Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்

 

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

  இரு வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது இலங்கை வரலாறு கண்டிராத மக்கள் கிளர்ச்சியினால் இறுதியில் பயனடைந்தவர் அவரே என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அந்த கிளர்ச்சியின் உண்மையான பயனாளி யார் என்பதை உலகிற்கு காட்டியது.

இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தொழிற் சங்கங்களினதும் தலைமையில்  முன்னெடுக்கப்பட்ட 1953  ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மூன்று வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று  பிரதமராக பதவிக்கு வந்ததைப் போன்று, ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இரு வருடங்கள் கடந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில்  குறிப்பிடத்தக்க  வித்தியாசங்கள் இருக்கின்றன. பண்டாரநாயக்க ஹர்த்தாலை ஆதரிக்காமலேயே அதன் விளைவாக மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். ஹர்த்தாலை நடத்திய இடதுசாரி தலைவர்களினால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அந்த போராட்டத்தின் வெற்றியினால் தடுமாறிப்போன அவர்கள் அடுத்த நகர்வை செய்வதற்கு பயனுறுதியுடைய தந்திரோபாயத்தை வகுக்க முடியாதவர்களாக அப்போது இருந்தார்கள்.

ஆனால், திசாநாயக்க ‘அறகலய’வுக்கு  தலைமை தாங்கவில்லை என்றபோதிலும், அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி  முழுமையான ஆதரவை வழங்கியது. அந்த போராட்டத்தின்  விளைவாக  நாட்டின் அரசியல் நிலவரத்தில்  ஏற்பட்ட மாற்றத்தின் பயனாக  அவர் இன்று ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  அன்றைய இடதுசாரி தலைவர்களினால் அவர்களது சொந்தத்தில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியவில்லை. 

 ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக  ஒரு இடதுசாரி அரசியல்வாதியை நாட்டின் தலைவராக உச்சநிலைக்கு  கொண்டு வந்திருக்கிறது. 

அவரது வெற்றி ஏழு தசாப்தங்களுக்கும்  அதிகமான காலமாக ஆட்சியில்  ஏகபோகத்தை தங்கள் பிறப்புரிமை போன்று  அனுபவித்த பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு கைமாற்றியிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “திசாநாயக்க”வின் வெற்றி குறித்து கருத்துக் கூறியபோது குடும்ப ஆதிக்க அரசியலை மக்கள் நிராகரித்திருப்பது பற்றி எதுவும் கூறாமல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று நாட்டின் உயர்பதவிக்கு வந்ததற்கு  தனது தந்தையார் மண்டாரநாயக்க 1956 ஆண்டில் செய்த ‘புரட்சியே’ காரணம் என்று உரிமை கோரியிருக்கிறார்.

இலங்கையின் முக்கியமான அரசியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால் அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்கள் கொழும்பை மையமாகக்கொண்டு வாழும்  மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைக் கொண்ட  சிறுபான்மையினரான உயர்குடியினரிடம் இருந்து சாதாரண சமூக சக்திகளுக்கு  மாறியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் வர்க்க ஏகபோகம் அதே ஜனநாயகத்தினால் தகர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையில் முதற்தடவையாக மார்க்சியவாதி ஒருவர் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.  பாரம்பரிய அர்த்தத்திலான மார்க்சியவாதியாக திசாநாயக்கவை இன்று நோக்கமுடியாது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவராக வந்த பிறகு அவர்  முன்னைய போக்குகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட முறையிலேயே கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது என்றால் திசாநாயக்க கட்சியின் போக்குகளில் செய்த மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணம். 

தெற்காசியாவில் நேபாளத்திற்கு பிறகு இடதுசாரி தலைவர் ஒருவரை அரசாங்க தலைவராக தெரிவு செய்த நாடாக இலங்கை விளங்குகிறது. உலகின் ஒரேயொரு இந்து இராச்சியமாக விளங்கிய நேபாளத்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாவோவாத கம்யூனிஸ்ட் ஆயுதக்கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய பிரசண்டா முதற் தடவையாக 2008 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார். இதுவரையான 18 வருடங்களில் அவர் மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வந்தார். இப்போதும் அவரே பிரதமராக இருக்கிறார்.

