Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன்

பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி.

இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.அது கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளில் அரைவாசியை விட அதிகம். இந்த அடிப்படையில் அவர் பெற்றது ஒரு தொடக்க வெற்றி. அது ஒரு பிரகாசமான வெற்றி இல்லைத்தான். ஆனாலும் வெற்றி. பொது வேட்பாளரை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களை அவர் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு கணக்கு என்று கருதுகின்றாரா? இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கும் மதிப்பு அதுதானா?

மூன்றாவது வெற்றி, பொது வேட்பாளர் தாயகத்தில் உள்ள மக்களை கட்சி கடந்து ஒன்று திரட்டியது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒன்று திரட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்த ஒரு தேர்தல் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள். இது மூன்றாவது வெற்றி.

நாலாவது வெற்றி, கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளர் வடக்கில் பெற்ற வாக்குகள்.வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக ஏற்கனவே பிரித்து விட்டார்கள் நிர்வாக எல்லைகளின் மூலமும் குடியேற்றங்களின் மூலமும் கிழக்கில் கிழக்கு மையக் கட்சிகளை வளர்த்தெடுப்பதன் மூலமும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முற்படும் சக்திகள் வெற்றி பெற்று வரும் ஒரு காலகட்டத்தில்,கிழக்க்கில் இருந்து ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது.அதுவும் வடக்கு கிழக்கை சட்ட ரீதியாகப் பிரித்த கட்சியின் தலைவர் அரசுத் தலைவராகத் தெரித்தெடுக்கப்படட ஒரு தேர்தலில். இது ஒரு மகத்தான வெற்றி ஐந்தாவது வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. சங்குச் சின்னத்தின் கீழ் ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அமைப்பு ஒன்றும் கட்சிகளும் இணைந்து அவ்வாறு தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தமிழ் அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய போக்கு. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய பரிசோதனையும் கூட. அந்த ஜனநாயகப் பரிசோதனையில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சித்தி பெற்றிருக்கிறார்கள்.

பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜூலை 29 ஆம் தேதி. ஜனாதிபதி தேர்தல் நடந்தது செப்டம்பர் 21 ஆம் தேதி. இடைப்பட்ட சுமார் 50 நாட்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிகவும் புதிய ஒரு சின்னத்தை சங்குச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியது என்பதில் ஒரு செய்தி இருக்கிறது.தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு வாக்களிக்கும் பொழுது எந்த ஒரு புதிய சின்னத்தையும் ஸ்தாபிக்கலாம் என்பதுதான் அது. இது ஏற்கனவே தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்த பொழுது நிரூபிக்கப்பட்டது. அதன் பின் ஈரோஸ் இயக்கம் சுயேட்சையாகப் போட்டியிட்ட பொழுது கிடைத்த வெற்றியும் அதனை நிரூபித்தது. இப்பொழுது சங்குக்கு கிடைத்த வெற்றியும் அத்தகையதுதான். முற்றிலும் புதிய ஒரு சின்னத்தை 50 நாட்களில் ஸ்தாபிக்க முடிந்தமை என்பது ஒற்றுமையின் விளைவு. ஒற்றுமையின் பலமும் தான்.

ஆனால் இந்த ஒற்றுமை இப்பொழுதும் பலவீனமானதாகவே காணப்படுகிறது பொதுக் கட்டமைப்பு ஒரு பலமான இறுகிப் பிணைந்த கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஒரு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து செயல்பட்டன. இதே இணைந்த செயல்பாடு தொடர்ந்து வரும் தேர்தலிலும் இருக்குமா என்ற கேள்வி உண்டு. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த கூட்டத்தில் அது அது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவிப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது. அந்த மக்கள் அமைப்பு அதன் பொதுச்சபையைக் கூட்டி அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு மக்கள் அமைப்பு தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்த அமைப்பிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிகின்றது.தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பொதுச்சபை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் தேர்தல் ஒரு பகுதியே தவிர தேர்தல்கள் மூலம் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவது என்று கூறிப் பொதுகட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பு எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் ஆகப் பிந்திய முயற்சி.

கட்சிகள் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன.பொதுக் கட்டமைப்புக்குள் அங்கமாக உள்ள ஏழு கட்சிகளும் அது தொடர்பில் கூடி முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கூடி முடிவெடுக்க விருப்பதாகத் தெரிகிறது.

ஒரு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது வேறு, ஏனைய தேர்தல்களை கையாள்வது வேறு என்ற விளக்கம் பொதுச் சபையிடம் காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாக அல்லாது தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு பயில் களமாகவே பொதுச்சபை பார்த்தது. அந்த அடிப்படையில்தான் பொதுச்சபை பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முழு அளவுக்கு ஈடுபட்டது. ஆனால் ஏனைய தேதர்கள் அவ்வாறானவை அல்ல. எனவே அந்த தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பொதுச் சபை கால அவகாசத்தை கேட்டது.

