Jump to content

‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’


கிருபன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’

 

  — கருணாகரன் —

தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால்  தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. 

அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். 

இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய  வெளிப்பாடே (New version)  தமிழ்ப்பொது வேட்பாளராகும். 

இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள்.

ஆக இவர்களுடைய நோக்கமெல்லாம் இலங்கை அரசியல் அரங்கை துருவமயப்படுத்தி வைத்திருப்பதே நோக்கமாகும்.

இப்படித் துருவமயப்படுத்தித் தமிழரசியலை  வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு இனவாதம் தேவை. 

இனவாதமின்றி அதைச் செய்ய முடியாது. 

அந்த இனவாதத்தை வெளிப்படையாக – வெறித்தனமாக கையாள வேண்டுமென்றில்லை. பிரித்தாளும்  தந்திரோபாயத்தோடு தமிழ்சமூகத்தைத்  தனிமைப்படுத்தி வைத்திருக்கு முயற்சிப்பதே இனவாதம்தான். 

ஆனால் இலங்கையின் யதார்த்தம் இனி இனவாதத்துக்குரியதல்ல. இனவாதத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, யாரெல்லாம் அதைத் தூக்குகிறார்களோ அவர்களை காலமும் சூழலும் நிராகரித்துவிடும். முழு இனவாதத்தை தூக்கிய கோட்டபாய ராஜபக்ஸ விரட்டப்பட்டமை ஒரு  உதாரணம்.

பலருக்கும் இதை  நம்பக்கடினமாக இருக்கும். ஆனால் இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை.

அண்மைய இன்னொரு உதாரணம், இந்தத் தடவை யாரும் இனவாதத்தை வெளிப்படையாக பேசவில்லை. இது 1994 லேயே வந்துவிட்டது. சந்திரிகா குமாரதுங்க இனவாதம் தவறு எனப் பகிரங்கமாகச் சொல்லி, தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கூறியே தேர்தலில் நின்று வெற்றியீட்டினார். 

அறகலய இதை மேலும் வலுவூட்டியது. மாற்றம் இப்படித்தான் படிப்படியாக நடக்கும். சினிமாவில் காட்டப்படுவதைப்போல ஒரே நாளில் மாற்றத்தை நிகழ்த்துவதல்ல. ஏன் சினிமாவில் அதிரடிகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர் கூட தன்னுடைய அரசியலில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை. 

ஆனால் தமிழ்த் தரப்போ உடனடியாக மாற்றம் நிகழவேண்டுமென எண்ணுகிறது. இவ்வளவு காலமும் நம்பினோம், விட்டுக்கொடுத்தோம் என்கிறது. 

அரசியலென்பது தொடர்ச்சியான, இடையறாத முயற்சியின் விளைவு. இடையறாத போராட்டத்தின் மூலம் எட்டும் வெற்றி. அது மிக கடினமான பாதையும் பயணமும். அதில் ஏற்ற இறக்கம் நிகழும். 

இதைப் புரிந்து கொண்டு நிதானமாக செயற்பட வேண்டும்.

ஆகவே இன அடைப்படையில் தனித்தமிழ் எனத் தன்னைத் தனிமைப்படுத்தி நிற்கும் தமிழ்ப்பொது வேட்பாளரையும் அதனுடைய இனவாதத்தையும் வரலாறும் சூழலும் ஏற்கப்போவதில்லை.

ஏனெனில் இதற்கு எந்தப் பெறுமானமும் உள்நாட்டு அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் கிடையாது. (வேண்டுமானால் ஆரோக்கியமான முறையில் இதை விவாதிப்பதற்கு யாரும் எங்கும் வரலாம்). 

இன்று இதொரு எழுச்சியைப்போலச் சிலருக்கோ பலருக்கோ தோன்றக் கூடும். 

ஆனால், வரலாறு இதை நகையாடும். நிராகரிக்கும். மட்டுமல்ல, மோசமான தண்டனையைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கும். 

ஏனெனில் அரசியற் தவறுகள் எளிதாகக் கடந்து போகக் கூடியனவல்ல. இலகுவாக முடிந்து விடுவனவுமல்ல. அவை மிகப் பெரிய தண்டனையையே அளிக்கும். 