மாவோவாதியான  பிரசண்டாவும் அவரது கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்த காலப்பகுதியில் அவர்களின் அணுகுமுறைகளில்  ஏற்பட்ட மாற்றம்  அவர்களை  நேபாளத்தின் ஏனைய தாராளவாத முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பெருமளவுக்கு வேறுபடுத்திப் பார்க்கமுடியாத நிலையை உருவாக்கி விட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இலங்கையில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. ஏற்கெனவே ஒரு இடதுசாரிப் போக்கில் இருந்து பெருமளவுக்கு விடுபடத் தொடங்கி விட்டது. தீவிர வலதுசாரியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துவந்த பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை தொடருவதாக உறுதியளிக்கின்ற அளவுக்கு தேசிய மக்கள் சக்தி மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது. 

ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வேளைகளில் எல்லாம்  திசாநாயக்க அடிப்படைக் கொள்கைகளை கைவிடவில்லை என்ற போதிலும்  தற்போதைய சர்வதேச நிலைவரங்களுக்கு   ஏற்ற முறையில் தங்களது  அணுகுமுறைகளில்  பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று  கூறிவந்திருக்கிறார். உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லாத காரணத்தால் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் விளக்கமளித்தார்.

பொருளாதார நெருக்கடி உட்பட தாங்கள் எதிர்நோக்கும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு பாரம்பரிய அரசியல் சக்திகளின் தவறான ஆட்சிமுறையே காரணம் என்பதை விளங்கிக் கொண்ட மக்கள்  மத்தியில் பொது வாழ்வை தூய்மைப்படுத்துவது குறித்து திசாநாயக்க அளித்த உறுதிமொழி பெரும் வரவேற்பை பெற்றது. ஊழலுக்கு எதிரான அவரின் செய்தியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக அளித்த  வாக்குறுதியும்  முறைமை மாற்றம் ஒன்றை வேண்டிநின்ற இளம் வாக்காளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட  பழைய பிரதான அரசியல் கட்சிகளையே மாறிமாறி  ஆட்சிக்கு கொண்டுவந்து சலித்துப்போன மக்கள் இரு வருடங்களுக்கு முன்னர்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பநிலைக்கு பிறகு  பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரிடம்  ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உண்மையில் இது மக்கள் செய்து பார்க்கத்துணிந்த ஒரு பரிசோதனையே என்பதில் சந்தேகமில்லை. 

 பாரம்பரிய அதிகார வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்த மக்கள்  ‘மாற்றத்துக்கான’ வேட்பாளராக திசாநாயக்காவை நோக்கினார்கள். கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தன்னால் சாதிக்க முடிந்ததாக  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பிரசாரப்படுத்திய ‘உறுதிப்பாட்டையும் வழமை நிலையையும்’ அனுபவிக்கக்கூடியவர்களாக இருந்த பிரிவினரே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு விக்கிரமசிங்க தனது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் முழுமையாக தங்கியிருந்தது அவரின் தந்திரோபாயங்களில் இருந்த மிகப்பெரிய குறைபாடாகும். நீண்டகால அரசியல் அனுபவத்தையும் வளமான அறிவையும் கொண்ட அவருக்கு நாடு அண்மைக்காலமாக எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் பொருளாதாரக் காரணியை மாத்திரம் மனதிற்கொண்டு வாக்களிக்கப் போவதில்லை  என்பது தெரிந்திருக்கவில்லை. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆர்வத்தில் மக்கள் இதுகாலவரையான தவறான ஆட்சிமுறை, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் முன்னென்றும் இல்லாத ஊழலை  மறந்து விடுவார்கள் என்று அவர் நினைத்தாரோ? 

தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லாத நிலையில் ராஜபக்சாக்களின் கட்சியில் இருந்தும் வேறு கட்சிகளில் இருந்தும் வந்த அரசியல்வாதிகளை நம்பி கூட்டணி ஒன்றை அமைத்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று விக்கிரமசிங்க நினைத்தது பெரும் தவறு. முன்னரைப் போன்று சிறுபான்மைச் சமூகங்களும் அவரை இந்த தடவை ஆதரிக்க முன்வரவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பெரும்பாலான மக்கள்  பாரம்பரிய அரசியல் அதிகார  வர்க்கத்தின் ஒரு அங்கமாகவே நோக்கினார்கள். அவருக்கு இது ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தோல்வி. திசாநாயக்கவிடம் தோல்வி கண்டாலும் கூட விக்கிரமசிங்கவை தோற்கடித்துவிட்டதில் பிரேமதாச ஒருவிதத்தில் திருப்தியடைந்திருக்கக்கூடும்.

ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மற்றைய வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய நிர்ப்பந்தம் இந்த தடவையே ஏற்பட்டது. தனக்கு கிடைத்த ஆணையின் தன்மையை  அவர் விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தேவை இருக்கிறது.

கொழும்பில் அதிகார ஏகபோகத்தைக் கொண்டிருந்த மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் கிரகணம் செய்து திசாநாயக்கவும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலில் கண்டிருக்கும் வெற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற வைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடக்கிய மாற்றத்தை நோக்கிய  அரசியல் நிகழ்வுகளின் சுழற்சியை நிறைவு செய்கிறது என்று எவரும் மெத்தனமாக நினைத்து விடக்கூடாது. ஜனாதிபதி திசாநாயக்க சமாளிக்க முடியாத எண்ணற்ற சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார்.

பாராளுமன்றத்தை கலைத்து இரு மாதங்களுக்கும் குறைவான இடைவெளிக்குள்  பொதுத்தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் கண்ட தோல்வியின் தாக்கத்தில் இருந்து மற்றைய கட்சிகள்  விடுபடுவற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

பொருளாதாரத்தை உறுதிப்பாட்டுக்கு கொண்டுவரவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று திசாநாயக்க தன்னை ஜனாதிபதியாக தெரிவு  செய்த மக்களிடம் கோருவார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமையுமா அல்லது அவருக்கு முழுமையான வாய்ப்பைக் கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களுடன் தெரிவு   செய்வார்களா என்பது முக்கியமான கேள்வி.

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் புவியியல் ஒழுங்கை கருத்தில் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.

தென்னிலங்கையில்  இருந்து குறிப்பாக சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் அதிகப்பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களில் இருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்று திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மயைகத்திலும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்   பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்குமே பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். 

சிறுபான்மைச் சமூகங்கள் திசாநாயக்கவுக்கு முற்றாக வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகள் தான் அவரை வெற்றிபெற வைத்தன. அதற்காக கோட்டாபய ராஜபக்ச போன்று சிங்கள மக்களே தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்று திசாநாயக்க ஒருபோதும் சொல்லப்போவதில்லை.

 கோட்டாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்துக்கும் திசாநாயக்க தெரிவு  செய்யப்பட்ட காரணத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

அதேவேளை, தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவராக திசாநாயக்கவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளில் கணிசமான பிரிவினர் அடையாளம் கண்டு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால்,  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான அந்த தேசியவாத சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் துணிச்சலாக திசாநாயக்க நடந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். தங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து புதிய அணுகுமுறையை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.

சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று தேர்தல் முடிவுகளை வியாக்கியானம் செய்யமுடியாது. சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றத்திற்குள் தங்களது  அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. 

எது எவ்வாறிருந்தாலும், இதுகாலவரை இலங்கை அரசியல் அதிகாரத்தை தங்களது ஏகபோகத்தில் வைத்திருந்த ஒரு வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒரு ‘ தோழர்’  ஜனநாயக வழிமுறையின் மூலமாக நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதில்  உள்ள வரலாற்று முக்கியத்துவத்துவம் உரியமுறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கணிசமான காலப்பகுதிக்கு ஆட்சிசெய்த பின்னர் மாத்திரமே அவரைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யமுடியும்.
 

 

https://arangamnews.com/?p=11287

பகிர்வுக்கு நன்றி. நல்ல கட்டுரை.

தனிப்பட்ட ரீதியில், ஒரு விஷப் பாம்பையும், இடது சாரி ஒருவரையும் கண்டால், முதலில் விஷப் பாம்பை அடிக்காதே என்ற கொள்கையில் இருப்பவன் நான் என்பதால் ஜேவிபியின் வெற்றியை நான் ரசிக்கவில்லை. 

பார்ப்பம், இந்த இடது சாரியால், மாற்றஙளை கொண்டு வர முடிகிறதா என.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

 

 கோட்டாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்துக்கும் திசாநாயக்க தெரிவு  செய்யப்பட்ட காரணத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

 

 ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கணிசமான காலப்பகுதிக்கு ஆட்சிசெய்த பின்னர் மாத்திரமே அவரைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யமுடியும்.
 

 

https://arangamnews.com/?p=11287

👍 இந்த இரு கருத்துக்களும் முக்கியமானவை.

