Jump to content

மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   03 SEP, 2024 | 03:37 PM

image
 

பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளார்.

நீண்டநேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது.

பின்னர் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மரத்தில் இருந்து கீழே இறங்கியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192754

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியவில்லை. எவ்வளவு பேர் ஏங்கி தவிக்கிறார்கள் இந்த தவத்திற்காக....😜

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

இந்தாளுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியவில்லை. எவ்வளவு பேர் ஏங்கி தவிக்கிறார்கள் இந்த தவத்திற்காக....😜

தெரியாத பேயை விட… தெரிஞ்ச பேய் நல்லது என நினைத்துள்ளார் போலுள்ளது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதுக்கு மனைவியின் காதலன் ஒமாமோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

இதுக்கு மனைவியின் காதலன் ஒமாமோ?!

காதலன் இருக்கட்டும்…. உங்கள் நிலைப்பாடு என்ன வாலி அவர்களே!?????🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மரத்தில் ஏறிப் போராட்டம் செய்யுமளவு அந்தத் தெய்வம் இவருடன் குடும்பம் நடத்தியிருக்கிறா .......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

இதுக்கு மனைவியின் காதலன் ஒமாமோ?!

ஒருமையா பன்மையா அண்ணை?!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் பெயர் கண்ணகியாக இருக்குமோ,..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில்  ஏறுவதை விட்டு மனைவிமீது ஏறு  மானிடா!!

சம்பளமும்   உன்பலமும்  சேர்ந்தே கூடினால்..

மதனோற்சவம் பதியோடுதான்  மதியில் கொள்ளடா!!

பின்குறிப்பு - "மனைவிமீது ஏறு" என்பது மனைவியின் இதயத்தில் இடம்கொள் என்ற பொருளோடு வாசிக்க 😉

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

காதலன் இருக்கட்டும்…. உங்கள் நிலைப்பாடு என்ன வாலி அவர்களே!?????🤪

நான் கூட்டுக்கொண்டுபோன ஒண்டு ரெண்டு மணித்தியாலத்துக்குள்ளயே ஓம்பட்டிருவன்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஒருமையா பன்மையா அண்ணை?!!

இப்பிடியான மாடுகள் பன்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இப்பிடியான மாடுகள் பன்மை தான்.

ஏட்டு ஏகாம்பரம் இருக்க பயமேன்!!

 

அந்தப் பொடியன் பாவம் என்ன பிடுங்குப்பாடோ! நாங்க அவங்க குடும்பத்தை வைச்சு......

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ச் வராது அண்ணை! நமசிவாய---சிவாயநம
    • என்ன ஆத்திரமோ கட்டிப்பிடிச்சு கடிக்குது! நடைப்பயிற்சியின் நன்மை எல்லாம் வீணாப்போச்சே!
    • தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதானது மக்கள் தங்கள் ஜீவிய உரித்தான வாக்கை அவர்களே குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயல் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (15) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பரப்புரையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனநாயகத்திலே ஒவ்வோரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வரும் போது, ஒரு பிரஜைக்கு தான் அளிக்கின்ற அந்த புள்ளடி நாட்டிலே மாற்றத்தையும், விருப்பமான ஆட்சியாளனை தேர்ந்தடுக்கின்ற உரித்தை வழங்குகிறது. அவ்வாறானதொரு உரித்தை வீணடிப்பதற்கான பல விதமான மோசடிகளிலே ஒன்று தான் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம்”   தொடர்ந்தும் அவர் கூறுகையில், https://ibctamil.com/article/tamil-candidate-presidential-election-sumanthiran-1726410417
    • 15 SEP, 2024 | 09:37 PM இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் இறைவன் உதவியால் எங்கள் அரசியல் சரித்திரத்தில் சாதித்துக் காட்டுவோம். ஆட்சியையும் அந்தஸ்தையும் அடைந்து கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை என  வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூரில்  ஏறாவூரில் கடந்த  13 சனிக்கிழமை இரவு  இடம்பெற்ற   மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ,    தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான  ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட், இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த நாட்டுக்கு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து பிரதமர் ஒருவர் கட்டாயம் தேவை.  அரசியல் அந்தஸ்தை அடைந்து கொள்வதற்கும் ஆட்சியதிகாரங்களில் அமர்ந்து கொள்வதற்கும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாங்கள் பயப்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இந்த விடயங்களை வெளியில் சொல்வதற்கும் அஞ்சத் தேவையில்லை.   ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே குடியியல் அந்தஸ்துதான் உள்ளது. அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கும் அடிமட்டத்தில் உள்ள ஒரு குடிமகனுக்கும் ஒரே அந்தஸ்துதான்.  மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கொல்லப்பட முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து அதற்கு மாற்றீடாக தேசிய ஐக்கிய முன்னணி எனும்  கட்சியை உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார்கள்.   கடைசியாக அந்தக் கட்சி சார்பாகத்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தாரே தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அல்ல. அவர் தேசிய ஐக்கியத்தை உணர்ந்தவராக எதிர்வு கூறலுடன் தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில்  இதனைச் செய்தார். இந்த யதார்த்தத்தை சகவாழ்வை விரும்பும்  இந்த நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொண்டாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தூரநோக்கு சிந்தனையாளரை வைத்து வியாபாரம் செய்வதைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்.   ஆனால், றவூப் ஹக்கீம் அப்படி அரசியல் வியாபாரம் செய்ய, நாங்கள் சமூகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றோம். இந்த நாட்டில் முஸ்லிம் என்ற அடையாளத்தோடு நடமாட முடியாத அச்சம் பீதி நிறைந்திருந்த காலத்தில் மத்ரசாக்கள் மூடப்பட்ட காலத்தில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத காலகட்டத்தில், புனித அல்குர் ஆன் பிரதிகளை வீட்டில் வைத்திருக்க முடியாது ஆற்றிலோ குளத்திலோ குப்பைத் தொட்டியிலோ கிணற்றிலோ போட்ட அச்சமும் பீதியும் அராஜகமும் தலைவிரித்தாடிய காலகட்டத்தில்தான் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த நாட்டைப் பொறுப்பெடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை இந்த நாட்டில் மேற்சொன்ன நிலைமைகள் எதுவும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மை எனும் அச்சம்  இல்லை.  சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு மக்கள் மூவேளையும் உணவு உண்ண முடிகிறது. மாணவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். இந்த நிலை இனியும் தொடர வேண்டும்.   நாடு இனவாதம், மதவாதம் இன்றி கண்குளிர்ச்சி காணும் வகையில்  அபிவிருத்தி அடைய வேண்டும் அதற்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்ஹவின் ஆட்சி நீடிக்க மக்களாணை வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/193791
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.