ஆகவே இன்றைய தவறுக்கு நாளை நிச்சயமாகப் பெரிய தண்டனை கிடைக்கும். முள்ளிவாய்க்காலையும் விட. அது மேலும் தமிழ்ச்சமூகத்தைப் பலவீனப்படுத்தும். 

1960 களில் சிங்களவரல்லாத தமிழ்பேசும் சமூகங்களில் ஓரளவுக்குப் பலமாகவும் பெரியதாகவும் இருந்த தமிழ்ச்சமூகம் இன்று மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனுடைய வளர்ச்சி மிகக் கீழிறக்க நிலையிலேயே இருக்கிறது. 

இது எப்படி நிகழ்ந்தது? 

தமிழ்த்தலைமைகள், தமிழ் ஊடகங்கள், தமிழ்ப்புத்திஜீவிகள், தமிழ்ச் செயற்பாட்டு அமைப்புகள், தமிழ்ப்பல்கலைக்கழகங்களின் கூட்டுத்தவறினாற்தானே!

இவை சரியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்ச்சமூகம் இந்தளவுக்குப் பலவீனப் பட்டிருக்காது.

அன்று தமிழரையும் விடப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கல்வியிலும் பின்னிலையில் இருந்த சமூகங்கள் தங்களுடைய இடர்களையும் நெருக்கடிகளையும் எப்படிக் கடந்து செல்கின்றன? அதற்குள் எப்படிப் பலமாகி, வளர்ச்சியடைகின்றன? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

என்பதால்தான் அவை தமிழ்ப்பொது வேட்பாளரை ஒத்த தெரிவுக்குச் செல்லவில்லை. அதற்காக அந்தச் சமூகங்களுக்கு நெருக்கடி இல்லை என்றோ, அரச ஒடுக்குமுறையிலிருந்து அவை விடுபட்டு விட்டன என்றோ இல்லை. அல்லது அந்தச் சமூகங்கள் சிந்திக்கத் தெரியாதனவாகவும் இல்லை. அல்லது அவற்றுக்கு அரசியல் ஞானமோ சமூக உணர்வோ இனமானமோ இல்லை என்றும் சொல்ல முடியாது.

இலங்கைத்தீவின் யதார்த்தம், சர்வதேசத்தின் வரையறை, தங்களுடைய மக்களின் நிலை என்பவற்றை அவை அரசியல் ரீதியாகச் சரியாக உணர்ந்துள்ளன. மதிப்பிட்டுள்ளன. அதற்கமையவே தங்களுடைய தீர்மானங்களை எடுக்கின்றன – செயற்படுகின்றன. 

இதுவே அவற்றின் வெற்றியாகும். 

இதைப்பற்றித் தமிழ்ச் சூழலில் பேசினால், அதைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, அதொரு மாற்றுக் கருத்து, ஜனநாயக விழுமியம் என ஏற்றுக் கொள்வதில்லை. 

பதிலாகத்  துரோகி, எட்டப்பன், காக்கை வன்னியின் என்றெல்லாம் அடையாளப்படுத்துவதே நிகழ்கிறது. 

இதைக்குறித்து பொதுவெளியிலோ பொது அரங்கிலோ யாரும் உரையாடவும் விவாதிக்கவும் முன்வருவதில்லை. பதிலாக தங்கள் ஏஜென்டுகளை ஏவி விட்டு வசைபாடவும் குற்றம் சாட்டிப் பழித்துரைக்கவுமே முற்படுகின்றனர். 

தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி என்ற அதீதமான சிந்தனை, கற்பனை இந்த உலகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தப் போகிறது.

கடந்த காலத்தில் சிங்களத் தலைமைகள் தம்மை ஏமாற்றி விட்டன, நம்பி ஏமாந்து விட்டோம் என்று இப்போது சொல்கிறார்கள. 

அப்போதும் இப்போதும் இவர்களுடைய அரசியற் தெரிவு தவறானது. இதை தொடர்ந்து செய்து தமிழ்மக்களை, தியாகம் பல  செய்த மக்களை, இழப்புகள் பலதைச் சந்தித்த மக்களை மேலும் தோற்கடிக்கின்றனர்

எனவே இவர்கள்தான் சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஏஜெண்டுகளாக உள்ளனர்.