சோசலிச மக்கள் கட்சியின் சிறிதுங்க ஜெயசூரிய (இப்போதும் இருக்கிறாரா தெரியவில்லை)இலங்கை ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே "தமிழர் நலன் விரும்பும் ஒரு சிங்கள ஜனாதிபதி" என்று நாம் ஆர்ப்பரிக்க முடியும். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில், எங்கள் வாழ்வு காலத்தில் அது நடக்காத காரியம்😂.

ஆகவே, எப்போதும் போல "அடுத்த சிறந்த தெரிவு - the next best thing" என்ற ஒரு படி கீழே இறங்கி நின்று தான் மதிப்பிடலாம் ஒரு சிங்கள ஜனாதிபதியை.

ராஜ்பக்ச போல வெளிப்படையாகவே தமிழின எதிர்ப்பாளரா? சந்திரிக்கா போல "கோபம்" வந்தால் தமிழின எதிர்ப்பாளரா? ரணில் போல வெளிப்படையாக தமிழின எதிர்ப்பையும் காட்டாமல், தமிழருக்கு எதுவும் செய்யத் துணிவில்லாத பதவி லோலனா?

காலம் தான் பதில் சொல்லும்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

சோசலிச மக்கள் கட்சியின் சிறிதுங்க ஜெயசூரிய (இப்போதும் இருக்கிறாரா தெரியவில்லை)இலங்கை ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே "தமிழர் நலன் விரும்பும் ஒரு சிங்கள ஜனாதிபதி" என்று நாம் ஆர்ப்பரிக்க முடியும். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில், எங்கள் வாழ்வு காலத்தில் அது நடக்காத காரியம்😂.

போன 2024 ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட்டவர் அண்ணை.

elec24.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இன்று எடுத்துள்ள முடிவே இதுவரை அவர் ஜனாதிபதியாக வந்து எடுத்துள்ளவைகளில் முக்கியமான முடிவு. இலங்கை விமான நிறுவனம் விற்கப்படமாட்டாது, தனியார்மயப்படுத்தலும் இல்லை என்று முடிவெடுத்திருக்கின்றார்.  இவை போன்ற முடிவுகள் நாட்டை பொருளதாரா ரீதியாக மீண்டும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளக்கூடும். ஏற்கனவே 550 மில்லியன் கடன்களில் நின்று கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் மிகச் சிலரை மாற்றுவதால் மட்டும் இது ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறப் போவதில்லை.

மேலும் இன்னும் சில அரச நிறுவனங்களும் தனியார்மயப்படுத்த வேண்டிய  இந்தப் பட்டியலில் இருக்கின்றது. சுதேசம், சுய பொருளாதாரம், சுயநிறைவு......... போன்ற கொள்கைகள் நடைமுறையில் சாத்தியமானவை இல்லை. குதிரைகள் ஓடிக் கொண்டிருப்பதால், புழுதி பாராளுமன்ற தேர்தல் வரை பறக்கும். அதன் பின்னர், அவை அடங்க, நிஜம் துலங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

தோழர் இன்று எடுத்துள்ள முடிவே இதுவரை அவர் ஜனாதிபதியாக வந்து எடுத்துள்ளவைகளில் முக்கியமான முடிவு. இலங்கை விமான நிறுவனம் விற்கப்படமாட்டாது, தனியார்மயப்படுத்தலும் இல்லை என்று முடிவெடுத்திருக்கின்றார்.  இவை போன்ற முடிவுகள் நாட்டை பொருளதாரா ரீதியாக மீண்டும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளக்கூடும். ஏற்கனவே 550 மில்லியன் கடன்களில் நின்று கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் மிகச் சிலரை மாற்றுவதால் மட்டும் இது ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறப் போவதில்லை.

மேலும் இன்னும் சில அரச நிறுவனங்களும் தனியார்மயப்படுத்த வேண்டிய  இந்தப் பட்டியலில் இருக்கின்றது. சுதேசம், சுய பொருளாதாரம், சுயநிறைவு......... போன்ற கொள்கைகள் நடைமுறையில் சாத்தியமானவை இல்லை. குதிரைகள் ஓடிக் கொண்டிருப்பதால், புழுதி பாராளுமன்ற தேர்தல் வரை பறக்கும். அதன் பின்னர், அவை அடங்க, நிஜம் துலங்கும். 

