Jump to content

நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின்

13 SEP, 2024 | 02:12 PM
image
 

ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்துவதற்கான தடையை தளர்த்தினால் அதன் அர்த்தம் நேட்டோவும் ஐரோப்பிய நாடுகளும் ரஸ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பதே என விளாடிமிர் புட்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் மோதலின் சாராம்சத்தில் ஏற்படும் மாற்றத்தை மனதில் கொண்டு எங்களிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை எடுப்போம் என புட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தான் வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு அனுமதிவழங்கியுள்ள போதிலும், நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு பைடன் நிர்வாகம் இன்னமும் அனுமதிவழங்கவில்லை.

https://www.virakesari.lk/article/193585

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

அமெரிக்காவும், நேட்டோவும் வழங்கும் வளங்களை வைத்து தான் உக்ரேனால் இவ்வளவு காலமும் தாக்குப் பிடிக்க முடிகின்றது, விசுகு ஐயா. ஆனால் ரஷ்ய ஆதரவு/எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து கொண்டு, அதன் வழியே கருத்துகள் சொல்லும் ஊடகங்களும், தனிமனிதர்களும் அவர்களுக்கேற்றவாறு நிலைமையை திரித்து விடுகின்றார்கள்.

ரஷ்யா ஏன் இன்னமும் உக்ரேனை அடித்து முடிக்கவில்லை என்பது ஒரு பக்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை. அதை நியாயப்படுத்த காரணங்களை, பலது இல்லவே இல்லாத காரணங்கள், கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால், காலனியாதிக்கம் முடிந்த பின், உலகில் எத்தனை நாடுகள் எத்தனை நாடுகளை அடித்து முடித்திருக்கின்றது....... அப்படியே ஒரு போரில் வென்றாலும், அவர்களால் அந்த நாட்டையோ அல்லது பிரதேசத்தையோ நீண்ட காலத்திற்கு தக்க வைக்கக் கூடியதாக இருந்ததா.......... இல்லைத் தானே. இது தான் இன்றைய ரஷ்யாவின் நிலை. அமெரிக்காவும் சில நாடுகளுக்குள் போய் இறங்கி விட்டு, பின்னர் போதுமடா என்று சில நாடுகளில் இருந்து திரும்பி வந்திருக்கின்றது தானே.    

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

"நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது"  என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனையே சமாளிகேலாமல் கிடக்கு இதுக்க வேற நேட்டோவுக்கு சவால் விடுறாராம்!😂 

ரஸ்யா ஒரு செத்தகிளி இனிச் சீவியென்ன சிங்காரித்தென்ன!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

"நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது"  என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது  🤣

குலைக்கிற நாய் கடிக்காது. உண்மையில் போரில் வெல்லும் சாத்தியம் இருந்தால் அடிக்கட்டும் என்று சந்தோசப்பட்டபடி மௌனமாக இருப்பார்கள் வீரர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???

இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள்.

ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது.

எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ  பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது.

3 hours ago, விசுகு said:

குலைக்கிற நாய் கடிக்காது. உண்மையில் போரில் வெல்லும் சாத்தியம் இருந்தால் அடிக்கட்டும் என்று சந்தோசப்பட்டபடி மௌனமாக இருப்பார்கள் வீரர்கள். 

இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும்.

போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள்.

ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது.

எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ  பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது.

இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும்.

போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.

உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார்.  அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. 

☹️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை

நேட்டோவை எச்சரிக்கும் புடின்!

ஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ, அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் தொடர்ந்தும் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருகிம் நிலையில், இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அண்மையில் அறிவித்தார்.
எனினும், ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேன் இராணுவத்திற்கு கிடையாது என்றும் செயற்கைகோள் மூலமான உளவுத் தகவல்களை பெறாமல் இவற்றை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரேன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளதாகவும் எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும் எனத் தெரிவித்துள்ள புடின், அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை ரஷ்யா எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1399377

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார்.  அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. 

☹️

மேற்குலக ஜில்மா ஊடக செய்திகளில் மட்டும் தலையை புதைத்து வைக்காமல் மூன்றாம் உலக நாடுகளில் வரும் உக்ரேன் - ரஷ்ய செய்திகளையும் அவ்வப்போது வாசிக்க சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொஸ்கோவிற்கு வடமேற்கே அமைந்துள்ள இரு இரஸ்சிய ஆயுத கிடங்கின்  மேல் உக்கிரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த தாக்குதல் பற்றிய அறிவிப்பினை இரஸ்சியா இது வரை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது (எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என) அண்மையில் பின்லாந்திலிருந்து வந்த உக்கிரேன் டரோனை இரஸ்சியா சுட்டு வீழ்த்தியிருந்தது , இந்த தாக்குதல் நீண்ட தூர ஏவுகனை அல்லது பால்டிக் நேட்டோ நாடொன்றிலிருந்து உக்கிரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆயுத கிடங்கு தீப்பற்றி எரியும் காணொளிகள் இணையதில் வலம் வருகிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.