இதை மேலும் தொடர அனுமதிப்பதா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது தம்மைத் தாமே தோற்கடிப்பதையும் தம்மை ஏமாற்றும் தலைமைகளை அனுமதிப்பதையும் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அழிவே.

 

https://arangamnews.com/?p=11258

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இலங்கையின் யதார்த்தம் இனி இனவாதத்துக்குரியதல்ல. இனவாதத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, யாரெல்லாம் அதைத் தூக்குகிறார்களோ அவர்களை காலமும் சூழலும் நிராகரித்துவிடும்.

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆனால் இலங்கையின் யதார்த்தம் இனி இனவாதத்துக்குரியதல்ல. இனவாதத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, யாரெல்லாம் அதைத் தூக்குகிறார்களோ அவர்களை காலமும் சூழலும் நிராகரித்துவிடும். முழு இனவாதத்தை தூக்கிய கோட்டபாய ராஜபக்ஸ விரட்டப்பட்டமை ஒரு  உதாரணம்.

இலங்கையர்கள் அவ்வளவு நல்லவர்களா?

இனவாதம் என்றால் கிலோ என்ன விலை என இலங்கையர்கள் வினவும் நாள் வந்துவிட்டதா?

கோத்தபாய பெரும்பான்மை ஆட்சிக்கு பலிக்கடாக்களாக இஸ்லாமியர்களின் மீதான இனவாதம் காரணமாக இருந்த்து, கோத்தபாய தூக்கி எறியப்பட்டதற்கான காரணம் வேறு.

இலங்கையில் இனவாதம் இல்லாவிட்டால் எதனால் அதிகார பரவலாக்கத்தினை எந்த கட்சி ஆட்சி ஏறினாலும் செய்ய முடிவதில்லை, அப்படி செய்தால் இனவாதம் புரையோடிப்போயிருக்கும் இலங்கையில் அக்கட்சிக்கு இடமில்லாமல் போய் விடும்.

3 hours ago, கிருபன் said:

அன்று தமிழரையும் விடப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கல்வியிலும் பின்னிலையில் இருந்த சமூகங்கள் தங்களுடைய இடர்களையும் நெருக்கடிகளையும் எப்படிக் கடந்து செல்கின்றன? அதற்குள் எப்படிப் பலமாகி, வளர்ச்சியடைகின்றன? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இதற்கு காலம் காலமாக நிகழ்ந்த இனக்கலவரங்கள்தான் காரணம் என நம்புகிறேன், எந்த ஒரு சிறுபான்மை இனமும் இலங்கையில் பொருளாதார உச்ச நிலை எய்தும் போது அவர்கள் தட்டி வைக்கப்படுகிறார்கள், இதற்கு இறுதி உதாரணம் இஸ்லாமியர்கள்.

சமூக நீதியினை ஒரே சமூகக்கண்ணோட்டத்தில் (ஒட்டு மொத்த இலங்கையர்கள்) அணுகும் பக்குவம் பெரும்பான்மை மக்களுக்கு வரவேண்டும், தற்போது சிறுபான்மை மக்கள் கோரும் அடிப்படை உரிமைகளை இனவாதமாகத்தெரிந்தால் அது சிறுபான்மையினரின் தவறல்ல, சிந்தனை மாற்றம் இன்னமும் ஏற்படாத பேரினவாததின் தவறே.