5% இருந்த கட்சி தீடீரென ஆட்சியை பிடித்ததுக்கு காரணமே பொருளாதார சீரழிவு. பொதுவாகவே இடதுசாரிகள் பொருளாதாரத்தை கீழ் நோக்கி தள்ளுவதில் கெட்டிக்காரர்கள், இவர்கள் தனியார் மயமாக்கும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை. எனினும் அனுராவுக்கு அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் நோக்கம் புரிந்திருக்கும், முரட்டுத்தனமாக இடதுசாரி கொள்கைகளை அமுல்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறன், பார்ப்போம். தற்பொழுது, அரசாங்க செலவீனங்களை குறைப்பதிலும், ஊழல் பணத்தை வெளியே கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்கள் போலுள்ளது. கிடைத்த சந்தர்ப்பத்தில் பெரிய மாற்றங்களை செய்ய முடிந்தால், அரசியலில் இவர்களுக்கு பொன்னான எதிர்காலம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நீர்வேலியான் said:

தற்பொழுது, அரசாங்க செலவீனங்களை குறைப்பதிலும், ஊழல் பணத்தை வெளியே கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்கள் போலுள்ளது. கிடைத்த சந்தர்ப்பத்தில் பெரிய மாற்றங்களை செய்ய முடிந்தால், அரசியலில் இவர்களுக்கு பொன்னான எதிர்காலம் உள்ளது. 

👍................

சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் ஏறக்குறைய முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்ட பின்னர், இவர்களுக்கு நல்லதொரு நீண்ட எதிர்காலம் இருக்கின்றது. இவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு போட்டியாளர் சஜித் மட்டுமே. சஜித்தின் தனிப்பட்ட ஆளுமையில் சந்தேகம் இருந்தாலும், அவர் இவர்களுக்கு மிகவும் பலமான ஒரு எதிராளியே. அநுர சிறிது சறுக்கினாலும், அங்கே அது சஜித்திற்கு ஆதரவாக முடிந்துவிடும்.

சில செயல்கள் ஒரு விம்பத்தை கட்டி எழுப்பும்:  வாகனங்களை மீளப் பெறுதல். குடியிருப்புகளை மீட்டெடுத்தல் போன்றன. இவை ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றும், ஆனால் நாளடைவில் மக்களுக்கு இவை சலித்துவிடும், அத்துடன் இவை ஒரு ஆரம்ப நடவடிக்கைகளின் பின்னர் பெரும் பொருள் அற்ற செயல்களும் கூட.

சில செயல்கள் பெரும்பாலும் உணர்வு பூர்வமானவை, ஆனால் நடைமுறைச் சாத்தியம் அற்றவை: ஊழல், கொள்ளைப் பணத்தை மீட்போம் என்பது. சிறிய அமைச்சரவை என்பது. எல்லா பொறிமுறைகளையும், கல்வி, உட்பட மாற்றப் போகின்றோம் என்று சொல்வது. இவைகளில் ஒரு அடி முன்வைக்க ஒரு அடி சறுக்கிக் கொண்டும் போகலாம். இவைகளை செய்யாமல் கைவிட்டாலும் மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

சில செயல்கள் காலாவதியான வெற்றுக் கோட்பாடுகள்: தனியார்மயப்படுத்தலை எதிர்த்தல். பலவேறுபட்ட இனக்குழுக்களை, அவர்களின் பண்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்தல். ஒரே ஒரு வகையான புத்திஜீவிகளை மட்டும் உள்வாங்குதல் போன்றன. இவை பெரும் சேதத்தை கட்சிக்கும், நாட்டுக்கும் உண்டாக்கும்.

ஒரு பிரதேச சபையைக் கூட இதுவரை ஜனநாயக முறையின் கீழ் நிர்வகிக்காதவர்கள் இவர்கள். போகும் வழியிலேயே கற்றுத் தேர்வார்கள் என்பதே பலரினதும் நம்பிக்கை.   

 

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் அண்ணை சிறிது காலம் அமைச்சரவையில் இடம்பிடித்தவர்கள் தானே?!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஏதும் சில அதிரடி நடவடிக்கைகள் இடம்பெறலாம்! வாக்காளர்களைக் கவர மட்டுமில்லாது உண்மையாக தவறிழைத்த சிலராவது கைது செய்யப்படலாம்.

மேலதிகமாக உள்ள ஆடம்பர வாகனங்களை ஏலமிட்டு/விற்று அரசிற்கு வரவு வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

பகிர்வுக்கு நன்றி. நல்ல கட்டுரை.

தனிப்பட்ட ரீதியில், ஒரு விஷப் பாம்பையும், இடது சாரி ஒருவரையும் கண்டால், முதலில் விஷப் பாம்பை அடிக்காதே என்ற கொள்கையில் இருப்பவன் நான் என்பதால் ஜேவிபியின் வெற்றியை நான் ரசிக்கவில்லை. 

