Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இரண்டாவது எண்ணினால் அநுரா பின் செல்வார்.

ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.

ரணிலுக்கு வாக்களித்தவர்கள் மட்டும் அல்ல அநேகமாக எல்லோரும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

K.K. Piyadasa க்கும் வாக்களிக்கும் நிலையில் யாழ் வன்னி மக்கள் 🤪

ரெலிபோனுக்கும் கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல்🤣🤣🤣

சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. animiertes-telefon-smilies-bild-0049.gif
என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா.  
பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே....
வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள்.
பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம்  தெரியாத கபோதிகள். animiertes-gefuehl-smilies-bild-0415.gif

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

யாழ் மாவட்டத்தில் அவருக்கு வாக்களித்த 31வீதத்திற்கும் அதிகமானவர்களும் புல்லுருவிகள் வியாதிக்காறர்கள்?? 

நீங்கள் இந்த வியாதிக்கு நல்லதொரு வைத்தியரை பார்ப்பது யாழ் களத்தில் உள்ள மற்றறைய உறவுகளுக்கு நல்லது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தமிழ் வாசிப்பு  புரிந்து கொள்ளும்  திறனில் குறைபாடு இருந்தால் ஆரம்ப பாடசாலைக்கு செல்லவும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. animiertes-telefon-smilies-bild-0049.gif
என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா.  
பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே....
வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள்.
பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம்  தெரியாத கபோதிகள். animiertes-gefuehl-smilies-bild-0415.gif

தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும்.

(முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும்.

(முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)

அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில்  இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

பொது வேட்பாளர்  என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

எண்ண ச்சொல்லி விட்டார்கள்

459837621_8296328490443516_3752738845383

அனுரவின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட  கேக்குகளுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ... 😲
இருக்காது. தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி... கைகாட்டின ஆள் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்
 
புதிய இணைப்பு

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல் ஆணையாளா் தொிவித்தாா்.

இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. 

அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கிடல் எப்படி நடக்கும்?

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, முதல் 2 வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் 2வது முன்னுரிமை எண்ணப்பட்டு, இரண்டு முன்னணி வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும். 

2வது விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட்ட மற்றொரு வேட்பாளருக்குக் குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு, முதல் இரண்டில் ஒருவருக்குப் போட்டால் அவை சேர்க்கப்படும். 

இறுதி வெற்றியாளர் இருவரில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளர் ஆவார். பத்து சதவீத இடைவெளியைக் கருத்தில் கொண்டு, விருப்பத்தேர்வு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இறுதி அறிவிப்புக்கு முன் இதற்கான செயல்முறை முடிக்கப்பட வேண்டும். 

முதலாம் இணைப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் முடிவுகள்

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/election-total-voting-results-as-of-this-evening-1726982426

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில்  இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢

அரியத்தாருக்கு 32 வீத வாக்களித்து நல்லூர் முதல் மரியாதை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!!

இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-2561.jpg
2.30 வரையான தேர்தல் முடிவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

ர‌னிலின் தோல்விக்கு 

நாட்டை விட்டு விர‌ட்டி அடிக்க‌ ப‌ட்ட‌ ம‌கிந்தா கூட்ட‌த்துக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுத்த‌தால் தான் ப‌டு தோல்வி என்று த‌க‌வ‌ல் வ‌ருது

உண்மையா இருக்குமா த‌மிழ் சிறி அண்ணா..................

ந‌மால் ப‌டு தோல்வி அடைஞ்ச‌து பெரும் ம‌கிழ்ச்சி😁............................

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragaa said:

இது உங்களுக்கு சந்தோஷம் போல

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு அல்லவா? 

மகிழ்ச்சி அடைவதுதானே முற,..😁

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புலவர் said:

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு.

தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் திருப்திக்கு எழுதி மகிழுங்கள். 😁

விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதை நிறுவுவதற்கு இனி ஆளாளுக்கு புதிய சமன்பாடுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளை அவிப்பார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும்போது இன்னும் அதிக அதிர்ச்சிகள் கிடைக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.