Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, MEERA said:

இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…

 

அட பார்ரா,.....

தானும் தன்பாடும் எனத் தெருவில போன ஆசாரியக் கூப்பிட்டு,  தனக்கு ஒரு ஆப்பை வேண்டிச் சொருகிய கதையாக இருக்கிறது மீராவின் கூற்று. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kapithan said:

அவரைப் போற்றும் எண்ணம் எனக்கும் இல்லை, போற்றவும் போவதில்லை..

ஆனால் அவருக்குச் சேற்றை மட்யும் வாரி இறைப்பதன் பின்னணியில் இருக்கும்  நோக்கத்தை நான்  கேள்விக்குள்ளாக்குகிறேன். தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்குவேன். 

நல்லது தொடர்ந்தும் போராடுங்கள்.அது உங்கள் விருப்பம்.

அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ரசோதரன் said:

🤣..........

இப்போதைக்கு பாலனிடம் மாட்டுப்பட்டிருப்பது இவர் என்று எடுத்துக் கொண்டு, பின்னர் பாலனின் எழுத்தை வாசித்து சிரிக்க வேண்டும்.......

நட்சத்திரன் செவ்விந்தியனும் இப்படியான அரசியல் ஆராய்ச்சிகளை, கருத்துகளை எழுதினால், அது இதைவிட இன்னும் சுவாரசியம் ஆகவும், சூடாகவும் இருக்கும்.

எவர் மீதும் எவரும் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கலாம், சொல்லலாம் என்ற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதிவிலக்கே இல்லை. ஆனாலும் மக்கள் திரள் இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கடுமையான மாற்றுத் தரப்புகள், அறிவுக்கூர்மையுள்ளவர்கள் போல தோன்றுபவர்கள் போன்ற இடங்களில்  இருந்து வரும் கருத்துகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே வாசிக்கின்றனர் போல. அவர்களின் முடிவு இவைகளால் மாற்றப்படுவதில்லை. சுஜாதாவின் கதைகளை வாசிப்பது போல, பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளை வாசிப்பது போல, இவைகளும் ஒரு ஜனரஞ்சக வாசிப்புகள் மட்டுமே.

எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இப்படி ஒருவர் இருக்கின்றார் என்றே தெரியாது. அவர் ஒரு வேட்பாளர் என்றவுடன் எரிச்சல் தான் வருகின்றது. 

தமிழ்நாட்டில் உள்ள சில அகதி முகாம்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கின்றது. சிலவற்றுக்கு போய் இருக்கின்றேன், அங்கே தங்கியும் இருக்கின்றேன். இப்படி ஒரு அமைப்பு அங்கே எதுவும் செய்வதாக கேள்விப்பட்டதில்லை. இங்கு வாழும் எமது மக்கள் வேறு ஒரு நிஜத்திற்கு போய்விட்டார்கள். பாலன் போன்றவர்கள் முந்தைய தலைமுறையில் இருந்து கொண்டு 'இங்கு வா, அங்கு போ.......' என்று பழைய கதையையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

 

எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இதைப் பார்த்த பின் தான் தெரியவந்தது. ஆனால், தோழர் பாலனின் பதிவின் நோக்கங்கள்: சுமந்திரனை இந்தியாவின் சொல்கேட்டு ஆடுபவராகக் காட்டுவதும், "சந்திரஹாசன் புலி எதிர்ப்பாளர்" என்று நினைவுறுத்தி சுமந்திரன் புலிநீக்கம் செய்கிறார் என்று காட்டுவதும்.

தந்தை செல்வா, சந்திரஹாசன், இப்போது இவர்- மூவரும் வாழ்ந்த காலங்கள் வேறு. அரசியல் படுகொலைகள் மலிந்த காலத்தில் சந்திரஹாசன் ஆயுதப் போராட்டத்தை வெறுத்தது அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரின் சாதாரண மனநிலை. அவர் செல்வநாயகத்தின் மகன் என்பதால் அவர் கருத்து பொதுவெளியில் கவனம் பெற்றது. இப்போது அரசியல் படுகொலையும் இல்லை, அதைச் செய்வோரும் இல்லை என்ற காலத்தில் பேரன் எதைக் கொண்டுவருகிறார் என்று தான் வாக்காளர்கள் பார்க்க வேண்டும்.

ஆனால், தோழர் பாலன் போன்ற தேசிக்காய்கள் "குத்தி முறிந்து" தந்தையின் மீதான எதிர்ப்பை இவர் மீதும், நாசூக்காக சுமந்திரன் மீதும் தூண்டி விடுவர். பட்டாசு றெஜிமென்ற் அதை எல்லா இடமும் பரப்பித் திரியும்😂!   

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.

  • Like 4
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லது தொடர்ந்தும் போராடுங்கள்.அது உங்கள் விருப்பம்.

அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

ஹிஹி.... உப்பிடி பலமுறை நழுவியிருக்கிறார், நழுவும்போது தேவையற்ற ஒரு கம்பு செருகி, தான், நடுவு நிலையாளன் என்பது போல சாதிப்பார். முன்னைய திரிகளை அலசிப்பார்த்தால் தெரியும். தானே செருகிய கம்பை, யாரோ செருகினார்கள் என்று தனக்கு ஒவ்வாதவரை கற்பனை செய்து தி(தீ)ட்டுவார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/10/2024 at 18:29, தமிழ் சிறி said:

 

தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது?

