Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக  ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை

போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்

ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்கிறது. இந்தப் பண்ணைத் தோட்டத்தில்தான்,  கிடைத்த எந்த வேலையையும் செய்யக்கூடிய  தொழிலாளியான மேட்யூஸ், தனது வயதான நோய்வாய்ப்பட்ட  பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தில்  பயங்கரமான சூழ்நிலையில் ஒரு பெண் இருந்தது, அவனது பெற்றொருக்கும் தெரியவில்லை என்கிறார்கள்.

Gaika கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர்  தூரத்தில் வசித்து வந்தவள்தான் மால்கோர்ஸற்றா (Małgorzata). 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்லைன் மூலமாக மேட்யூஸ்வைச் சந்தித்தபோது அவளுக்கு வயது 25. இருவரும் சில மாதங்கள் தொடர்பில் இருந்தார்கள். ஒருநாள்  மால்கோர்ஸற்றாவை அந்த அறையில் வைத்து மேட்யூஸ் பூட்டிவிட்டான். அந்த நாள் எப்போது என்பது அவளுக்கு நினைவில் இல்லை. கடைசிவரை தான் எங்கே சிறைப்பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. அவள்

கர்ப்பமாகி பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டிய தருணத்தில் மருத்துவ மனைக்கு அவளைக் கூட்டிச் சென்ற போதும் பல அச்சுறுத்ததல்களை விடுத்தே அவளை மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறான். யாருடனும் கதைப்பதற்கு அவளுக்கு மேட்யூஸ் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. பிறந்த குழந்தையையும் வைத்தியசாலையில் தத்துக் கொடுத்துவிட்டு அவளை அழைத்து வந்துவிட்டான்.

“பல்வேறு பொருள்களைக் கொண்டு மால்கோர்ஸற்றாவின்  முகத்திலும் உடலிலும் மேட்யூஸ் தாக்கியிருக்கிறார். அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவளை பட்டினி போட்டிருக்கிறார், சித்திரவதைகள் செய்து வன் புணர்வு செய்திருக்கிறார். மிகவும் மோசமாக பலமைறை தாக்கப்பட்டிருக்கிறாள். கடந்த வாரம் மேட்யூஸ் தாக்கியதில் மால்கோர்ஸற்றா கைகள் மற்றும் கால்கள் உடைந்த நிலையில் அவள் இறந்துவிடுவாளோ என்ற பயத்தில் நோவா சோலில்( Nowa Sól )உள்ள மருத்துவமனைக்கு 27ந் திகதி மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறார்என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.

நோவா சொல் மருத்துவமனையில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மருத்துவத் தாதிக்கு தனது நிலையை மால்கோர்ஸற்றா சொல்ல, கடந்த புதன் கிழமை (28.08.2024) மேட்யூஸ் கைது செய்யப்பட்டான்.

“எனது மகன் ஏறக்குறைய ஒரு துறவி போலவே வாழ்ந்தவன். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் இப்படி ஒரு சம்பவத்தைச் செய்திருக்க மாட்டான். அத்தோடு எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கட்டிடத்தில் ஒரு பெண் அடைக்கப் பட்டிருந்ததையோ, சித்திரவதை செய்யப்பட்டதையோ நாங்கள் பார்க்கவில்லைஎன மேட்யூஸ்வின் தாய் பத்திரிகைகள் கேள்வி கேட்ட போது சொல்லியிருக்கிறார்.

இப்படியான குற்றச் செயலுக்கு 25 வருட சிறைத்தண்டணை கிடைக்கலாம் என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.

போலந்துப் பத்திரிகையில் வந்த செய்தி இந்தப் பக்கத்தில் இருக்கிறது. மொழி தெரியாவிட்டாலும் படங்களைப் பார்க்கலாம்.

https://myglogow.pl/pl/11_dzieje-sie/160049_zwyrodnialec-wiezil-kobiete-cztery-lata-byla-torturowana-i-gwalcona.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

துறவிபோல் வாழ்ந்தவனுக்குள் எவ்வளவு மிருகவெறி ..........!  😴

  • கருத்துக்கள உறவுகள்

அவனையும் தனிமைச் சிறையில் தள்ளிவிட வேண்டும். Mirror response.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒருவர் புளோறிடாவில் (என நினைக்கிறேன்) சில காலங்களுக்கு முன் பிடிபட்டவர். இதுவும் ஒரு மன நோய் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

துறவிபோல் வாழ்ந்தவனுக்குள் எவ்வளவு மிருகவெறி ..........!  😴

உலகில் துறவிகளால் தான் ஆபத்து 😄

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த துறவி ஒரு மன நோயாளியாக கூட இருக்கலாம்.மிகுதியாக இருக்கும் காலத்திலாவது அந்தப் பெண் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு போகட்டும்.😏

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த ஒரு வசனம் - 

Quote from Movie Laapataa Ladies " This world is very strange, Don’t be taken in by what you see, Things are often not what they  seem"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.