Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 SEP, 2024 | 02:22 PM
image
 
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு  தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியா வளையக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக்காத காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று புதன்கிழமை  (11) குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,  

கடந்த சனிக்கிழமை பாடசாலையின் அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு  மாணவர்களை பிரம்பால்  தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும் குறித்த அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் , தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கமாறும் கோரியுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறிப்பிட்ட அதிபரை இடமாற்றம் செய்ய  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையால் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பாடசாலையில் இருந்து குறித்த  அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர்  போராட்டம் கைவிடப்பட்டது.

WhatsApp_Image_2024-09-11_at_14.15.45.jp

WhatsApp_Image_2024-09-11_at_14.15.45__1

WhatsApp_Image_2024-09-11_at_14.15.42.jp

WhatsApp_Image_2024-09-11_at_13.45.21.jp

WhatsApp_Image_2024-09-11_at_13.45.22.jp

WhatsApp_Image_2024-09-11_at_13.45.23.jp

https://www.virakesari.lk/article/193404

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் பிள்ளைகளுக்கு போட்டு தாக்கி உள்ளது. ரொம்ப கோபக்கார அதிபரோ. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயம் said:

மனுசன் பிள்ளைகளுக்கு போட்டு தாக்கி உள்ளது. ரொம்ப கோபக்கார அதிபரோ. 

அது என்ன மர்மம் என்று தெரியவில்லை....

தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் /அதிபர்கள் தான்...

தமிழ்ப் பிள்ளைகளைப் போட்டு மிருகங்கள் மாதிரி அடிக்கின்றார்கள்.

சிங்களப் பகுதிகளில் இப்படி நடப்பதாக எந்த ஒரு செய்தியையும் நான் வாசிக்கவில்லை.

தமிழ் ஆசிரியர்களுக்கு, பிள்ளைகளை நடத்தும் முறை தெரியவில்லையோ...

18 minutes ago, தமிழ் சிறி said:

அது என்ன மர்மம் என்று தெரியவில்லை....

சிங்களப் பகுதிகளில் இப்படி நடப்பதாக எந்த ஒரு செய்தியையும் நான் வாசிக்கவில்லை.

தமிழ் ஆசிரியர்களுக்கு, பிள்ளைகளை நடத்தும் முறை தெரியவில்லையோ...

சிங்களப் பகுதிகளில் இதை விட மோசமாக, அடிக்கடி நடக்கின்றது, மாணவ / மாணவிகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும் அதிகம் நிகழ்கின்றன.

வடக்கு கிழக்கு மற்றும் பொதுவான அரசியல் செய்திகளை தவிர, சிங்களப் பகுதிகளில் இடம்பெறும் இவ்வாறான செய்திகளுக்கு யாழில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளதால், இங்கு பகிரப்படுவது இல்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

தகவலுக்கு நன்றி நிழலி🙂

சிங்களவன், "டிசிப்பிளின்" ஆனவன் என, நான் நினைத்து விட்டேன்😂 🤣

6 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி நிழலி🙂

சிங்களவன், "டிசிப்பிளின்" ஆனவன் என, நான் நினைத்து விட்டேன்😂 🤣

இறந்த உடல்களை நிர்வாணப்படுத்தி, ஆர்ப்பாட்டங்களில் அகப்படுகின்றவர்களின் ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தி, இன்பம் காணும் அளவுக்கு டிசிப்பிளின் மிக்கவர்கள் அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இறந்த உடல்களை நிர்வாணப்படுத்தி, ஆர்ப்பாட்டங்களில் அகப்படுகின்றவர்களின் ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தி, இன்பம் காணும் அளவுக்கு டிசிப்பிளின் மிக்கவர்கள் அவர்கள்.

animiertes-gefuehl-smilies-bild-0029.gif இதனை நீங்கள் சிரிக்காமல் சொன்னதுதான்.... சிறப்புanimiertes-gefuehl-smilies-bild-0090.gif

"Go Home Gotha" அரகலய போராட்டத்தின் போதே...

கிழவன்களை கூட நிர்வாணப்படுத்தி ரசிக்கும் கூட்டத்தையும் பார்த்தோமே.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-gefuehl-smilies-bild-0029.gif இதனை நீங்கள் சிரிக்காமல் சொன்னதுதான்.... சிறப்புanimiertes-gefuehl-smilies-bild-0090.gif

"Go Home Gotha" அரகலய போராட்டத்தின் போதே...