விழப்போகும் வீட்டை அதிலிருந்து தடுத்து நிறுத்த, வைக்கப்படும் வீசுகால் (கம்பு). எப்போதெல்லாம் வீடு வீழ்ச்சியை காணுதோ அப்போவெல்லாம் புதியவர்களை ஆகா ஓகோ என்று பாராட்டி வீட்டிற்குள் வரவேற்பார்கள். வீழ்ச்சி தடுக்கப்பட்டபின் அவர்களை விமர்சித்து, நாறடித்து, சேறடித்து, சவால் விட்டு விரட்டுவார்கள். இதுதான் தொடரும் வரலாறு. சி. வி. விக்கினேஸ்வரன், சசிகலா ரவிராஜ். இப்போ இவர் மாட்டிக்கின்னார். சோழியன் குடுமி சும்மா ஆடாது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செல்வநாயகம், கட்சி என்று சட்டாம்பி ஆற்பரித்ததுக்கு பின்னால் இவருக்கு கொடுக்கப்பட்ட முகவரி, கட்டியம்  என்று புரிகிறது.

செல்வநாயகம் கட்டியெழுப்பிய வீட்டை குட்டிச்சுவராக்கிப்போட்டு மீண்டும் அவரையே அழைக்கிறார்கள் புனரமைப்பதற்கு. அதற்கு முன், வீட்டை அரித்து பலவீனமாக்கும் கறையான்கள் அழிக்கப்படவேண்டும். இல்லையேல் வீட்டை காப்பாற்ற முடியாது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, satan said:

ஹிஹி.... உப்பிடி பலமுறை நழுவியிருக்கிறார், நழுவும்போது தேவையற்ற ஒரு கம்பு செருகி, தான், நடுவு நிலையாளன் என்பது போல சாதிப்பார். முன்னைய திரிகளை அலசிப்பார்த்தால் தெரியும். தானே செருகிய கம்பை, யாரோ செருகினார்கள் என்று தனக்கு ஒவ்வாதவரை கற்பனை செய்து தி(தீ)ட்டுவார்.

சாரி சாத், 

உங்கள் கொமடி சகிக்கவில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதெப்படி உங்களால் சகித்துக்கொள்ள முடியும்? எனது இவ்வளவுகால அவதானத்தின்படி, உங்களுடைய அணுகுமுறையைத்தான் எழுதினேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/10/2024 at 22:43, புலவர் said:

பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.

பார் சிறியென்று, சிறீதரனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கின்றேன். சிறீதரனுக்கென யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்குள் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமான வாக்குக்களை நிரந்தரமாகக் கொண்ட ஒருவராக இருக்கிறார். அதற்காகவே அவரைச் சும் முதன்மை வேட்பளராக நிறுத்தியுள்ளது. இல்லையேல் இவரையும் சும் தூக்கிவீசியிருக்கும்.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

பார் சிறியென்று, சிறீதரனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கின்றேன். சிறீதரனுக்கென யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்குள் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமான வாக்குக்களை நிரந்தரமாகக் கொண்ட ஒருவராக இருக்கிறார். அதற்காகவே அவரைச் சும் முதன்மை வேட்பளராக நிறுத்தியுள்ளது. இல்லையேல் இவரையும் சும் தூக்கிவீசியிருக்கும்.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

 சுமந்திரன் தனது நோக்கங்களை அடைவதற்கு கையாளாக சிறீதரனை பாவிக்கிறது. உண்மையான நட்பு கிடையாது. முன்பு உள்ளூராட்சி தேர்தலின்போதாக இருக்கலாம், மாவை பதவிவிலகவேண்டும் என சுமந்திரன் அறிக்கை விட்டபோது, அவரின் தலைமை பதவிக்கு சிறீதரனையே கொம்பு சீவினார். அது சறுக்கி விடவே இவரின் தந்திரத்தை புரிந்துகொண்ட சிறீதரன் ஒட்டியும் ஒட்டாமலுமே  சுமந்திரனுடனான உறவை வைத்துக்கொண்டார். அதன் பின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவி சிறீதரனுக்கு வந்ததே, அந்த கட்சி நீதிமன்றத்திற்கு போக காரணம் என்கிறார்கள். அப்போ; பதவியேற்க தான் தயார் என அறிக்கை விட்ட சிறீதரன், இப்போ; பதவியை ஏற்க இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? மது பானசாலை அனுமதி பெற்ற பெயர்கள் என்கிற விஷயம் அடிப்பட்டபோது சிறீதனின் பெயரும் முதலில் அடிபட்டது, இது இப்போதல்ல பலகாலமாக பேசப்பட்டது. இப்போ, அவசரமாக விசாரணை, அது மதுவுக்கு அடிமையான ஒருவர் பரப்பிய வதந்தி என்று அறிக்கை விட்டதும், சுமந்திரன் ஓடிப்போய் அந்த பெயரை வெளியிடுங்கள் நாங்கள் அவர்களை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டதும், அந்தகையோடேயே நானும் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என அறிவித்ததும், இதற்கு பின்னால் ஒரு நய வஞ்சக திட்டமுண்டு. இருவர் மனதுக்குள்ளும் நீறு பூத்த நெருப்புப்போல் ஒரு பகை உள்ளது. அது எப்போதும் வெடிக்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம், அது தேர்தலின் பின் வரும் முடிவுகளை பொறுத்தது. 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/10/2024 at 16:43, புலவர் said:

என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.

அதைத் தான் நானும் எதிர்பார்த்திருக்கிறேன். சுவாரசியமாக இருக்கும்😂.

இந்த முறை (பின் கதவு என்று பலர் குறிப்பிடும்😎)  தேசியப் பட்டியலில் வந்தது போல கஜேந்திரன் பா.உ  வரமுடியாத நிலை ஏற்படலாம். எனவே, பாடம் எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால், "தேர்தலில் அழாப்பி விட்டீனம்" என்று அழுவதை ஒரு தரப்பு மட்டும் செய்யும்!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.