Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !

ShanaSeptember 24, 2024
 
24-66f1ac7ecd4fd.jfif

 

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் அரசியலை விட தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்தது.

ராஜபக்சே இன்று ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்குகிறார்.

இலங்கையில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் இலங்கை திரும்பினார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மார்க்சிச சார்பு கொண்ட அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

https://www.battinews.com/2024/09/blog-post_268.html

Posted
19 minutes ago, கிருபன் said:

அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் அரசியலை விட தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்தது.

அனுர சொன்னதை செய்ய போகிறார் என்பது திருடனுக்கு விளங்கி விட்டது.  களி தின்னும் காலம் கனிந்து வருகிறது கோத்தாவுக்கு.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேபாள தலைநகரில் கோட்டாபாய ராஜபக்ச – தனிப்பட்ட விஜயம் என தகவல்

24 SEP, 2024 | 06:01 AM
image
 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளம் சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து கோட்டாபய ராஜபக்ச நேபாள தலைநகரை திங்கட்கிழமை வந்தடைந்தார் என அந்த நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ச நேபாளத்தில் பௌத்தமதத்துடன் தொடர்புள்ள பகுதிகளிற்கு செல்லதிட்டமிட்டுள்ளார் என  அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பல முதலீடுகளை செய்துள்ள நேபாளத்தின் சௌதாரி குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு நெருங்கிய தொடர்புள்ளது,அவர்கள் அவரை நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ள.

இது தனிப்பட்ட விஜயம் அரசியல் நோக்கம் கொண்டதில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/194651

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மீளப் பெறப்படும் என சொன்னவுடன் ஆள் எஸ்கேப்,,,,

Edited by putthan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

president-gotabaya.jpg?resize=650,375

நேபாளத்தில் தஞ்சமடைந்தாா் கோட்டா!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேபாளம் சென்றடைந்தார்.

2019 தேர்தலில் 3 வீத வாக்குகளை மாத்திரம் பெற்ற திஸாநாயக்க தற்போது பெரும்பான்மையை பெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், 2022 அரகலய போராட்டத்தின் போது, வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பூட்டான் தலைநகர் திரும்பும் வழியாக கத்மாண்டு நகரை வந்தடைந்ததாக நோபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காத்மாண்டுவில், ராஜபக்சவுக்கு கோடீஸ்வர தொழிலதிபர் பினோத் சவுத்ரி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை காலை (23) கத்மாண்டுவில் தரையிறங்கிய பின்னர், கோட்டபாய, ஜாம்சிகேலில் உள்ள மிவாண்டா ஹோட்டலில் தங்கியுள்ளார்.

75 வயதான கோட்டபாய மற்றும் அவரது மனைவி ட்ரூக் ஏர் விமானம் KB 400 மூலமாக கத்மாண்டுவை அடைந்தனர்.

காத்மாண்டுவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், புதன்கிழமை பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1400806

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்தி போடுபவர்களுக்கு திரும்பவும் கோத்தா ஜனாதிபதியாய் வருவார் எனும் நம்பிக்கை உள்ளது போல் இருக்கு .

"நேபாளத்துக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சா" இப்படியல்லவா செய்தி வரணும் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

செய்தி போடுபவர்களுக்கு திரும்பவும் கோத்தா ஜனாதிபதியாய் வருவார் எனும் நம்பிக்கை உள்ளது போல் இருக்கு .

அறளை பேந்த சனம் இருக்கும்  வரைக்கும் எல்லாம் சாத்தியம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கோத்தபையனுக்கு நாளாந்தம் 120 கொமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவதாகவும் 

எண்ணிக்கையில்லா வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்களே?

இதுபற்றி யாருக்காவது விபரங்கள் தெரியுமா?

அனுராவின் காதுகளில் இவைகளைப் போட்டுவைத்தால் நல்லது.

எப்படியும் தகவல்களை எடுத்திருப்பார் என எண்ணுகிறேன்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.