பார்ப்பம், இந்த இடது சாரியால், மாற்றஙளை கொண்டு வர முடிகிறதா என.

சிறிய வயதில் சீன கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து இயங்கினேன்.அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட்காரர் அரசில் உள்ளது சந்தோசமாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிய வயதில் சீன கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து இயங்கினேன்.அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட்காரர் அரசில் உள்ளது சந்தோசமாகவே இருக்கிறது.

அண்ணை...................... உங்களுக்குள்ள ஒரு 'அன்பே சிவம்' இருக்கிறது இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

பார்ப்பம், இந்த இடது சாரியால், மாற்றஙளை கொண்டு வர முடிகிறதா என.

முடியாது உள்ளதை கெடுக்காமல் இருந்தாலே நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

@ரசோதரன் அண்ணை சிறிது காலம் அமைச்சரவையில் இடம்பிடித்தவர்கள் தானே?!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஏதும் சில அதிரடி நடவடிக்கைகள் இடம்பெறலாம்! வாக்காளர்களைக் கவர மட்டுமில்லாது உண்மையாக தவறிழைத்த சிலராவது கைது செய்யப்படலாம்.

மேலதிகமாக உள்ள ஆடம்பர வாகனங்களை ஏலமிட்டு/விற்று அரசிற்கு வரவு வைக்கலாம்.

ஆமாம், அநுர இருந்தார், ஏராளன். விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை என்று நினைக்கின்றேன். அப்பொழுது ஏன் நீங்கள் அங்கே எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு, அந்த ஆட்சி எங்களுடைய ஆட்சி இல்லை என்று ஒரு கூட்டத்தில் இவரது பேச்சாளர்கள் ஒரு பதிலைச் சொல்லியிருந்தனர்.

அநுரவின் செல்வாக்கு கூடிக் கொண்டே போகின்றது போலவே தெரிகின்றது. எங்கள் நாட்டில் இருப்பது விகிதாராரப் பிரதிநிதிதுவம். பதினைந்து மாவட்டங்களில் இவர்கள் முன்னுக்கு வந்தால், 70 இலிருந்து 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இவர்களுக்கு கிடைக்கும் போல தெரிகின்றது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிய வயதில் சீன கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து இயங்கினேன்.அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட்காரர் அரசில் உள்ளது சந்தோசமாகவே இருக்கிறது.

அண்ணை, நீங்களும் ஒரு அரசியல் பழம் இன்று தெரிந்து கொண்டோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தோழர் இன்று எடுத்துள்ள முடிவே இதுவரை அவர் ஜனாதிபதியாக வந்து எடுத்துள்ளவைகளில் முக்கியமான முடிவு. இலங்கை விமான நிறுவனம் விற்கப்படமாட்டாது, தனியார்மயப்படுத்தலும் இல்லை என்று முடிவெடுத்திருக்கின்றார்.  இவை போன்ற முடிவுகள் நாட்டை பொருளதாரா ரீதியாக மீண்டும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளக்கூடும். ஏற்கனவே 550 மில்லியன் கடன்களில் நின்று கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் மிகச் சிலரை மாற்றுவதால் மட்டும் இது ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறப் போவதில்லை.

மேலும் இன்னும் சில அரச நிறுவனங்களும் தனியார்மயப்படுத்த வேண்டிய  இந்தப் பட்டியலில் இருக்கின்றது. சுதேசம், சுய பொருளாதாரம், சுயநிறைவு......... போன்ற கொள்கைகள் நடைமுறையில் சாத்தியமானவை இல்லை. குதிரைகள் ஓடிக் கொண்டிருப்பதால், புழுதி பாராளுமன்ற தேர்தல் வரை பறக்கும். அதன் பின்னர், அவை அடங்க, நிஜம் துலங்கும். 

கல்வி அமைச்சைப் பொறுத்தளவில் ஏறத்தாள உயர்கல்வி அந்தக்கல்வி இந்தக்கல்வி என்று அதற்கு மட்டும் 7 அமைச்சர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.7 அமைச்சர்களுக்கும் எத்தனை உதவியாளர்கள் வாகனங்கள் எரிபொருட்கள் அத்தனை பேருக்கும் கட்டடங்கள்.

ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை இப்படியாக வீண்செலவு செய்தார்கள்.

