால ஆயுதங்கள் மூலம் அழிவடைய செய்வதன் மூலம்.

கேர்க்ஸ் போரில் அமெரிக்க, இங்கிலாந்து டாங்கிகளை இரஸ்சியாவின் T72 (புலிகளால் இந்திய இராணுவத்தின் இந்த டாங்கிகளை சாதாரண RPG அழிக்கப்பட்ட மிக பழைமையான) டாங்கிகள் வேட்டையாடுகின்றது, இதற்கு மேல் இரஸ்சிய டாங்கியின் REA கவச பாதுகாப்பினை மேற்கு டாங்கிகளிற்கு விளக்குமாற்றிற்கு பட்டு குஞ்சம் கட்டுவது போல் செய்து மேலும் அசிங்கப்படுத்துகிறார்கள் உக்கிரேனியர்கள். இதனை உக்கிரேன் திட்டமிட்டே செய்கிறதா என எனக்கு சந்தேகம் உண்டு, இரஸ்சியாவினையும் அதே நேரத்தில் உத்தரவு போடும் மேற்கையும் சமகாலத்தில் அசிங்கப்படுத்தவேண்டும், அதே நேரத்தில் மீள முடியாத இராஜதந்திர நெருக்கடியினை மேற்கிற்கு ஒருங்கே கொடுப்பதாகவும் இருக்கவேண்டும்.

மேற்கு விரும்பாத விடயத்தினை உக்கிரேன் செய்யும்போது அதனை வெளிப்படையாக கண்டித்தால் மேற்கின் கொளகை ரீதியான தோல்வியினை ஒப்பு கொள்ளவேண்டும் எனும் நிலை, அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக உக்கிரேன் பல இடங்களில் பெருமளவினை இழப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு நெருக்கடியினை ஏற்படுத்தி தனக்கு தேவையானவற்றை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறது என நினைக்கிறேன்.

மேற்கிடமிருந்து எந்த வித கட்டுப்பாடற்ற நிதி மற்றும் ஆயுதம், ஆயுத பயன்பாடு (நீண்ட தூர ஏவுகணைகள்) என்பவற்றினை பெறுவதே நோக்கமாக இருக்கலாம்.

செலன்ஸ்கி தற்போது மேற்கின் கைப்புள்ள இல்லை, தற்போது மேற்குதான் செலன்ஸ்கியின் கைப்புள்ள, இரஸ்சியாவினை மேற்கு வென்றாலும் உக்கிரேனிடம் மேற்கு தோற்றுத்தானாகவேண்டும். 

ஆனால் உக்கிரேனிடம் தோற்றாலும் அது வெளியில் தெரியாது அதனாலசிங்கமாக இருக்காது.

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா - யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது? புகைப்படங்கள் உணர்த்தும் உண்மைகள்

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேனில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பொக்ரோவ்ஸ்க் நகரை ரஷ்யப் படைகள் நெருங்குவதால் அந்நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தாயும், அவரது 2 வயது மகனும். எதிர்காலத்தை எண்ணி கலங்குகிறார் அந்த தாய். (ஆக.27)
5 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நீடிக்கிறது. கிழக்கு யுக்ரேனில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும், போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

ரஷ்யாவின் தாக்குதலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதன் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், யுக்ரேன் இழந்த பகுதிகளை மீட்க உதவியும் புரிகின்றன. இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களும் அடங்கும்.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ரஷ்யாவுக்குள் யுக்ரேன் துருப்புகள் நுழைந்த பிறகு இந்த போர் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் ச.கி.மீ.ககும் அதிகமான நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக யுக்ரேன் கூறுகிறது. இதன் பிறகு யுக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்களும், டிரோன்களும் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பின்னணியில் ரஷ்யாவிலும், யுக்ரேனிலும் என்ன நடக்கிறது? என்பதை இந்த புகைப்படத் தொகுப்பு விவரிக்கிறது.

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் படையினரின் ஆயுத தளவாடங்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திய காட்சி. (ஆக.8ம் தேதி, ரஷ்ய பாதுகாப்பு படை வெளியிட்ட புகைப்படம்)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் கிராமாடோர்ஸ்க் நகரில் சஃபயர் ஹோட்டல் அருகே ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் ஏவுகணை தாக்கியதால் இடிந்து விழுந்த கட்டடத்தில் அவசர கால மீட்புக் குழுவினர். (ஆக.25)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேனின் ஜபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டை இழந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார். (ஆக.27)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு தேடி மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் (ஆக.27)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவுக்குள் யுக்ரேன் படைகள் புகுந்துவிட்ட பிறகு, எல்லையோர சமி பிராந்தியத்தில் சோவியத் தயாரிப்பான டி-72 டாங்குகளுடன் யுக்ரேன் துருப்புகள். (ஆக.12)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போர்க் களத்தில் ரஷ்யாவுக்கு தலைவலி தரும் யுக்ரேனிய டிரோன்களை இயக்கத் தயாராகும் அந்நாட்டின் 22-வது படைப் பிரிவினர். இந்த புகைப்படம் யுக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் எடுக்கப்பட்டது. (ஆக.09)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் கைப்பற்றிய சுட்ஸா நகரில் சேதடைந்த லெனின் சிலைக்கு முன்னே யுக்ரேன் ராணுவ வீரர். (ஆக.16)
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, யுக்ரேன் துருப்புகளின் திடீர் எல்லை தாண்டிய தாக்குதலால் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் வசித்த அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த காட்சி.
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE

படக்குறிப்பு, கர்ஸ்க் பிராந்தியத்திற்குள் புகுந்த யுக்ரேன் படையினருக்கு எதிராக போரிட ரஷ்யா அனுப்பிய கூடுதல் துருப்புகள் அணிவகுத்துச் செல்கின்றன.
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 போர் விமானங்களை அதன் நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. அவ்வாறு பெற்றுக் கொண்ட எஃப்-16 விமானங்களின் முன்பாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி. இந்த விமானங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று யுக்ரேன் எதிர்பார்க்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டிற்கு வேலை வந்துவிட்டது, எந்த நாடு இலக்கோ? அதன்பின்தான் இந்த மானிடம் அடங்கும்🙄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.