Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல கைது நடவடிக்கைகளுக்கு சீன தூதரகம் பெரும் தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள்  சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவே பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் அநுரவிற்கு  ஆபத்தானவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட வாய்ப்புள்ளதாகவும், தற்போது  தான் உண்மை முகத்தினை பொது மேடைகளில் காட்டும் பட்சத்தில் பின்னால் வரும் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அமைதியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னெடுப்புக்களும் இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகின்றது.

https://tamilwin.com/article/anurakumara-goverment-arrest-warnning-1727281950

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பெருமாள் said:

வெளிநாடுகளின் விருப்பத்திற்கு அமைவாக அரசை நடத்தா விட்டால் 
ஆறு மாதத்தில் அனுராவை பதவி இறக்கி விடுவார்கள். 
ஒருவன் நல்லதை நினைத்து... ஆட்சி செய்ய வந்தாலும், அயல் நாடுகளால் பிரச்சினை. 😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளின் விருப்பத்திற்கு அமைவாக அரசை நடத்தா விட்டால் 
ஆறு மாதத்தில் அனுராவை பதவி இறக்கி விடுவார்கள். 
ஒருவன் நல்லதை நினைத்து... ஆட்சி செய்ய வந்தாலும், அயல் நாடுகளால் பிரச்சினை. 😢

இதுதான் நடக்கபோகுது ஏன் எனில் இவரை பார்த்து தேசிய கீதம் நிகழ்வுகளில் பிக்குகள் கூட எழுந்து நிற்கின்றனர் ஒன்றில் ஆளை போட்டு தள்ளி விடுவார்கள் இல்லை கோத்தா போல் ஓடவிடுவார்கள் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள்  சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது. 

இறையாண்மையென்று கூறிச் சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்தொழித்ததோடு முழு இலங்கை மக்களதும் இறையாண்மையைப் பறிகொடுத்துப் பரிதவிக்கிறது. (சிறிலங்காத் தேசியவாதிகள் படிக்காது கடந்து செல்லப் பணிவுடன் வேண்டுகிறேன்) இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதோ. இவரது வெற்றிச் செய்திதொடர்பான திரியில் ஏலவே பகிர்ந்தவைதான். இவர் நினைத்தாலும் நிலைமை அவளவு இலகுவானதல்ல என்பதே மெய்நிலையாகும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரட்சிகர மாற்றங்கள் என்றாலும் ஒரே இரவில் மாற்றுவது பாரிய எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  எனவே, கொஞ்சம் நெகிழ்வாக இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இராணுவ ஆட்சிகூட ஏற்படலாம்!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, கிருபன் said:

புரட்சிகர மாற்றங்கள் என்றாலும் ஒரே இரவில் மாற்றுவது பாரிய எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  எனவே, கொஞ்சம் நெகிழ்வாக இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இராணுவ ஆட்சிகூட ஏற்படலாம்!

ராஜபக்சாகூட்டம் b பிளான் c பிளான் இல்லாமலா இருப்பார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பெருமாள் said:

ராஜபக்சாகூட்டம் b பிளான் c பிளான் இல்லாமலா இருப்பார்கள் ?

சுத்து மாத்தே… B  பிளான்   C பிளான் போட்டிருக்கும்.
அவங்கள் போடாமல் இருப்பார்களா… 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளின் விருப்பத்திற்கு அமைவாக அரசை நடத்தா விட்டால் 
ஆறு மாதத்தில் அனுராவை பதவி இறக்கி விடுவார்கள். 
ஒருவன் நல்லதை நினைத்து... ஆட்சி செய்ய வந்தாலும், அயல் நாடுகளால் பிரச்சினை. 😢

சிறிலங்கா என்ற நாட்டை உருவாக்கி அதை அந்த நாட்டு மக்களை ஆள சொல்லி பிரித்தானியா சென்று பின்   ....அதிமேதாவிகள் (சிங்களவர்கள்) கை கால் புரியாமல் இனவாத ஆட்சி செய்ததின் பலன்... இன்று ஒர் நல்ல ஆட்சி நடத்த மக்கள் நினைத்தாலும் வெளிநாடுகள் அதை நடை முறை படுத்த விட மாட்டார்கள்...சோசலிச் சித்தாந்தம் இலங்கையில் வருவதை தூர நோக்கில் யாஅரும் விட்டு வைக்க மாட்டார்கள் ...   ...
72 ,87 களில் பயங்கர்வாதிகள் என்ற போர்வையில் அழித்தார்கள் ...2024 இல் எப்படி அழிக்கப்போகிறார்கல் என பார்ப்போம்...
அனுராவும் ...சிங்கள டயஸ்போராவுடன் வந்து குடியேற வேணுமோ தெரியாது🤣

2 hours ago, nochchi said:

இறையாண்மையென்று கூறிச் சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்தொழித்ததோடு முழு இலங்கை மக்களதும் இறையாண்மையைப் பறிகொடுத்துப் பரிதவிக்கிறது. (சிறிலங்காத் தேசியவாதிகள் படிக்காது கடந்து செல்லப் பணிவுடன் வேண்டுகிறேன்) இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதோ. இவரது வெற்றிச் செய்திதொடர்பான திரியில் ஏலவே பகிர்ந்தவைதான். இவர் நினைத்தாலும் நிலைமை அவளவு இலகுவானதல்ல என்பதே மெய்நிலையாகும்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இவர் செய்ய நினைத்ததை கோத்தபாய அனறு செய்தார்(ஜனாதிபதியாக) ..இரண்டு வருடத்தில் தூக்கி வீசப்பட்டர் ..அவருக்கு எதிராக போராட ஜெ.வி,ப் யினர் இருந்தார்கள்...ஆனால் ஜெ.வி.பி யினருக்கு எதிராக போராட யார் இருக்கினம்...

Posted

கைது செய்வதில் தடுமாறும் தடுமாறும் அனுர

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்தவித ஆதாரமும் இல்லாமல் tamilwin சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டுள்ளது. 

அதாவது, கைது செய்யப்பட வேண்டியவர்களைக் கைதுசெய்யாமல் தடுத்துள்ளது என்பது வேண்டுமென்றே சீனாவின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காக கூறப்பட்டுள்ளது  என்று யூகிக்கிறேன். 

கைது செய்ய விரும்பாவிட்டால்/முடியாவிட்டால்  விமான நிலையம் ஊடாக வெளிநாடுகளுக்குத் தப்பிச்  செல்ல அனுமதித்திருப்பார்கள் அல்லவா? 

குறிப்பு; புதிய அரசு தன்னைப் பலப்படுத்துவரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளாது. அது நீதி மன்றம் ஊடாகவே நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகம். 

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.