தேர்தல்களால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை, மக்கள் மனங்களில்தான் மாற்றம் ஏற்படவேண்டும், ஆனால் முயற்சிப்பதில் தப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தமிழ் பொது வேட்பாளர் பொதுச்சபை இப்போது தமிழ் இனவாத பிரசாரத்தை கையில் எடுத்துள்ளதை தெளிவாக காணலாம். மாவை சேனாதிராஜாவின் மோசமான அரசியல் சந்தர்பவாத நடவடிக்கையான  ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை ஆதரித்ததானால் அவரை ஒரு தமிழ் மாவீரனாக புகழ்கின்றார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஒரு முகநூல் பதிவு (தாயகத்தில் இருந்து)   விடுதலைப்போராட்ட காலத்தில் மாணவர்கள் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவாக நிற்க அதிலிருந்து பிரிஞ்சு பத்துபதினைஞ்சு பேர் தனியா ஒளிச்சிருந்து அரசுக்காக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர் அதனை இலங்கை அரச ஊடகங்கள் பெரிது படுத்தி ஒலிபரப்பி வந்தன.    அது போலவே தற்போதும் பல்கலைக்கழக சமூகம் மாணவர் ஒன்றியங்கள் தமிழ்ப்பொது வேட்பாளருக்குரிய நிலைப்பாட்டை எடுத்திருக்க சுமந்திரனை சந்தித்த சில பிரகிருதிகளின் ஏற்பாட்டில் 15 விரிவுரையாளர்கள் இணைந்து அறிக்கை விட்டிருக்கின்றனர் . தமிழ்மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர்களுக்கான அநீதிகளின் போது ஒருபோதும் இவர்கள் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்து போட்டிருந்ததில்லை. அப்படியிருக்க மக்களின் திரட்சியை கண்டு பொறுக்காமல் தங்களின் நலனுக்காக இவ்வாறு அறிக்கையிட்டுள்ளனர். இது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.    இவர்கள் பொது வெளியில் மக்கள் பணியாற்றியதை அல்லது இந்த தேசத்திற்கான ஏதாவது ஆக்கபூர்வமாக ஒருவிடயம் குறித்து ஆய்வினை இது வரை செய்தாக நாமறியோம் இதுவும் கடந்து போகும் .   இவர்களுக்கு தமிழ்மக்களை கோருவதற்கு என்ன அருகதையிருக்கின்றது என புரியவில்லை வெறுமனே கலாநிதிபட்டமும் பேராசிரியர் பட்டமும் போதும் என்று கருதுகின்றார்களா ?:   அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் 15 பேரும் இவர்கள் தான் . யாருக்காவது தெரியுமா? Dr. A. Antonyrajan, Department of Geography Dr. S. Arivalzahan, Department of Mathematics & Statistics Prof. P. Iyngaran, Department of Chemistry Dr. S. Jeevasuthan, Department of Sociology Dr. A. Kadirgamar, Department of Sociology Prof. R. Kapilan, Department of Botany Dr. N. Ramaruban, Department of Mathematics & Statistics Dr. M. Sarvananthan, Department of Economics Mr. N. Sivakaran, Department of Philosophy Prof. R. Srikaran, Department of Chemistry Dr. R. Tharshan, Department of Mathematics & Statistics Dr. M. Thiruvarangan, Department of Linguistics & English Dr. N. Varathan, Department of Mathematics & Statistics Prof. K. Vignarooban, Department of Physics Mr. S. Wimal, Department of Linguistics & English   https://www.facebook.com/share/p/6dyWwNizuKPNHtWy/
    • https://fb.watch/uH_qUE5Veg/ யாழ்ப்பாண புலனாய்வு இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே எனக்கு வேலை செய்யுது. https://fb.watch/uH_YgH4ndP/
    • பொது வெளியில் இவ்வாறு தனி நபர்களின்  புகைப்படங்களை வெளியிட்டு,  அவர்களை துரோகிகள் என்று  வசைமாரி பொழிவதும், அதை ஒரு இணையத்தளம் எந்த வெட்கமும் இன்றி பிரசுரிப்பதும் எந்த வகையில் நியாயம்.  இது பக்கா காட்டுமிராண்டித்தனம் இல்லையா?   இத்தனைக்கும் இவர்கள் செய்த குற்றம் என்ன?  தாம் விரும்பிய வேட்பாளரை ஆதரிப்பது குற்றமா?  தேர்தலில் தனக்கு விரும்பிய வேட்பாளரை ஆதரித்தற்காக  அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி பொதுவெளியில் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களை அச்சுறுத்துவது தான் தேசியமா?  இதற்கான உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?   இது அவர்களது தனியுரிமையை மீறும் செயல் அல்லவா? 
    • சினை மாடுகளுக்கு… பாதுகாப்பு உறை பாவிப்பதில்லைத்தானே….. 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.