Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

நீங்கள் இலங்கையின் எப்பகுதிக்கு சென்றீர்கள்? 

கொழும்பு யாழ்பாணம் ஓகஸ்ட் 18  நாட்கள் மட்டும்

4 hours ago, nunavilan said:

நான் பேசிய பலரில் பலரும் ( தமிழர், சிங்களவர் உட்பட) அனுர தான் வருவார் என தெரிவித்தார்கள்.

எனக்கு சிங்களம் தெரியாது

 

  • Replies 109
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெ

ஈழப்பிரியன்

தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை க

பாலபத்ர ஓணாண்டி

அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை..  இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Eppothum Thamizhan said:

நானொன்றும் உங்களைப்போல் நாட்டைவிட்டு ஓடி அசைலமடித்த ஆளில்லை என்று. நான் இப்போதும் இலங்கை பிரஜைதான்.

இந்த அசைலம் அடித்தல் அல்லது வெளிநாட்டு உழைக்க வருதல் சார்ந்த வீரப்பிரதாபங்களை பார்க்கும்போது அவர்கள் சார்ந்து பரிதாபம் மட்டுமே தோன்றும். 

அவர்கள் இங்கிருந்தாலும் மீண்டும் தாயகம் திரும்பி வாழ்ந்தாலும் சோறு அவர்கள் போட்டது போட்டுக் கொண்டிப்பது தான்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது.

நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ஓம்என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார்.

Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை.

IMG-7074.jpg

இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி

அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது.

ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா?

என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன.

தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது.

….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்….

….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது.

…..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார்.

…..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறதுஎன ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது.

ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை.

ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது.

https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Kavi arunasalam said:

ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது.

சங்கொலி கேட்காட்டி என்ன நாடாளுமன்றத் தேர்தல் வருகுதெல்லே சலங்கையொலியெடுத்து சன்னதமாடுவம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் கை நோவை சுகபடுத்துங்கள்.

5 hours ago, Kavi arunasalam said:

சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை.

தமிழ் மக்களை ஏமாறவைத்து சங்கொலியை பலமாக எழுப்பினாலும் சர்வதேசத்துக்கு கேட்காது என்பது அவர்களுக்கு தெரியும் பாரளுமன்ற தேர்தலுக்காக தங்களை பிரபல்யபடுத்துவதற்கான ஏமாற்று முயற்ச்சி  தமிழ் பொது வேட்பாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் மக்களை ஏமாறவைத்து சங்கொலியை பலமாக எழுப்பினாலும் சர்வதேசத்துக்கு கேட்காது என்பது அவர்களுக்கு தெரியும்.

எதோ இவ்வளவுநாளும் தமிழ் மக்கள் எழுப்பிய ஒலி சர்வதேசத்திற்கு கேட்ட மாதிரியும், அவர்கள் வந்து தமிழர்களின் துயர்களை துடைத்து எறிந்தமாதிரியுமல்லவா கதையளக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Eppothum Thamizhan said:

எதோ இவ்வளவுநாளும் தமிழ் மக்கள் எழுப்பிய ஒலி சர்வதேசத்திற்கு கேட்ட மாதிரியும், அவர்கள் வந்து தமிழர்களின் துயர்களை துடைத்து எறிந்தமாதிரியுமல்லவா கதையளக்கிறீர்கள். 

அப்ப ஏன் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப் போகிறோம் என்று வெளிக்கிட்டவையாம்.  சர்வதேசம் கேட்டதா தங்களுக்கு செய்தி சொல்ல சொல்லி?  சர்வதேசம் கேட்காமலேயே வடகிழக்கு இணைத்த சுயாட்சியை வட கிழக்கில்  10 வீதமான மக்கள. மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்ற சேதியை சொன்னதேன்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, island said:

அப்ப ஏன் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப் போகிறோம் என்று வெளிக்கிட்டவையாம்.  சர்வதேசம் கேட்டதா தங்களுக்கு செய்தி சொல்ல சொல்லி?  சர்வதேசம் கேட்காமலேயே வடகிழக்கு இணைத்த சுயாட்சியை வட கிழக்கில்  10 வீதமான மக்கள. மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்ற சேதியை சொன்னதேன்? 

இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2009 இன் பின் எம்மக்களும், நமது அரசியவாதிகளும் சர்வதேசத்திற்கு சொல்லிநிற்பது ஒன்றே ஒன்றுதான். நாம் ஒற்றுமையற்ற, இந்த உலகில் சுய உரிமைகளுடன் வாழ தகுதியில்லாத இனம் என்பதே அது.

Edited by Eppothum Thamizhan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Eppothum Thamizhan said:

எதோ இவ்வளவுநாளும் தமிழ் மக்கள் எழுப்பிய ஒலி சர்வதேசத்திற்கு கேட்ட மாதிரியும், அவர்கள் வந்து தமிழர்களின் துயர்களை துடைத்து எறிந்தமாதிரியுமல்லவா கதையளக்கிறீர்கள். 

அதை தானே     சர்வதேசத்திற்கு கேட்கும் என்று கதையளந்து தமிழ் பொது வேட்பாளர்கள் கோஷ்டி ஏமாற்றுகிறார்கள் என்று நானும் சொன்னேன்😄




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.