Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

2012 ஆம் ஆண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இனிமேல் இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்பப் பாடசாலை என மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/310844

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் ..கிளீநொச்சியில் தமிழ்பாடசாலையொன்றை ..முசுலிம்பெயராக மாற்றியதை ..மீண்டும் தமிழ் பெயராக மாற்ற முயற்சிக்கலாமே... என்ன் நம்ம தமிழருவி மீசை சிவ.சிறிதரன் அவர்களின் கவனத்திற்கு..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அட இந்த கொலைகாரன் பெயரிலும் பாடசாலையா?

20 minutes ago, alvayan said:

இதேபோல் ..கிளீநொச்சியில் தமிழ்பாடசாலையொன்றை ..முசுலிம்பெயராக மாற்றியதை ..மீண்டும் தமிழ் பெயராக மாற்ற முயற்சிக்கலாமே... என்ன் நம்ம தமிழருவி மீசை சிவ.சிறிதரன் அவர்களின் கவனத்திற்கு..

எந்த பாடசாலை என்று கூற முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

எந்த பாடசாலை என்று கூற முடியுமா? 

நிழலி…  நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ் பாடசாலை ஒன்று முஸ்லீம் பாடசாலையாக மாற்றப் பட்ட செய்தி யாழ். களத்திலும் இணைக்கப் பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எந்த பாடசாலை என்று கூற முடியுமா? 

கிளிநொச்சியில் முஸ்லிம் பாடசாலை இருப்பதாக இணையத் தேடலில் எதுவும் வரவில்லை. வழமை போல இது "ஒன்லைன் உருட்டல் குழுவின்" வதந்தியாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எந்த பாடசாலை என்று கூற முடியுமா? 

https://samugammedia.com/planned-destruction-of-the-identity-of-the-tamil-school-in-kilinochchihow-is-this-injustice-responsible-lawyer-sukash-athangamsamugammedia-1702276648

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன்  பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது.

ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும்.

இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்?

இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்?

உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்!

உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்!

உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதோ நம்மால முடிந்தது.

52 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி…  நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ் பாடசாலை ஒன்று முஸ்லீம் பாடசாலையாக மாற்றப் பட்ட செய்தி யாழ். களத்திலும் இணைக்கப் பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

https://samugammedia.com/planned-destruction-of-the-identity-of-the-tamil-school-in-kilinochchihow-is-this-injustice-responsible-lawyer-sukash-athangamsamugammedia-1702276648

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன்  பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது.

ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும்.

இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்?

இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்?

உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்!

உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்!

உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதோ நம்மால முடிந்தது.

உடனே… மூலச் செய்தியை தேடிப் பிடித்து இணைத்தமைக்கு நன்றி ஈழப்பிரியன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

உடனே… மூலச் செய்தியை தேடிப் பிடித்து இணைத்தமைக்கு நன்றி ஈழப்பிரியன். 🙂

மிகவும் நன்றி..ஈழப்பிரியன்...தயவுசெய்து எடுத்தவாக்கில் எதிர்ப்பு பதிவு செய்யும் கனவான்களே...அவசரம் வேண்டாம்...அழிவது நம்மினம்..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

மிகவும் நன்றி..ஈழப்பிரியன்...தயவுசெய்து எடுத்தவாக்கில் எதிர்ப்பு பதிவு செய்யும் கனவான்களே...அவசரம் வேண்டாம்...அழிவது நம்மினம்..

உண்மை. சிலருக்கு…. எதிர் கருத்தாட வேண்டும் என்பதற்காக, தங்களின் மனதில் உள்ள வக்கிரகங்களை சகட்டுமேனிக்கு அள்ளித் தெளிப்பது காலம் காலமாக உள்ள வியாதிதான். இதனை மாற்றுவது கடினம்.

 இதை கணக்கில் எடுக்காமல் வழமை  போல் கடந்து போவது சிறந்த மருந்து.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

 இதை கணக்கில் எடுக்காமல் வழமை  போல் கடந்து போவது சிறந்த மருந்து.

இன்னொரு மருந்தும் இருக்கிறது😎: எந்த படமோ, செய்தியோ இணையத்தில் எடுத்தால் ஒரு தடவை அது உண்மையா என்று பார்த்து விட்டு இணைத்தல். அப்படி இணைப்போர் மீது நம்பிகை வரும். இல்லா விட்டால் அவர்கள் உண்மையைச் சொன்னாலும் நான் மேலே குறிப்பிட்டது போல சந்தேகம் தான் வரும். இப்படியான ஆரோக்கியமான நடைமுறை காரணமாகத் தான் யாழ் சில ரொய்லெற் தமிழ் ஊடகங்கள் போல ஆகாமல் இருக்கிறது இன்னும்!