இதே போலவே இந்த விமானசேவையும் இருக்கும் என எண்ணுகிறேன்.

அதற்கும் ஏதாவது திட்டங்கள் வகுப்பார்கள் அப்போ தெரியும் ஏன் நஸ்டத்தில் ஓடியதென்று.

எமிரேட்டுடன் இருந்த போது லாபத்தில்த் தானே ஓடியுள்ளது.

நேரமிருக்கும் போது இந்தக் காணொளியைக் கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

 

இலங்கை தமிழ் சிங்கல கொம்மினிஸ்டுக்கள் இலங்கை என்ற நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் 😂 தமிழரசு கட்சியை கொண்டு  இரண்டாக பிரிக்க முயற்சிக்கின்றது என்ற கொள்கை கொண்டவர்கள் என்று அறிந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்வி அமைச்சைப் பொறுத்தளவில் ஏறத்தாள உயர்கல்வி அந்தக்கல்வி இந்தக்கல்வி என்று அதற்கு மட்டும் 7 அமைச்சர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.7 அமைச்சர்களுக்கும் எத்தனை உதவியாளர்கள் வாகனங்கள் எரிபொருட்கள் அத்தனை பேருக்கும் கட்டடங்கள்.

ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை இப்படியாக வீண்செலவு செய்தார்கள்.

இதே போலவே இந்த விமானசேவையும் இருக்கும் என எண்ணுகிறேன்.

அதற்கும் ஏதாவது திட்டங்கள் வகுப்பார்கள் அப்போ தெரியும் ஏன் நஸ்டத்தில் ஓடியதென்று.

எமிரேட்டுடன் இருந்த போது லாபத்தில்த் தானே ஓடியுள்ளது.கள்.

தாங்க்ஸ் அண்ணை, நீங்கள் அனுப்பி இருக்கும் வீடியோவைக் கேட்டுப் பார்க்கின்றேன்.

கல்வித்துறைக்கு ஏழு அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால் அது அதிகம் தான், அண்ணை, ஆனால் மூவராவது வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒரு கபினெட் அமைச்சர், இரண்டு ராஜாங்க அமைச்சர்கள். மூன்று செயலாளர்களும் வேண்டும்.

வேறு பல துறைகளுக்கு ஒரு அமைச்சரே போதும்.

எமிரேட்ஸுடன் இருந்த போது இலங்கை விமான நிறுவனம் நன்றாகவே இருந்தது. மகிந்த ஒரே இரவில் தனிப்பட்ட கோபம் காரணமாக அந்த ஒப்பந்தத்தை முறித்து, எமிரேட்ஸை வெளியேற்றினார். பின்னர் இலங்கை விமான நிறுவனம் மூக்குக் குப்புற விழுந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:
18 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிய வயதில் சீன கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து இயங்கினேன்.அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட்காரர் அரசில் உள்ளது சந்தோசமாகவே இருக்கிறது.

அண்ணை...................... உங்களுக்குள்ள ஒரு 'அன்பே சிவம்' இருக்கிறது இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே....

எல்லாம் 17-18-19 வயதுவரை.

1977 தேர்தல் கூட்டங்களின் போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டம் இருந்தபடியால் சங்கானை  நெல்லியடி போன்ற இடங்களில் கூட்டம் நடக்கும் போது பாதுகாப்பின் நிமித்தம் வேறுவேறு ஊர்களில் இருந்து கலவரங்கள் வெடித்தாலும் என்று பாதுகாப்புக்காக வாகனங்களில் போவோம்.

வாகனங்களில் ஆயுதமும் இருப்பதாக கதைப்பார்கள்.ஒருநாளும் நான் காணவில்லை.

வீட்டிலே ஒரே பிரச்சனைஇ உன்னை ஏன் கொண்டு திரியிறாங்களா என்று தெரியுமாடா என்று அப்பா கேட்பார்.

அது புரிவதற்கு நீண்டகாலம் எடுத்தது.

திருமணத்தின் போது கூட ஐயரை வைத்து செய்ய விருப்பமில்லை.ஆனாலும் தனித்து நின்றதால் முடியாமல் போய்விட்டது.

அந்தநேரங்களில் இயக்கம் இருப்பது தெரிந்திருந்தால் சிலவேளை போராளியாகி இருப்பேன்.

12 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, நீங்களும் ஒரு அரசியல் பழம் இன்று தெரிந்து கொண்டோம்

காயுமில்லை பழமும் இல்லை.வெறும் சிப்பாய் தான்.