பொதுச்சபை எனப்படுவது ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உதயமாகிய ஒரு கட்டமைப்பு. அதற்கு ஐந்து மாதங்கள் தான் வயது.5 மாத வயதான ஒரு கட்டமைப்பு அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு பதில் வினை ஆற்ற வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு விடை இன்று இரவுக்குள் தெரிய வந்து விடும்.

https://athavannews.com/2024/1401614

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@வாலி அண்ணை இத்திரிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாரி நிலாந்தன்,  

ஓடாத குதிரைக்குப் பந்தயம் கட்டித் தோற்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது . குதிரை ஓடாது என்பது மட்டுமல்ல, அது ஒரு நொண்டிக் குதிரை,  முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட,  குருட்டுக் குதிரை என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தது தங்களுக்குப் புரியாமல் போனதுதான் கவலைக்கிடமானது. 

சாரி,....சாரி,...நிலாந்தன். அது ஓடாத குதிரையல்ல,  கோவேறு கழுதை.

அது புரியாமல் அதில் அரியநேந்திரனை ஏற்றி ஊரூராக  இழுத்துவந்து பலிகொடுத்துவிட்டு இப்பொழுது குதிரை, ...ச்சாரி கழுதை பந்தையத்தில் ஜெயிக்கவில்லை, பார்வையாளர்கள் அதில் பந்தையம் கட்டவில்லை என்று அழுது என்ன பிரயோஜனம்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எச்சரிக்கை!!!
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள், வயித்தெரிச்சல் பிடித்தவர்கள்… இந்தப் பதிவை வாசிப்பது, உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக அமையலாம். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது

அப்போ கிழக்கில் கிடைத்த வாக்குகள் எதை உணர்த்துகிறது? 

நாங்கள் மண்ணுக்குமேலே விழுந்தால்தானே மீசையில் மண் ஒட்டும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

எச்சரிக்கை!!!
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள், வயித்தெரிச்சல் பிடித்தவர்கள்… இந்தப் பதிவை வாசிப்பது, உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக அமையலாம். 😂 🤣

 

வெற்றி வெற்றி வெற்றி என சங்கே முழங்கு! ஊஊஊஊஊ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

@வாலி அண்ணை இத்திரிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

நாட்டுக்கு நாரதர்கள் தேவை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

நாட்டுக்கு நாரதர்கள் தேவை தான்.

நீங்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்து செய்யாத நாரதர் வேலையையா நாங்கள் செய்கின்றோம். நான் நினைக்கின்றேன் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு அந்த நினைப்பில் எழுதிவிட்டீர்கள் போலுள்ளது.  ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள்கூட பொதுவேட்பாளருக்கான அலை அடிக்கிறதாக புலுடா விட்டீர்கள். நாங்கள் உங்களிடமும் புலம்பெயர் நாரதர்களிடமும் நிலாந்தன் மாஸ்டர் போன்ற அரசியல் சாணக்கியர்களிடம் சொல்லுவது ஒன்றுதான் “தாயகத்து மக்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடுங்கள் தங்கள் அரசியலை தாங்களே தீர்மானித்துக் கொள்ளுவார்கள்”. நீங்கள் உடுக்கடிக்கத் தேவையில்லை!

Edited by வாலி
Posted

எம்மிடம் இருக்கும் குணங்களில் ஒன்று ஒரு போதும் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமை, இன்னொன்று, அத் தோல்வியை வெற்றி என நினைத்து அதன் வழியே தொடர்ந்து பயணிப்பது.

நிலாந்தன் போன்ற அதி புத்திசாலிகளும் இந்த குணாதிசயங்களை கொண்டிருப்பதில் வியப்பில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள்.

large.IMG_7125.jpeg.e0ee7a4bc44ccf7a0ff0

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

எச்சரிக்கை!!!
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள், வயித்தெரிச்சல் பிடித்தவர்கள்… இந்தப் பதிவை வாசிப்பது, உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக அமையலாம். 😂 🤣

யாழ்களத்தில் இரத்த கொதிப்புள்ளவர்கள், இதய பலவீனமானவர்கள் உட் புக வேண்டாம் என ஒரு எச்சரிக்கை பகுதி ஆரம்பிக்க வேண்டுமென கள நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். 😎

ஏனெண்டால் உலக அரசியல் நிலவரங்கள் அந்தமாதிரி குண்டக்க மட்டக்கவாய் போகுது 😂

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.