கிழவன்களை கூட நிர்வாணப்படுத்தி ரசிக்கும் கூட்டத்தையும் பார்த்தோமே.... 😂

இலவசமாக இப்படியான காட்சிகளை பார்க்க  கொடுத்து வைத்திருக்க வேண்டும்   😂🤣. கருத்து சரியா??😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

இலவசமாக இப்படியான காட்சிகளை பார்க்க  கொடுத்து வைத்திருக்க வேண்டும்   😂🤣. கருத்து சரியா??😂

அவர்கள்.... பம் தின்று, கொட்டை போட்ட முதியோர்கள் ஐயா....

அதை பார்த்து ரசிக்க என்ன இருக்கு😂

உங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அவர்கள்.... பம் தின்று, கொட்டை போட்ட முதியோர்கள் ஐயா....

அதை பார்த்து ரசிக்க என்ன இருக்கு😂

உங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை🤣

சரி இனிமேல் நான் எழுதவில்லை நன்றி வணக்கம்… 🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

சரி இனிமேல் நான் எழுதவில்லை நன்றி வணக்கம்… 🙏

நான்... பகிடிக்கு சொன்னனான். நீங்கள் தாராளமாக எழுதுங்கள்animiertes-computer-smilies-bild-0080.gi 😂

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் தமிழ் வித்தியாலப் பள்ளிக்கூட அதிபர். சிவபெருமானே பிரம்படி வாங்கிச் சிவனே என்று இருப்பது தெரியாமலா அதிபரானார்!. இந்தச் சிறுவர் சிறுமிகளும் அப்படிச் சிவன்போல் இருப்பார்கள் என நினைத்து விட்டாரோ? பாவம் அதிபர்.😩

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அது என்ன மர்மம் என்று தெரியவில்லை....

தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் /அதிபர்கள் தான்...

தமிழ்ப் பிள்ளைகளைப் போட்டு மிருகங்கள் மாதிரி அடிக்கின்றார்கள்.

சிங்களப் பகுதிகளில் இப்படி நடப்பதாக எந்த ஒரு செய்தியையும் நான் வாசிக்கவில்லை.

தமிழ் ஆசிரியர்களுக்கு, பிள்ளைகளை நடத்தும் முறை தெரியவில்லையோ...

 அவர் வீட்டு  (மன)நிலைமை கொதிநிலை போலும்......எங்கே தீர்ப்பது....?    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kandiah57 said:

சரி இனிமேல் நான் எழுதவில்லை நன்றி வணக்கம்… 🙏

அந்த அதிபரை விட எங்கட கந்தையர் பெரும் கொதியர் போல கிடக்கு........🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை அடிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. அதிபர் கொஞ்ச நஞ்சமல்ல அதிகாரத்தில் ஆடி இருக்கிறார். ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டும். பலருக்கும் பாடமாகவும் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

பிள்ளைகளை அடிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. அதிபர் கொஞ்ச நஞ்சமல்ல அதிகாரத்தில் ஆடி இருக்கிறார். ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டும். பலருக்கும் பாடமாகவும் இருக்கவேண்டும்.

விசுகர்… தனது பிள்ளைகளுக்கு “பெல்ற்”ரால் அடிக்கலாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அந்த அதிபரை விட எங்கட கந்தையர் பெரும் கொதியர் போல கிடக்கு........🤣

இல்லை   ஒருபோதும் இல்லை  .... சும்மா ஒரு  மிரட்டல்,..... [வெருட்டு. ] விட்டுப்பார்த்தேன். 😂🤣. வேலை செய்து விட்டது 🤣🤣🤣🙏

7 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்… தனது பிள்ளைகளுக்கு “பெல்ற்”ரால் அடிக்கலாம். 😂 🤣

அவர்  பிள்ளைகளுக்கு  புழுத்த  பயம்      🤣அடிப்பது எப்படி??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்… தனது பிள்ளைகளுக்கு “பெல்ற்”ரால் அடிக்கலாம். 😂 🤣

ஜேர்மனியில பிள்ளையளுக்கு கை வைக்கேலாது.அப்பிடி கை வைச்சால் ஜெயில்ல இருந்து சூப் குடிக்க வேண்டி வரும்..😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்… தனது பிள்ளைகளுக்கு “பெல்ற்”ரால் அடிக்கலாம். 😂 🤣

இப்போ எனது மகள் தனது மகனை தங்களை வளர்த்தது போல் வளர்த்து தரட்டாம்.  அப்படியானால் பெல்ட் சரியான தெரிவு என்று தானே அர்த்தம் 

Edited by விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.