Jump to content

தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை - அச்சத்தில் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென இராணுவத்தினர் வீதி தடையொன்றை அமைத்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினரின் வீதி தடை ஒன்றை அமைத்துள்ளனர்.

வீதி தடை 

இந்தநிலையில், இன்று இரவு குறித்த வீதி தடை பகுதியில் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை - அச்சத்தில் மக்கள் | A Sudden Military Roadblock

கடந்த காலங்களில் கொரோனா மற்றும் குண்டுவெடிப்பு காலங்களில் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினர் வீதி தடை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்த நிலையில் நீண்ட காலமாக அகற்றப்பட்டு மக்களின் இயல்பு வாழ்வு திரும்பிக் கொண்டிருக்கையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் வீதி தடை கண்காணிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/a-sudden-military-roadblock-1726930509

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா கிடவாது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தண்டிக்கும் என்று அனுரா சொன்னதை நம்பி விட்டார்கள் போலுள்ளது. அனுராவுக்கும் தமிழருக்கும் சிண்டு முடியிற வேலை. அனுரா தமிழரின் கடந்த கால அழிவுகளை, காயங்களை கணக்கிலும் எடுக்க மாட்டார். காயங்களுக்கு கட்டு போடவோ, அனுதாபம் தெரிவிக்கவும் மாட்டார். தனது அரசியலை எப்படி வளர்ப்பது கொண்டு செல்வது என்பதே அவரது இலக்கு.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்றொரு மாயையும் தேவையும்   சிங்கள இனவாதிகள் வெளியே காட்ட எழுதப்படாத சட்டமாக வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.