சிறுப்பிட்டியில் சிந்தில்வேல் ஒருவர் சிறந்த பேச்சாளர் இப்போதும் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாம் 17-18-19 வயதுவரை.

1977 தேர்தல் கூட்டங்களின் போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டம் இருந்தபடியால் சங்கானை  நெல்லியடி போன்ற இடங்களில் கூட்டம் நடக்கும் போது பாதுகாப்பின் நிமித்தம் வேறுவேறு ஊர்களில் இருந்து கலவரங்கள் வெடித்தாலும் என்று பாதுகாப்புக்காக வாகனங்களில் போவோம்.

எங்கள் பக்கங்களில் இருந்த சில சிவப்புச் சட்டைக்காரர்களைப் பற்றி சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஓரிருவர் பின்னர் காணாமலும் போயிருக்கின்றனர்........😌.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழ் சிங்கல கொம்மினிஸ்டுக்கள் இலங்கை என்ற நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் 😂 தமிழரசு கட்சியை கொண்டு  இரண்டாக பிரிக்க முயற்சிக்கின்றது என்ற கொள்கை கொண்டவர்கள் என்று அறிந்தேன்

🤣..........

அமெரிக்கா பற்றி ஏதாவதொரு அபிப்பிராயம் சகலருக்கும் இருக்க வேண்டும் போல........🤣.

கேரள ஊர்ப் பக்கங்களில் இருக்கும் டீக்கடைகளில் காலையிலேயே ஆரம்பித்துவிடுவார்களாம்.......... ஒரு கட்ட சாயா மற்றும் தட்டையுடன். பிளேன் டீயும், தட்டு வடையும் கைகளில். அமெரிக்காவைப் போட்டு மிதிமிதி என்று மிதிப்பார்களாம். பிறகு, சரி மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம் என்று வீட்டுக்கு போய்விடுவார்களாம். அடுத்த நாள் இது மீண்டும் தொடரும்....... சிவப்புச் சட்டை தோழர்களின் ஆரம்ப பாடங்களில் இதுவும் ஒன்று - அமெரிக்காவை மிதிப்பது..........😀

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்தோடு வெளியாகிய Bar பொமிட் உரிமையாளர் விபரம்! 

கிளிநொச்சியில் சந்திரகுமாரும், விக்னேஸ்வரனும், அங்கயனும், டக்ளசும் தான் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். 

1) கந்தசாமி கோவிலுக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடையில் உள்ள ஒரு பார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த Bar A9 வைன் ஸ்ரோர் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. 

2) சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. 

3) பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 

4) 55ஆம் கட்டைக்கு அருகில் தொண்டமான்நகரில் அங்கயனின் தந்தை இராமநாதனின் பெயரில் ஒரு பார் திறக்கப்பட்டுள்ளது. அந்த Bar கேட்ட கடிதமும் வெளிவந்திருக்கிறது. 

5) கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. 

6) பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இது யாழில் நகரில் ஏற்கனவே Bar வைத்திருக்கும் நபர் தான் வாங்கியிருக்கிறார்.

கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரால் கனகபுரம் வீதியில் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது.

விடுதலைப்புலிகள் காலத்தில் கிளிநொச்சியில் 11 பார்கள் இருந்தன. இப்போதும் 11 உள்ளதாம். 6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 11 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம்.

இந்த கயவர்களை மக்கள் அறிய Share செய்யுங்கள்

whatsapp

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

சிவப்புச் சட்டை தோழர்களின் ஆரம்ப பாடங்களில் இதுவும் ஒன்று - அமெரிக்காவை மிதிப்பது..........😀

🤣 அறிந்து இருக்கிறேன். தென்கிழக்கு ஆசிய சிவப்பு தோழர்களின் ஆரம்ப படிப்பே அது தான்.
அமெரிக்கா பேப்பரினால் செய்யபட்ட புலி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அண்ணை...................... உங்களுக்குள்ள ஒரு 'அன்பே சிவம்' இருக்கிறது இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே..................🤣.

 

5 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை, நீங்களும் ஒரு அரசியல் பழம் இன்று தெரிந்து கொண்டோம்

அந்தக் காலத்தில்(1977)நான் சீன கம்யுனிஸ்ட்டுகளுடன் திரிந்த போது

எனது அண்ணன் பானையுன் ஜேவிபிக்கு ஆதரவாக திரிந்தார்.

சைவப் பழங்களாக பெற்றோர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.