Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

New-Project-7-11.jpg?resize=750,375&ssl=

ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!

ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது.

இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவ‍ேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், இன்று (18) காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

மீட்பு பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

New-Project-9-7.jpg?resize=600%2C338&ssl=1

New-Project-8-11.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2024/1404652

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யானைகள் மீது புகையிரத வண்டிகள் மோதிய காலம் போய் தற்போது புகையிரத வண்டிகள்  மீது யானைகள் மோதுகின்றன.  அத்துடன் புகையிர வண்டிகளும் தடம் புரள்கின்றன. 

ஆதவா,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, Kapithan said:

யானைகள் மீது புகையிரத வண்டிகள் மோதிய காலம் போய் தற்போது புகையிரத வண்டிகள்  மீது யானைகள் மோதுகின்றன.

புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.  

தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, valavan said:

புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.  

தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.

யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? 

யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kapithan said:

யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? 

யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா? 

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்

Just now, valavan said:

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விடை கைவசம் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? 

யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா? 

நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, valavan said:

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்

வழமையில் காலில் கல் அடித்துவிட்டது என்று தான் சொல்லுவோம்.

எவருமே கல்லுக்கு அடித்துவிட்டேன் என்று சொல்வதில்லை

கெளரவப் பிரச்சனையோ?

13 minutes ago, வாதவூரான் said:

நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்

ரணில் யானையை மறந்து ரொம்ப நாளாச்சு .

Edited by ஈழப்பிரியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

வழமையில் காலில் கல் அடித்துவிட்டது என்று தான் சொல்லுவோம்.

எவருமே கல்லுக்கு அடித்துவிட்டேன் என்று சொல்வதில்லை

கெளரவப் பிரச்சனையோ?

அப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை.

I hurt myself

என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன,

நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும், 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, valavan said:

புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.  

தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.

காடுகளில் மிருகங்களுக்கு இல்லாத சுதந்திரம் வேறு எங்கு கிடைக்கும்?
யானைகளோ குரங்களோ நகர்ப்புறம் வந்தாலும் திட்டுவீர்கள். அவை வாழும் காட்டுப்பகுதியில் சுதந்திரமாக நடமாடினாலும் திட்டுகின்றீர்கள். 

யானைகள் மிருகங்கள் நடமாடும் அல்லது யானைகள் போய் வரும் பாதைகளில் எச்சரிக்கையாக இருப்பது ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க வேண்டும்.

தவளைகளுக்கே பாதுகாப்பு வேலிகளை போடும் நாடுகளில் இருந்து கொண்டு ரயிலுக்கு வக்காளத்து வாங்குவதை என்னவென்பது? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

யானைகள் மிருகங்கள் நடமாடும் அல்லது யானைகள் போய் வரும் பாதைகளில் எச்சரிக்கையாக இருப்பது ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க வேண்டும்.

தவளைகளுக்கே பாதுகாப்பு வேலிகளை போடும் நாடுகளில் இருந்து கொண்டு ரயிலுக்கு வக்காளத்து வாங்குவதை என்னவென்பது?

நீங்கள் சொல்வது உண்மைதான் யானைகள் நடமாடும் இடத்தில் மிக குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமென்று சட்டம் சமிஞ்ஞை எல்லாம் இருந்திருக்கும், ஆனால் இலங்கையில் அதையெல்லாம் யார் மதிக்கிறார்கள். பல யானைகள் படுகாயம் இறப்பு என்று ஆகுமளவிற்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றிருக்கிறார், அல்லது தூக்க கலக்கம். அதுவும் எரிபொருளுடன் , நல்லவேளை வெடிக்கல.

ஆபத்தான மலையக ரயில் பாதைகளில் பயணிகள் பெட்டிகளுடன் எரிபொருள் தாங்கிகளையும் இணைத்து ரயிலை ஓட்டி செல்வதை கவனித்திருக்கிறேன்.

ரயில்களுக்கு வக்காலத்து வாங்கியே ஆகவேண்டும் ஓட்டுறவன் சரியில்லையென்றால் அது என்ன செய்யும் பாவம்?

நான் குறிப்பிட்டது யாதெனில் சட்டென தன் பாதையை மாற்றிக்கொள்ள முடியாத வாகனங்களுடன் மோதினால் ந்ம்மை மோதியதல்ல  நாம் மோதியது என்ற சொற்றொடர்தான் சரியானது என்பதே.

விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, valavan said:

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்

மிருகங்கள் ஒருபோதும் எந்த ஒரு வாகனத்தையும் மோதுவதில்லை. ஆனால் வாகனங்கள்தான் போய் மிருகங்களை மோதுகின்றன. 

இங்கே எது எதன் மீது வலிந்து போய் மோதியது என்பதுதான் விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, valavan said:

விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.

ஏனைய உயிரினங்களுடன் சமனிலை படுத்தும் போது மனிதன் என்றுமே தனக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குவான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யானைக்கு இரக்கப்படும் உறவுகள் அது சிங்களவன் என்றாலும் சரி தமிழன் என்றாலும் சரி ...............................................................................................................பலரை காயபடுத்த விரும்பவில்லை .

நாம் அழிந்த உலகத்தில் யானை இருந்தால் என்ன மனிசன் இருந்தால் என்ன ? போய் தொலையுங்க .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.