45 minutes ago, ஈழப்பிரியன் said:

https://samugammedia.com/planned-destruction-of-the-identity-of-the-tamil-school-in-kilinochchihow-is-this-injustice-responsible-lawyer-sukash-athangamsamugammedia-1702276648

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன்  பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது.

ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும்.

இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்?

இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்?

உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்!

உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்!

உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதோ நம்மால முடிந்தது.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

என் நண்பர் ஒருவர் தேசிய மக்கள் கட்சிக்கு தீயாக வேலை செய்கின்றார். அவருக்கு இதனை அனுப்பியுள்ளேன்.

உங்கள் இணைப்பில் இருந்து அறிய முடிந்தது என்னவென்றால், பாடசாலையின் பெயர் உத்தியோக பூர்வமாக மாற்றப்படவில்லை. ஆனால் பெயர்ப்பலகையை மாற்றியுள்ளனர்.

இதே மாதிரி கிழக்கில் (நான் நினைக்கின்றேன் கல்முனையில் என) வீதியின் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி பெயர் பலகை வைத்து பிரச்சினையானது என.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நன்றி நிழலி...உங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

என் நண்பர் ஒருவர் தேசிய மக்கள் கட்சிக்கு தீயாக வேலை செய்கின்றார். அவருக்கு இதனை அனுப்பியுள்ளேன்.

நல்ல செயலை செய்துள்ளீர்கள் நிழலி. 👍🏽
தேர்தல் நேரம் இதனை, உங்கள் நண்பரின் கவனத்திற்கு கொண்டு சென்றது நிச்சயம் உடனடியான  நல்ல பலனை தரும் என நம்புகின்றேன். 🙂

9 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல செயலை செய்துள்ளீர்கள் நிழலி. 👍🏽
தேர்தல் நேரம் இதனை, உங்கள் நண்பரின் கவனத்திற்கு கொண்டு சென்றது நிச்சயம் உடனடியான  நல்ல பலனை தரும் என நம்புகின்றேன். 🙂

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அனுப்பியது அவரை கடுப்பேத்த.

தேர்தல் நேரத்தில் இப்படியான இனம் ஒன்று சார்ந்த ஒரு செயலில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். அத்துடன் இந்தக் கட்சி, இனங்களுக்கிடையிலான பிரச்சனையை தன் அரசியலுக்கு இப்போதைக்கு கையிலெடுக்காது என நம்புகின்றேன்.

சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக பொலிசில் முறையிட்டு ஒரு வழக்கை தொடர்ந்தால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நீங்கள் சொல்வதும் சரிதான்.
முஸ்லீம் வாக்குகளை இழந்து விடுவோம் என அவர்கள் இதனை கண்டும் காணாமல் இருக்கவே சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

பொலிஸ் முறைப்பாடு, வழக்குக்கு காசு வாங்காமல் வாதாட… எங்களின் “லோயர்” மார் வர வேணுமே. 😎
அதுகும் எங்களின் பிரபல வக்கீல்களுக்கு… தமிழ் என்றால் கசக்குது.
சிங்களம், முஸ்லீமுக்கு பிரச்சினை என்றால்… கேட்காமலே ஓடிப்போய் முன்னுக்கு நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அனுப்பியது அவரை கடுப்பேத்த.

தேர்தல் நேரத்தில் இப்படியான இனம் ஒன்று சார்ந்த ஒரு செயலில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். அத்துடன் இந்தக் கட்சி, இனங்களுக்கிடையிலான பிரச்சனையை தன் அரசியலுக்கு இப்போதைக்கு கையிலெடுக்காது என நம்புகின்றேன்.

சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக பொலிசில் முறையிட்டு ஒரு வழக்கை தொடர்ந்தால் நல்லது. 

பூனைக்கு விளையாட்டு எலிக்கு..

தொட்டாலும் சிக்கல் 

விட்டாலும் சிக்கல்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் பாடசாலையொன்றின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது: சுகாஷ் கருத்து (Photos)

10 months ago

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மோசடியான பெயர்ப்பலகை

"கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லிம் மாணவர்களும் கற்று வருகின்றனர்.

இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, மறைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலையொன்றின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது: சுகாஷ் கருத்து (Photos) | The Name Of Kilinochchi School Changed By Planning

ஆனால் இன்றுவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்.

உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள். உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery

Gallery

https://tamilwin.com/article/the-name-of-kilinochchi-school-changed-by-planning-1702327869#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

முழுமையான செய்தி இணைப்பிற்கு நன்றி ஏராளன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.